வான நிலப்பரப்பில்
மின்னல் கீற்றில்
முடைந்த பாயொன்றை
மெல்ல விரித்து
மெளனப் புன்னகை பூத்தபடி
முகங் கவிழ்ந்து கிடக்கிறேன்
ஒவ்வொரு நட்சத்திரங்களும்
ஒளிக் கதிர்களை பாய்ச்சிட
உன்பார்வை தந்த ஸ்பரிசங்கள்
உள்நெஞ்சில் ஊஞ்சலாட
உள்ரங்க அறைகளெல்லாம்
ஒளிவெள்ளம் பரவக் காண்கிறேன்
வனாந்திரக் காட்டில்
வாகை சூடிய மேகங்கள்
வலம் வரும் வேளையில்
வண்ண மயிலொன்று
தோகை விரித்தாடும் நிலையில்
துள்ளியாடி மகிழ்கின்றேன்
மெளனங்கள் மேடையமைத்து
மொழிபெயர்த்து வாசிப்பதை
முற்றத்து நிலவாகி பார்த்து
மூங்கில் காதுகொண்டு கேட்டு
மெல்ல மெல்ல ரசித்து
மெய்மறந்து சிரிக்கின்றேன்
வளமில்லா வயல்கள்
வாட்டம் காணும்நேரம்
நிலமெங்கும் நீர் பாய்ச்ச
நீச்சலடிக்கும் பயிர்களைபோல்
நீயகன்று திரும்பவரும் நேரத்தில்
நெஞ்சம் குளிர்ந்து நீந்துவதை ரசிக்கின்றேன்
சஞ்சாரமிடும் நினைவுகளில்
சல்லடையாக்கி போகின்றேன்
சாரல்கொண்ட தூறலிலும்
சந்தோஷமாய் நனைகின்றேன்
சருகுகளின் சத்ததிலும்
சங்கீத ஒலி கேட்கின்றேன்
இவையத்தனையும் உணருகின்றேன்
இரவில் கனவுக்குள் உலவுகின்றேன்
இடையில் கற்பனைகள் புகுந்தாலும்
இதயக்கூட்டுக்குள் இன்புருகின்றேன்
எனக்குள் உன்னைக் காண்கின்றேன்
என் நினைவெல்லாம் நீயாகிப் போகின்றேன்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அஸ்ஸலாமு அலைக்கும்
பதிலளிநீக்குஅருமையான கனவுக் காதல் கவிதை..
மிகவும் அழகாக இருந்தது வழக்கம்போலவே..
வாழ்த்துக்கள் அக்கா
அலைக்குமுஸ்ஸலாம் தம்பி. வழக்கம்போலவே வாழ்த்துகளை வழங்கியமைக்கு மனம்பூத்த மகிழ்ச்சி.பதிவிட்ட மறுகனம் கருத்தளித்து ஊக்கம் தந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி...
பதிலளிநீக்குவளமில்லா வயல்கள்
பதிலளிநீக்குவாட்டம் காணும்நேரம்
நிலமெங்கும் நீர் பாய்ச்ச
நீச்சலடிக்கும் பயிர்களைபோல்
நீயகன்று திரும்பவரும் நேரத்தில்
நெஞ்சம் குளிர்ந்து நீந்துவதை ரசிக்கின்றேன்//
பொருந்திய வரிகள் ...
படிச்சு ரசிச்சேன் .. வாழ்த்துக்கள்
அனைத்து கவிதைகளுமே உணர்வை உரசி உதிரத்தில் கலந்து உயிரில் உறைபவையாக இருக்கின்றன.
பதிலளிநீக்குஅருமை மலிக்கா!
அரசன் கூறியது...
பதிலளிநீக்குவளமில்லா வயல்கள்
வாட்டம் காணும்நேரம்
நிலமெங்கும் நீர் பாய்ச்ச
நீச்சலடிக்கும் பயிர்களைபோல்
நீயகன்று திரும்பவரும் நேரத்தில்
நெஞ்சம் குளிர்ந்து நீந்துவதை ரசிக்கின்றேன்//
பொருந்திய வரிகள் ...
படிச்சு ரசிச்சேன் .. வாழ்த்துக்கள்/
நான் தங்களின் வலைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சி அரசன்.
இருந்தபோதும் தொடர்ச்சியாக என் படைப்புகளை தொடர்ந்து வாசித்து வருவதோடு தொய்வில்லாமல் கருத்திடும் தாங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..
sravaani கூறியது...
பதிலளிநீக்குஅனைத்து கவிதைகளுமே உணர்வை உரசி உதிரத்தில் கலந்து உயிரில் உறைபவையாக இருக்கின்றன.
அருமை மலிக்கா!//
வாங்க sravaani. தங்களின் முதல் வருகைக்கும் எனது கவிதைகளை உணர்ந்து ரசித்தமைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். தங்களின் வருகையை தொடர்ந்து எதிர்பார்கிறேன்..
அட போடவைக்கும் அழகுக் கவிதை.. காதலை வெளிப்படுத்தக் கையாண்ட உவமைகளை வெகுவாய் ரசித்தேன்.. பாராட்டுகள் தோழி.
பதிலளிநீக்கு////மெளனங்கள் மேடையமைத்து
பதிலளிநீக்குமொழிபெயர்த்து வாசிப்பதை
முற்றத்து நிலவாகி பார்த்து
மூங்கில் காதுகொண்டு கேட்டு/////
புதிதாய் பிறந்த நல்முத்துச் சொற்களை
ஆரமாக தொடுத்த கவிதை.
மனதில் செவ்வண்டாய் ரீங்காரமிடுகிறது
இக்கவி.
நன்று சகோதரி.
அருமையான நினைவுகளில் மிதக்கும் கவிதை.ஒரு பெண்ணின் மனநிலையில் அற்புதம் தோழி !
பதிலளிநீக்கு"சஞ்சாரமிடும் நினைவுகள்" கவிதை அற்புதம்...!
பதிலளிநீக்குபுதியபுதிய வார்த்தைகள்.. வரிகள்...!
இயல்பாய்.. அழகாய்... அற்புதமாய்...!
"இறைவனை நேசி இன்பம் பெறுவாய்."
பதிலளிநீக்குஅருமையான வரிகள்...!
பகிர்விற்கு நன்றி சகோதரி!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"
வனாந்திரக் காட்டில்
பதிலளிநீக்குவாகை சூடிய மேகங்கள்
வலம் வரும் வேளையில்
வண்ண மயிலொன்று
தோகை விரித்தாடும் நிலையில்
துள்ளியாடி மகிழ்கின்றேன்//
அட அட அட என்ன ஒரு உவமை அக்கா உங்களை அடிச்சிக்க ஆளேயில்லக்கா.
ஒவ்வொரு நட்சத்திரங்களும்
பதிலளிநீக்குஒளிக் கதிர்களை பாய்ச்சிட
உன்பார்வை தந்த ஸ்பரிசங்கள்
உள்நெஞ்சில் ஊஞ்சலாட
உள்ரங்க அறைகளெல்லாம்
ஒளிவெள்ளம் பரவக் காண்கிறேன்/
வரிகளை எனக்குள்ளும் ஒளிவெள்ளம் பரவ உணருகின்றேன்
அக்கா இதெல்லாம் மாமாவுக்காகத்தானே
நல்ல கவிதை.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
அழகான கவிதை மிகவும் ரசித்தேன்
பதிலளிநீக்குHi..Malikka.h r u?nanum muthupetai than..un veetuku pakkathu veedu..en tailor aava veetuku pakathu veedu.indruthan nan unai parthen.mm masha allah very good.i have very surprised
பதிலளிநீக்கு