நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஜீவராகம்..


நானும் நீயும் ஒன்றடா-என்
நாணம் சொல்லும் கேளடா
உன்வார்த்தை ஒன்று போதுமே
என் ஜென்மம் நீளுமே!

காற்று உந்தன் காதிலே
எந்தன் காதல் வந்து சொல்லுமே
அதை கேட்டு நீயும் பாரடி
உனைத் தேடுமென் ஜீவனடி

வான வீதிப் பாதையில்
வாசம் வீசும் பூங்குயில்
ராகம் சொல்லி பாடுதடா
ரகசியமாய் தினமும் தேடுதடா

உயிரும் மெல்ல உருகுதடி-அதில்
ஊணும் சேர்ந்து கரையுதடி
உண்ணும் உணவும் யாவுமே
உன் நினைவாய் உடலில் சேருதடி

நானும் நீயும் ஒன்றடா -அந்த
நாளும் பொழுதும் ஒன்றடா
நகரும் நொடியும் ஒன்றடா
நம் காதலும் அதனினுல் நன்றடா

காலந்தோரும் உன்னுடன்
கைசேர்ந்து கலந்து வாழனும்
இறுதி மூச்சு நாள்வரை-நம்
இதயம் இணைந்தே இருக்கனும்

வானம் பூமியாவுமே-நம்மை
வாழச்சொல்லி வாழ்த்துமே -அந்த
வசந்தமும் நம்முடன் சேர்ந்துதான்
விளையாடி மகிழுமே!

”நானும் நீயும் ஒன்றடா”
”நம் ஜீவன் இரண்டும் ஒன்றடி”


டபுள் டிஸ்கி//இதையெல்லாம் பாட்டுன்னு நெனச்சி யாரும் பாடிடாதீங்கோ சும்மா ஒளறி வச்சிருக்கோம் அவ்வளவுதேன் ஹா ஹா
சேதி தெரியுமா இப்படி நாம ஒளறி வக்கிறதக்கூட சுட்டுகிட்டுபோய் அவங்க எழுதின பாட்டா போட்டுக்கிறாங்கன்னு ஒருத்தர் வழக்கு தொடர்ந்திருக்காம். ஒன்னோடதெல்லாம் யாரு சுடுவாங்குறீங்களா அதுவும் சரிதான் ஹி ஹி

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

19 கருத்துகள்:

  1. தாளத்துடந்தான் பாடத் தோணுது மலிக்கா அருமை...:-)

    பதிலளிநீக்கு
  2. வாங்கக்கா. மெட்டோடு தாளம்போட்டு பாட்டப்பாடி ஒரு சீடி அனுப்புங்கக்கா.

    அன்பான வருகைக்கும்
    அழகிய கருத்துக்கும்
    மலர்கொத்து வரவேற்ப்பு
    எந்தன் பிரேமலதா அக்காவுக்கு..

    பதிலளிநீக்கு
  3. கருத்தும் இருக்கு, ராகமும் இருக்கு கவிஞரே!

    பதிலளிநீக்கு
  4. என்னா வரிகள்... மலிக்கா... பேசாம சினிமாவுக்கு பாட்டெழுத ட்ரை பண்ணும்மா... பிரமாதமான எதிர்காலம் காத்திருக்கு...

    பதிலளிநீக்கு
  5. நானும் நீயும் ஒன்றடா -அந்த
    நாளும் பொழுதும் ஒன்றடா
    நகரும் நொடியும் ஒன்றடா
    நம் காதலும் அதனினுல் நன்றடா//

    சூப்பர் சூப்பர் அடிதூள் கெளப்புறீங்கக்கா. இப்பெல்லாம் ராகம் தாளம் பல்லவியோட கவிதை கலைகட்டுது.. ம்ம் எல்லாம் நாடுக்கு வந்ததும்தானே..

    நான் அவரப்பார்த்து பாடுறமாதரியே இருக்குக்கா சீஇ வெக்கமாக வருது.

    பதிலளிநீக்கு
  6. கணேஷ் அங்கிள் சொன்னதுபோல் எதிர்காலம் பிராகமாக காத்திருக்குக்கா. ஆல்த பெஸ்ட்..

    பதிலளிநீக்கு
  7. அன்பு சகோதரி
    அட்டகாசமான நடையில், மனதை கவர்ந்த வரிகள், வாழ்த்துக்கள், நன்றி

    பதிலளிநீக்கு
  8. பிளாகர் Philosophy Prabhakaran கூறியது...

    ஒய் திஸ் கொலவெறி...???//

    ஒங்களுக்கு ஏங்க அக்காமேல இப்படியொரு பொறாமை. ஹா ஹா

    பதிலளிநீக்கு
  9. NIZAMUDEEN கூறியது...

    கருத்தும் இருக்கு, ராகமும் இருக்கு கவிஞரே!//

    வாங்க நிஜாமண்ணா. வருகைகும் கருதுக்கும் மிக்க நன்றிண்ணா..

    பதிலளிநீக்கு
  10. Philosophy Prabhakaran கூறியது...

    ஒய் திஸ் கொலவெறி...???//

    எல்லாம் அந்த காதலுக்குதான் இந்த கொலவெறி ஹி ஹி..

    பதிலளிநீக்கு
  11. கணேஷ் கூறியது...

    என்னா வரிகள்... மலிக்கா... பேசாம சினிமாவுக்கு பாட்டெழுத ட்ரை பண்ணும்மா... பிரமாதமான எதிர்காலம் காத்திருக்கு...//

    அப்படியாண்ணா. ரொம்ப சந்தோஷம். எழுதிவச்சதயெல்லாம் எடுத்துக்கிட்டு பொறப்படசொல்லுறீங்க. படையெடுக்க முயச்சிப்போம்.

    தங்களின் அன்பான கருதுக்கு மிகுந்த மகிழ்ச்சிண்ணா.

    அதுசரி இதெல்லாம் ஒரு பாட்டா அப்படின்னு கேட்டா இதையும் பாட்டுன்னு சொன்னது அண்ணாத்தேதான் சொல்லுவேன் ஓக்கேவா..

    பதிலளிநீக்கு
  12. அனுஜா கூறியது...

    நானும் நீயும் ஒன்றடா -அந்த
    நாளும் பொழுதும் ஒன்றடா
    நகரும் நொடியும் ஒன்றடா
    நம் காதலும் அதனினுல் நன்றடா//

    சூப்பர் சூப்பர் அடிதூள் கெளப்புறீங்கக்கா. இப்பெல்லாம் ராகம் தாளம் பல்லவியோட கவிதை கலைகட்டுது.. ம்ம் எல்லாம் நாடுக்கு வந்ததும்தானே..

    நான் அவரப்பார்த்து பாடுறமாதரியே இருக்குக்கா சீஇ வெக்கமாக வருது.//

    வாங்க அனுமா. எல்லாம் மண்வாசம்தந்ததுதான் கண்ணு.

    இதைப்படிச்சிட்டு போய் அத்தானைப் பார்த்து பாடினாயோ யின்னா சொன்னார் போடி போடி புண்ணாக்குன்னு சொன்னாரோ ஹா ஹா.

    வருகைக்கும் அன்பு நிறைந்த பின்னூட்டத்திற்க்கும் மனமர்ந்த நன்றி அனுஜா..

    பதிலளிநீக்கு
  13. அனுஜா கூறியது...

    கணேஷ் அங்கிள் சொன்னதுபோல் எதிர்காலம் பிராகமாக காத்திருக்குக்கா. ஆல்த பெஸ்ட்..//

    ஆக கும்மியடிக்க காத்திருக்கீங்க. எல்லாம் அவன் செயல்..

    பதிலளிநீக்கு
  14. ஃஃஃஇதையெல்லாம் பாட்டுன்னு நெனச்சி யாரும் பாடிடாதீங்கோ சும்மா ஒளறி வச்சிருக்கோம் அவ்வளவுதேன் ஃஃஃஃ இதை என்னால் ஏற்றக் கொள்ள முடியாது... காரணம் அதன் வரிக் கோர்ப்பு விதம் பழைய மெட்டுக்களுடன் கூட சேர்த்துப் பாடலாம் போல உள்ளது...

    உண்மையாக அருமையாக உள்ளது...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

    பதிலளிநீக்கு
  15. ♔ம.தி.சுதா♔ கூறியது...

    ஃஃஃஇதையெல்லாம் பாட்டுன்னு நெனச்சி யாரும் பாடிடாதீங்கோ சும்மா ஒளறி வச்சிருக்கோம் அவ்வளவுதேன் ஃஃஃஃ இதை என்னால் ஏற்றக் கொள்ள முடியாது... காரணம் அதன் வரிக் கோர்ப்பு விதம் பழைய மெட்டுக்களுடன் கூட சேர்த்துப் பாடலாம் போல உள்ளது...

    உண்மையாக அருமையாக உள்ளது...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா//

    மெய்யாலுமேதானா!!!!! அப்பசரி இது பாட்டேதான்.
    சகோதரரின் சொல்லுக்கு மனசுக்குள் மத்தாப்பு..

    மிக்க நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  16. ஜீவனுள்ள ராகம்
    மனதை வருடுகிறது கவி..
    அருமை சகோதரி...

    பதிலளிநீக்கு
  17. " டீ" (ஏன்டி) என்று சொல்வது தவறு ஆனால் " டா "(ஏன்டா )என்று சொல்லலாமா!

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது