நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தீ,,,,,,,,ண்டாமை






அசுரனை ஒழித்ததால்
அமர்க்களப்பட்ட பட்டாசுகள்
அசுரவேகத்தில் பறந்து
ஆகாயத்தை
கீறிப் பார்க்க முயன்று
தோற்றுப்போய் சீற

அடுக்கடுக்காய்
சிதறிய  காதிதங்களோடு-தீயின்
சிறுபொறியொன்றும் சேர்ந்து
கீழ்நோக்கியபோது

தீட்டென 
தள்ளிவைத்திருக்கும் கூரையை 
தீண்டிப் பார்த்தும்
சீண்டாமல் சென்றது

 ”தீ”ண்டாமையால்
தீண்டப்பட்ட அக்குடில்
தகதவென எரிந்தது
எரியூட்டப்பட்ட தீயினால் அல்ல
ஏற்ற இறக்கம் தந்த நோயினால்

பட்டாசு வெடிச்சும்
புத்தாடை அணிந்தும்
பலகாரம் செய்தும்
பரிபூர்ண பயனில்லை

”ஏனெனில்”
 பலயிடங்களில்
அரக்ககுணமான தீண்டாமையெனும்
அசுரன்[கள்]  இன்னும் அழியவில்லை..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

19 கருத்துகள்:

  1. வாங்கய்யா வாத்தியாரைய்யா உம்மை வரவேற்க்க வந்தோம்மையா..

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. ஓஹோ...!

    பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்

    பிறந்த மண்ணில்... தங்கள் கால்பட்டதும்...!

    தங்கள்மீது அவ்வூர் காற்று பட்டதும்...!

    தங்கள் முன்பதிவின்படி "ஈ.............ரோடுக்கு" போய்வந்ததும்

    தங்கள் கைகள் "தீ........ ண்டாமை" பற்றி எழுத ஆரம்பித்துவிட்டதோ...!

    பதிலளிநீக்கு
  4. ”தீ” யெனச்சுடும் கவிதை. பாராட்டுக்கள். vgk

    பதிலளிநீக்கு
  5. மனிதம்
    மனிதனுள்ளிருந்து
    மறைந்துபோனதால்....!

    மனிதனின்
    மனதினுள்
    "மனிதாபிமானம்"
    மறைந்து போனதால்...!

    மனித மனம்
    மரமாய் மரத்து....
    இரும்பாய்
    இறுகிப் போனதால்....!

    மனிதனுள் இருந்த....
    "தெய்வ குணம்" மறைந்து...
    "அசுர குணம்" மனதினுள்
    ஆட்சி புரிவதால்...!

    தங்கள் கவிதையில் சொன்ன... ////அரக்ககுணமான தீண்டாமையெனும்
    அசுரன்[கள்] இன்னும் அழியவில்லை..////

    அழியாது...!
    அழியாது.....!
    அழியாது.........!

    மனிதயினம்
    அழியும்வரை
    அழியாது...!

    அவனின்
    "அசுர குணம்"...
    அழியாது...!
    மறையாது...!

    இன்னும் பலமாய்...
    அசுரபலத்துடன்
    மென்மேலும் வளரும்...!



    "தீ....ண்டாமை"
    கவிதை அற்புதம்...!

    வாழ்த்துக்கள்...!

    நட்புடன்...
    காஞ்சி முரளி....!

    பதிலளிநீக்கு
  6. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  7. வாணங்கள் வார்த்தை வேட்டுக்களை சுமந்து வாசிப்போரின் நெஞ்சத்தை தாக்கியதால் அதன் பொருட்டு அது பற்றி எரிகிறது... நல்ல சமூக நலன் கருதி சாட்டையைக் கைகொண்ட சத்தான கவிதை... மாஷா அலாஹ்...மாலிக்கா உங்களின் இந்த திசை நோக்கிய பயணம் வரவேற்க்கத்தக்கது...பாராட்டுக்கள்..

    மன்னியுங்கள் நான் இங்கே ஒட்டியுள்ள வரிகளில் 'இன்னும்' எனும் பதம் ஒன்று போதுமே பார்வையிட்டு சரிசெய்யுங்கள் சுட்டியமைக்கு மீண்டும் மன்னியுங்கள்...

    பதிலளிநீக்கு
  8. அருமையான கவிதை
    அற்புதமான கருத்தை
    அசத்தலாக சொல்லி
    ஆனந்த பட வைத்தது சகோதரி

    பதிலளிநீக்கு
  9. காஞ்சி முரளி கூறியது...

    ஓஹோ...!

    பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்

    பிறந்த மண்ணில்... தங்கள் கால்பட்டதும்...!

    தங்கள்மீது அவ்வூர் காற்று பட்டதும்...!

    தங்கள் முன்பதிவின்படி "ஈ.............ரோடுக்கு" போய்வந்ததும்

    தங்கள் கைகள் "தீ........ ண்டாமை" பற்றி எழுத ஆரம்பித்துவிட்டதோ...!//

    கால்பட்டதும் கனமழை கொட்டோ கொட்டென்று கொட்டியதில்
    ஈரோட்டில் ரோட்டையே காணோம்..

    எங்கு நல்லவிசயம் கிடைக்குமோ அதன் எதிரொலி எல்லோரையும் பற்றும். சிலவிசயங்கள் என்னையும் தொற்றியது.

    பதிலளிநீக்கு
  10. வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...

    ”தீ” யெனச்சுடும் கவிதை. பாராட்டுக்கள். vgk//

    வாங்கய்யா. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  11. //அழியாது...!
    அழியாது.....!
    அழியாது.........!//

    ஆணித்தரமாய் அழியாதென அழுத்திச்சொல்லப்பட்டள்ளதை பார்த்தபோதே மனம் ஆழ்ந்த கவலைக்குள் தள்ளப்பட்டது.

    அழியவேண்டும் என அழுத்தமாக வேண்டியவளாய்..

    பதிலளிநீக்கு
  12. சே.குமார் கூறியது...

    அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள் அக்கா.//

    வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி குமார்..

    பதிலளிநீக்கு
  13. Abdullah கூறியது...

    வாணங்கள் வார்த்தை வேட்டுக்களை சுமந்து வாசிப்போரின் நெஞ்சத்தை தாக்கியதால் அதன் பொருட்டு அது பற்றி எரிகிறது... நல்ல சமூக நலன் கருதி சாட்டையைக் கைகொண்ட சத்தான கவிதை... மாஷா அலாஹ்...மாலிக்கா உங்களின் இந்த திசை நோக்கிய பயணம் வரவேற்க்கத்தக்கது...பாராட்டுக்கள்..//

    வாங்க சகோதரரே. தாங்களின் முதல் வருகைக்கு மிகுந்த மகிழ்ச்சி. தொடர்ந்துவர வேண்டுகிறேன்..

    //மன்னியுங்கள் நான் இங்கே ஒட்டியுள்ள வரிகளில் 'இன்னும்' எனும் பதம் ஒன்று போதுமே பார்வையிட்டு சரிசெய்யுங்கள் சுட்டியமைக்கு மீண்டும் மன்னியுங்கள்...//

    மன்னிப்பு எனும் சொல் வேண்டாம் நமக்குள். எதுவாக இருந்தாலும் தாளரமாக சுட்டிக்காட்டுங்கள் தவறு மற்றும் பிழைகளிருப்பின் திருத்திக்கொள்றேன்..

    சரிசெய்துவிட்டேன். வருகைகும் அன்பான சுட்டிக்காட்டுதலுக்கு மன்மார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  14. Rathnavel கூறியது...

    நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.//

    வாங்கய்யா வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  15. A.R.ராஜகோபாலன் கூறியது...

    அருமையான கவிதை
    அற்புதமான கருத்தை
    அசத்தலாக சொல்லி
    ஆனந்த பட வைத்தது சகோதரி//

    வாங்க சகோதரா நலமா?
    அழகாய் சொற்களெடுத்து கருத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  16. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  17. காஞ்சி முரளி கூறியது...
    ////ஆணித்தரமாய் அழியாதென அழுத்திச்சொல்லப்பட்டள்ளதை பார்த்தபோதே மனம் ஆழ்ந்த கவலைக்குள் தள்ளப்பட்டது.

    அழியவேண்டும் என அழுத்தமாக வேண்டியவளாய்..////

    நீங்கள் உங்கள் கனவுகளைச் சொல்கிறீர்கள்...!

    நான் சொல்வது நனவு...!

    நேற்று நான் எழுதியதை
    நிஜமாக்கிய நிகழ்ச்சியை...
    இன்று நான் கண்டதால் சொல்கிறேன்...!

    "காக்கைகுருவி எங்கள் ஜாதி...!" என்று பாடிய பாரதி மட்டும்
    உயிரோடு இருந்திருந்தால்... அடித்தே கொன்றிருப்பார்கள்...!

    நான் சொல்வது
    எதார்த்தம்...!
    நடப்பது...!
    நடைமுறையில் உள்ளது..!

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது