நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இதெல்லாம் யாரிடம் இருக்கிறது?

பக்குவம். புரிதல். அனுசரித்தல். நிதானம். சகிப்புதன்மை. பொருமை. விட்டுக்கொடுத்தல். இவையனைத்தும் இன்[று]னும் இருக்கிறதா?[ என்னா ஒரு கேள்வி ] அப்படியிருந்தால் அது யாரிடம் அதிகமிருக்கிறது. ஆணிடமா? பெண்ணிடமா? படிக்காதவர்களிடமா? படித்தவர்களிடமா?


டிஸ்கி//ஊருக்குள்ள வந்திருக்கோமுல்ல அதேன் இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கசொல்லி அடம்பிடிக்குது நம்ம மூளை! என்னாது மூளையா அப்படின்னா யின்னா?! அதெல்லாம் கேள்வியா கேட்காம இதுக்கு பதில் சொல்லுங்க. எதுக்காக இப்படி கேள்விகேட்டோமுன்னு அடுத்த பதிவுல சொல்லுறோம்.


இப்படிக்கு
வேலைக்கு மூளை கொடுப்போர் சங்கம்.


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

18 கருத்துகள்:

 1. ஆணிடமா? பெண்ணிடமா?

  இப்படி இதை வகைப்படுத்திவிட முடியாது, வகைப்படுத்தவும் கூடாது

  ஆண்களையும் பெண்களை ஏன் பிரித்தே பார்க்கனும் ?

  (பார்ரா இப்படி ஒரு கேள்வி - இதையும் சேர்த்துக்கோங்க ...)

  அடுத்தவர்களையும் தன்னை போலவே நேசிக்கும் அனைவரிடமும் இவையனைத்தும் அதிகமிருக்கும் ...

  பதிலளிநீக்கு
 2. இதுல ஆண்பால், பெண்பால்ன்னு பிரிக்கிரதுக்கு ஒன்னும் இல்லை...

  சில நேரங்களில் ஆண்களிடமும் சில நேரங்களில் பெண்களிடமும் காணப்படும்...

  பதிலளிநீக்கு
 3. யக்கோவ் இருவரிடமும் இது இல்லையின்னு நினைக்கிறேன். அதிலும் படித்தவர்களிடம் ம்ஹூம்..

  நல்ல கேள்விங்கோ..

  பதிலளிநீக்கு
 4. அன்பு சகோதரி
  தலைப்பை பார்த்து வந்தால் ஏகப்பட்ட கேள்விக்கணைகள்...
  அப்பப்பா...
  வீட்டுக்குள் பார்க்கவேண்டுமானால்,
  நீங்கள் கூறிய அத்தனையிலும் பக்குவம் தவிர பெண்கள் சற்று
  மேலோங்கியே இருக்கிறார்கள் என்பது என் கருத்து. பொறுமை என்பது
  ஆண்களை பொறுத்த வரையில் மிகவும் குறைவே.
  உதாரணமாக, குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கையில் ஆண்களுக்கு
  இருக்கும் பொறுமையை விட பெண்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

  சமுதாய நோக்கில் பார்க்கவேண்டுமானால், இருபாலரும் சமமாகவே இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 5. ஆண் பெண் பேதமில்லை தோழி இந்தக் குணங்களுக்கு.மனம்தான் அல்லது அவர்களது மரபுவழிக்குணம் !

  பதிலளிநீக்கு
 6. "மூளைக்கு வேலை கொடுப்போர் சங்கம்"ன்னுதான் சொல்லணும்..!
  இதென்ன புதுசா..
  வேலைக்கு மூளை கொடுப்போர் சங்கம்...??????

  பதிலளிநீக்கு
 7. ////பக்குவம். புரிதல். அனுசரித்தல். நிதானம். சகிப்புதன்மை. பொருமை. விட்டுக்கொடுத்தல். இவையனைத்தும் இன்[று]னும் இருக்கிறதா?///

  பதில் : இருக்கு.... ஆனா...! இல்ல...!

  ////அப்படியிருந்தால் அது யாரிடம் அதிகமிருக்கிறது./////

  பதில் : இது என்ன ஸ்கேல வச்சு அளக்கர விஷயமா?

  ////ஆணிடமா? பெண்ணிடமா? ////

  பதில் : இதற்கு பாகுபாடுகள் கிடையாது... காரணம், பணிபுரியுமிடத்தில் ஆண்களும்....! வீட்டில் பெண்களும்.. இவற்றோடு இருப்பதால்தான் இச்சமூகம் இன்னும் குத்துயிரும், குலையுயிருமாக இருக்கிறது...!

  ஆனால், அனைவரும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்...!
  நீங்கள் மேற்சொன்னவைகளை, கடைபிடித்து வரும் சதவீதம் குறைந்துகொண்டே வருகிறது...!
  எடுத்துக்காட்டு : ஒரேஒருநாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்து... குடும்பநல நீதிமன்றத்தை வந்து பாருங்கள்...!
  கோடீஸ்வர தம்பதி முதல் பிச்சைக்கார தம்பதி வரை வரிசையில் நிற்கிறார்கள்... விவாகரத்து பெறுவதற்கு...! அங்கு பல்வேறு வகையான தம்பதிகளை காணலாம்...!

  இதற்கு முழுமுழு காரணமே... நீங்க மேற்சொன்ன ///பக்குவம். புரிதல். அனுசரித்தல். நிதானம். சகிப்புதன்மை. பொருமை. விட்டுக்கொடுத்தல்//// இவையனைத்தும் இல்லாததே காரணம்..! அதோடு...! இப்போது ஈர்ப்பின் காரணமாய்.... வயதின் காரணமாய் "காலையில், கண்டதும் காதல்...! பகலில் மோதல்....! மாலையில் நீதிமன்றம்....! இரவில் விவாகரத்து...!" என அதிவேக வாழ்க்கையில் சிக்கி.. பெரியோரை, முன்னோர்களை, சமுதாயத்தை உதாசீனப்படுத்துவதன் காரணமாய் இவ்விளைவுகள்...!

  /////படிக்காதவர்களிடமா? படித்தவர்களிடமா?////

  பதில்: தொடரும்... PART - II

  பதிலளிநீக்கு
 8. PART - II

  /////படிக்காதவர்களிடமா? படித்தவர்களிடமா?////

  பதில் : இது முக்கியமான கேள்வி..!
  படிக்காதவர்களைவிட படித்தவர்கள் புத்திசாலிகள் என பலபேர் நினைத்துகொண்டிருக்கிறார்கள்...!
  அது முற்றிலும் தவறு...!
  "புத்திசாலித்தனம்" என்பது கற்ற கல்வியை வைத்து வருவதல்ல...!
  அது..! வளர்ந்த, வளர்க்கப்பட்ட முறை.... சுற்றுச்சுழல்... மரபுவழி மற்றும் இயற்கையானது...!

  படித்தவன் எல்லாம் புத்திசாலிகள் என சில அதிமேதாவிகள் சொல்வார்கள்...! இல்லை...!
  மெத்த படித்த நான், திண்ணைப் பள்ளியில் இரண்டாம் வகுப்புகூட பயிலாமல் பாதியிலேயே விட்டுவிட்ட என் தந்தையாரைவிட புத்திசாலியில்லை...! காரணம்...! அவருக்கு, கல்வியைவிட அனுபவ அறிவு அதிகம்...! அதனால்தான் மெத்தப் படித்தும் நான் பெறாத வெற்றிகளை என் தந்தை தன் அனுபவ அறிவின் மூலம் பலப்பல வெற்றிகளை வாழ்க்கையில் குவித்தார்...!

  எனவே... படிப்புக்கும்.. புத்திசாலித்தனத்திருக்கும் தொடர்பு இல்லை என்பதால்...!

  படித்தவன், "எல்லாம் எனக்குத் தெரியும்" என்று... "தான் மெத்த படித்தவன்" என்ற ஆணவத்தில்.. அகந்தையின் விளைவாக... வாழ்க்கையில் படுதோல்வி அடைகிறான்... அடைகிறாள்...!

  படித்தவன் நான் மேலே சொன்னதைப் போல... ஆணவத்தில்.. அகந்தையின் விளைவாக...நீங்கள் சொன்ன ///பக்குவம். புரிதல். அனுசரித்தல். நிதானம். சகிப்புதன்மை. பொருமை. விட்டுக்கொடுத்தல்//// ஆகியவற்றை பின்பற்றாமல்... பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெற்றாலும்... தன் வாழ்க்கையில் படுதோல்வி... முழுதோல்வியை தழுவுகிறான்...! அதோடு...! இறுதியில் அவன்... என் பிரிய கவிஞன் கண்ணதாசன் சொன்னதைப் போல "ஆயிரம் இருந்தும்... வசதிகள் இருந்தும்.... No Peace of Mind"... என்று புலம்பிக்கொண்டே "கடலில் உப்பைக் கொட்டிவிட்டு அதை தேடுபவன்" போல.... தான் தொலைத்த... தொலைந்துபோன தன் வாழ்க்கையை தேடித்தேடி அலைந்துகொண்டே இருப்பான்...!

  அதோடு...! நான் மேலே சொன்ன குடும்பநல நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு வரிசையில் நிற்பவர்களில் 90 சதவீதம் "படித்த மேதாவிகள்"தான்...!
  எனவே...! நீங்கள் சொன்ன ///பக்குவம். புரிதல். அனுசரித்தல். நிதானம். சகிப்புதன்மை. பொருமை. விட்டுக்கொடுத்தல்//// இல்லாதிருப்பது... அல்லது குறைத்திருப்பது படிக்காதவரைவிட படித்தவர்களிடம் மட்டுமே அதிகம்...!

  பதிலளிநீக்கு
 9. நட்புடன் ஜமால் கூறியது...

  ஆணிடமா? பெண்ணிடமா?

  இப்படி இதை வகைப்படுத்திவிட முடியாது, வகைப்படுத்தவும் கூடாது

  ஆண்களையும் பெண்களை ஏன் பிரித்தே பார்க்கனும் ?

  (பார்ரா இப்படி ஒரு கேள்வி - இதையும் சேர்த்துக்கோங்க ...)

  அடுத்தவர்களையும் தன்னை போலவே நேசிக்கும் அனைவரிடமும் இவையனைத்தும் அதிகமிருக்கும் ...//

  வாங்க ஜமாலண்ணா எப்படியிருக்கீங்க நீண்ண்ண்ண்ண்ண்ட நாளாக ஆளையே காணோம்.

  ஓ ஆண்பாதி பெண்பாதி அனைத்திலும் சமநீதி ஓகே ஓகே..


  //அடுத்தவர்களையும் தன்னை போலவே நேசிக்கும் அனைவரிடமும் இவையனைத்தும் அதிகமிருக்கும் // ஆமாம் உண்மைதான்..

  பதிலளிநீக்கு
 10. /Philosophy Prabhakaran கூறியது...

  இதுல ஆண்பால், பெண்பால்ன்னு பிரிக்கிரதுக்கு ஒன்னும் இல்லை...//


  சில நேரங்களில் ஆண்களிடமும் சில நேரங்களில் பெண்களிடமும் காணப்படும்...//

  ஆக சரிசமம் .. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 11. suji கூறியது...

  யக்கோவ் இருவரிடமும் இது இல்லையின்னு நினைக்கிறேன். அதிலும் படித்தவர்களிடம் ம்ஹூம்..

  நல்ல கேள்விங்கோ..//

  அதுசரி ரெண்டுபக்கமுமே இல்லீயா.

  அப்பாட இது கெட்ட கேள்வி . நன்றி சுஜி..

  பதிலளிநீக்கு
 12. //மகேந்திரன் கூறியது...

  அன்பு சகோதரி
  தலைப்பை பார்த்து வந்தால் ஏகப்பட்ட கேள்விக்கணைகள்...
  அப்பப்பா...
  வீட்டுக்குள் பார்க்கவேண்டுமானால்,
  நீங்கள் கூறிய அத்தனையிலும் பக்குவம் தவிர பெண்கள் சற்று
  மேலோங்கியே இருக்கிறார்கள் என்பது என் கருத்து.

  பொறுமை என்பது
  ஆண்களை பொறுத்த வரையில் மிகவும் குறைவே.
  உதாரணமாக, குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கையில் ஆண்களுக்கு
  இருக்கும் பொறுமையை விட பெண்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

  சமுதாய நோக்கில் பார்க்கவேண்டுமானால், இருபாலரும் சமமாகவே இருக்கிறார்கள்.//

  வாங்க சகோ. தங்களின் கருத்துகள் அருமை. மிக்க நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 13. ஹேமா கூறியது...

  ஆண் பெண் பேதமில்லை தோழி இந்தக் குணங்களுக்கு.மனம்தான் அல்லது அவர்களது மரபுவழிக்குணம் !//

  தோழி நலமா?. இதுவும் சரிதான்.

  மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 14. காஞ்சி முரளி கூறியது...

  "மூளைக்கு வேலை கொடுப்போர் சங்கம்"ன்னுதான் சொல்லணும்..!
  இதென்ன புதுசா..
  வேலைக்கு மூளை கொடுப்போர் சங்கம்...??????//

  மூளைக்கே வேலைக்கொடுத்துக்கொண்டிருந்தால்
  எப்படி. அதான்
  வேலைக்கு மூளை கொடுக்கிறோம்..

  பதிலளிநீக்கு
 15. காஞ்சி முரளி கூறியது...

  ////பக்குவம். புரிதல். அனுசரித்தல். நிதானம். சகிப்புதன்மை. பொருமை. விட்டுக்கொடுத்தல். இவையனைத்தும் இன்[று]னும் இருக்கிறதா?///

  பதில் : இருக்கு.... ஆனா...! இல்ல...!//

  ஆகா என்னே ஒரு பதில் சூப்பரப்பூ..

  பதிலளிநீக்கு
 16. ////அப்படியிருந்தால் அது யாரிடம் அதிகமிருக்கிறது./////

  பதில் : இது என்ன ஸ்கேல வச்சு அளக்கர விஷயமா?//

  இல்லாங்காட்டி மெசெரிங் டேப் வச்சிக்கூட அளக்களாமோ!

  பதிலளிநீக்கு
 17. ////ஆணிடமா? பெண்ணிடமா? ////

  பதில் : இதற்கு பாகுபாடுகள் கிடையாது... காரணம், பணிபுரியுமிடத்தில் ஆண்களும்....! வீட்டில் பெண்களும்.. இவற்றோடு இருப்பதால்தான் இச்சமூகம் இன்னும் குத்துயிரும், குலையுயிருமாக இருக்கிறது...! //

  ஆக அதுக்கு கொஞ்சூட்டு உயிர் ஒட்டிகிட்டு இருக்கு.

  பதிலளிநீக்கு
 18. ஆனால், அனைவரும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்...!
  //நீங்கள் மேற்சொன்னவைகளை, கடைபிடித்து வரும் சதவீதம் குறைந்துகொண்டே வருகிறது...!
  எடுத்துக்காட்டு : ஒரேஒருநாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்து... குடும்பநல நீதிமன்றத்தை வந்து பாருங்கள்...!
  கோடீஸ்வர தம்பதி முதல் பிச்சைக்கார தம்பதி வரை வரிசையில் நிற்கிறார்கள்... விவாகரத்து பெறுவதற்கு...! அங்கு பல்வேறு வகையான தம்பதிகளை காணலாம்...! //

  அடடா என்ன ஒரு அருமையான விசயம். இப்பெல்லாம் விவாகம் ரத்தாவது சர்வசாதரணமாகிவிட்டது .ஏனென்றால் விவாகம் ஆகியும் இருமனங்களுக்குள் விரிசல்கள் இருப்பதால். இருகைகள் இணைந்தும் இதயம் இணையாததால்.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது