நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பிரிவின் துயர்!

  

டிவயிற்றில் 
அமிலம் சுரக்கும் உணர்வு!
நெஞ்சுப் பகுதிக்குள்
நிலநடுக்கம் வந்த அதிர்வு!
 தொண்டைகுழியில்
துளிநீரின்றி துவழும் தவிப்பு!

லைகள்     
கிளைகளைவிட்டு உதிர்வதுபோல்
இதயத்தை விட்டு 
ஏதோ நழுவதுபோன்றொரு துடிப்பு!

 டந்தவைகள் அனைத்தும்
 நினைவுகளாகி துயர் தருதே
 இதுதான் பிரிவின் வலியா!
 இதயமது 
இல்லாதது போலாகுதே!
இதுதான் பிரிவின் துயரா!
   
 பூக்களின் வாசத்தை 
நுகரும் நெஞ்சம்
 சிறு முள்குத்தலில் துடிப்பதுபோல்  
பாசத்தின் பிடிப்பை
 பற்றிக்கொள்ளும் மனம்
சிறு பிரிவில்கூட துடிக்கிறதே! 
     
வாழ்க்கையில் பல பிரிவு 
சில பிரிவு சிலாகிக்கிறது
சில பிரிவு சிக்கலாக்கிறது
சில பிரிவு சிந்திக்க வைக்கிறது
 சில பிரிவு கண்ணீர் சிந்த வைக்கிறது

பிரிவுகளின் பட்டில் 
பல வகையிருந்தாலும்                                       
அதன் வலிகளின் ரணங்கள்
ஆழ்மனதை
காயப்படுத்தாமல் இருப்பதேயில்லை!

தனால்தான் என்னவோ                                    
எந்நிலையிலும் எப்பிரிவையும்
எந்த உள்ளமும்                                       
ஏற்க விரும்புவதேயில்லை!...

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

19 கருத்துகள்:

  1. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. பிரிவின் துயரை அருமையான கவிதையாக எழுதியிருக்கீங்க மலிக்கா.

    பதிலளிநீக்கு
  3. அடிவயிற்றில்
    அமிலம் சுரக்கும் உணர்வு!
    நெஞ்சுப் பகுதிக்குள்
    நிலநடுக்கம் வந்த அதிர்வு!
    தொண்டைகுழியில்
    துளிநீரின்றி துவழும் தவிப்பு!//

    காதல் வசப்பட்ட உள்ளமொன்றின் உணர்வுகளை வர்ணிக்க, இதனை விட, வேறு வார்த்தைகளே தேவையில்லை.
    அவ்வளவு உணர்வு மயமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. நடந்தவைகள் அனைத்தும்
    நினைவுகளாகி துயர் தருதே
    இதுதான் பிரிவின் வலியா!//

    முதல் பந்தியில் மனதினுள் இனம் புரியாத பரவசத்தை கவிதை தந்தது, ஆனால் அடுத்த பந்தியில் கவிதை மனதினை கனக்கச் செய்கிறது..

    கண்ணீர் சிந்தும் காதல் பிரிவினை கவிதை வலிகளின் வார்த்தைகளினூடே வண்ணமடித்து நிற்கிறது.

    பதிலளிநீக்கு
  5. ஆச்சரியமான விசயம் என்னவென்றால் திருமணமாகி வேறு வீட்டிற்கு அடியோடு பெயர்த்தெடுத்து கொண்டு செல்லப்படும் பிரிவை தாங்கிக் கொள்கின்ற பெண்கள் பொதுவாக பிரிவை விரும்புவதேயில்லை. ஏன் மாலிக்கா?

    பதிலளிநீக்கு
  6. மலிக்கா எனக்கு புரியுது , இதன் அர்த்தம்.

    பதிலளிநீக்கு
  7. உண்மை கவிதை, அதான் சுடுது

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான வரிகளில் பிரிவின் ரணத்தை கூறி இருக்கின்றீர் ..

    பதிலளிநீக்கு
  9. //வாழ்க்கையில் பல பிரிவு
    சில பிரிவு சிலாகிக்கிறது
    சில பிரிவு சிக்கலாக்கிறது
    சில பிரிவு சிந்திக்க வைக்கிறது
    சில பிரிவு கண்ணீர் சிந்த வைக்கிறது//

    அருமையான மற்றும் உண்மையான வரிகள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  10. //Rathnavel கூறியது...

    நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.//

    வாங்க அய்யா. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..

    // asiya omar கூறியது...

    பிரிவின் துயரை அருமையான கவிதையாக எழுதியிருக்கீங்க மலிக்கா.//

    வாங்க ஆசியாக்கா. பிரிவின் வலியை உணரும் சந்தர்ப்பம் வரும்போது வெடித்து சிதறும் மன எண்ணங்கள்..

    மிக்க நன்றி அக்கா..

    பதிலளிநீக்கு
  11. // நிரூபன் கூறியது...

    அடிவயிற்றில்
    அமிலம் சுரக்கும் உணர்வு!
    நெஞ்சுப் பகுதிக்குள்
    நிலநடுக்கம் வந்த அதிர்வு!
    தொண்டைகுழியில்
    துளிநீரின்றி துவழும் தவிப்பு!//

    காதல் வசப்பட்ட உள்ளமொன்றின் உணர்வுகளை வர்ணிக்க, இதனை விட, வேறு வார்த்தைகளே தேவையில்லை.
    அவ்வளவு உணர்வு மயமாக இருக்கிறது.//
    காதல் வசப்படும் உணர்வுகளுக்கு மட்டுமல்ல இவ்வலி நிரூபம். பாசப்பினைப்புகளை பிரியும் சிலநேரத்தின் போதும் இதுபோன்றொரு வலி ஏற்படும்..

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா3 மே, 2011 அன்று PM 6:55

    மிக அருமை-பிரிவின் துயர் அழகாக எழுதி உள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  13. //நிரூபன் கூறியது...

    நடந்தவைகள் அனைத்தும்
    நினைவுகளாகி துயர் தருதே
    இதுதான் பிரிவின் வலியா!//

    முதல் பந்தியில் மனதினுள் இனம் புரியாத பரவசத்தை கவிதை தந்தது, ஆனால் அடுத்த பந்தியில் கவிதை மனதினை கனக்கச் செய்கிறது..

    கண்ணீர் சிந்தும் காதல் பிரிவினை கவிதை வலிகளின் வார்த்தைகளினூடே வண்ணமடித்து நிற்கிறது.//

    கண்ணீர் சிந்தும் கனத்த வரிகளை உருவாக்கும் சந்தர்ப்பம் காதலால் அதாவது கருவறையில் உருவான உயிர்மேல் வைத்த காதலாலலும் வரும்.

    மிக்க நன்றி நிரூபன் வரிகளை ரசித்து அதற்கான விளக்கமும் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  14. // சாகம்பரி கூறியது...

    ஆச்சரியமான விசயம் என்னவென்றால் திருமணமாகி வேறு வீட்டிற்கு அடியோடு பெயர்த்தெடுத்து கொண்டு செல்லப்படும் பிரிவை தாங்கிக் கொள்கின்ற பெண்கள் பொதுவாக பிரிவை விரும்புவதேயில்லை. ஏன் மாலிக்கா?//

    முதலில் தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி..

    பிரிவையே விரும்புவதில்லை அப்படியிருக்க. அது எப்பிரிவானாலும் அதை மனம் ஏற்காது, என்றபோதும் சிலநேரங்களில் சிலாகிக்கும் பிரிவாக அப்பரிவு ஆகும்போது, அதாவது அப்பிரிவால் பலருக்கு நலம் அதில் தனக்கும் நலமிருக்கும்போது அதை ஏற்பதுபோல் ஏற்றுக்கொள்வதுதான் சாகம்பரி...

    பதிலளிநீக்கு
  15. //வாழ்க்கையில் பல பிரிவு
    சில பிரிவு சிலாகிக்கிறது
    சில பிரிவு சிக்கலாக்கிறது
    சில பிரிவு சிந்திக்க வைக்கிறது
    சில பிரிவு கண்ணீர் சிந்த வைக்கிறது//

    என்ன அருமையான வரிகள் மலிக்காக்கா.
    பிரிவின் துயரை வலியோடு எங்களின் துயரத்தையும் வெளிப்படுதியதுபோல் செய்துள்ளீர்கள்..
    நன்றி மலிக்காக்கா வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. அடிவயிற்றில்
    அமிலம் சுரக்கும் உணர்வு!
    நெஞ்சுப் பகுதிக்குள்
    நிலநடுக்கம் வந்த அதிர்வு!
    தொண்டைகுழியில்
    துளிநீரின்றி துவழும் தவிப்பு!//


    இந்த வரிகள் உண்மையின் வெளிப்பாடுக்கா. அசத்துரீங்க. கவிதையில் கலக்க உங்களுக்கு நிகர் நீங்கதான்..

    பதிலளிநீக்கு
  17. பெண்களுக்குள் இத்தனை வலிகள் உள்ளன என்று தெரிந்திருந்தும் உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கின்றன. இதில் கொடுமையும், வேடிக்கையும் என்னவென்றால் பெரும்பான்மையான பெண்களே இவற்றிற்குப் பின்னால் நிற்பது தான். ஆகவே தான் குறுகிய மனப்பான்மைகளை மறந்து எல்லோரும் சேர்ந்து இக்கொடுமைகளை ஒழித்துக் கட்ட முன்வரவேண்டும். கவிதை நிஜம். இதற்கான தீர்வுகள் முன் வைக்கப்பட வேண்டும். பாரட்டுக்கள். Sega Siva

    பதிலளிநீக்கு
  18. பெண்களுக்குள் இத்தனை வலிகள் உள்ளன என்று தெரிந்திருந்தும் உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கின்றன. இதில் கொடுமையும், வேடிக்கையும் என்னவென்றால் பெரும்பான்மையான பெண்களே இவற்றிற்குப் பின்னால் நிற்பது தான். ஆகவே தான் குறுகிய மனப்பான்மைகளை மறந்து எல்லோரும் சேர்ந்து இக்கொடுமைகளை ஒழித்துக் கட்ட முன்வரவேண்டும். கவிதை நிஜம். இதற்கான தீர்வுகள் முன் வைக்கப்பட வேண்டும். பாரட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  19. பெயரில்லா6 மே, 2011 அன்று PM 12:14

    "எந்நிலையிலும் எப்பிரிவையும்
    எந்த உள்ளமும்
    ஏற்க விரும்புவதேயில்லை!... "

    நிதர்சனமான வரிகள் மலிக்கா.இதை படிக்கும் போது கூட என் மனம் வலிக்கின்றது.பிரிவை நினைத்தாலே....கவலை தான் மிஞ்சும்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது