நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தீப ஒளிபோல் தகதகக்கும் கவிதை.























முதலில்
தீபஒளியில் திழைக்கும் மனங்கள் அத்தனைக்கும்
தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தித்திப்போடு வாழ்த்துக்களை வழங்குவதில்
திருப்தியடையும் மனம்..
[மறந்துடாம தித்திப்பு பார்சல் அனுப்பிடுங்கப்பு]

அப்புறம்
என் அன்புமகன் எழுதிய முதல் கவிதை. நேற்று இரவு திடீரென்று மம்மி நான் ஒரு போயம்[poem]] சொல்லவான்னா சொல்லுங்களேன்பார்ப்போம் அப்படின்னே. உடனே இந்த கவிதையை இருவரிகள்சொல்லி முடிக்கும் சமயம் என் கன்னங்களில் கைவைத்து மம்மி ஒரு இதயம்தானே மம்மி இருக்குன்னு அவன் நெஞ்சில் கைவைத்துக்கொண்டு தலையை சாய்த்து என்முகத்தை நோக்கிய அழகிருக்கே!!!!!!!!! அப்பப்பா அதை சொல்லில் வடிக்க இயலாது.
அத்தனை அன்பா என்மேல் உனக்கு என்றேன்.
பின்னே இருக்காதா என்செல்ல மம்மியாச்சேன்னு கட்டிக்கொண்டே.
[இன்னமும் அந்த சிலிர்ப்பு போகவில்லை]
நிறைய மனசுக்குள்  கவிதை இருக்கு மம்மி  அப்பப்ப சொல்லுவேன் ஓகேவான்னா. ட்ரிப்ள் ஓகே என்றேன்.. .

நாம்பெற்ற பிள்ளைகளின் ஒவ்வொரு செயல்களும் நம்மை அசரவைக்கிறத்து. அது நடையாகட்டும் உடையாகட்டும் செயலாகட்டும் சிரிப்பாகட்டும். அதுசாதரணமாகவேயிருந்தாலும். ஏதொ நம்குழந்தை சாதித்துவிட்டதைபோன்ற ஓர் உணர்வுகள்தான் நம்மை ஆட்கொள்ளும்.

மரூஃப்பிற்கு ஃபுட்பால் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம். அதேபோல் ஆர்ட் டிலும்,  எதைகாண்கிறானோ அதை வரைந்துவிடுகிறான்.
இளகியமனம், யாரின்முகமும் வாடியதுபோல் தெரிந்தால்,
பாவம்மம்மி அவங்க. என்பதலிருந்து பிறருக்கு உதவுவத்தில் முன் நிற்பதுவரை. நல்லபாசமுள்ளவன் அனைவரின்மேலும்.  வாப்பா [அப்பா] என்றால் அலாதிப்பிரியம்,அவர்களிடம்கிண்டலடித்துக்கொண்டேயிருப்பான்.
என்னிடம் நல்ல ஐஸ்வைப்பான், தப்புப்பண்ணிவிட்டதுபோல் தெரிந்தால்போதும் மம்மி மம்மின்னு வந்து என்கன்னத்தில் கைவைத்து
நான் சிரிக்கிறது நல்லாயிருக்கா அப்படின்னு சொல்லி கன்னத்தைகிள்ளி நல்லா மணக்குது மம்மி அப்படின்னு சொல்லி அப்படியே சிரிப்பான்.

தேவையில்லா எப்பொருளையும்வாங்கமாட்டான்.எதையும்  வேண்டும்தான் எனபிடிவாதம் பிடிக்கமாட்டான்,சூழ்நிலைகள்புரிந்து நடந்துகொள்வான்..ஆகமொத்தத்தில் நல்லபிள்ளை அண்ட். செல்லப்பிள்ளை..

டிஸ்கி//எப்படியிருக்கு செல்லமகனின் முதல் கவிதை.
மகனின் ஒருஎழுத்தானாலும் ஒருவரியானலும்
அது அம்மாவிற்கு கவிதைதான் இல்லையா..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

26 கருத்துகள்:

  1. இனிய தீபாவளி வாழ்த்துகள். அழகிய கவிஞரை உருவாக்குங்க.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வலைத்தளம் மூலம் உலகிலுள்ள அனைவருக்கும் என் இதயமார்ந்த தீபஓளி வாழ்த்துக்கள்

    - வாழ்த்துக்களுடன் குழலினியன்

    பதிலளிநீக்கு
  3. தாயை போல பிள்ளை நூலை போல சேலை.
    புலிக்்ு் பிறந்தது பூனையாகுமா?

    வாழ்த்துக்கள் உ்்கள் செல்லத்துக்்ு்்.

    பதிலளிநீக்கு
  4. புலிக்கு பிறந்தது எலியாகுமா..? ( இன்னும் எத்தனை நாளுக்குதான் பூனை )..!! அப்போ விரைவில் இன்னொரு பிளாக் எதிர் பார்க்கலாம் ...!!
    ஒரு கை ஓசையா இருக்கேன்னு பார்த்தேன் .இனி மத்தளம் மாதிரி டபுள் சைட் சவுண்டை எதிபார்க்கலாம் ...

    ஓக்கே..ஓக்கே கலக்குங்க ..!! :-))

    பதிலளிநீக்கு
  5. கவிதைப் புலிக்குட்டிக்கு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. //எப்படியிருக்கு செல்லமகனின் முதல் கவிதை.
    மகனின் ஒருஎழுத்தானாலும் ஒருவரியானலும்
    அது அம்மாவிற்கு கவிதைதான் இல்லையா..//

    ஆமா ..ஆமா .....வாழ்த்துக்கள் மஃபூப்.

    பதிலளிநீக்கு
  7. என்னிடம் நல்ல ஐஸ்வைப்பான், தப்புப்பண்ணிவிட்டதுபோல் தெரிந்தால்போதும் மம்மி மம்மின்னு வந்து என்கன்னத்தில் கைவைத்து
    நான் சிரிக்கிறது நல்லாயிருக்கா அப்படின்னு சொல்லி கன்னத்தைகிள்ளி நல்லா மணக்குது மம்மி அப்படின்னு சொல்லி அப்படியே சிரிப்பான்..

    இனிய தீபாவளி வாழ்த்துகள். அழகிய குழந்த்தைக்கு என் அன்பான வாழ்த்துக்கள் இன்னுமொரு கவிஞரை உருவாக்குங்கவாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  8. V.Radhakrishnan கூறியது...
    இனிய தீபாவளி வாழ்த்துகள். அழகிய கவிஞரை உருவாக்குங்க///


    THANK YOU RADHAKRISHNAN UNCLE

    HAPPY DIWALI

    பதிலளிநீக்கு
  9. குழலினியன் கூறியது...
    தங்கள் வலைத்தளம் மூலம் உலகிலுள்ள அனைவருக்கும் என் இதயமார்ந்த தீபஓளி வாழ்த்துக்கள்

    - வாழ்த்துக்களுடன் குழலினியன்

    NICE NAME.
    HAPPY DIWALI

    பதிலளிநீக்கு
  10. Jaleela Kamal கூறியது...
    தாயை போல பிள்ளை நூலை போல சேலை.
    புலிக்்ு் பிறந்தது பூனையாகுமா?

    வாழ்த்துக்கள் உ்்கள் செல்லத்துக்்ு்்

    thank you very much aunty

    ineed your blessing everyday

    பதிலளிநீக்கு
  11. ஜெய்லானி கூறியது...
    புலிக்கு பிறந்தது எலியாகுமா..? ( இன்னும் எத்தனை நாளுக்குதான் பூனை )..!! அப்போ விரைவில் இன்னொரு பிளாக் எதிர் பார்க்கலாம் ...!!
    ஒரு கை ஓசையா இருக்கேன்னு பார்த்தேன் .இனி மத்தளம் மாதிரி டபுள் சைட் சவுண்டை எதிபார்க்கலாம் ...

    ஓக்கே..ஓக்கே கலக்குங்க ..!! :-))

    thank you uncle

    iam not rat iam a lion

    iwant to write in moms blog

    பதிலளிநீக்கு
  12. கலாநேசன் கூறியது...
    கவிதைப் புலிக்குட்டிக்கு நல்வாழ்த்துக்கள்

    thank you very much uncle

    happy diwali

    பதிலளிநீக்கு
  13. Mohamed Ayoub K கூறியது...
    //எப்படியிருக்கு செல்லமகனின் முதல் கவிதை.
    மகனின் ஒருஎழுத்தானாலும் ஒருவரியானலும்
    அது அம்மாவிற்கு கவிதைதான் இல்லையா..//

    ஆமா ..ஆமா .....வாழ்த்துக்கள் மஃபூப்

    thank you uncle

    பதிலளிநீக்கு
  14. சுகந்தி கூறியது...
    என்னிடம் நல்ல ஐஸ்வைப்பான், தப்புப்பண்ணிவிட்டதுபோல் தெரிந்தால்போதும் மம்மி மம்மின்னு வந்து என்கன்னத்தில் கைவைத்து
    நான் சிரிக்கிறது நல்லாயிருக்கா அப்படின்னு சொல்லி கன்னத்தைகிள்ளி நல்லா மணக்குது மம்மி அப்படின்னு சொல்லி அப்படியே சிரிப்பான்..

    இனிய தீபாவளி வாழ்த்துகள். அழகிய குழந்த்தைக்கு என் அன்பான வாழ்த்துக்கள் இன்னுமொரு கவிஞரை உருவாக்குங்கவாழ்த்துக்கள்.//

    thnaks for your comment and
    blessings

    happy diwali

    பதிலளிநீக்கு
  15. குட்டிக் கவிஞருக்கு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. விதை ஒண்ணு போட்டா
    சுரை ஒண்ணா முளைக்கும்..!

    முட்டிமுட்டி
    முளைக்கும்போதே
    முளை
    முனைப்பின் வேகம் தெரியும்...!

    மரூப் எனும்
    முளையின்
    சல்லி வேர்கள்
    சமவெளியெங்கும் வேரோடி..

    ஆணிவேராய்...
    அழுத்திப் பதிந்து..
    ஆலமரமாய் எழுந்து...!

    அகிலம் முழுக்க
    அவன் புகழ் பரவ...என்
    அன்பு வாழ்த்துக்கள்...!


    அதோடு...
    வலையுலக நண்பர்களுக்கும்..
    அவர்தம் குடும்பத்தினர்க்கும்...
    அனைவருக்கும்...
    என் இதயங்கனிந்த "தீபஓளி வாழ்த்துக்கள்" ....!

    நட்புடன்..
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  17. நீ சிரித்தாள் தீபாவளி
    அதை நான் ரசித்தால் போகுமே வலி
    புத்தாடையுடுத்தி
    பல வண்ணக் கலரில் மத்தாப்பு கொளுத்தி.
    பலவகை இனிப்போடு
    புது வகை பூரிப்போடு
    பஜனை பாடியப் பிறகு
    டமால் ....டமால் ..வெடிசத்தம்.

    உற்றார் உறவினர் ஒரு பக்கம்
    நண்பர் நண்பிகள் மறு பக்கம்
    இதனைக் காணும் கண்களுக்கு
    காணக் கிடைக்காத வரப் பிரசாதம்
    மகிழ்ச்சி அடையும் இதயம்ங்கள்
    வாழ்த்து சொல்லுகிறேன் எல்லோருக்கும்.

    அன்பை நேசி அழகு பெறுவாய்
    அறிவை நேசி உயர்வு பெறுவாய்
    அன்னையே நேசி சாந்தம் அடைவாய்
    அன்பினால் மனைவியை நேசி
    அருமையான வாழ்க்கை பெறுவாய்

    அகம் மகிழ மழலையே நேசி
    சுகம் பல கிடைத்து சொர்க்கம் காண்பாய்
    மதங்களை மறந்து மனிதனை நேசி
    மண்ணுக்குள் போகும் வரை, மாணிக்க கல்லாக ஜொலிப்பாய்.

    இந்தத் திருநாளில் ஆணிலிருந்து பெண்ணுகள் வரை
    ஒற்றுமையுடனுடன் ஓரினந்து, நாட்டு நலனில் அக்கறையோடு
    ஜாதி மதம் பேதமின்றி,ஜனத்தொகையைக் கணக்கில் கொண்டு
    அனைவரும் நீண்ட காலம் நோயின்றி,பிறர் கண்ணீரின்றி,சிறப்போடு வாழ வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  18. //iam not rat iam a lion //

    yes you are not rat , but lion is a lazy animal .so , you are super speed cheetah okay....!! :-))

    //i want to write in moms blog //

    how can we different ..?pls continue... :-))

    பதிலளிநீக்கு
  19. மருமகனுக்கு மனம் நிறைவான வாழ்த்துக்கள்: கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்றால், கவியரசியின் ”கருவில் உருவானதால்” மருமகன் மஃரூஃப் கவிபாட முனைந்ததும் ஓர் வீரியமுள்ள விதையின் வெளிப்பாடே இப்படிப் poem ஆக கிளம்பி உள்ளது. மருமகனுக்கு ஓர் அறிவிப்பு:
    I found grammar mistake in the sentence : I HAS ONE HEART . You should write as : I HAVE ONE HEART

    "has" should be used for third person singular only. Please feel free to get tuition from me and I shall send my booklet: KALAM'S BASIC ENGLISH GRAMMAR TEACHING To your mum's email id. You will feel it like a teacher to correct your English grammar.

    அன்புடன்,
    கவியன்பன் கலாம்

    பதிலளிநீக்கு
  20. அன்பான கவிஞரை உருவாக்குங்க.
    இன்னும் இனும்வளர வாழ்த்துக்கள்..

    பாசத்துடன் சசி..

    பதிலளிநீக்கு
  21. அருமையா இருக்கு. இளங்கவிஞருக்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  22. உங்கள்
    முதல் கவிதையின்
    முதல் கவிதை
    முதலிடத்தை அனைத்திலும் பிடிக்க
    வாழ்த்துகிறேன்.

    விஜய்

    பதிலளிநீக்கு
  23. அகிலம் முழுக்க
    என் பேரன் மரூஃபின் புகழ் பாட
    என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..
    அன்பு வாழ்த்துக்கள்..

    சாரதா விஜயன்.

    பதிலளிநீக்கு
  24. In the name of Allah The most Gracious The most Merciful!

    Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah.

    Assalamu Alaikkum and Eid Mubarak.

    May this Eid Day is full of blessings for you, your family and friends.

    S.E.A.Mohamed Ali Jinnah, (“nidurali”)

    பதிலளிநீக்கு
  25. என் அன்பு செல்லத்தை ஊக்கஅ அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்..

    அவனின் தொடர் ஆக்கத்திற்க்கு ஊக்கம் கொடுக்கும் கருத்துகளாய் அள்ளிதந்த நெஞ்சங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ஸ்கூலுக்கு போயிருக்கிறார் அதனால் அன்போடு கருதுக்கள்தந்த சொந்தங்களுக்கு வந்து பதிலுறைப்பார்..

    நிறை குறைகள் பரிமாரிக்கொள்ளப்படும்போது மட்டுமே அதை சரிசெய்யமுடியும்..

    உங்களின் தொடர்ந்த ஆதரவும் கருதுக்களுக்கும் எங்களின் ஆக்கங்களுக்கு உரம்.. மிகுந்த மகிழ்ச்சியுடன் மீண்டும் நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  26. வாழ்த்துக்கள்..மஃரூப்...தொடர்ந்து எழுதுங்கள்

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது