நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இன்று வயது இறக்கிறது..


வயது ஏற ஏற
  வாழ்க்கை குறைகிறது

வாழ்க்கை குறையக் குறைய
  வசந்தம் தேய்கிறது

வசந்தம் தேயத் தேய
  ஆரோக்கியம் ஓய்கிறது

ஆரோக்கியம் ஓய ஓய
   ஆயுள் அழிகிறது

ஆயுள் அழிய அழிய
  ஆட்டம் நிற்கிறது

ஆட்டம் நிற்க நிற்க
   அனைத்தும் அடங்குகிறது

இன்று வாழ்க்கையில் மறக்கமுடியா, மறக்கயிலா நாள்,
என்வயது இறக்கும் நாள் அதாவது என்பிறந்தநாள். இதிலென்ன விசேசம், பூமியில் படைக்கப்படும் மனிதர்களில் நானும் ஒருத்தி, இதில் விசேசமோ விந்தையோயில்லை என்றபோதும். எனக்குள் ஓர் ஆனந்தம். ஆகா நாமும் இந்த பூலோகத்தில் பிறந்தது, வளர்ந்து, வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். என்ற வகையில் சந்தோஷமிருந்தாலும். மறுபுறம் அச்சோ. மனிதனை மனிதனே கொன்று குவிக்கும். பொதுநலநலம் குறைந்து சுயநலம் மிகுந்த சூனியம் நிறைந்திருக்கும். மனங்களை விட காகித பணத்திற்கு மதிப்பளிக்கும். ஆற்றிவு கொடுக்கப்படும் மடைமைகளுக்குள் மூழ்கியிருக்கும். சூது வாது.பொய் பொறாமையென பேராபத்துக்கள் குடிகொண்டுடிருக்கும். மாய உலகில் பிறந்து அதற்குள் ஒன்றாக நாமும் ஆகிவிட்டோமே என்ற வருத்தமும் மறுபுறம் இருந்தபோதும். இந்த இறப்பையும் அதனுடன் இணைத்து வைத்தானே இறைவன் அதை நினைத்து ஆனந்தம் அடைகிறேன்..

என் பிறப்பை என் குடும்பமே வரவேற்றதாம் அதுவும் ஒரு பெண்குழந்தையை என்றெண்ணும்போது என்குடும்பதின்மேல் ஒருதனிபிரியமும் மரியாதையும் உள்ளது [ஏனெனில் இன்றளவும் பெண்பிள்ளையென்றால் ஒரு முகச்சுளிப்பு இருக்கதான் செய்கிறது இதைஇல்லையென யாரும் மறுக்கயிலாது] அப்படியிருக்கும்போது என் வரவுக்காக காத்திருந்தவர்களை எண்ணி எண்ணி இறைவனிடம் அவர்களுக்காக வேண்டுகிறேன். என்பிறப்பால் என்னை படைத்தவன் முதலில் திருப்தியடையவேண்டும். பிறப்பின் பலனாய் ஈருலகிலும் எனக்கு நன்மைகிடைக்கவேண்டும்.என் பிறப்பு எனக்கு நன்மையளிப்பதைவிட, என்னால் பிறருக்கு தீங்குயேற்றுபட்டுவிடாமல் வாழ்ந்து இறக்கவேண்டும் என்பதுதான் என் பேராவல்.

ஒவ்வொரு பிறந்தநாளின்போதும்,நம் ஒவ்வொரு வயது இறக்கிறது. ஆயுள் குறைகிறது.ஆக ஒன்று கிடைக்கும்போது மற்றொன்று மறைகிறது.இப்பிறந்தநாள் வருவதே நாம் பூமிக்கு வந்து இத்தனை காலமாகிவிட்டது. இதுநாள்வரை நாம் என்ன செய்தோம்? இனி என்ன செய்யபோகிறோம்? இதுநாள்வரை செய்ததில் நன்மையதிகமா? தீமையதிகமா? இனி வரபோகும் காலங்களில் எதனுள் மூழ்கப்போகிறோம் நன்மையின் பக்கமா? தீமையின் பக்கமா? என்பதை ஒவ்வொரு மனிதனும் சிந்தித்துப்பார்கவே அந்நாளை நினைவில் நிறுத்தி நம் பூமிக்கு வந்த நோக்கத்தின்.வரவு செலவு கணக்குபார்கவேண்டுமென்பதற்காக இருக்கவேண்டுமே தவிர, வீண் ஆடம்பரத்துக்காக அல்ல என்பது என்கருத்து..

ஒரு சின்ன வேண்டுகோள்.. சின்ன பசங்களுக்கோ, பெரியவர்களுக்கோ. பிறந்தநாளென்று பார்ட்டி வைப்பது அவரவர் விருப்பம். அதை வீடுகளிலோ அல்லது ஹோட்டல்களிலோ வைத்துக்கொள்ளுங்கள். பொது இடங்களான பார்க்[பூங்காக்களில்] வைப்பது சிறந்ததல்ல ஏனென்றால். என்னதான் வெளிநாட்டிற்கு வந்து வாழ்ந்தபோதும், நம்நாட்டில் இருப்பதைவிட வசதிகளில் மிக மிக குறைந்தவர்கள் சூழ்நிலையின் காரணமாக வெளிநாடுகளில் வந்து குடும்பமாக தங்கும் வாய்ப்புயேற்பட்டுவிடுகிறது. வெளிநாடுவந்தவர்களெல்லாம் பெரும்பெரும் வசதியானவர்கள்தாம் என நினைத்துக்கொள்வது தவறு. அப்படியிருக்கும்பட்சத்தில் நீங்க இப்படி பொது இடங்களில் கொண்டாட்டம் போடும்போது. அதை சுற்றிநின்று வேடிக்கப்பார்க்கும் பிஞ்சுமனங்களில் ஒருவித ஏக்கமும், கவலையும் அதனையறியாமல் வந்து ஒட்டிக்கொள்கிறது. தம் தாய் தந்தை இதுபோல் நமக்கு செய்ததில்லையேயென. இதை நேற்று இரவு நான் பார்க்கில் நேரடியாக கண்ட உண்மை.

9 வயது குழந்தைக்கு பிறந்தநாளாம். பார்ட்டி சகலமும் வந்து சுட சுட இறங்கிகொண்டிருந்தது. பெரிய கேக் மேடையில் வைக்கப்பட்டு, சுற்றி பலூன்கட்டி அங்கு நின்றிருந்தவர்கள் கைதட்ட கேக் வெட்டப்படுகிறது. இத்தனைக்கும் அவர்களும் ஒன்றும் பெரிய வசதியானவர்களிலில்லை. ஆனால் பிரஷ்டீஜ்.கடனையுடனைவாங்கியாவது பார்ட்டிகொண்டாடும் கூட்டங்களும் இருக்கு.

அங்கே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்.ஓடிவந்து அம்மா அம்மா. இதுபோல் எப்போமா எனக்கும் செய்வே என முந்தானையைபிடித்து இழுத்து வா அங்கே என்கிறான். உடனே தாயின் முகம் சுறுங்கி சுற்றுமுற்றும் பார்த்தபடி தலை தாழ்ந்தது. சட்டென என்னை ஓரக்கணால் பார்த்துக்கொண்டே அவனை அப்புறம் அழைத்து நல்லபிள்ளையில்ல அப்பாவிடம் சொல்லி செய்யலாம். போம்மா இப்படிதான் போனவாட்டி பார்க்கிற்குவந்தபோது, அந்த அண்ணன் கேக்வெட்டிச்சில்ல அப்போதும் இப்படிதான் சொன்னேன் ஆனா நீயும் அப்பாவும் செய்யல.சின்னகேக் வாங்கிதந்து ஏமாத்திட்டீங்க.. இதமாதரி பலூன் கட்டனும். எல்லாரும் வந்து கைதட்டனும். நானும் கேக்வெட்டனும். ஒரே அழுகை. தாயும் அழுக. என்கூட பக்கதிலிருந்த அக்காவும். இதுப்போல் வந்து செய்றாங்க பாவம் பச்சபிள்ளைகள் ஆங்காங்கே அழுவுதுபார் என நீட்டிய இரு இடங்களில் இதே காட்சி. குழந்தைகளுக்கு தெரியாதல்லவா.

நாடுவிட்டு நாடுவந்து நாழு சுவற்றுகுள்ளே அடங்கியே கிடக்கும் பலபேர் நேரம் கிடைக்கும் சமயங்களில் மனதையும் ரிலாக்ஸாக்கி குழந்தைகளுக்கும் விளையாட்டுக்காட்டி செல்ல்லாமென இப்படி பூங்காக்களுக்கு அழைத்துவந்தால் போகும்போதும் இன்னும் இன்னும் வாழ்க்கையின்மீது வெறுப்பு ஏற்படும்படி மற்றவர்கள் நடந்துகொள்வதுதான் காலக்கொடுமை. இது நிறைய பேருக்கு புரிவதில்லை. ஏனெனில் அவர்கள் சந்தோஷம் அவர்களுக்கு பெரியது மற்றவர்களைப்பற்றிய அக்கரையை அவர்கள் ஏன் கொள்ளவேண்டும். இருந்தாலும்,,,,,,,,,

நம் சந்தோஷத்தால் பிறர் மகிழ்ச்சியடையாவிட்டாலும். நம் சந்தோஷத்தால் பிறர் சங்கடத்துக்குள்ளாவதை தவிர்க்கப்பார்க்கலாம்.
[நீ சொல்லிட்டா யாரும் செய்யாம நின்னுடப்போறாகளா சும்மா போவியா... சரி சரி ]

பிறந்த நாள் கேக்கின் வடிவத்தைபோல் வாழ்க்கை தரப்பட்டிருக்கிறது. அதை வெட்டி முதலிரண்டுதான் நமக்கே ஊட்டப்படுகிறது. நாமே நம் ஆயுளை விழுங்குகிறோம். அப்புறம் கேக் வடிவத்திலிருக்கும், நம்முடைய ஆயுளையும் வாழ்க்கையும் பிறருக்கு பங்குபோட்டு தரப்பட்டு அதை அவர்கள் விழுங்குகிறார்கள். ஆகா நம்முடைய வயது கூடி ஆயுள் இறக்கும் தருணமெல்லாம், நாம் எச்சரிக்கையோடு நடக்கவேண்டுமென்பதை விடுத்து வீணானவைகளில் நம் காலத்தை கழிப்பது தவிக்கலாம் என்பதும் என்கருத்து..

உங்கள் அனைவரின் பிராத்தனைகள்தான் முக்கியமாக வேண்டும். உங்களுக்காக இறைவனிடத்தில் கையேந்தி நிற்கும்போது, எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் அதில் சிறு பிராத்தனையும் சேர்ந்திருக்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..

டிஸ்கி/.அதிகாலையிலேயே அன்போடு என் செல்லங்கள் வாழ்த்தியது. நிறைவாக இருந்தது. முகநூலில் எனக்காக   பிராத்தனைகளும் செய்த முகமறியா நட்புகளின் நல்லுள்ளங்கள் அனைத்திற்கும் என் அன்பான நன்றி நன்றி நன்றி..



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
 நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

30 கருத்துகள்:

  1. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி..

    பதிலளிநீக்கு
  2. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி. வயது ஏற ஏற , நம் இருப்பு பூமியில் குறைந்து கொண்டே வருகிறது . நீங்கள் இடுகையில் சொல்லி இருக்கும் விஷயம் முற்றிலும் சரியே

    பதிலளிநீக்கு
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி

    பதிலளிநீக்கு
  4. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி...

    b'day note with meaningful message. good

    பதிலளிநீக்கு
  5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    அர்த்தமுள்ள பகிர்வு.
    சொல்லவந்ததை தெளிவாகவும்
    சுருக்கமாகவும் சொல்லிவிட்டீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிஸ்டர்.

    பதிலளிநீக்கு
  7. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  8. மிக அருமையான் தெளிவாக சிந்திது எழுதியுள்ளீர்கள் மலிக்கா. சிலரின் மகிழ்ச்சி சிலருக்கு துக்கம் அப்படின்னு ஆக்கக்கூடாது அடிச்சி சொன்ன தாங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்..

    நலமோடும் வளமோடும் வாழ கடவுளை பிராத்திக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  9. மிக அருமையான் தெளிவாக சிந்திது எழுதியுள்ளீர்கள் மலிக்கா. சிலரின் மகிழ்ச்சி சிலருக்கு துக்கம் அப்படின்னு ஆக்கக்கூடாது அடிச்சி சொன்ன தாங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்..

    நலமோடும் வளமோடும் வாழ கடவுளை பிராத்திக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  10. உண்மை சுடுகிறது எனக்கும். நன்றி மலிக்கா தாங்களின் அறிவுரை மிகவும் அவசியமானது.. எனக்கும்சேர்த்துதான்.

    பதிலளிநீக்கு
  11. அன்பு சகோதரி மலிக்கா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். தலைப்பும் பதிவும் சரியே.

    ஆண்டவ்ன் உங்க்ள் என்ன்றென்றும் உங்கள் துஆக்களை செவி சாய்ப்பானாக.
    பார்க் மேட்டர் ரொம்ப வே பாதிக்குது, பாவம் அந்த சின்ன பையன் ம்னதில் எவ்வளவு வருத்த பட்டிருப்பான்.,, இரவு அந்த குழ்ந்தை தூங்கி கூட இருக்காது இதே எண்ணம் தான் மனதில் ஓடி இருக்கும்.
    ஏன் இப்படி வெட்ட வெளியில் கேக் வெட்டனும் , அருமையான பகிர்வு மல்லிக்கா.

    பதிலளிநீக்கு
  12. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..!! வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்..!! வாழ்த்துக்கள...!! வாழ்த்துக்கள்...!! :-))

    பதிலளிநீக்கு
  13. அருமையான கருத்துக்கள்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் சகோ

    நம்பர் தெரிந்தால் நானும் வாழ்த்தியிருப்பேன் சகோ

    விஜய்

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துக்கள் சகோதரி.நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து குடும்பத்திற்க்கும் சமுதாயத்திற்க்கும்/ மார்க்கத்துக்கும் சேவை செய்ய

    பதிலளிநீக்கு
  16. கவிதை மட்டும் தான் என்று நினைத்து இருந்தேன்
    கடிதமும் அருமை

    நல்ல உபதேசம்.

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா....

    பிறந்த நாள் பகிர்வில் ஒரு அருமையான சிந்தனைப் பகிர்வு அக்கா.

    பதிலளிநீக்கு
  18. "நீரோடை" யில் உங்கள்
    இனிய பிறந்தநாள்
    என்று செய்தி கண்டு
    நல்ல உள்ளம் கொண்டு
    வாழ்த்துகிறேன்
    என்றும் "இனிய பாதையில்"
    சென்று
    வல்ல இறைவன்
    புகழால் உங்கள்
    கலைப்பணி சிறந்து
    "கலைச்சாரல்" தென்றலாய்
    மிதந்து வர
    வாழ்த்தும் அன்புச்
    சகோதரன்

    -தியா-

    பதிலளிநீக்கு
  19. இன்று பிறந்தநாளை காணும் மல்லிகை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    நீண்ட ஆயுளும், குறைவில்லாத ஆரோக்கியமும், நிறைந்த அன்பும், நடுங்க விடாத செல்வமும், குற்றம் சொல்லாத சுற்றமும், தேவையில் துனை நிற்கும் நட்பும், குன்றாத சந்தோஷமும் என்றும் கிடைக்க அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

    எட்டில் அழகு பதினெட்டில் அழகு
    எந்த பெண்ணும் இருபதில் ரெட்டை அழகு

    பெண்ணின் அழகே உச்ச அழகு
    பூமியில உள்ளதெல்லாம் மிச்ச அழகு

    கவியழகு உம் கருத்தின் பொய் அழகு
    அந்தபொய்யை மாற்றியது பெண்ணின் அழகு


    தாமரை இலையில் நீர் அழகு
    அந்த நீரில் ஓடும் உன் கவிதை அழகு .

    ஒவ்வோர் பெண்ணும் ஒர் அழகு
    அந்த ஒன்றுக்குள்ளே நூறழகு

    இயற்க்கையின் மொழிகள்
    புரிந்துவிடின்

    மனிதரின் மொழிகள்
    தேவையில்லை

    இதயத்தின் மொழிகள்
    புரிந்துவிட்டால்

    மனிதருக்கு மொழியே
    தேவையில்லை.

    உமது கவிதைக்கு வயது பதினாறு
    அதில் ஒளிந்திருக்கு கவிதை பல நூறு.

    பதிலளிநீக்கு
  20. சகோதரி மலிக்கா அவர்களுக்கு .. உண்மைதான் .!நாம் செய்யும் எந்த ஒரு செயலும் மற்றவர்களை மனதளவில் பாத்தித்தால் கூட நம் செயல் அர்த்தமற்றதாகிவிடும் ..மற்றவர்களின் மன உணர்வுகளை புரிதல் உள்ளவர்கள் பூமியில் மிகவும் குறைவு .உங்களின் இந்தக் கருத்து பல உள்ளங்களை மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை ..! வாழ்த்துக்கள் சகோதரி ..!.

    பதிலளிநீக்கு
  21. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் மலிக்கா

    பதிலளிநீக்கு
  22. ஜஸாக்கல்லாஹூ கைரன். நல்லதொரு பகிர்வு..

    பதிலளிநீக்கு
  23. ஆகா நாமும் இந்த பூலோகத்தில் பிறந்தது, வளர்ந்து, வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்//


    எழுதி, இயற்றி மற்றவர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறோம் என்பதை விட்டுவிட்டீர்களே!!!! இந்த வரிகளில் ஒருவன் மனம் மாறினான் என வைத்துக்கொள்ளுங்கள்!

    பதிலளிநீக்கு
  24. பிறந்தநாள் வாழ்த்துக்கள் மலிக்கா..:))

    பதிலளிநீக்கு
  25. வந்தியத்தேவன் வல்லவராயன்26 அக்டோபர், 2010 அன்று PM 4:00

    I am the man of 044444...!

    Vazthukkal... malikkaa...!

    WISH YOU MANY MORE RETURNS OF THIS DAY....

    Yours...
    Vandhiyathevan....

    பதிலளிநீக்கு
  26. வந்தியத்தேவன் வல்லவராயன்26 அக்டோபர், 2010 அன்று PM 4:00

    I am the man of 044444...!

    Vazthukkal... malikkaa...!

    WISH YOU MANY MORE RETURNS OF THIS DAY....

    Yours...
    Vandhiyathevan....

    பதிலளிநீக்கு
  27. அன்பான பாசம்கலந்த வாழ்த்துக்களும். கருதுக்களுக்கும்
    என் அன்பிற்கினிய அனைத்து நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல்லாயிரம்.

    தாங்களின் தொடர்ந்த ஆதரவெண்ணும் ஊக்கத்தை தாங்கள் அனைவரிடமிருந்த்தும் எதிர்பார்க்கிறேன்..

    என்றும்
    அன்புடன் மலிக்கா

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது