நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சந்தேகக் கேள்விகளில் பதில்கள் பகுதி[2]



நேரடியாக பதிலுக்கு போய்விடலாம் இல்லையின்னா  ஆட்டோ ஸ்கூட்டரெல்லாம் அன்பளிப்பா கேக்குறாங்கப்பூ நெறீய எழுதினா
இது முன்குறிப்பு:
இதற்க்குமுன்  உள்ள கேள்வியும் பதிலும்

இது அடுத்த கேள்விக்கான பதில்
2. ஆணும் பெண்ணும் சமமா? சமம் என்றால் எப்படி
அந்த சமத்தால் பலமா? பாதிப்பா?

எந்த ஒன்றுமே ஒன்றோடு சரிக்கு சரியாக இருந்தால்தானே சரிசமம். இதில் ஆணும் பெண்ணும் எப்படி ?
உடலாலும் மனதாலும், வெவ்வேறு வகைகளாய், வெவ்வேறு உருவ அமைப்புகளாய் படைக்கப்பட்டு, பெண் என்பவள் இன்ன தகுதிகளைக் கொண்டவள். ஆண் என்றவன் இன்ன தகுதிகளைக் கொண்டவன் எனவும்.
அதில் பலங்களும், பலவீனங்களும், புகுதப்பட்டு.ஆணுக்கு இல்லாத தகுதியான தாய்மையை பெண்ணுக்குத் தந்து பலப்படுத்தி.
மென்மையான இளகிய மனதை படைத்து பலவீனப்படுத்தி,பெண்ணுக்கு இல்லாத குண நலன்களை ஆணுக்குள் புகுத்தி. இப்படி பலதரப்பட்ட வகைகளில் வித்தியாசங்களால் படைக்கப்பட்டிருக்கும்
ஆணும் பெண்ணும் எப்படி சரிசமம்

பேச்சுக்கும் வார்த்தைக்கும் வேண்டுமென்றால் சொல்லலாம் சமமென,தன்னை தாக்கவரும் ஆணிடமிருந்து தற்காத்துக்கொள்ளவே பெண்களால் இயல்வதில்லை சிலபலமும், பல பலவீங்கனங்களைதாங்கி நிற்கும் பெண்ணால் ஆணோடு சமமாக முடியுமோ.
சொல்லிக்கொள்ளலாம். ஏன் பலம்கொண்ட மங்கைகளில்லையாயென! விதிவிலகாய். ஆங்காங்கே, ஆணின் உணர்வுகளோடும் பலத்தோடும் பெண்ணும். பெண்ணின் உணர்வுகளோடு,பலவீனத்தோடும் ஆணும் இருக்கலாம் இது படைப்பியல் நுணுக்கம் படைதவன் மட்டுமே அறிவான்.

இன்றைய பெண்கள்ஆண்களோடு சரிசமமாய் நிலவுக்கே செல்கிறர்கள். ஏன் அதற்க்கு மேலாகவே பலயிடங்களில் கால்பதிக்கிறார்கள்.சாதிக்கிறார்கள்
ஆண்களைவிட பலதகுதிகள் கூடியவர்களாக வலம் வருகிறார்கள் இல்லையென்று சொல்லவில்லை.அவர்களுக்குத்தெரியும் அந்த நிலைக்கு வருவதற்கு ஆணைவிட தான் எவ்வளவு சிரமங்கள், சங்கடங்களை அனுப்பவித்திருப்பார்களென. இதை மனபூர்வமான சொல்பவர்கள் சிலபேர். அதெல்லாமில்லையென சொல்லாமல் மார்தட்டிகொள்பவர்கள் பலபேர் எப்படியிருந்தபோதும்,ஒரு பெண் ஆணோடு சமம் என்பது,,,,,, ?

பெண்களின் மனநலம். உடல்நலம் அறியாதவர்கள் உலகில் உண்டா! என்னதான் தன் கணவனிடமோ,தன் தந்தையிடமோ,மற்ற அந்நியர்களிடமோ.துணிச்சலோடு எதிர்த்துபேசக்கூடிய ஆற்றலிருந்தாலும் உள்ளுக்குள் ஓர் உதறலிருக்கும்.பிறவியிலேயே பெண்கள் மென்மையானவர்கள் [இப்போது பூவுக்குள்ளும் பூகம்பம்வெடிக்கிறது அதுவேறு] அவர்களின் மென்மை ஆணுக்கு இருக்காது.
ஆண்கள் பிறவியிலேயே சற்று கடினமானவர்கள்[அவர்களுக்குள்ளும் மென்மையுண்டு அதுவேறு] அவர்களின் கடினம் பெண்ணுக்கு இருக்காது
இது இயற்கை. அப்படியிருக்க எப்படி சமம்.நானும் நீயும் ஒன்று. அதனால் எதைச்செய்தாலும் நானும் செய்வேன் என பெண்கள் இறங்கினாலென்னவாகும் நிலமை. [என்னவாகும் அதான் ஆகிவிட்டதே ஆங்காங்கே!என்கிறீர்களா]

பத்துகுழந்தைபெற்றும் ஆண் அப்படியேயிருக்கிறான் ஆனால்
ஒருபெண் அப்படியா?[ஆணா குழந்தை பெற்றடுக்கிறான் என்னம்மா சொல்லுறே]
ஒரு ஆணுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை ஓரிரு படத்தோடு அன்னைவேடத்துக்கு போகிறாள். ஆனால் அதே ஆண் அவளின் பேத்திக்கும் ஜோடியாய் நடிக்கிறான்.[அதெல்லாம் மேக்கப்பு அப்படிங்கிறீங்களா ஹ ஹா ஹா]

ஆண் பெண் சமத்தால் ஆண்களுக்கு ஆதாரம் பெண்களுக்கு சேதாரம்.
எப்படியெனில்.ஆணுக்கு நிகராய் ஆடைகளில் போட்டி போடுவதால்.
அதில்மட்டும் எதிர்மறையாய்.
அவன் ஆடைகளை அடுக்கடுக்காய் கூட்டிக்கொண்டே போகிறான்.கோட் சூட்டென,ஆனால் பெண்ணோ இதற்கு நேர்மாறாய் இதில்வேறு
அதிரடி தள்ளுபடியாய் ஆங்காங்கே!அச்சோ எங்கேபோய்சொல்ல.
கேட்டால் சமத்தையும் தாண்டி  ஒருபடியாவது மேலே போய் முன்னுக்கு வந்து காட்டத்தான்.தானும் தாழ்ந்து மற்றவைறையும் அதனோடு உள்ளிழுக்கும் செயல்.

அடுத்து
இந்த சமத்தால் சீர்கெடுவது யாரென நினைக்கிறீர்கள் அவர்களின் சந்ததிகளே!அவர்களின் நிலைதான் இன்று நிலைகுலைந்து, சீர்கெட்டு,தங்கள் வாழ்கையையே பறிகொடுத்துவிடுகிறார்கள் சிலசமயம் உயிரையும் கொடுத்துவிடுகிறார்கள். ஆணுக்கு இணையாய் குடும்பத்தை காக்க வேலைக்குபோவது தவறல்ல, ஆனால்! அந்த குடும்பமே கலைந்து சிதைய காரணியாக இருப்பது சரியா! ஆணும் பெண்ணும் போட்டிபோட்டுக்கொண்டு பணத்தை சம்பாதிக்கிறார்களேயொழிய தன் வாழ்க்கையில் வசந்தமாய் வந்த வரங்களை வலுவிழக்கசெய்துவிடுவதோடு

தான் பெற்றகுழந்தைகளை மிகச்சின்னசிறிய வயதிலேயே அதாவது பிறந்த கொஞ்சநாளிலே பேபிசிட்டிங்கிலும்.வளர்ந்து அதற்க்கு என்ன ஏது எனவிபரமறியாபருவத்திலே ஹாஸ்டலிலும்.விட்டுவிட்டு இருவருவரும் சரிக்கு சமமென போட்டிப்போட்டுவதால்.இக்குழந்தைகளின் நிலையை எண்ணிப்பார்க்க மறந்து பணமட்டுமே வாழ்க்கையாய், இருவரும் சமம் என்பது மட்டுமே குறிக்கோளாய். தான்பெற்ற குஞ்சுகளின் வாழ்க்கையை வீணடித்துவிடுகிறார்கள்.

கண்டிக்க, ஏனென்றுகேட்க ஆளில்லாமல்.பள்ளியிலிருந்து வரும்பிள்ளை பசியோடு ஃபிரிஜை திறந்து அதனுள் 1 வாரத்திற்க்கு தேவையான.
உணர்வற்ற உணவுகளை எடுத்துண்டு. தனிமையெனும் கொடுமைக்கு ஆளாக்கி.நான்குசுவற்றுக்குள்ளே அடைப்பட்டு,
சீரழிக்கும் சினிமா பார்த்து, கூடதா பலக்கவழங்கள் ஏற்பட்டு.மன உலைச்சளுக்கு ஆளாகி. அன்புக்கு ஏங்கித்தவித்து, மனதளர்ச்சி உடல்தளர்ச்சி நரம்புத் தளர்ச்சியென அவதிப்பட்டு அல்லல்படும் சிறார்களை கண்கூடே காணும்போது,என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள் இவர்கள் என மனம் அவர்களுக்காய் ஆதங்கப்படும் .ஒருமுறை மடியில் தலைசாய்த்து அழுத சிறுமியின் அழுகை.தாய்தந்தையின் சமமென்ற சண்டையால் வீட்டுக்குள்ளே பெண்களின் உணர்வுகளோடு வளரும் சிறுவன் என அடிக்கடிபார்க்க நேரும் சந்தர்ப்பங்களால் அவர்களை பெற்றவர்களின்மீது கோபம்வரும்.

அவர்கள் சொல்வதுபோல் கிடைத்திருப்பது ஒரு வாழ்க்கை. இதை தன் சுயலாபத்திற்கா மட்டும் வாழ்வது சரியா?
கேட்டால் பிள்ளைகளுக்குதானே!என அவர்கள் மேலேயே பழியை சுமத்திவிடுவது. அதிகம் இரண்டாகி.இரண்டு ஒன்றாகி.தற்போது ஒன்றாகிவிட்டபோதிலும் அந்த ஒன்றை வைத்து [அது வளரும் வரையிலாவது]பார்க்கமுடியாத பெற்றோர்களாகி.]
அதைவிடக்கொடுமை.அழகுபோய்விடுமென்றும் ஆணுக்கு நிகராய் போட்டிபோட்டு முன்னேற தடையென்றும்.திருமணம் ஆகியும் குழந்தைபெற்றுக்கொள்ளாமல் இருபோர்கள்.ஆகா சமம் சமம் என்று சருக்கலிலேயே வாழ்க்கை கழிகிறது பல இடங்களில்.
ஆணும் பெண்ணும் சமம். இதனால் பிள்ளைகளின் வாயில் பன்.

அரையும் அரையும் ஒன்று
ஆணும் பெண்ணும் ஒன்று என்பது நன்று
இதில் தவறில்லை, ஆனால் சமமென சொல்லிக்கொண்டு நடுவீதியில் சடுகுடு ஆடுவது சரியல்ல ஏனெலில் இது வருவோர் போவோருக்கு ஓர் இலவச கண்காட்சியாகுமே தவிர.
இனியஇலக்கை நோக்கிப்போகாது. சமமென்று வேலைவாய்ப்புகளின் சதவீதங்களிலும் சாதனைகளிலும் சதமடிக்கட்டும்,
அதுவும் தன்னை தற்காத்துக்கொள்ளும் திறன்களோடு.
சிலநேரம் அதற்கும்  சார்தல் தேவைப்படும்.

எதுவென்றபோதும் ஆண் ஆணாகவும்.பெண் பெண்ணாக இருந்தால்தான் அந்ததந்த இனங்களுக்கே ஓர் மதிப்பு!ஆகமொத்தத்தில் இருவரும் சமம் என்பதில்,மிக மிக சில பலன்கள்தான். ஆனால் அதில் பாதிப்புகள் அதிகமதிகம்.இதையறிந்தும் அறியாதோர்போல் எக்குதப்பாய் யோசித்து எடக்குமடக்காய் கேள்விகேட்போர்களுக்கல்ல இக்கருத்து.அவரவர்களுக்கு ஆயிர கருதுக்கலிருக்கலாம்.ஆனாலிது எனக்குள்ளிருந்து வெளிப்பட்டது.

உனக்குநான் எனக்கு நீ என்பதில் சமமாகலாம்.
உன்னைவிட நான் என்னைவிட நீ என்பதிலல்ல
அப்படியிருந்தால்,
ஆண்பெண் சமம் சமாதானமாகது.
ஆட்டங்கண்டு அறுந்துவிடும்.
அன்பான வாழ்க்கை.

டிஸ்கி// மக்களே மக்களின் மக்களே!தவறோ! சரியோ
 இதுதானுங்க நம்மபளுக்கு தெரிஞ்சது !
ஆனாலிது சரின்னு எனக்குப்பட்டது அதனாலிங்கு எழுதப்பட்டது.
உங்களுக்கு தவறென்று பட்டால் அதற்கு இந்நிர்வாகம் பொருப்பாகாது..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

32 கருத்துகள்:

  1. //உனக்குநான் எனக்கு நீ என்பதில் சமமாகலாம்.
    உன்னைவிட நான் என்னைவிட நீ என்பதிலல்ல
    அப்படியிருந்தால்,
    ஆண்பெண் சமம் சமாதானமாகது.
    ஆட்டங்கண்டு அறுந்துவிடும்.
    அன்பான வாழ்க்கை.///

    ஒத்துகொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. //உங்களுக்கு தவறென்று பட்டால் அதற்கு இந்நிர்வாகம் பொருப்பாகாது///

    சரி சரி ஆட்டோலாம் அனுப்பல

    பதிலளிநீக்கு
  3. உங்கள் எண்ணங்களைத் தெளிவாக அழகாக தைரியமாக(!!) எழுதிருக்கீங்க மலிக்கா!! வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  4. நல்ல கட்டுரை,பொறுமையாக எழுதப்பட்ட நீளமான பதிவு,எனக்குப்பிடித்த வரிகள்

    >>>> ஒரு ஆணுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை ஓரிரு படத்தோடு அன்னைவேடத்துக்கு போகிறாள். ஆனால் அதே ஆண் அவளின் பேத்திக்கும் ஜோடியாய் நடிக்கிறான்.[அதெல்லாம் மேக்கப்பு அப்படிங்கிறீங்களா ஹ ஹா ஹா]<<<

    ரஜினியை நக்கல் அடிக்கறீங்களோ

    பதிலளிநீக்கு
  5. யாதவன் கூறியது...
    கலக்கிடிங்க
    //

    வாங்க யாதவா முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  6. // LK கூறியது...
    //உனக்குநான் எனக்கு நீ என்பதில் சமமாகலாம்.
    உன்னைவிட நான் என்னைவிட நீ என்பதிலல்ல
    அப்படியிருந்தால்,
    ஆண்பெண் சமம் சமாதானமாகது.
    ஆட்டங்கண்டு அறுந்துவிடும்.
    அன்பான வாழ்க்கை.///

    ஒத்துகொள்கிறேன்.//

    நன்றி கார்த்திக்.

    பதிலளிநீக்கு
  7. LK கூறியது...
    //உங்களுக்கு தவறென்று பட்டால் அதற்கு இந்நிர்வாகம் பொருப்பாகாது///

    சரி சரி ஆட்டோலாம் அனுப்பல//

    ஆகா ஆட்டோவா அனுப்புங்க
    அனுப்புங்க பாஸ். இந்த காரைவச்சிக்கிட்டு சீக்கிரம் ஒரு இடத்துக்குபோகனுமுன்னா போகமுடியலை.

    ஆட்டோவை அனுப்பினா கொஞ்சம் வசதியாயிருக்கும் சிக்னலில் நிக்காம போயிருவோமுல்ல ஏன்னா அதுக்கு மூனு டயரா ஓரமா ஒதுங்கி எஸ்கேப் ஆயிடுவோம்..

    எப்ப அனுப்புவீங்க. கார்த்திக் திரும்ப கேக்ககூடாது..

    பதிலளிநீக்கு
  8. சி.பி.செந்தில்குமார் கூறியது...
    நல்ல கட்டுரை,பொறுமையாக எழுதப்பட்ட நீளமான பதிவு,எனக்குப்பிடித்த வரிகள்.//

    வாங்க செந்தில் வருகைக்கு முதல் நன்றி.கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.

    //>>>> ஒரு ஆணுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை ஓரிரு படத்தோடு அன்னைவேடத்துக்கு போகிறாள். ஆனால் அதே ஆண் அவளின் பேத்திக்கும் ஜோடியாய் நடிக்கிறான்.[அதெல்லாம் மேக்கப்பு அப்படிங்கிறீங்களா ஹ ஹா ஹா]<<<

    ரஜினியை நக்கல் அடிக்கறீங்களோ.//

    ஏன்ப்பு வந்ததும் வராததுமாய் இப்புடி.
    அவா மட்டுதன் நடிக்கிறாளா. இன்னும் இன்னும் எத்தனை தலைகள் நடிக்கிறா.

    ஒரு எடுத்துக்காட்டுக்கு சொன்னேப்பு..

    பதிலளிநீக்கு
  9. ஹுஸைனம்மா கூறியது...
    உங்கள் எண்ணங்களைத் தெளிவாக அழகாக தைரியமாக(!!) எழுதிருக்கீங்க மலிக்கா!! வாழ்த்துகள்!!//

    வாங்க ஹுஸைனம்மா.
    நமக்குள் தோன்றும் நல்லவைகளை எடுத்துசோல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
    கேட்பதும் கேட்காததும் அவரவர் விருப்பங்கள்.அதில் தலையிட நமக்கு உரிமையில்லை.

    வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி ஹுஸைனம்மா..

    பதிலளிநீக்கு
  10. வியக்கிறேன் வியக்கிறேன் உனக்குள் உள்ள திறன்கண்டு.

    பதில்க மிக அருமைமா.
    தற்காலத்திற்கேற்ற மிக அவசியமான பதிவு..

    பதிலளிநீக்கு
  11. ஒவ்வொரு வார்த்தைகளும் அழுத்தம் திருத்தமானவை! உங்களின் நடையிலே தெளிவான பதில்கள், மலிக்கா! வாழ்த்துக்கள்.

    தோழி, அஸ்மா.

    பதிலளிநீக்கு
  12. sகேள்விகலூம் பதில்களும் அருமை மல்லிகா தங்களின் எழுத்துநட மிகவும் பிடித்திருக்கு.
    கவிதைகளும் அருமையா எழுதுறீங்க.
    இன்றிலிருந்து நான் உங்கள் ரசிகை. இனிதவறாடுவந்துபடிப்பேன் நீங்க எம்ங்கு எழுதினாலும்.

    வாழ்த்தும் பாராட்டும்.
    நட்புடன் சுகந்தி..

    பதிலளிநீக்கு
  13. மிக மிக தெளிவான பதில் தேடியறியும் பணியில் இருக்கிறேன் மனிதர்களின் மனதைலுள்ளவைகளையும். இங்குவந்தால் நிறைய அறியலாம் போல் தெரிகிறது.

    வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  14. எதார்த்தத்தை எழுதி இருக்கீங்க...

    பதிலளிநீக்கு
  15. "பெண்ணுக்கே பெண்தான் எதிரி" என்பதை உண்மையாக்கும் விதமாய்... உலகெங்கும் பெண்விடுதலைக்குப் போராடும் போறாலிகளே...! (போராளிகளே என்பது ஆண்களைக் குறிக்கும் சொல்.. இது பெண்ணல்லவா... அதனால்தான் "போராலிகளே" என குறிப்பிட்டுளேன்) அணிதிரண்டு வாருங்கள்... ஓர் பெண்ணே... ஆணுக்கு பெண் சமமில்லை எனச் சொல்லிவிட்டார்...

    உலக பெண்ணுரிமைச் சங்கங்களே...!
    பெண்விடுதலை இயக்கங்களே...! ஒன்று திரண்டு வாருங்கள்...! மலிக்காவின் வீட்டின் முன்னே...!
    கண்டன ஆர்பாட்டம் நடத்த...!

    எப்படி அவங்க பெண்ணை இழிவுபடுத்தி பேசலாம்...! எழுதலாம்...! ஆண் மட்டும்தான் ஜீன்ஸ் போடணுமா...! ஏன் நாங்க எல்லாம் போடக்கூடாதா...!

    நாங்க கிளப்புக்கு.... பெண்ணுரிமை சங்கத்துக்கு... மாதர் சங்கத்துக்கு போககூடாதுன்னு சொல்றாங்க...

    அதோடு...///ஆண் பெண் சமத்தால் ஆண்களுக்கு ஆதாரம் பெண்களுக்கு சேதாரம்//ன்னு எப்படி சொல்லலாம்..?

    அதோடு....///
    ஆணும் பெண்ணும் எப்படி சரிசமம்...பேச்சுக்கும் வார்த்தைக்கும் வேண்டுமென்றால் சொல்லலாம் சமமென,தன்னை தாக்கவரும் ஆணிடமிருந்து தற்காத்துக்கொள்ளவே பெண்களால் இயல்வதில்லை////

    இப்படியெல்லாம் பெண்களை இழிபடுத்தி பேசிய மலிக்காவின் வீட்டின் முன் கண்டன ஆர்பாட்டம் நடத்த உலக பெண்ணினமே அணி திரளுங்கள்..."

    அப்படீன்னு...! நா சொல்லல...!
    பெண்விடுதலை இயக்க பெண்கள் கொடி தூக்காப்போறாங்கங்கோ...!

    பதிலளிநீக்கு
  16. காஞ்சி முரளி கூறியது...
    "பெண்ணுக்கே பெண்தான் எதிரி" என்பதை உண்மையாக்கும் விதமாய்... உலகெங்கும் பெண்விடுதலைக்குப் போராடும் போறாலிகளே...! (போராளிகளே என்பது ஆண்களைக் குறிக்கும் சொல்.. இது பெண்ணல்லவா... அதனால்தான் "போராலிகளே" என குறிப்பிட்டுளேன்) அணிதிரண்டு வாருங்கள்... ஓர் பெண்ணே... ஆணுக்கு பெண் சமமில்லை எனச் சொல்லிவிட்டார்...

    உலக பெண்ணுரிமைச் சங்கங்களே...!
    பெண்விடுதலை இயக்கங்களே...! ஒன்று திரண்டு வாருங்கள்...! மலிக்காவின் வீட்டின் முன்னே...!
    கண்டன ஆர்பாட்டம் நடத்த...!

    எப்படி அவங்க பெண்ணை இழிவுபடுத்தி பேசலாம்...! எழுதலாம்...! ஆண் மட்டும்தான் ஜீன்ஸ் போடணுமா...! ஏன் நாங்க எல்லாம் போடக்கூடாதா...!

    நாங்க கிளப்புக்கு.... பெண்ணுரிமை சங்கத்துக்கு... மாதர் சங்கத்துக்கு போககூடாதுன்னு சொல்றாங்க...

    அதோடு...///ஆண் பெண் சமத்தால் ஆண்களுக்கு ஆதாரம் பெண்களுக்கு சேதாரம்//ன்னு எப்படி சொல்லலாம்..?

    அதோடு....///
    ஆணும் பெண்ணும் எப்படி சரிசமம்...பேச்சுக்கும் வார்த்தைக்கும் வேண்டுமென்றால் சொல்லலாம் சமமென,தன்னை தாக்கவரும் ஆணிடமிருந்து தற்காத்துக்கொள்ளவே பெண்களால் இயல்வதில்லை////

    இப்படியெல்லாம் பெண்களை இழிபடுத்தி பேசிய மலிக்காவின் வீட்டின் முன் கண்டன ஆர்பாட்டம் நடத்த உலக பெண்ணினமே அணி திரளுங்கள்..."

    அப்படீன்னு...! நா சொல்லல...!
    பெண்விடுதலை இயக்க பெண்கள் கொடி தூக்காப்போறாங்கங்கோ.....//


    அய்யா காஞ்சி முரளியாரே! இல்லையில்லை முரளிநாரதரே! வாரும் வாரும் ஏன் ஏன் இப்படி!
    உன்மையை
    சொல்லவிடமாட்டேங்குறீங்க. இப்படி பெண்ணுக்கு பெண்ணை மூட்டி அதில் குளிர்காய்வதில் என்ன தங்களுக்கு ஆதாயம். அய்ய பெரியவரே!

    தாங்கள் பெண்விடுதலை என்றபெயரில் எழுதிய கவிதையைதான் நானிங்கே மொழிபெயர்த்து பதிவிட்டுயிருக்கேன் அது முதலில் ஞாபகமிருக்கட்டும்.

    ஏற்கனவே நான் எழுதிய பெண்ணுக்கு பெண்ணே எதிரி
    பார்க்கும்போதே கதறுதே மனம் பதறி என எழுதியவளும் நான்தான்.

    பிழையோ தவறோ குற்றமோ அது எதுவானாலும் முதலில் நம்மைநாம் திருத்திக்கொண்டு பிறகுதான் அடுதவர்களிடம் குறைநிறைகாணவேண்டுமென்பது என் கருத்து என் செயல். ஆக நானும் மச்சானிடம்போட்டிபோட்டுக்கொண்டு என்னவெல்லாம் செய்தேன் என்பது எனக்குதானே தெரியும்.

    ஒருதவறை தவறி செய்வது குற்றமல்ல. அதே தவறை தொடர்ந்து செய்வது குற்றத்திலும் குற்றம்.

    நான் இப்பதில் குறிப்பிட்டதுபோல். என் கருத்து பிறருக்கு பிடிக்காமலிருக்கலாம். அதற்காக என் நல் வெளிபாடுகளை நான் தடுக்கயிலாது.

    இக்கருத்தை தவறாக எடுதுக்கிட்டா நிர்வாகம் பொருப்பாகாதுன்னு
    முன்ஜாமீன் வாங்கிகிட்டோமுல்ல பார்க்கலையா? அச்சோ அச்சோ..

    பதிலளிநீக்கு
  17. அப்படீன்னு...! நா சொல்லல. காஞ்சி முரளி கூறியது..!//

    எப்புடி.
    ஆத்தாடி மல்லி கொஞ்சம் சாக்கிரதையாவேயிரு. எங்கேயுமில்லடியம்மா வம்பு

    பதிலளிநீக்கு
  18. ச்சே...
    என்னக் காட்டிகொடுத்துடீன்களே... மலிக்கா...!

    பதிலளிநீக்கு
  19. ///அய்யா காஞ்சி முரளியாரே! இல்லையில்லை முரளிநாரதரே!////

    ஏங்க... இப்படியெல்லாம்...!
    நான் கேள்வி கேட்டிருந்தா... என்ன திட்டலாம்... வையலாம்...!
    அவிங்க... கேட்பாகன்னு சொன்னேன்...!

    இதுக்கா...! இந்த பட்டம்...!

    பதிலளிநீக்கு
  20. காஞ்சி முரளி கூறியது...
    ///அய்யா காஞ்சி முரளியாரே! இல்லையில்லை முரளிநாரதரே!////

    ஏங்க... இப்படியெல்லாம்...!
    நான் கேள்வி கேட்டிருந்தா... என்ன திட்டலாம்... வையலாம்...!
    அவிங்க... கேட்பாகன்னு சொன்னேன்...!

    இதுக்கா...! இந்த பட்டம்.//

    இது கேட்க்காம கேட்ட கேள்விக்குதான் இந்தபட்டமுங்க.
    கேட்டீங்கன்னா இன்னமும் தருவோமுங்க..

    அதுன்ங்கோ வைய்யிறது திட்டுறதுன்னா

    நான் பச்சகொயந்த எனக்கு அதெல்லாம் ஒன்னுமேதெரியாது சொன்னாலும் நம்பமாட்டீகிறேள் என்னசெய்றதுன்னே புரியலையே..

    பதிலளிநீக்கு
  21. முதலில் பாராட்டுக்கள்...!
    ஏன்னா...! ஓர் பெண்மணியாய் இருந்தும்...
    யதார்தமாய்... உண்மையை சிறிதும் பிறழாமல் சொல்லியுள்ளீர்கள்...!
    ஹுசைனம்மா சொன்னதுபோல் "தைரியமாய்".... உண்மையில் தைரியமாய்...!

    அடுத்து...
    தங்களின் இப்பதிவைக் கண்டதும்... நான் ஏற்கெனவே சொன்னதுபோல... தாங்கள் சிறந்த கட்டுரையாளர்... மாறுபட்ட சிந்தனையாளர் என்பதை நீருபித்துள்ளீர்கள்...!

    தாங்கள் சொல்ல வந்த... தங்கள் கருத்தை...
    மிக அழகாக... தைரியமாக... உள்ளது உள்ளபடி உண்மைகளை... தெளிவாகவும்... ஆணித்தரமாகவும்... ஆரம்பம் முதல்... முடிவு வரை... தடுமாற்றமின்றி சொல்லியுள்ளீர்கள்...

    ஆனால்.. தாங்கள் சொல்வதை இன்றைய மகளீர் ஏற்றுக்கொள்வது சிரமம்...! நிறைய கருத்துக்கள் அவர்களுக்கு உடன்பாடாய் இல்லை... அதனால் மறுதலிப்பார்கள்... அவர்கள் உலகமே வேறு...! நாகரீகத்தின் உச்சத்தின் எச்சத்தில் இருக்கிறார்கள்...

    தங்களின் இந்த பதிவு... நாட்டுக்கும்.. சமுதாயத்துக்கும்... வீட்டுக்கும்... தனிமனிதருக்கும் நன்மை பயக்கக் கூடியதுதான்...! ஆனால்.. ஏற்கெனவே நான் சொன்னதைப் போல "செவிடன் காதில் ஊதிய சங்கு" ....!

    அதோடு... தாங்கள் //எதுவென்றபோதும் ஆண் ஆணாகவும்.பெண் பெண்ணாக இருந்தால்தான் அந்ததந்த இனங்களுக்கே ஓர் மதிப்பு!ஆகமொத்தத்தில் இருவரும் சமம் என்பதில்,மிக மிக சில பலன்கள்தான். ஆனால் அதில் பாதிப்புகள் அதிகமதிகம்.////

    தங்கள் இந்த இறுதி தீர்ப்பு...
    நாட்டாம...! நல்ல தீர்ப்பு...! சூப்பர் தீர்ப்பு..!

    ஆனால்....
    இறுதியாய்.. என் கருத்து...
    இல்லத்திலும்,அலுவலகத்திலும், வெளியிலும்..
    ஆணும் பெண்ணும் புரிதலில், அதாவது விட்டுக்கொடுத்தலில் இருந்தால்...

    அங்கே
    அன்பும் தழைக்கும்...
    சரிசமமும் இருக்கும்...!

    மீண்டும் வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...
    நல்ல அருமையான பதிவு...

    நட்புடன்..
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  22. மிக உண்மையான வாதங்கள்.ஆண், பெண் இருவரின்

    உடல்ரீதியான ஒப்பிடுதலோடும்கூட, பிள்ளைகளின்

    உளவியல்ரீதியாகவும் சிந்தித்து, கருத்துக்கள்

    தந்துள்ளது, பாராட்டிற்குரியது.

    பதிலளிநீக்கு
  23. அறிவு,ஆற்றல்களில் சமமாகத் துடித்தாலும்- போட்டியிட்டாலும், பெண்ணையும் ஆணையும் படைத்த இறைவன் உடல்ரீதியாக பெண்மையை மென்மையாக்கியும்; ஆண்மையை திண்மையாக்கியும் வைத்துள்ளான்; அதனால் பலகீனம் பெண்மையின் இயற்கை நியதி. எனது அனுபவத்தில் (அமெரிக்கா முத...ல் அரபு நாடுகள் வரை சுமார் 29 ஆண்டுகள் பணியாற்றியதில்) என் சக ஊழியர்களில் பெண்கள் எவ்வளவு நேரமும் பணியாற்ற இயலாது; சில நேரங்களில் அவர்களால் தொடர்ந்து பணியாற்றமுடியாமல் விடுப்பு எடுக்கும் பொழுதெல்லாம் , யானே அவர்களின் பணியினையும் சேர்த்து செய்துள்ளேன். இன்றுவரை விடுமுறை நாட்களிலும் தொய்வின்றி என்னால் பணியாற்ற முடிகின்றது; ஆனால் பெண்களோ எப்பொச்ழுது மணி அய்ந்து அடிக்கும் என்ற கனவில் தான் காலம் தள்ளுகின்றனர் பணியிடங்களிலும்

    பதிலளிநீக்கு
  24. அறிவு,ஆற்றல்களில் சமமாகத் துடித்தாலும்- போட்டியிட்டாலும், பெண்ணையும் ஆணையும் படைத்த இறைவன் உடல்ரீதியாக பெண்மையை மென்மையாக்கியும்; ஆண்மையை திண்மையாக்கியும் வைத்துள்ளான்; அதனால் பலகீனம் பெண்மையின் இயற்கை நியதி. எனது அனுபவத்தில் (அமெரிக்கா முத...ல் அரபு நாடுகள் வரை சுமார் 29 ஆண்டுகள் பணியாற்றியதில்) என் சக ஊழியர்களில் பெண்கள் எவ்வளவு நேரமும் பணியாற்ற இயலாது; சில நேரங்களில் அவர்களால் தொடர்ந்து பணியாற்றமுடியாமல் விடுப்பு எடுக்கும் பொழுதெல்லாம் , யானே அவர்களின் பணியினையும் சேர்த்து செய்துள்ளேன். இன்றுவரை விடுமுறை நாட்களிலும் தொய்வின்றி என்னால் பணியாற்ற முடிகின்றது; ஆனால் பெண்களோ எப்பொச்ழுது மணி அய்ந்து அடிக்கும் என்ற கனவில் தான் காலம் தள்ளுகின்றனர் பணியிடங்களிலும்

    பதிலளிநீக்கு
  25. எண்ணங்களைத் தெளிவாக எழுதிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  26. மிக அருமையான விளக்கம் மல்லிகா.
    உங்களின் கருதுக்கள் எங்களுக்கு ஏன் என்மனைவிக்கே ரொம்ப பிடித்திருக்கு.
    இந்தாகாலத்து பெண்ணாகயிருந்த்போதும் அவள் இதைமனதார ஏற்றாள்.
    ஏனெனில் காலம் போய்கொண்டிருக்கும் போகு அப்படி
    திருமணமாகி 9 மாதங்களாகிறது மாடல்பெண்ணைகட்டிவிட்டொமே என நினைதேன். முதல் நான் அப்படிதான் என்றிருந்தவள் தற்போது அவளாகவே அனைத்தையும் உணர்கிறாள். எதுசரி எது தவறென உணரும் பக்கும் வந்துவிட்டது. இதனைக்கும் 3 டிகிரி கோல்டர். கணினியில் சக்கைபோடு போடுபவள்.

    வலைதலைங்களை பார்வையிட்டுகொண்டு வரும்போது இந்த இந்தபதிவும் கண்ணில் பட்டது.
    நன்றாக தெளிவாய் எழுதியிருகாங்க. சபாஷ் இவங்கலை பாராட்டாமல்போகவேண்டாமென சொன்னாள் அதனால்ஹான் இந்த நீண்ட விளக்கம்.

    எங்கள் இருவரின் வாழ்த்துக்களும். பாராட்டுக்களும் தாங்களுக்கு.

    என்றும் அன்புடன் நாங்களும் உங்களோடு
    அருள் ஆனந்தி.
    கோவை.-------அபுதாபி.

    பதிலளிநீக்கு
  27. ஒரு ஆணுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை ஓரிரு படத்தோடு அன்னைவேடத்துக்கு போகிறாள். ஆனால் அதே ஆண் அவளின் பேத்திக்கும் ஜோடியாய் நடிக்கிறான்./////


    இது உண்மைதான் மேடம் , மேக்கப் போட்டாலும் இதில் ஜெயிக்க முடியவில்லை
    அப்புறம் என் இப்படி , நல்லாத்தானே போயிகிட்டு இருந்துச்சு ?
    இதுக்குதான் ராத்திரி நேரத்துல தனியா வெளிய போகாதிங்கங்குறது , ஒன்னும் இல்லை ஏதாவது காத்து கருப்பு அடிச்சிருக்கும் போய் மந்திரிங்க எல்லாம் சரியா போகும்

    பதிலளிநீக்கு
  28. மலிக்கா அவர்களுக்கு வணக்கம் . தாங்கள் அனுப்பிய நான் இறந்து போயிருந்தேன் -சவால் கவிதையை http://bharathbharathi.blogspot.com தளத்தில் வெளியிட்டுள்ளோம். ஆர்வமுடன் கவிதை அனுப்பியமைக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  29. மிக்க நன்றி அஸ்மா.

    மிக்க நன்றி. கமலேஷ்

    மிக்க நன்றி.சுகந்தி.

    மிக்க நன்றி. தேடுகிறவன்..

    பதிலளிநீக்கு
  30. காஞ்சி முரளி கூறியது...
    முதலில் பாராட்டுக்கள்...!
    ஏன்னா...! ஓர் பெண்மணியாய் இருந்தும்...
    யதார்தமாய்... உண்மையை சிறிதும் பிறழாமல் சொல்லியுள்ளீர்கள்...!
    ஹுசைனம்மா சொன்னதுபோல் "தைரியமாய்".... உண்மையில் தைரியமாய்...!/

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
    அசோ அச்சோ உண்மையைசொல்ல சிலநேரம் எவ்வளவு பயப்படவேண்டியிருக்கு, தைரியத்தை கொடுக்கும் இறைவனுக்கே நன்றி..


    /அடுத்து...
    தங்களின் இப்பதிவைக் கண்டதும்... நான் ஏற்கெனவே சொன்னதுபோல... தாங்கள் சிறந்த கட்டுரையாளர்... மாறுபட்ட சிந்தனையாளர் என்பதை நீருபித்துள்ளீர்கள்...!//

    அதெல்லாம் ஒன்னுமில்லை நல்ல நல்ல கட்டுரையாளர்களெல்லாம் இருக்காங்க சகோ. நம்ம சும்மா ஜுஜிபி..

    /தாங்கள் சொல்ல வந்த... தங்கள் கருத்தை...
    மிக அழகாக... தைரியமாக... உள்ளது உள்ளபடி உண்மைகளை... தெளிவாகவும்... ஆணித்தரமாகவும்... ஆரம்பம் முதல்... முடிவு வரை... தடுமாற்றமின்றி சொல்லியுள்ளீர்கள்... //

    நன்றி..

    ஆனால்.. தாங்கள் சொல்வதை இன்றைய மகளீர் ஏற்றுக்கொள்வது சிரமம்...! நிறைய கருத்துக்கள் அவர்களுக்கு உடன்பாடாய் இல்லை... அதனால் மறுதலிப்பார்கள்... அவர்கள் உலகமே வேறு...! நாகரீகத்தின் உச்சத்தின் எச்சத்தில் இருக்கிறார்கள்...//

    பெரியவர்களென்றாலும் சிறியவர்களென்றாலும் நல்லதை எடுத்துச்சொல்வதில் தவறில்லை.
    அதை ஏற்று நடப்பதும் மறுத்துவிடுவதும் அவர்களின் விருப்பம் இதில் நம் மூக்கு நுழைக்க அனுமதியில்லை..

    //தங்களின் இந்த பதிவு... நாட்டுக்கும்.. சமுதாயத்துக்கும்... வீட்டுக்கும்... தனிமனிதருக்கும் நன்மை பயக்கக் கூடியதுதான்...! ஆனால்.. ஏற்கெனவே நான் சொன்னதைப் போல "செவிடன் காதில் ஊதிய சங்கு" ....!/

    நானும் ஏற்கனவே சொன்னதுதான் வலிக்கும்வரை ஊதுகிறேன் என் உதட்டசைவைத்தாவது செவிடர்களுக்கு விளாங்காதா என்ற ஆதங்கம்தான். அதுபோன்ற செவிடர்களுக்கும் உணர்வுகளும் மனசாட்சிகளும் இருக்கும்தானே.

    அதோடு... தாங்கள் //எதுவென்றபோதும் ஆண் ஆணாகவும்.பெண் பெண்ணாக இருந்தால்தான் அந்ததந்த இனங்களுக்கே ஓர் மதிப்பு!ஆகமொத்தத்தில் இருவரும் சமம் என்பதில்,மிக மிக சில பலன்கள்தான். ஆனால் அதில் பாதிப்புகள் அதிகமதிகம்.////

    தங்கள் இந்த இறுதி தீர்ப்பு...
    நாட்டாம...! நல்ல தீர்ப்பு...! சூப்பர் தீர்ப்பு..!/

    நன்றிங்கோ பாதி நாட்டமா. ஏன்னா இந்த பதிவில் உங்க கருத்தும் அடங்கியிருகே அதனால்தான்.

    /ஆனால்....
    இறுதியாய்.. என் கருத்து...
    இல்லத்திலும்,அலுவலகத்திலும், வெளியிலும்..
    ஆணும் பெண்ணும் புரிதலில், அதாவது விட்டுக்கொடுத்தலில் இருந்தால்...

    அங்கே
    அன்பும் தழைக்கும்...
    சரிசமமும் இருக்கும்...!//

    விட்டுக்கொடுத்தால்
    அனுசரித்து நடந்தல்
    இவைகளால் வாழ்வு செழிக்கும் இதில் ஐயமேயில்லை.


    /மீண்டும் வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...
    நல்ல அருமையான பதிவு...

    நட்புடன்..
    காஞ்சி முரளி...

    அன்பான வாழ்த்துக்கும் பாராட்டுக்களுகும் மிக்க நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  31. NIZAMUDEEN கூறியது...
    மிக உண்மையான வாதங்கள்.ஆண், பெண் இருவரின்

    உடல்ரீதியான ஒப்பிடுதலோடும்கூட, பிள்ளைகளின்

    உளவியல்ரீதியாகவும் சிந்தித்து, கருத்துக்கள்

    தந்துள்ளது, பாராட்டிற்குரியது//

    வாங்க நிஜாமுதீன் அண்ணா.
    தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது