நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வந்தாச்சி வந்தாச்சி வசந்தம் க[கொ]ண்டு வந்தாச்சி.

அன்பு நெஞ்சங்களே
அரவணைக்கும் உள்ளங்களே

ஆனந்தமாய் ஓடிவந்து
ஆவலோடு கேட்கின்றேன்

அனைவரும் நலமா
அனைவரும் சுகமா

இந்தியா சென்றுவிட்டு
இளைப்பாறி வந்துவிட்டேன்

இருந்தும் போதவில்லை
இன்னும் இளைப்பாற சமயமில்லை

இந்தியாமீது கொண்ட
ஈர்ப்பு மட்டும் குறையவில்லை

நானில்லாத சமயத்திலும்-என்
கவிதைகளை கண்டுவிட்டு-என்னை
கெளவுரவித்து கருத்துதந்தீர்

இதைநான் என்றென்றும் மறக்கமாட்டேன்
இதற்கு எந்நாளும் நன்றி சொல்வேன்.

என்தாயைக் கண்டுவிட்டு
என்தாய்நாட்டைக் கண்டுவிட்டு

மீண்டும் வந்துவிட்டேன்
மிகுதியாய் புத்துணர்வும் பெற்றுவிட்டேன்

அன்பெனும் ஆதரவாலே
அள்ளித் தருவேன் ஆக்கங்களை

நீங்கள் தரும் ஊக்கத்தாலே-இனி
நீரோடையை நிரப்புவேன் கவிதைகளாலே.....


டிஸ்கி/// என்னம்மாஎல்லாரும் எப்படியிருக்கீங்க.
உங்கள் அனைவரின் நலமறிய மிகுந்த ஆவல்.
வந்தாச்சி வந்தாச்சி வசந்தம் கண்டுவந்தாச்சி. கூடவே
வசந்தமும் கொண்டு வந்தாச்சி. இனி விளையும் என்மூன்று தளத்திலும் முப்போகம்.

தற்போது நோன்புக் காலமாக இருப்பதால் என் இறைவனோடு அதிகதொடர்புகொள்ளவேஆசை. அதனால்.அடிக்கடி என்தளம் மற்றும் பிற தளங்களின் பக்கம் வருவது சிரமம். நோன்பு முடிந்ததும் எப்போதும்போல் வருவேன் அதுவரை உங்கள் அனைவரின் ஊக்கமும் ஆதரவும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.

தொடர்ந்து கவிதைகளுக்கு கருதிட்ட அனைத்து நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

43 கருத்துகள்:

  1. வாருங்கள் அன்பு சகோதரியே.

    வீட்டில் அனைவரும் நலமா? உங்கள் விடுமுறை சிறப்பானதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

    வருக வருக என்று வரவேற்கிறோம்.

    அன்பு சகோதரன்
    தாஜுதீன்

    பதிலளிநீக்கு
  2. தாய் நாடு சென்று
    பாய் நாட்டிற்கு வந்த கவியரசியே வருக !

    தம் அன்னையையும் கண்டிருப்பாய் !
    ஊரில் பிறர் கண்ணால் கருத்திருப்பாய் ( திருஷ்ட்டி)

    உமைசான்றோர்கள் நலமா ?
    உமை ஈன்றோர்கள் வாழ்க வளமா !

    நீ ஆவலுடன் குடித்திருப்பாய் இளநீர் !
    அவை உன் குடும்பத்தாரின் ஆனந்தக் கண்ணீர் !

    என் வகுப்பறையில் கவிதான் என் உயிர் !
    பாடப் புத்தகம் எனக்கு புளிச்சுப் போனத் தயிர் !

    புகழுரைப்பது எனது பணியில்லை !
    வாழ்த்தாவிட்டால் அது சரியில்லை !

    ஊக்குவிப்பது எனதுக் கடமை !
    எழுத்தை ஆக்கவிப்பது உமதுத் திறமை !

    வழியட்டும் நீரோடை ,கண்ணீர் கவிதையால் !

    கவிதை என்பது அழுவதற்கு மட்டுமே. வாழ்த்துக்கள் ...தொடரட்டும் உமது படைப்பு .

    பதிலளிநீக்கு
  3. இனி நீரோடையில் வெள்ளம் பெருக்கெடுக்கும்..கலைச்சாராலில் புயல் அடிக்கும் இனிய பாதையில் ஒளி வெள்ளமாகும்

    வருக...வருக.... வெல்கம் பேக் டூ யூ.ஏ ஈ..!!!!!!

    பதிலளிநீக்கு
  4. கொண்டு வ‌ந்த‌தில் ஒரு ப‌குதியை யாருக்கும்(குறிப்பா ஜெய்லானி, முர‌ளி அண்ணா) தெரியாம‌ இங்கிட்டு த‌ள்ளுங்க‌..

    பதிலளிநீக்கு
  5. வந்தாச்சா வந்தாச்சா அப்பாடி இரு கொட்டும் அருவி தேனாக கவிதை மழையாக.

    இத்தனைநாள் எத்தனையோ தளம் சென்றேன் இருந்தாலும் இப்போதுதான் ஆனந்தம் அள்ளிக்கொட்டியது நெஞ்சத்தில்.
    மீண்டும் வருக கவிப்பேரரசி..

    பதிலளிநீக்கு
  6. தாஜுதீன் கூறியது...
    வாருங்கள் அன்பு சகோதரியே.

    வீட்டில் அனைவரும் நலமா? உங்கள் விடுமுறை சிறப்பானதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

    வருக வருக என்று வரவேற்கிறோம்.

    அன்பு சகோதரன்
    தாஜுதீன்.

    அன்பு சகோதரரின் அன்பான அழைப்புக்கு மிக்க மகிழ்ச்சி.
    வீட்டில் அனைவரும் நலம்.

    விடுமுறை மிகுந்த மகிச்சியாகவும் சந்தோஷமாகவும் அமைந்தது. முக்கியமானவர்களை சந்தித்ததிலும் பெருமையாக இருந்தது. அதுபற்றி வெகுவிரைவில் பயணக் கட்டுரைபோல் எழுதயுள்ளேன் இன்ஷா அல்லாஹ்.

    மிக்க நன்றி சகோதரர் அவர்களே

    பதிலளிநீக்கு
  7. வாங்க அக்கா உங்கள் வரவு நல்வரவாகட்டும்... ஊரில் சொந்தங்கள் அனைவரும் நலமா?அதிரடி ஆரம்பம்...

    பதிலளிநீக்கு
  8. @@@நாடோடி--//
    கொண்டு வ‌ந்த‌தில் ஒரு ப‌குதியை யாருக்கும்(குறிப்பா ஜெய்லானி, முர‌ளி அண்ணா) தெரியாம‌ இங்கிட்டு த‌ள்ளுங்க‌..//

    என்னது காலி பாலிதீனும் , அலுமினிய ஃபாயிலுமா..ஹி..ஹி..

    பதிலளிநீக்கு
  9. Mohamed Ayoub K கூறியது...
    தாய் நாடு சென்று
    பாய் நாட்டிற்கு வந்த கவியரசியே வருக !

    வரவேற்புக்கு மகிழ்ச்சி சகோ.

    தம் அன்னையையும் கண்டிருப்பாய் !
    ஊரில் பிறர் கண்ணால் கருத்திருப்பாய் ( திருஷ்ட்டி)

    திருஸ்டி என்றால் என்ன.ஓ கண்ணு போட்டுவிட்டார்கள்ன்னு சொல்லுவாகளே அதுவா, பாவம் அவர்கள் நம்மேல் கண்ணைபோட்டுவிட்டு அவர்கள் என்ன செய்வார்கள் [மல்லி எஸ்கேப் இல்லையின்னா அய்யூப் கண்ணு போட்டுவிடுவாக ஹி ஹி]

    //உமைசான்றோர்கள் நலமா ?
    உமை ஈன்றோர்கள் வாழ்க வளமா !//


    அனைவரும் நலமே என்னை ஈன்ற அன்னையும் நலம்.

    //நீ ஆவலுடன் குடித்திருப்பாய் இளநீர் !
    அவை உன் குடும்பத்தாரின் ஆனந்தக் கண்ணீர் !//

    ஒருமுறை குடித்தேன் இளநீர்
    பலமுறை சொறிந்தேன் ஆனந்தக் கண்ணீர்

    //என் வகுப்பறையில் கவிதான் என் உயிர் !
    பாடப் புத்தகம் எனக்கு புளிச்சுப் போனத் தயிர் !//

    புளித்த தயிரில் தயரிக்கலாம்
    புத்துணர்வு கொடுக்கும்
    முகத்துக்கான மிளிர்

    //புகழுரைப்பது எனது பணியில்லை !
    வாழ்த்தாவிட்டால் அது சரியில்லை !//

    வாழ்த்துக்களை ஏற்காவிட்டால் அது
    முறையில்லை.

    //ஊக்குவிப்பது எனதுக் கடமை !
    எழுத்தை ஆக்கவிப்பது உமதுத் திறமை !//

    நிச்சயம் சிறப்பாய் ஆக்கங்களை
    தரமுயற்ச்சிப்பேன் என்பதே உண்மை.

    //வழியட்டும் நீரோடை ,கண்ணீர் கவிதையால் !//

    அது ஏன் கண்ணீர் கவியால்?
    வழிந்தோடும் நீரோடையில் அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தும் நிஜங்களாய்.

    /கவிதை என்பது அழுவதற்கு மட்டுமே. //

    யார் சொன்னது கவிதயென்பது கவிதை அழுவதற்க்கு மட்டுமே என்று நம் மன உணர்வுகளை வெளிப்படும் வெளியுணர்வுகளை நிஜப்படுத்தும்
    உணர்வே கவிதை. அது அழுகையை மட்டுமல்ல ஆனந்தம். அழுகை. சுகம் சோகம். என நம் ஒட்டுமொத்த வெளிப்பாடே கவிதை. சரியா சகோ.


    வாழ்த்துக்கள் ...தொடரட்டும் உமது படைப்பு .//

    வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  10. ஜெய்லானி கூறியது...
    இனி நீரோடையில் வெள்ளம் பெருக்கெடுக்கும்..கலைச்சாராலில் புயல் அடிக்கும் இனிய பாதையில் ஒளி வெள்ளமாகும்

    வருக...வருக.... வெல்கம் பேக் டூ யூ.ஏ ஈ..!!!!!!/

    ஆக ஒரு பூகம்பமே உருவாகுமுன்னு சொல்றேளோ அண்ணாத்தே.

    வெல்கமுக்கு மிக்க தேங்க்ஸ் பிரதர்.

    பதிலளிநீக்கு
  11. நாடோடி கூறியது...
    கொண்டு வ‌ந்த‌தில் ஒரு ப‌குதியை யாருக்கும்(குறிப்பா ஜெய்லானி, முர‌ளி அண்ணா) தெரியாம‌ இங்கிட்டு த‌ள்ளுங்க‌..
    //

    ஓகோ அப்படியா! அல்லாருக்கும் கொண்டு வந்திருக்கேன் அவா அவாளுக்கு சேரவேண்டியத அனுப்பிவிட்டுடுறேன் ஓகேவா.

    அண்ணாத்தேக்களுக்கு தெரியாமலும் நம்ம ஸ்டீபனுக்கு காக்கா காலில் கட்டிவிட்டு விட்டேன் வந்ததும் பத்திரப்படுதிடுங்கோஓஓஓஓஓ

    பதிலளிநீக்கு
  12. ஜெய்லானி கூறியது...
    @@@நாடோடி--//
    கொண்டு வ‌ந்த‌தில் ஒரு ப‌குதியை யாருக்கும்(குறிப்பா ஜெய்லானி, முர‌ளி அண்ணா) தெரியாம‌ இங்கிட்டு த‌ள்ளுங்க‌..//

    என்னது காலி பாலிதீனும் , அலுமினிய ஃபாயிலுமா..ஹி..ஹி.//

    என்னா ஒரு நக்கலு பாலித்தீன் கவரும் அலுமினிய பாயிலும் யின்னா வெல விக்கிது அதபோயி ஸ்டீபனுக்கு அனுப்புவேனா. வெல குறைவா உள்ள முறுக்கு சீடை அதிரசம் அத்தோட தம்ரூட்டு இதுகளை அனுப்பிவிட்டுடேன் காக்கா காலில்.

    என்னது புகை வருது அண்ணாத்த வயித்துலேர்ந்து.ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  13. சொர்ணா கூறியது...
    வந்தாச்சா வந்தாச்சா அப்பாடி இரு கொட்டும் அருவி தேனாக கவிதை மழையாக.

    இத்தனைநாள் எத்தனையோ தளம் சென்றேன் இருந்தாலும் இப்போதுதான் ஆனந்தம் அள்ளிக்கொட்டியது நெஞ்சத்தில்.
    மீண்டும் வருக கவிப்பேரரசி.//

    மிக்க மகிழ்ச்சி சொர்ணா. தங்களின் ஆனந்தத்தை நிலையாக்க முயற்சிக்கிறேன். தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  14. சீமான்கனி கூறியது...
    வாங்க அக்கா உங்கள் வரவு நல்வரவாகட்டும்... ஊரில் சொந்தங்கள் அனைவரும் நலமா?அதிரடி ஆரம்பம்.//

    அன்புக்கனியே தங்களின் அன்பான வரவேற்ப்புக்கு மிக்க நன்றி. அடிச்சி ஆடிடுவோம்..மிக்க மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  15. வீட்டுக்கு வந்திருக்கலாமே தங்கச்சி!

    பதிலளிநீக்கு
  16. வாங்க வூட்டுலே எல்லோரும் சுகமா, உறவினர்கள் சுகமா விடுமுறை எப்படி இருந்தது

    பதிலளிநீக்கு
  17. @@ நாடோடி கூறியது

    //கொண்டு வ‌ந்த‌தில் ஒரு ப‌குதியை யாருக்கும்(குறிப்பா ஜெய்லானி, முர‌ளி அண்ணா) தெரியாம‌ இங்கிட்டு த‌ள்ளுங்க‌..//

    @@ ஜெய்லானி கூறியது..

    //என்னது காலி பாலிதீனும் , அலுமினிய ஃபாயிலுமா..ஹி..ஹி.//

    @@ மல்லிக்கக்கா கூறியது...

    ((என்னா ஒரு நக்கலு பாலித்தீன் கவரும் அலுமினிய பாயிலும் யின்னா வெல விக்கிது அதபோயி ஸ்டீபனுக்கு அனுப்புவேனா. வெல குறைவா உள்ள முறுக்கு சீடை அதிரசம் அத்தோட தம்ரூட்டு இதுகளை அனுப்பிவிட்டுடேன் காக்கா காலில்.
    என்னது புகை வருது அண்ணாத்த வயித்துலேர்ந்து.ஹா ஹா ஹா))

    என்ன தல இங்கயும் வந்து வங்கி கட்டியாச்சா?? என்ன கவிதை எல்லாம் பின்னுறீங்க பாஸ்.. அதெல்லாம் கூட வருமா?? க்கி..க்கி..

    வாங்க மல்லிகாக்கா ஊரில் அனைவரும் நலமா??

    பதிலளிநீக்கு
  18. //என்னா ஒரு நக்கலு பாலித்தீன் கவரும் அலுமினிய பாயிலும் யின்னா வெல விக்கிது அதபோயி ஸ்டீபனுக்கு அனுப்புவேனா. வெல குறைவா உள்ள முறுக்கு சீடை அதிரசம் அத்தோட தம்ரூட்டு இதுகளை அனுப்பிவிட்டுடேன் காக்கா காலில்.//

    ஹி..ஹி..

    முறுக்கு சீடைய விடுங்க ..இந்த அதிரசம் , தம்ரூட்டு மட்டும் போதும் , காக்கா எந்த ரூட்டில போனாலும் விடாம பிடிச்சு தந்தூரி போட்டுட வேண்டியது தான்,

    பதிலளிநீக்கு
  19. வாருங்கள் அன்பு சகோதரி.

    அனைவரும் நலமா?

    பதிலளிநீக்கு
  20. முதலில்...
    நீரோடையில்...

    2010ல் (இந்த ஆண்டின்)
    "100வது பதிவிற்கு" வாழ்த்துக்கள்...!

    தங்கள் தமிழகப் பயணம் சிறப்பாய் அமைந்திருக்கும் என நினைக்கிறேன்...!
    தங்கள் ஊரில் அனைவரும் நலம் என நம்புகிறேன்...!

    ///இந்தியாமீது கொண்ட
    ஈர்ப்பு மட்டும் குறையவில்லை////

    அதெப்பிடி
    தாய்மீதும்...
    தாய்மண்மீதும் உள்ள ஈர்ப்பு... பாசம்.... என்றாவது குறையுமா?

    ///இனி நீரோடையை நிரப்புவேன் கவிதைகளாலே.....///
    நடத்துங்க....! நடத்துங்க....!

    வந்துட்டாங்கப்பா...! வந்துட்டாங்க ...!

    கவிதை அருமை...
    கவிதை தலைப்பு மிக அருமை...
    தாயகத்தில் என்றுமே வசந்தம்தான்...

    நட்புடன்...
    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  21. வாருங்கள் வாருங்கள் வசந்த தேவதையே. இனிகவி வசந்தம் கலைகட்டும். எங்களுக்கு வசந்தவிருந்துகு இனி பஞ்சமில்லை.

    ஆனந்தம் வந்தடி மல்லியே உன்னால்
    கவியானந்தம் வந்ததடி மல்லியே..

    பதிலளிநீக்கு
  22. நட்புடன் ஜமால் கூறியது...
    வீட்டுக்கு வந்திருக்கலாமே தங்கச்சி//

    வாங்க காக்கா. வர ஆசைதான் ஆனா நாட்கள் குறைவாக இருந்ததால் நிறைய இடங்கள் விடுபட்டுவிட்டது. நிச்சயம் அடுத்தமுறை வருவேன் காக்கா. [சரி நீங்க ஊரிலா இருக்கீங்க]

    பதிலளிநீக்கு
  23. அப்துல்மாலிக் கூறியது...
    வாங்க வூட்டுலே எல்லோரும் சுகமா, உறவினர்கள் சுகமா விடுமுறை எப்படி இருந்தது.//

    எல்லாரும் நலத்துடன் சுகம் மாலிக். மிகுந்த சுகமாக இருந்தது விடுமுறை. வரும்போதுதான் மனம் கனமாக இருந்தது,

    தங்கள் அம்மாவை கண்டேன்[திருத்துரைப்பூண்டியில் குழந்தைக்காக ஹாஸ்பிட்டலில்]

    பதிலளிநீக்கு
  24. என்ன தல இங்கயும் வந்து வங்கி கட்டியாச்சா?? என்ன கவிதை எல்லாம் பின்னுறீங்க பாஸ்.. அதெல்லாம் கூட வருமா?? க்கி..க்கி..

    வாங்க மல்லிகாக்கா ஊரில் அனைவரும் நலமா.//

    தலைக்கு[அண்ணாத்தேக்கு] இதென்ன புதுசா.தலைக்கு கவி கடலாட்டம் வரும் அச்சோ அதென்ன தல வாலுன்னு.

    வந்துட்டேன் அனைவரும் நலம்
    சகோதரர் அவர்களே..

    பதிலளிநீக்கு
  25. ஜெய்லானி கூறியது...
    //என்னா ஒரு நக்கலு பாலித்தீன் கவரும் அலுமினிய பாயிலும் யின்னா வெல விக்கிது அதபோயி ஸ்டீபனுக்கு அனுப்புவேனா. வெல குறைவா உள்ள முறுக்கு சீடை அதிரசம் அத்தோட தம்ரூட்டு இதுகளை அனுப்பிவிட்டுடேன் காக்கா காலில்.//

    ஹி..ஹி..

    முறுக்கு சீடைய விடுங்க ..இந்த அதிரசம் , தம்ரூட்டு மட்டும் போதும் , காக்கா எந்த ரூட்டில போனாலும் விடாம பிடிச்சு தந்தூரி போட்டுட வேண்டியது தான்,//

    அச்சச்சோ அதான் அந்தகாக்கா போகும்போதே அழுதது அண்ணாத்தே கண்ணுல படாமபோகனுமே இல்லன்னா நம்மல கந்தூரி ச்சே தந்தூரி ஆக்கிடுவாகளென்னு. பாவம் அதோட காலைமட்டுமாவது ஸ்டீபனுக்காக விட்டுடுங்கோ..

    பதிலளிநீக்கு
  26. சே.குமார் கூறியது...
    வாருங்கள் அன்பு சகோதரி.

    அனைவரும் நலமா.//

    வந்துட்டேன் சகோ. அனைவரும் ரொம்ப நலம்..நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  27. காஞ்சி முரளி கூறியது...
    முதலில்...
    நீரோடையில்...

    2010ல் (இந்த ஆண்டின்)
    "100வது பதிவிற்கு" வாழ்த்துக்கள்...!//


    ஓகோ அப்படியா எனக்கே தெரியலையே முரளின்னா முரளிதான்
    ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கு மிக்க மகிழ்ச்சி.

    //தங்கள் தமிழகப் பயணம் சிறப்பாய் அமைந்திருக்கும் என நினைக்கிறேன்...!
    தங்கள் ஊரில் அனைவரும் நலம் என நம்புகிறேன்...!/

    சிறப்பாக மிக சிறப்பாக அமைந்தது சிறந்தவர்களைகளையும் காணும் வாய்ப்புகளும் கிடைத்தது.

    ///இந்தியாமீது கொண்ட
    ஈர்ப்பு மட்டும் குறையவில்லை////

    அதெப்பிடி
    தாய்மீதும்...
    தாய்மண்மீதும் உள்ள ஈர்ப்பு... பாசம்.... என்றாவது குறையுமா?/

    குறையவே குறையாதுதான்

    ///இனி நீரோடையை நிரப்புவேன் கவிதைகளாலே.....///
    நடத்துங்க....! நடத்துங்க....!//

    எல்லாம் உங்களைப்போன்ற நல்லுள்ளங்களின் ஊக்கத்தாலே நடத்துவோமுல்ல.

    வந்துட்டாங்கப்பா...! வந்துட்டாங்க ...!//

    வந்துட்டோமுல்ல வந்துட்டோமுல்ல.

    //கவிதை அருமை...
    கவிதை தலைப்பு மிக அருமை...
    தாயகத்தில் என்றுமே வசந்தம்தான்...

    நட்புடன்...
    காஞ்சி முரளி..../

    மிகுந்த மகிழ்ச்சி சகோ.தங்களின் அன்பான கருத்துக்களூக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  28. அட சகோதரியின் வருகை எத்தனை உள்ளங்களுக்கு மகிழ்ச்சி.கடைசி பத்தை நெருங்கி விட்டோம்.அதனால் நோன்பு கழித்து தினமும் தொடரட்டும் உங்களது ஆக்கங்கள். (அதற்கிடையில் அப்பப்போ வாருங்கள்)

    பதிலளிநீக்கு
  29. ம‌லிக்கா அக்கா ஜெய்லானி பாவ‌ம்!!! நீங்க‌ அனுப்புன‌து வெள்ளை காக்கா.. ஜெய்லானி புடிச்சி த‌ந்தூரி ஆக்கின‌து அண்ட‌ங் காக்கை... ஹி.. ஹி.. பாவம்.

    உங்க‌‌ வெள்ளை காக்கா ப‌த்திர‌மா ந‌ம்ம‌ வீட்டுக்கு வ‌ந்து இற‌ங்கியாச்சி... :)‌

    பதிலளிநீக்கு
  30. வருக வருகவே வருகவே எங்கள் கவியே மீண்டும் வருகவே.

    மனமார வரவேற்கிறேன் எனதன்பு மகளே எ
    எப்படி யிருந்தது பயணம்.
    உன்னை காணதுவிட்டது எனக்கு மனசங்கடதையே ஏற்படுத்தியது.

    உன்னிடம் பேசியதையே பெருமையாக கருதுகிறேன்.
    என் அன்புமகளே உன் அன்புபயணம் கவியாய் கலையாய் இனிய பாதையில் தொடரட்டும் என்றும் எங்கள் ஆசிர்வாதம் உனக்கு இருக்கும்

    பதிலளிநீக்கு
  31. mkr கூறியது...
    அட சகோதரியின் வருகை எத்தனை உள்ளங்களுக்கு மகிழ்ச்சி.கடைசி பத்தை நெருங்கி விட்டோம்.அதனால் நோன்பு கழித்து தினமும் தொடரட்டும் உங்களது ஆக்கங்கள். (அதற்கிடையில் அப்பப்போ வாருங்கள்)//

    இந்த அன்புக்காக எத்தனை கவிதைகள் வேண்டுமென்றாலும் நொடியில் எழுதலாம்.அத்தனை உள்ளங்களுக்கும் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை சகோ.
    மகிழ்ச்சியில் உச்சதில் இருக்கிறேன் என்னை இத்தனை உள்ளங்கள் வரவேற்றதை நினைத்து.

    இன்ஷாஅல்லாஹ் நோன்பு கழித்து தொடர்ந்து தொடர்வேன் என் கவிப்பயணத்தோடு கலை மற்றூம் இனிய பயணைத்தையும்.

    மிக்க நன்றி சகோதரர் அவர்களே..

    பதிலளிநீக்கு
  32. நாடோடி கூறியது...
    ம‌லிக்கா அக்கா ஜெய்லானி பாவ‌ம்!!! நீங்க‌ அனுப்புன‌து வெள்ளை காக்கா.. ஜெய்லானி புடிச்சி த‌ந்தூரி ஆக்கின‌து அண்ட‌ங் காக்கை... ஹி.. ஹி.. பாவம்.//

    நெனச்சேன் அண்டங்காக்கை அலறிய சத்தம் அண்டத்தை ஆட்டிதுகண்டு அது அண்ணாத்தே பிடிச்ச அண்டங்காக்காவாகத்தானிருக்குமுன்னு.

    //உங்க‌‌ வெள்ளை காக்கா ப‌த்திர‌மா ந‌ம்ம‌ வீட்டுக்கு வ‌ந்து இற‌ங்கியாச்சி.//

    வந்துருச்சா அதெல்லாம் நம்ம வெள்ளைக்காக்கா நம்மளப்போல ரொம்ப புத்திக்குறைவானது சொன்னத செய்திடுமுல்ல..

    பதிலளிநீக்கு
  33. ஏ.... எதுக்கு...! இப்படி...!

    ஜெயிலானிய இந்தமாதிரி பண்றீங்க...!

    அவரப்போட்டு பந்தாடுறீங்க...!

    வேற ஆளு கிடைக்கலையா...!

    பதிலளிநீக்கு
  34. வாங்க, வாங்க..... கவிதை மழையில் எங்களை மீண்டும் நனைக்க வாங்க......
    (பி.கு.: நான் டீச்சர் இல்லைங்க..... சித்ரானே சொல்லுங்க.....நன்றி.)

    பதிலளிநீக்கு
  35. வாங்க சகோதரி, உங்கள் அனைவரின் சுகம் அறிய ஆவல். வருகையே அமர்களமாக உள்ளது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  36. வாங்கோ வாங்கோ. இனி அடிச்சி ஆட அள் வந்தாச்சிங்கோ கவியாட்டம் கலைகட்டும் நீரோடை நிரம்பட்டும்

    பதிலளிநீக்கு
  37. சாரதாவிஜயன் கூறியது...
    வருக வருகவே வருகவே எங்கள் கவியே மீண்டும் வருகவே.

    மனமார வரவேற்கிறேன் எனதன்பு மகளே எ
    எப்படி யிருந்தது பயணம்.
    உன்னை காணதுவிட்டது எனக்கு மனசங்கடதையே ஏற்படுத்தியது..//

    எனகும் மிகுந்த வருத்தம்மா உங்களையெல்லாம் சந்திக்கனுமென்றா ஆவல் இருந்தது ஆனால் காலம் குறைவென்பதால் சீக்கிரம் திரும்பும்படியாகிவிட்டது நிச்சயம் ஒருநாள் சந்திப்போம்

    //உன்னிடம் பேசியதையே பெருமையாக கருதுகிறேன்.
    என் அன்புமகளே உன் அன்புபயணம் கவியாய் கலையாய் இனிய பாதையில் தொடரட்டும் என்றும் எங்கள் ஆசிர்வாதம் உனக்கு இருக்கும்.//

    எனக்கும் அப்படித்தான் பேசியதே பெரும்மகிழ்ச்சி தங்களிடம் என்ன ஒரு மென்மையான குரல் தங்களுக்கு. அம்மாவின் பாசம் அப்படியே செவியில் இன்றும் இசைமீட்டுது.

    மிக்க நன்றீம்மா.தாங்களீன் பாசத்தின்முன்னே என் கவியெலாம் சும்மா...

    பதிலளிநீக்கு
  38. காஞ்சி முரளி கூறியது...
    ஏ.... எதுக்கு...! இப்படி...!

    ஜெயிலானிய இந்தமாதிரி பண்றீங்க...!

    அவரப்போட்டு பந்தாடுறீங்க...!

    வேற ஆளு கிடைக்கலையா.//

    ஏன் கிடைக்கலை உங்களையும் சேர்த்துதானே இதெல்லாம் .என்ன ஒன்னு ஐய்யா தி கிரேட்ட்ட்ட்ட்ட்ட் எஸ்கேப் அவ்வளவுதான்..

    பதிலளிநீக்கு
  39. Chitra கூறியது...
    வாங்க, வாங்க..... கவிதை மழையில் எங்களை மீண்டும் நனைக்க வாங்க......
    (பி.கு.: நான் டீச்சர் இல்லைங்க..... சித்ரானே சொல்லுங்க.....நன்றி.

    வந்துட்டோம் வந்துட்டோம்.
    பாத்து மேடம் மழையில் நனைஞ்சி சிரிப்புக்கு ச[ஜ]லதோஷம் பிடிச்சிடப்போகுது ஹி ஹி

    என்ன இருந்தாலும் எனக்கு நீங்க டீச்சர்தான் எம்பூட்டு சொல்லிக்கொடுதுருக்கீக சிரிப்புல.

    மிக்க நன்றி சித்ராமேம்..

    பதிலளிநீக்கு
  40. இளம் தூயவன் கூறியது...
    வாங்க சகோதரி, உங்கள் அனைவரின் சுகம் அறிய ஆவல். வருகையே அமர்களமாக உள்ளது. வாழ்த்துக்கள்.

    வாங்க சகோ எப்படியிருக்கீங்க.
    அனைவரும் மிகுந்த நலம்.
    அமர்களாப்படுத்திட்டாங்களா அமர்க்களப்படுத்துறேனா [சும்மா சும்மா]

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  41. சுதாகர் கூறியது...
    வாங்கோ வாங்கோ. இனி அடிச்சி ஆட அள் வந்தாச்சிங்கோ கவியாட்டம் கலைகட்டும் நீரோடை நிரம்பட்டும்.

    வாங்கண்ணா.வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.
    எப்போது நீங்க வலை ஆரம்பிச்சி அடிச்சி வீசப்போறீங்க கவியச்சொன்னேன்.

    அண்ணி சுகமா..

    பதிலளிநீக்கு
  42. /////ஏன் கிடைக்கலை உங்களையும் சேர்த்துதானே இதெல்லாம் .என்ன ஒன்னு ஐய்யா தி கிரேட்ட்ட்ட்ட்ட்ட் எஸ்கேப் அவ்வளவுதான்.. ////


    ஐயோ... ! நா இந்த ஆட்டத்துக்கே வரல...!
    பாவன்னு பாத்தா... என்ன இல்ல புடிச்சிரும் போலிருக்கு...

    நிஜமாலுமே நா எஸ்கேப்...!

    பதிலளிநீக்கு
  43. ஊர்ல தான் இருக்கிங்ஸ் :)

    பரவாயில்லை வேறு வாய்ப்பு கிட்டினால் சந்திக்கலாம் குடும்பத்தோடு இன்ஷா அல்லாஹ்

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது