நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நான்கு விதத் துளிகள்..


பசியோடு காத்திருக்குது
பக்கத்துவீட்டு வயிறு
பசிக்காமல் பசியாற
பந்தி பரத்து 
பணக்காரத் திமிறு....

விதவிதமா விளைக்குது
விவசாய நிலம்
விளைக்கும்
விவசாயிக்கு மட்டும்
வஞ்சகமில்லா பஞ்சம்...
                                                

பணமிருந்தும் பாவைக்கு
பஞ்சமானதே உடல்மறைக்கும்
பட்டாடை
பணமில்லா பேதைக்கு
பஞ்சமானதே உடல்மறைக்க
சிற்றாடை...

நெய்யுது ரகரகமாய்
நெசவாளரின் தறி
நொந்துபோகுது மனசு
 நெய்தவருக்கில்லையே
நூல்கழியாத் துணி...

டிஸ்கி// கிறுக்கள் என் சிந்தனையில் பட்டது.
படங்கள் கூகிளில் சுட்டது.


இப்படத்திக்கு அஹமது இர்ஷாத் எழுதியது


நேற்று காதலில் தோற்று
மனதை வைத்தோம் பூட்டி
இன்று வானில் சிறகடித்து
நிலவுக்கே போட்டி..

போட்டினதும்தானே இக்கவிதையே வந்தது. இல்லையா இர்ஷாத்.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

30 கருத்துகள்:

  1. நல்ல முரண் தொடை! அருமை!

    பதிலளிநீக்கு
  2. Software Engineer கூறியது...
    நல்ல முரண் தொடை! அருமை!//

    வாங்க இஞ்சினியர் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
    மிக்க நன்றி..
    தொடர்ந்து இணைந்திருங்கள்..

    பதிலளிநீக்கு
  3. சமூக சிந்தனை அள்ளி தெளிச்சு இருக்கீங்க

    பதிலளிநீக்கு
  4. எதிரும் புதிருமாய் இருக்கும் இரு துருவங்களை, உங்கள் கவிதைகளில் நேர்த்தியாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்...... பாராட்டுக்கள்!

    இர்ஷாத் கவிதையும் ரொம்ப நல்லா இருக்குது. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. எதிரும் புதிரும் குறுங்கவிதை எல்லாமே அருமை மலிக்கா அக்கா நீரோடை படம் பொருத்தமா இருக்கு...வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  6. இது கிறுக்கள் அல்ல
    உலகின் உண்மைகள்.

    பதிலளிநீக்கு
  7. நான்கு சிந்தனையுமே
    அற்புதம் மல்லிக்கா.

    பதிலளிநீக்கு
  8. நல்ல புகைப்பட கவிதை...வாழ்க்கையின் முரண்பாடுகள்...

    பதிலளிநீக்கு
  9. ப‌ட‌மும் அத‌ற்கேற்ற‌ க‌விதைக‌ளும் ந‌ல்லா இருக்கு... இந்த‌ முர‌ண்பாடுக‌ள் க‌ளைய‌ ப‌டுவ‌து எப்போது?......

    பதிலளிநீக்கு
  10. வழிப்போக்கன் கூறியது...
    சமூக சிந்தனை அள்ளி தெளிச்சு இருக்கீங்க.//

    வாங்க வழிப்போக்கன். தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணைப்பிலிருங்கள்..

    பதிலளிநீக்கு
  11. Chitra கூறியது...
    எதிரும் புதிருமாய் இருக்கும் இரு துருவங்களை, உங்கள் கவிதைகளில் நேர்த்தியாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்...... பாராட்டுக்கள்!

    இர்ஷாத் கவிதையும் ரொம்ப நல்லா இருக்குது. வாழ்த்துக்கள்.//

    பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சித்ரா மேடம் உங்கள் தொடர்வருகை மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது..

    பதிலளிநீக்கு
  12. ஜெய்லானி கூறியது...
    நல்ல கவிதை சுடச்சுட..!!.//

    நல்ல கவிதையா கவிதைகளா?.
    என்ன அண்ணாத்தே புரியலையே ஹி ஹி [மரமண்டைக்கெல்லாம் எங்கே புரிப்போகுன்னு முனுமுனுப்பதுபோல் கேட்குது..]

    பதிலளிநீக்கு
  13. அருமையான கவிதை மலிக்கா... வரிகள் பிரமாதம்...

    பதிலளிநீக்கு
  14. திருச்சி சையது சொன்னது…
    சமீபத்தில் அதிரை பள்ளியில்... ஒரு வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகை முடிந்து... உமர்தம்பி குறித்து உங்கள் முயற்சியை பாராட்டி ஊர்மக்கள் நோட்டீஸ் அச்சடித்து வழங்கியதும், பஞ்சாயத்தார் அதிரை தெரு ஒன்றிற்கு உமர்தம்பியின் பெயரை வைக்க இருப்பதும் கேள்விப்பட்டு மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி மல்லிகா அவர்களே!//

    மகிழ்ச்சிங்க மலிக்கா. உங்க ஊருக்கு உங்கலால பெருமைய சேர்த்துவிட்டீர்கள்.
    அனைவரும் வாழ்த்துங்கள்.

    நன்றிங்க சையது

    பதிலளிநீக்கு
  15. எதிரும் புதிரும் கவிதை எல்லாமே அருமை மலிக்கா.வாழ்த்துகள்... நீரோடை படமும் பொருத்தமா இருக்கு...வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  16. சலாம் மலிக்கா...அனைத்து கவிதைகளும் சூப்பர்ங்க...ரசித்து ரசித்து படித்தேன்....சமுதாய அவலங்க்ளை நாலே வரியில் நச்சுண்டு சொல்லியுருக்கீங்கே

    பதிலளிநீக்கு
  17. மிக அருமையான கவிதைகள் படத்திற்கேற்ப நெய்திருக்கிறீர்கள்

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. ////பணக்காரத் திமிறு....
    வஞ்சகமில்லா பஞ்சம்...
    நெய்தவருக்கில்லையே நூல்கழியாத் துணி....///

    புதிய வரிகள்.... எதுகை மோனையுடன்...

    ///உடல்மறைக்கும் பட்டாடை.....
    உடல்மறைக்க சிற்றாடை...///

    'ம்' என்ற எழுத்தையும்...
    'பட்டா' 'சிற்றா' என்ற வார்த்தைகளைக் கொண்டு
    கவிதையில் சித்து விளையாட்டா....! அருமை...!

    படங்களுக்கேற்ற அருமையான கவிதைகள்...

    சென்ற பதிவின் கவிதை மென்மை என்று சொன்னேன்... ஆனால்
    இந்த கவிதையில் "திமிறு" போன்ற கனல்கக்கும் வார்த்தைகள் கொண்ட கவிதை...

    நட்புடன்...
    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  19. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.

    அன்புள்ள சகோதர சகோதரிகளே
    ஒரு முக்கியவேண்டுகோள்.

    நாங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்
    என்று கூறிக்கொண்டு இஸ்லாத்திர்க்கு எதிராக
    ராஜன்+வால்பையன்
    இருவரும் நம் உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸால்)
    அவர்களை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள்ளால்
    விமர்ச்சனம் செய்துள்ளார்கள்.

    இவர்கள் நாகரிகமான முறையில் பதிவிட்டிருந்தால்
    நிச்சயமாக நாம் பதில் சொல்லகடமைப்பட்டிருக்கிரோம்.

    ஆர் எஸ் எஸ், பாஜக, விஸ்வஹிந்த் இவர்களைப்போன்று மகா மட்டமான
    வார்த்தைகளை உபயோகித்து இருக்கிரார்கள்.

    நீங்கள் உண்மையாணவர்களாக இருந்தால் இன்றுடன்
    ராஜன்+வால்பையன்மற்றும் அங்கு கூடி இருந்து கும்மி அடிக்கும் அனைவர்களது வலைப்பூவையும் நிராகரியுங்கள்.

    நான் கூறுவது சரியா தவரா?
    பதில் கூறவும்.
    வஸ்ஸலாம்.
    http://allinall2010.blogspot.com/2010/07/blog-post.html

    பதிலளிநீக்கு
  20. பசியோடு காத்திருக்குது
    பக்கத்துவீட்டு வயிறு
    பசிக்காமல் பசியாற
    பந்தி பரத்து
    பணக்காரத் திமிறு....
    ///


    best one

    பதிலளிநீக்கு
  21. seemangani கூறியது...
    எதிரும் புதிரும் குறுங்கவிதை எல்லாமே அருமை மலிக்கா அக்கா நீரோடை படம் பொருத்தமா இருக்கு...வாழ்த்துகள்...
    //
    ரொம்ப ரொம்ப சந்தோஷம் கனி மிக்க நன்றி..


    //ராஜவம்சம் கூறியது...
    இது கிறுக்கள் அல்ல
    உலகின் உண்மைகள்.//

    உண்மையின்னு சொன்ன கிறுக்கள் அப்படின்னுவாங்க அதான் கிறுக்கள்ன்னே.

    மிக்க நன்றி ராஜவம்சம்..

    பதிலளிநீக்கு
  22. ஹேமா கூறியது...
    நான்கு சிந்தனையுமே
    அற்புதம் மல்லிக்கா.

    மிக்க நன்றி தோழி..


    //ராசராசசோழன் கூறியது...
    நல்ல புகைப்பட கவிதை...வாழ்க்கையின் முரண்பாடுகள்.../

    மிக்கநன்றி ராசராசசோழன்..

    பதிலளிநீக்கு
  23. நாடோடி கூறியது...
    ப‌ட‌மும் அத‌ற்கேற்ற‌ க‌விதைக‌ளும் ந‌ல்லா இருக்கு... இந்த‌ முர‌ண்பாடுக‌ள் க‌ளைய‌ ப‌டுவ‌து எப்போது?....//

    மிக்க நன்றி ஸ்டீபன்.
    தெரியலையே நானும் உங்களைப்போல் எப்போதென எதிர்பார்த்தவளாய்...

    பதிலளிநீக்கு
  24. அஹமது இர்ஷாத் கூறியது...
    அருமையான கவிதை மலிக்கா... வரிகள் பிரமாதம்...//

    மிக்க நன்றி இர்ஷாத்


    சந்தோஷி கூறியது...
    திருச்சி சையது சொன்னது…
    சமீபத்தில் அதிரை பள்ளியில்... ஒரு வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகை முடிந்து... உமர்தம்பி குறித்து உங்கள் முயற்சியை பாராட்டி ஊர்மக்கள் நோட்டீஸ் அச்சடித்து வழங்கியதும், பஞ்சாயத்தார் அதிரை தெரு ஒன்றிற்கு உமர்தம்பியின் பெயரை வைக்க இருப்பதும் கேள்விப்பட்டு மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி மல்லிகா அவர்களே!//

    மகிழ்ச்சிங்க மலிக்கா. உங்க ஊருக்கு உங்கலால பெருமைய சேர்த்துவிட்டீர்கள்.
    அனைவரும் வாழ்த்துங்கள்.

    நன்றிங்க சையது.//

    மிக்க நன்றி சந்தோஷி. வாழ்த்துக்களுக்கு மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  25. அப்துல் கூறியது...
    எதிரும் புதிரும் கவிதை எல்லாமே அருமை மலிக்கா.வாழ்த்துகள்... நீரோடை படமும் பொருத்தமா இருக்கு...வாழ்த்துகள்...

    வாங்க வாங்க.மிக்க நன்றி அப்துல்..


    // Yasir கூறியது...
    சலாம் மலிக்கா...அனைத்து கவிதைகளும் சூப்பர்ங்க...ரசித்து ரசித்து படித்தேன்....சமுதாய அவலங்க்ளை நாலே வரியில் நச்சுண்டு சொல்லியுருக்கீங்கே.//

    வ அலைக்குமுஸ்ஸலாம்.காக்கா

    மிக்க நன்றி தாங்கள் கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  26. VELU.G கூறியது...
    மிக அருமையான கவிதைகள் படத்திற்கேற்ப நெய்திருக்கிறீர்கள்

    வாழ்த்துக்கள்.//

    வாங்க ஜி. மிக்க நன்றி தாங்களீன் கருத்துக்கு..

    //அக்பர் கூறியது...
    கவிதைகள் அருமை மலிக்கா.//

    மிக்க நன்றி அக்பர்..

    பதிலளிநீக்கு
  27. காஞ்சி முரளி கூறியது...
    ////பணக்காரத் திமிறு....
    வஞ்சகமில்லா பஞ்சம்...
    நெய்தவருக்கில்லையே நூல்கழியாத் துணி....///

    புதிய வரிகள்.... எதுகை மோனையுடன்....//

    புதுப்புது வரிகள் உண்டாவதே ஊக்கத்தினால்தான்.

    ///உடல்மறைக்கும் பட்டாடை.....
    உடல்மறைக்க சிற்றாடை...///

    'ம்' என்ற எழுத்தையும்...
    'பட்டா' 'சிற்றா' என்ற வார்த்தைகளைக் கொண்டு
    கவிதையில் சித்து விளையாட்டா....! அருமை...!

    படங்களுக்கேற்ற அருமையான கவிதைகள்... //

    ரொம்ப சந்தோஷம் சகோதரா.

    //சென்ற பதிவின் கவிதை மென்மை என்று சொன்னேன்... ஆனால்
    இந்த கவிதையில் "திமிறு" போன்ற கனல்கக்கும் வார்த்தைகள் கொண்ட கவிதை....//

    ஆக இது மென்மையல்ல முரணில் முரட்டு அப்படியா..

    நட்புடன்...
    காஞ்சி முரளி....//

    அன்பான கருத்துக்களுக்கு மிக்கநன்றி சகோதரரே!

    பதிலளிநீக்கு
  28. இறைவன். பிறரையோ பிறமதத்தைச்சார்ந்தவர்களையோ மனநோகடிக்கவோ. ஏசவோ வேண்டாம் என்கிறான். ஏனெனில் அது நம்மைநாமே இழிவுபடுத்திக்கொள்வதுபோலாகுமென ஆகையால்.

    நம்மால் பிறருக்கு எவ்வித மனநோகுதலில்லாமல் நடந்துக்கொள்வோம்.
    கையால் தடுக்கமுடியாத தீமை ஒன்றை மனதால் தடுத்துகொள்வோம்.

    இறைவன் நம் அனைவரையும்
    பாதுகாப்பானாக../

    மிக சரியாக சொல்லியுள்ளீர்கள் சகோ
    இதுதான் உங்களிடம் எனக்கு பிடித்ததே! நான் நிறைய தளங்களுக்கு போவது கிடையாது. ஏனெனில் எங்கும் மதம். அரசியல் சினிமா என ஆளாளுக்கு வருத்தெடுக்கிறார்கள்.
    மிக சிலரே கவியும் கட்டுரையும். சிந்தனையும் நகைச்சுவையும்.[நிஜாமின் நகைச்சுவைப்போல]
    இருக்கு ஆகவே மனிதனை மனிதனாய் பார்க்கும் மனங்கள் குறைந்துகொண்டே வருவதால். வலைப்பூ தொடங்கனும் என்றிருந்த ஆவலும் விட்டுபோகுது.

    நன்றி சகோதரி
    பாசமுடன் சகோதரன்
    முத்தையா..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது