என் இனிய பெற்றோர்களே! உங்களுக்குத்தான்!..
அனைத்து பெற்றோர்களும் அப்பாடா என பெருமூச்சுவிட்டு,
மீண்டும் ஓரு பெருமூச்சுவிட காத்திருக்கும் நேரம் தற்போது இல்லையா!. பெருமூச்சோடு சேர்ந்து சில பெற்றோர்களுக்கு பெரும்குடல் சிறுங்குடல் எல்லாம் சேர்ந்துவிடுவதுபோன்ற கலக்கமும் மனதில் இருக்கும்.
தேர்வுகள் முடிந்து தேர்ச்சிகளும் பெற்று அடுத்தது என்ன படிப்பது. எங்கு சேர்ப்பது. எந்த பள்ளி சிறந்தது. எந்த காலேஜ் சிறந்தது. அதுவும் ஹாஸ்டல் வசதியெப்படியிருக்கும். அதற்கு எவ்வளவு சிலவாகும் என மண்டையைக் குடையும் கேள்விகள் பலஎழுந்து எழுந்துஅடங்கும்.
இச்சமயத்தில்தான் மிக கவனமாக செயல்படவேண்டும்.
படிப்பு என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் மிக மிக முக்கியமானது. அதை சரியானநேரத்தில். சரியான விதத்தில். சரியாக தேர்வுசெய்து அவர்களுக்குத்தரவேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களின் மிகப்பெரிய கடமை. அவர்களின் எதிர்காலமே இப்படிப்பில்தான் இருக்கிறது என்பதை முதலில் அவர்களுக்கு உணர்த்துதல் மிக அவசியம். அப்புறம். அவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்கள் என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளவேண்டும்.
அவர்களின் விருப்பங்களைகேட்கவேண்டும்.
அவர்கள் எடுத்திருக்கும் முடிவும். தேர்வும். சரியானதாக இருக்கும் பட்சத்ததில் அவர்களின் விருப்பத்திற்கே படிக்க அனுமதிப்பது சிறந்தது. அல்லது அது சரியானதாக இல்லாதபட்சத்தில் எடுத்துச்சொல்லுங்கள். ஏன்? எதனால்? என்பதையும் சற்று விளக்கிச்சொல்லுங்கள். அத்தோடு குடும்ப சூழலையும் அவர்களுக்கு புரிவதுபோல் சொல்லுங்கள்
நம் குழந்தைகள்தான் அவர்களிடம் பக்குவமாக சொன்னால் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள். ரொம்ப கறாராக நடந்து. இவங்க என்னத்த சொல்வது நாம் என்ன கேட்பது என்ற மனநிலையை உருவாக்கிவிடாதீர்கள். நிதானம் அவர்களைவிட நமக்குதான் மிகமுக்கியம்.
அடுத்து தேர்ந்தெடுக்கும் பள்ளி மற்றும் கல்லூரி அதில் மிக கவனமாக இருங்கள். தரமான கல்லூரிகளாக! அதேசமயம் உங்கள் வசதிக்கு தகுந்தார்போல் தேர்ந்தெடுத்துச் சேருங்கள். அதற்குமீறி சேர்த்துவிட்டு பின்பு அவஸ்தைக்குள்ளாகாதீர்கள். இதனால் பாதிப்படைவது இருவருமே! நிறைய மார்க் வாங்கியும். வசதியில்லாத காரணத்தால் தரமான கல்லூரிகளில் சேர்க்கமுடியவில்லையா! தொண்டு நிறுவனங்களையும். கல்விக்காக உதவும் நல்லுள்ளங்களையும் தயங்காமல் நாடுங்கள். கல்விக்காக உதவ எத்தனையோ மனங்கள் காத்திருக்கு அவைகளை நல்வழிக்காக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
அடுத்து ஹாஸ்டல். ஹாஸ்டலில் தங்கிப்படிக்கவைப்பது தற்காலத்தில் பேஷனாகிவிட்டது.முதலில் ஹாஸ்டலில் தங்கிதான் படிக்கவேண்டுமா என்பதை முடிவுசெய்துகொள்ளுங்கள். ஏனெனில். ஹாஸ்டல் என்பது குழந்தைகளுக்கு நல்லன்பைதரக்கூடிய இடமாக இருக்குமா!
எல்லாம் ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையாவும். ஏதோ எதற்கோ படிக்கவந்துள்ளோம் என பொடுபோக்குதனமான படிப்பை படிக்குமிடமாகவும் தானேயிருக்கும். பிஞ்சுமனசு பயமறியாது.எவ்வித பயமில்லாமல் நாம் இங்கே எதைச்செய்தாலும் யார் கேட்கப்போகிறார்கள். எதையும் செய்துக்கொள்ளலாம் எங்கும் மனம்போனபோக்கில் போகலாம் என்ற எண்ணத்தை உருவாக்கிவிடுமே?
அங்கே அன்னையின் அன்போ, தந்தையின் அரவணைப்போ,
கிடையாது. கிடைக்காது. நினைக்கலாம் அதெல்லாம் பார்த்தா படிப்பு
எப்படி வருமென கண்டிப்போடு இருந்தால்தான் படிப்பு ஏறுமெனவும். தனிமைபடுதப்பட்டால் தன்னால் முன்னேறிவிடுவார்களெனவும் நினைப்பது சரியானதா!
அதுவும் சரிதான் என்றாலும் சிறுவதியேலேயே அதற்காக தனிமைபடுத்தும் சிறை அவசியமானதா! அங்கே கூட்டம் கூட்டமாக இருந்தாலும் மனதளவில் தனிமைச்சிறைதானே! தட்டிக்கேட்க ஆளில்லாமல். கட்டுக்கடங்காமல். [ஒருவார்டனை சமாளிப்பதா பெரியவிசயம்மென] எத்தனை எத்தனை தவறுகள்.
எத்தனை எத்தனை குற்றங்கள். பிஞ்சியிலேயே வெம்பி வெதும்பவிடவும் யார்காரணம். சில வேளை யாருக்காக ஓடாய் தேய்கிறார்களோ அவர்களே இல்லாமல் போய்விடுகிறார்களே இதெற்கெல்லாம் எது காரணம்! யார் காரணம்?
ஆனால் தற்காலத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் சென்றுவிடுவதால் குழந்தைகளை கவனிக்க வீட்டில் ஆளில்லாமல் இருக்கும் பட்சத்தில் ஹாஸ்டலில் விட்டுவிடுவதுமேல் என நினைப்பது சரி. அங்கே தன் குழந்தை எப்படியிருக்கு. எந்த மனநிலையில் இருக்கு என்று நிறைய பெற்றோர்கள் கண்டுகொள்வதில்லை. அவன் நல்ல நிலைக்கு வரவேண்டும். அதற்காகதானே நாங்களிருவரும் மாடாய் உழைக்கிறோம்.என்கிறார்கள். ஆனால் இவர்கள் இங்கு ஓடாய் தேய்வது பலநேரம் பலனற்றுப்போய்விடுகிறது. ஒரே ஒரு குழந்தை அதுவும் ஹாஸ்டலில் என்ன கொடுமை. அக்குழந்தை வளர்ந்து ஆளாகி எப்படி நம்மை கடைசி காலத்திலோ! அல்லது முடியாமல் போகும் நேரத்திலோ தம்மை வைத்துபார்ப்பார்களா?.
சின்னச்சிறிய வயதிலேயே நாம்தானே அவர்களுக்கு கற்றுக்கொடுகிறோம் தனிமையை! அதையேதான் அவர்களும் பிற்காலத்தில் விரும்புவார்கள். தான்மட்டும் தனியாக எந்த தொந்தரவுமில்லாமல் இருக்கவேண்டுமென்று, அதனால்தான் இன்று முதியோர்கள் இல்லம் களைகட்டிநிற்கிறது.
அவன் படித்து அவன் வாழ்க்கையை பார்த்துக்கொண்டால் போதும். என்ற மனநிலையை அவர்களுக்கு உருவாக்கிவிடாதீகள்.
அதையும் அவர்களெதிரிலேயே சொல்லாதீகள்.
நீ படித்து பெரியாளாகி. உன்னை நாங்கள்பார்த்துக்கொண்டதுபோல். எங்களையும் நீ பார்த்துக்கொள்ளவேண்டுமென அவர்களுக்கு அறிவுறுத்துங்கள் அப்போதுதான் அவர்களுக்கு நமக்கென்று குடும்பமிருக்கு, அதுவும் நம்மை நம்பியிருக்கு, என்று மனஉறுதியோடு படிக்கவும். அதனால் பின்பு நல்ல நிலைக்கும் வரமுடியும்.நம்மையும் வைத்து காக்கமுடியும். நீங்கள் நினைக்கலாம் அது நம்கடமையல்லவா அதற்கு கைமாறு எதிர்ப்பார்கலாமான்னு. இது கைமாறல்ல. அவர்களுக்கும் கடமையிருக்கு என்பதை உணர்த்துவதேயாகும்.
எதுவென்றபோதும் அனைவரும் அமர்ந்து கலந்து ஆலோசியுங்கள். முதலில் குழந்தைகளின் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். அவர்களின் போக்கில மாறுதல்கள் தெரியும் பட்சத்தில். கடிவாளத்தைப்போடுங்கள். நீங்கள் போடும் கடிவாளத்தை மிக கவனமாக போடுங்கள். அது அவர்களின் வாழ்க்கையென்னும் குரல்வளை நெறித்துவிடாதவாறும். அல்லது இவ்வாழ்க்கையிலிருந்தே அறுத்துக்கொண்டு ஓடிவிடாதாவாறும் இருக்கவேண்டும்.
உங்களின் எதிர்காலம் அவர்களின் எதிர்காலம் எல்லாமே நீங்கள் எடுக்கும் முடிவிலதான் இருக்கிறது. எடுக்கும் முடிவை நீங்கள் தவறாக எடுத்துவிட்டு கடைசியில் அவர்களை குற்றம் சொல்வதில் எவ்விதத்திலும் நியாயமேயில்லை! ஆகவே பெற்றோர்களே! உங்களின் தேர்வுகள். மிக தெளிவானதாகவும். அது. உங்கள் வம்சத்தையும் உங்களையும் பாதிக்காதவாறு தேர்வுசெய்யுங்கள் அதாவது.படிப்பைதந்துவிட்டு வாழ்க்கையை தொலைக்க வைத்துவிடாதீர்கள். அவர்களின் எதிர்காலம் என்பது அவர்களுடையை வாழ்க்கையையும் சேர்த்துதான்.
வாழ்க்கைக்கு கல்வி மிக மிக அவசியம்
அக்கல்வியை நெறியாக. முறையாக.
அமைத்துகொடுத்தலும் அமைத்துக்கொள்ளுதலும்.
மிக மிக மிக அவசியம்..
டிஸ்கி//இதில் நான் எதுவும் தவறாக சொல்லியிருந்தாலும். மனம்படும்படியான வார்த்தைகளிலிருந்தாலும் இறைவனுக்காக பொருந்திக்கொள்ளுங்கள்.
நீலவானில் ..
படிப்பு வேண்டும் படிப்பு வேண்டும்
பள்ளிப்படிப்பு படிக்கவேண்டும்
புகழ் வந்து சேர்த்த போதும்
பெரும் வசதிவாய்ப்பு வந்தபோதும்
படிப்பறிவு இல்லையென்றால்
பத்தாம் பசலியாகக் கூடும்
பணக்காரனும் படிக்கவேண்டும்
பாமரனும் படிக்கவேண்டும்
பள்ளிப்படிப்பு முடித்த பின்னே
பட்டப்படிப்பு தொடரவேண்டும்
படு புத்திசாலியாக வேண்டும்
வீட்டைகாக்க படிப்பு வேண்டும்
நாட்டைக்காக்க படிப்பு வேண்டும்
படிப்பை மட்டும் படித்துவிட்டால்
பல சோதனைகளை வெல்லக்கூடும்
பெரும் சாதனைகள் வந்து சேரும்.
சில்லென்ற காற்றில் கூட
சிறு சலசலப்பின் சத்தம் கேட்கும்
நீ படித்துவிட்டு பட்டம் பெற்றால்
நீலவானில் -உன் கால்கள் நடக்கும்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகளா!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Hai...!
பதிலளிநீக்குNanthan 1st.
Kanchi Murali
//அவன் படித்து அவன் வாழ்க்கையை பார்த்துக்கொண்டால் போதும். என்ற மனநிலையை அவர்களுக்கு உருவாக்கிவிடாதீகள்//
பதிலளிநீக்குஇப்படி தான் அனைவரும் அறிவுரை வழங்குகிறோம், தாங்கள் வித்யாசமாக சொல்லியிருப்பதும் அதன் காரணமும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே, நல்ல பகிர்வு.
காஞ்சி முரளி கூறியது...
பதிலளிநீக்குHai...!
Nanthan 1st.
Kanchi Murali
வருக வருக வந்தனம்.வந்தனம்.
கலந்தாலோசித்து - மஷூரா - இஸ்லாம் சொல்லும் வழி.
பதிலளிநீக்குநல்லா சொல்லியிருக்கிய தங்கச்சி.
SUFFIX கூறியது...
பதிலளிநீக்கு//அவன் படித்து அவன் வாழ்க்கையை பார்த்துக்கொண்டால் போதும். என்ற மனநிலையை அவர்களுக்கு உருவாக்கிவிடாதீகள்//
இப்படி தான் அனைவரும் அறிவுரை வழங்குகிறோம், தாங்கள் வித்யாசமாக சொல்லியிருப்பதும் அதன் காரணமும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே, நல்ல பகிர்வு//
சந்தோஷம் ஷபியண்ணா. இக்கருத்துக்கள் நான் கேட்டவைகள்.
பேராசிரியர் [பெரியார்தாசன்] அப்துல்லாஹ் அவர்கள் மிக தெள்ளதெளிவாக சொன்னார்கள் இங்க வந்திருந்தபொழுது.
நல்லவைகளை எடுத்துக்கொள்ளுதல் வேண்டுமல்லவா அதுதான் நான் கேட்டவைகளையுமிதோடு பகிர்ந்துள்ளேன்..
ஏங்க.... மலிக்கா மேடம்...
பதிலளிநீக்கு////வருக வருக வந்தனம்.வந்தனம்//// இதுமட்டுந்தானா...!
வட உண்டா...! இல்ல.. இன்னைக்கு சண்டேவாச்சே... பிரியாணி.. ஏதும் கிடையாதா....
காஞ்சி முரளி says:
பதிலளிநீக்கு6 ஜூன், 2010 10:03 am
ஏங்க.... மலிக்கா மேடம்...
////வருக வருக வந்தனம்.வந்தனம்//// இதுமட்டுந்தானா...!
வட உண்டா...! இல்ல.. இன்னைக்கு சண்டேவாச்சே... பிரியாணி.. ஏதும் கிடையாதா..../////
சார், சார் என்னையும் சேத்துக்கங்க, மேடம் ரெண்டு பிரியாணி பார்சல்
என்ன ஒரு தெளிவான கருத்து சபாஷ் மலிக்கா. மிக அருமையாய் சொல்லியிருக்கீங்க. ஒவ்வொரு பெற்றோரும் இதேபோல் உணர்ந்தால் எப்படியிருக்கும் பிள்ளைகளின் படிப்பும் பாதுகாப்பும் மிக முக்கிய்மென்பதை அழகாய் சொல்லிட்டீங்க, வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇந்த விசயத்தில் பெற்றோர்களுக்கு முதலில் தெளிவு வேண்டும்.. அருமையான கருத்துக்கள்..
பதிலளிநீக்குநானும் ஹாஸ்டல் வாழ்க்கையை அனுபவித்தல் என்ற முறையில் சொல்கிறேன், நீங்கள் சொல்வது 100% சரி. நான் படித்தது மேலாண்மை என்பதாலும், அந்த நேரத்தில் ஓரளவுக்கு மனமுதிர்ச்சி இருந்ததாலும் இறைவன் அருளால் நல்ல அனுபவங்கள் மட்டுமே கிட்டின.
பதிலளிநீக்குசின்ன வயசிலேயே பிள்ளைங்கள தனிமைப்படுத்துவது எனக்கு முற்றிலும் உடன்பாடில்லாத விஷயம். அழகா சொல்லிருக்கீங்க சகோதரி
Good Advise
பதிலளிநீக்குஏன்பா யாரது இங்கிட்டு வந்து பிரியாணீ கேக்குறது. மங்குனிக்கும் முரளிக்கும் நல்ல பசியோ..
பதிலளிநீக்குமலிக்கா உங்கள் ஒவ்வொரு பதிவும் மிக தெளீவாக இருக்கு நீங்க வக்கீலா?
நான் ஏற்கனவே ஒரு மெயில் அனுப்பினேன் என் பிரச்சனையைச்சொல்லி அதற்க்கு உங்கபதில் தேவை ப்லீஸ். எழ் வாழ்க்கையை தெளிவாக்க ஒரு முடிவு சொல்லுங்க. உங்க தோழியாய் கேட்கிறேன் ப்லீஸ்
//அவர்களும் பிற்காலத்தில் விரும்புவார்கள். தான்மட்டும் தனியாக எந்த தொந்தரமில்லாமல் இருக்கவேண்டுமென்று, அதனால்தான் இன்று முதியோர்கள் இல்லம் களைகட்டிநிற்கிறது//
பதிலளிநீக்குபெற்றோர்களுக்கு, தக்க நேரத்தில்
தகுந்த அறிவுரை!
நல்ல பதிவு....
பதிலளிநீக்குநீ படித்து பெரியாளாகி. உன்னை நாங்கள்பார்த்துக்கொண்டதுபோல். எங்களையும் நீ பார்த்துக்கொள்ளவேண்டுமென அவர்களுக்கு அறிவுறுத்துங்கள் அப்போதுதான் அவர்களுக்கு நமக்கென்று குடும்பமிருக்கு, அதுவும் நம்மை நம்பியிருக்கு, என்று மனஉறுதியோடு படிக்கவும். அதனால் பின்பு நல்ல நிலைக்கும் வரமுடியும்.நம்மையும் வைத்து காக்கமுடியும்.//
பதிலளிநீக்குமிக அருமையான சிந்தனை. பெரும்பாலானோர், "நீ படித்தால் நீ நன்றாக இருப்பாய்" என்று சுயநலவாதிகளாக பிள்ளைகளை மாற்றிவிடுகிறார்கள்.
நானும் 'எந்த படிப்பில் சேரலாம்்?' என்று எழுதிவுள்ளேன். நேரம் கிடைத்தால் படித்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும
http://amaithiappa.blogspot.com/2010/05/blog-post.html
நன்றி.
:-))
பதிலளிநீக்குஜெய்லானி கூறியது...
பதிலளிநீக்கு:-))
என்னாதிது...
Part - 2
பதிலளிநீக்குஅடுத்து...
///ஹாஸ்டலில் அன்னையின் அன்போ, தந்தையின் அரவணைப்போ கிடையாது. கிடைக்காது. நினைக்கலாம் அதெல்லாம் பார்த்தா படிப்பு எப்படி வருமென கண்டிப்போடு இருந்தால்தான் படிப்பு ஏறுமெனவும். தனிமைபடுதப்பட்டால் தன்னால் முன்னேறிவிடுவார்களெனவும் நினைப்பது சரியானதா!///
இந்த கருத்து முற்றிலும் சரியே...
நம் சமுதாயத்தில் மேல்நாட்டு கலாச்சார ஆதிக்கத்தின் விளைவாய்.... எப்போது... கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து... அன்பும், பாசமும், நேசமும் மறைந்து போய்.. தனிக் குடித்தனம் என்ற மனிதர்க்குரிய பாசம், அன்பு, நேசமில்லாமலே தனி மனிதனாய்... ஓர் விதத்தில் ஆதரவற்ற... அனாதைகளாய்... நடமாடும் சவங்களாய்... மனிதன் வாழ்க்கையை நடத்த முற்பட்டபோதே.. அவன் வாரிசுகளுக்கும் இந்த நிலைதான்... அவன் தன் மனைவி, பிள்ளைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை... பணம்... பணம் என பணம் பண்ணுவதிலேயே குறியாய் இருப்பதால்... பண்பு அவனை விட்டு அகன்றுவிட்டது... கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து வந்த அவன்.. மனைவி ஓர் பக்கமும், இவன் ஒரு பக்கமும் சம்பாதித்து.... பிள்ளைகளை உயர் கல்வியாம் மருத்துவம், பொறியியல் படிக்க வைக்க ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைக்கிறார்கள்.. இதனால்.. அவர்களுக்குள் உள்ள அன்பு, பாசம், நேசம் எல்லாம் மறந்து.. மரத்து போனபின் அவர்களின் பணமும்... இவர்களின் கல்வியும் இருந்தும்... மனிததிற்குரிய அன்பு, பாசம், நேசம் மரித்துப் போனபின் அவர்கள் மனிதர்களை இருந்தென்ன பயன்...
இறுதியாய்...
தேவையான நேரத்தில்...
மிகவும் தேவையான....
காலமறிந்து இந்த பதிவை வெளியிட்டுள்ளீர்கள்... அதற்கே ஓர் சபாஷ்...!
இப்பதிவும்... போட்டோக்களும்... கவிதையும்... அருமை..
நட்புடன்...
காஞ்சி முரளி...
நல்ல பதிவு....
பதிலளிநீக்குஆனால்.... தங்களின் பெரும்பாலான கருத்துக்களை நான் ஏற்றுக்கொண்டாலும்... ஒரு சில கருத்துக்களில் எனக்கு மாறுபாடும் உண்டு... உடன்பாடில்லை... இதோ.. தங்கள் பதிவில்...
/////படிப்பு என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் மிக மிக முக்கியமானது. அதை சரியானநேரத்தில். சரியான விதத்தில். சரியாக தேர்வுசெய்து அவர்களுக்குத்தரவேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களின் மிகப்பெரிய கடமை. அவர்களின் எதிர்காலமே இப்படிப்பில்தான் இருக்கிறது
என்பதை முதலில் அவர்களுக்கு உணர்த்துதல் மிக அவசியம்.////
இந்த வரிகளை அப்படியே ஆமோதிக்கிறேன்... மறுப்பின்றி... ஆனால்...
//// அப்புறம். அவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்கள் என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளவேண்டும். அவர்களின் விருப்பங்களைகேட்கவேண்டும்.////
இக்கருத்தில்தான் மாறுபடுகின்றேன்... ஏனெனில்... ஓர் ஏழை குழந்தை மருத்துவக் கல்வி பயில விரும்புகிறது அல்லது அடம்பிடிக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.. அந்த பெற்றோரின் கதி...!
ஓர் எடுத்துக்காட்டாய்... என் குழந்தை நான் டாக்டர் ஆக வேண்டும் என்ற தன் விருப்பத்தை ஓரிரு வருடங்களுக்கு முன்பே தெரிவித்தாள்... நான் சொன்னேன் "நம் வசதிக்கு அது இயலாது... இப்போதே சுமார் கால் கோடிக்கு மருத்துவ கல்வி கற்பிக்கப்படுகிறது... அதோடு மருத்துவ கல்வி ஐந்து வருடம்... இந்த ஐந்து வருடத்தில் சுமார் பத்து லட்சமாவது செலவாகும்... நம்மால் முடியாது... "முடவன் கொம்பு தேனுக்கு ஆசை படுவது போலாகிவிடும்" என சிறிய வயதிலேயே என் குழந்தையின் ஆழ்மனதில் பதியவிட்டேன்... இதன் விளைவு... என் குழந்தை எனது வாழ்க்கையை... யதார்த்த நிலையை உணர்ந்து கொண்டது... தாங்கள் என்ன சொல்கிறீர்களோ அதன்படி பயில்கிறேன் என்கிறது...
ஒன்றை நாம் அனைவரும் நினவில் கொள்ளவேண்டும்... இந்த காலத்தில் கல்வி ஓர் வர்த்தகமாய்... வியாபாரமாய்... ஆக்கப்பட்டுவிட்டது.. எந்த ஓர் கல்வி நிறுவனமும் சேவை செய்வதில்லை...
நான் கல்வி கற்கும் காலத்தில்... கல்வியை கற்பிப்பவன் குருவாய் இருந்தார்.. கல்வி நிறுவனங்களும் சேவை... தொண்டு செய்தது... கற்பவனும் ஆசிரியரை... "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்" என்ற சொல்படி கடவுளாய்.. குருவாய் நினைத்தான்...
இப்போது எங்கும் பிணம் தின்னும் ... மன்னிக்கவும்... பணம் பிடுங்கும் பேய்களாய் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. இந்நிலையில் தாங்கள் சொல்வதைப் போல ///அவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்கள் என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளவேண்டும். அவர்களின் விருப்பங்களைகேட்கவேண்டும்/// என்பதில் எனக்கு உடன்பாடில்லை... அவர்கள் விருப்பத்தை எப்படி பூர்த்தி செய்ய இயலும்...
தொடரும்....
/////சின்னச்சிறிய வயதிலேயே நாம்தானே அவர்களுக்கு கற்றுக்கொடுகிறோம் தனிமையை! அதையேதான் அவர்களும் பிற்காலத்தில் விரும்புவார்கள். தான்மட்டும் தனியாக எந்த தொந்தரவுமில்லாமல் இருக்கவேண்டுமென்று, அதனால்தான் இன்று முதியோர்கள் இல்லம் களைகட்டிநிற்கிறது. அவன் படித்து அவன் வாழ்க்கையை பார்த்துக்கொண்டால் போதும். என்ற மனநிலையை அவர்களுக்கு உருவாக்கிவிடாதீகள்../////
பதிலளிநீக்குஇது முற்றிலும் உண்மை... உண்மை... உண்மை.. சத்தியமான வரிகள்...
இவர்களே கூட்டுகுடும்பம் எனும் கூட்டிலிருந்து.. தனி கூடு கட்டி வாழும் தனிப் பறவைகள்தானே... பூனைக்கு பிறந்தது பூலியாகுமா என்ன? இவர்களும் நாளை முதியோர் இல்லத்தில்தான்...!
@@@ஜெய்லானி கூறியது...
பதிலளிநீக்கு:-))
என்னாதிது...//
மலீகாக்காவ் பெற்றோருக்கு அறிவுரை ஆச்சே!! நா ஒரு பச்ச கொயந்த மறந்துட்டீங்களா ? ஹி..ஹி...ஹா...ஹா...க்கி..க்கி..
சரியான தருணத்தில் அவசியமான கட்டுரை வெளியிட்டு இருக்கின்றீர்கள் மலிக்கா.
பதிலளிநீக்கு//// அப்புறம். அவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்கள் என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளவேண்டும். அவர்களின் விருப்பங்களைகேட்கவேண்டும்.////
பதிலளிநீக்குஇக்கருத்தில்தான் மாறுபடுகின்றேன்... ஏனெனில்... ஓர் ஏழை குழந்தை மருத்துவக் கல்வி பயில விரும்புகிறது அல்லது அடம்பிடிக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.. அந்த பெற்றோரின் கதி...!
ஓர் எடுத்துக்காட்டாய்... என் குழந்தை நான் டாக்டர் ஆக வேண்டும் என்ற தன் விருப்பத்தை ஓரிரு வருடங்களுக்கு முன்பே தெரிவித்தாள்... நான் சொன்னேன் "நம் வசதிக்கு அது இயலாது... இப்போதே சுமார் கால் கோடிக்கு மருத்துவ கல்வி கற்பிக்கப்படுகிறது... அதோடு மருத்துவ கல்வி ஐந்து வருடம்... இந்த ஐந்து வருடத்தில் சுமார் பத்து லட்சமாவது செலவாகும்... நம்மால் முடியாது... "முடவன் கொம்பு தேனுக்கு ஆசை படுவது போலாகிவிடும்" என சிறிய வயதிலேயே என் குழந்தையின் ஆழ்மனதில் பதியவிட்டேன்... இதன் விளைவு... என் குழந்தை எனது வாழ்க்கையை... யதார்த்த நிலையை உணர்ந்து கொண்டது... தாங்கள் என்ன சொல்கிறீர்களோ அதன்படி பயில்கிறேன் என்கிறது... //
அதற்க்குதான் முரளி இந்த பாராவை எழுதினேன்.
அவர்கள் எடுத்திருக்கும் முடிவும். தேர்வும். சரியானதாக இருக்கும் பட்சத்ததில் அவர்களின் விருப்பத்திற்கே படிக்க அனுமதிப்பது சிறந்தது. அல்லது அது சரியானதாக இல்லாதபட்சத்தில்[அப்படியென்றால் நம் தகுதிக்கு மீறியதாக இருப்பதாய் இருந்தால். எடுத்துச்சொல்லுங்கள். ஏன்? எதனால்? என்பதையும் சற்று விளக்கிச்சொல்லுங்கள். அத்தோடு குடும்ப சூழலையும் அவர்களுக்கு புரிவதுபோல் சொல்லுங்கள்
நம் குழந்தைகள்தான் அவர்களிடம் பக்குவமாக சொன்னால் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள். ரொம்ப கறாராக நடந்து. இவங்க என்னத்த சொல்வது நாம் என்ன கேட்பது என்ற மனநிலையை உருவாக்கிவிடாதீர்கள். நிதானம் அவர்களைவிட நமக்குதான் மிகமுக்கியம்..//
என்று எழுதியுள்ளேன் நம் விரலளவு நமக்குத்தெரியும் அதில் வரும் நகச்சுத்தி சிறியதாக இருந்தால் பொருத்துக்கொள்ளலாம் வலியை அதுவே விரலைத்தாண்டி தலையளவு போய்விட்டால் முடியுமா? அதே நிலைதான். நம்மால் எதுமுடியுமோ அதை செய்ய நினைப்போம் இல்லையா நம் குழந்தைகளிடம் எடுத்துச்சொன்னால் புரிந்துக்கொள்ளும் பிள்ளைகளுக்கே புத்திமதி. எந்த ஒன்றும் எடுதமாத்திரத்தில் சரிசெய்துவிடமுடியாது முரளி. கொஞ்சம் அவகாசமெடுக்கும். அதுவே சட்டென தங்கள் குழந்தைபோல் புரிந்துக்கொள்வதாக இருந்தால் நன்மை அக்குடும்பத்திற்கே. இல்லையா!
///ஒன்றை நாம் அனைவரும் நினவில் கொள்ளவேண்டும்... இந்த காலத்தில் கல்வி ஓர் வர்த்தகமாய்... வியாபாரமாய்... ஆக்கப்பட்டுவிட்டது.. எந்த ஓர் கல்வி நிறுவனமும் சேவை செய்வதில்லை...
நான் கல்வி கற்கும் காலத்தில்... கல்வியை கற்பிப்பவன் குருவாய் இருந்தார்.. கல்வி நிறுவனங்களும் சேவை... தொண்டு செய்தது... கற்பவனும் ஆசிரியரை... "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்" என்ற சொல்படி கடவுளாய்.. குருவாய் நினைத்தான்...
இப்போது எங்கும் பிணம் தின்னும் ... மன்னிக்கவும்... பணம் பிடுங்கும் பேய்களாய் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன.//
இதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். தற்போதைய சூழ்நிலையில் கல்வி வியாபாரநோக்கோடு செயல்படுவது உண்மையே! அதை நம்மால் என்ன செய்யமுடிகிறது. இருக்கும் பெற்றோர்கள் வாரி இரைத்துவிடுகிறார்கள்.
இல்லாதவர்கள். கல்விக்காக ஏதோ ஒண்டுகுடுத்தனத்தில் இருந்தபோதும். அதையும் விற்றுபடிக்கவைக்க முயல்கிறார்கள். இந்நிலை மாற என்ன செய்ய வேண்டும்? அதையார்? செய்யவேண்டும்.
செய்யக்கூடியவர்கள் நினைத்தால் செய்யலாம் ஆனால்????????????????
நினைக்கனுமே
இந்நிலையில் தாங்கள் சொல்வதைப் போல ///அவர்கள் என்ன படிக்க விரும்புகிறார்கள் என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளவேண்டும். அவர்களின் விருப்பங்களைகேட்கவேண்டும்/// என்பதில் எனக்கு உடன்பாடில்லை... அவர்கள் விருப்பத்தை எப்படி பூர்த்தி செய்ய இயலும்...
தொடரும்....///
நல்ல மதிபெண் எடுத்திருந்தால் முயற்சிசெய்து பார்க்கலாம். [முயன்றால் முடியாததில்லை என்பார்களே அதுபோல!]
அதற்குதான் அவர்களுக்கு உடலளவிலும்
மனதளவிலும் ஊக்கம் தரவேண்டும்.
அதைதவிர எனக்குச்சொல்லத்தெரியவில்லை முரளி.
தொடருமாஆஆஆஆஆ..
ஜெய்லானி கூறியது...
பதிலளிநீக்கு@@@ஜெய்லானி கூறியது...
:-))
என்னாதிது...//
மலீகாக்காவ் பெற்றோருக்கு அறிவுரை ஆச்சே!! நா ஒரு பச்ச கொயந்த மறந்துட்டீங்களா ? ஹி..ஹி...ஹா...ஹா...க்கி..க்கி..//
அதுசரி நான் வெளியில் சொல்லலை சொல்லலை. தாங்கள் இருகுழந்தைக்கு
தந்தையென்பதை எப்பவாவது யாரிடமாவது நான் சொல்லியிருகேனா.கேட்டுப்பாருங்க.
அன்பார்ந்தவர்களே நீங்களே சொல்லுங்க..
மச்சீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ அண்ணாத்தே சொன்னது கேட்டிச்சா. என்னானு கேட்டு ரெண்டு சாத்து சாத்துங்க..
//மச்சீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ அண்ணாத்தே சொன்னது கேட்டிச்சா. என்னானு கேட்டு ரெண்டு சாத்து சாத்துங்க..//
பதிலளிநீக்குஐயோ...இதுக்குதான் ஒரு ஸ்மைலி போட்டுட்டு ஓடினேன் . இப்பிடி கூப்பிட்டு வச்சி கும்மினா என்ன ஆவறது ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//அதுவும் சரிதான் என்றாலும் சிறுவதியேலேயே அதற்காக தனிமைபடுத்தும் சிறை அவசியமானதா! அங்கே கூட்டம் கூட்டமாக இருந்தாலும் மனதளவில் தனிமைச்சிறைதானே! தட்டிக்கேட்க ஆளில்லாமல். கட்டுக்கடங்காமல். [ஒருவார்டனை சமாளிப்பதா பெரியவிசயம்மென] எத்தனை எத்தனை தவறுகள்.//
பதிலளிநீக்குஅங்கு உடல் ஆரோக்கியம் என்பது சந்தேகமே உடல் நல்லா இருந்ததனே மணசு ஆரோக்கியமா இருக்கும் அவர்களின் செயல்கள் தடம் மாறுவதற்கும் நிறைய வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது...நல்ல பகிர்வு கா நன்றி...
நல்ல பதிவு.
பதிலளிநீக்குஒன்றை நாம் அனைவரும் நினவில் கொள்ளவேண்டும்... இந்த காலத்தில் கல்வி ஓர் வர்த்தகமாய்... வியாபாரமாய்... ஆக்கப்பட்டுவிட்டது.. எந்த ஓர் கல்வி நிறுவனமும் சேவை செய்வதில்லை...
பதிலளிநீக்குநான் கல்வி கற்கும் காலத்தில்... கல்வியை கற்பிப்பவன் குருவாய் இருந்தார்.. கல்வி நிறுவனங்களும் சேவை... தொண்டு செய்தது... கற்பவனும் ஆசிரியரை... "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்" என்ற சொல்படி கடவுளாய்.. குருவாய் நினைத்தான்...
இப்போது எங்கும் பிணம் தின்னும் ... மன்னிக்கவும்... பணம் பிடுங்கும் பேய்களாய் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன.//
முரளிக்கு ஒரு சபாஷ். தற்போது நடக்கும் அவலட்சனங்களைத்தான் பார்கிறோமே. என்ன கொடுமை கற்கும் கல்விக்கு கரவைமாடாய் பயன்படுதப்படுகிறார்கள் பெற்றோர்கள். இதை இந்த அரசு ஏன் கண்டுகொள்வதில்லை. அப்படியே அவர்கள் நடவடிக்கை எடுதபோதும் அதை தரமறுக்கும் கல்வி நிர்வாகம். சே என்ன உலகில் வாழ்கிறோம் என்று மனம் வெறுப்பாயிருக்கிறது.
காலத்திற்கேற்ற பதிவு. வித்தியாச சிந்தனை. எல்லாம் நிறைந்து இருக்கு.
இன்னும் இன்னும் நிறைய எதிர்பார்கிறேன்.
நட்புடன் ஜமால் கூறியது...
பதிலளிநீக்குகலந்தாலோசித்து - மஷூரா - இஸ்லாம் சொல்லும் வழி.
நல்லா சொல்லியிருக்கிய தங்கச்சி.//
மிக்க நன்றி ஜமால்காக்கா..
/காஞ்சி முரளி கூறியது...
பதிலளிநீக்குஏங்க.... மலிக்கா மேடம்...
////வருக வருக வந்தனம்.வந்தனம்//// இதுமட்டுந்தானா...!
வட உண்டா...! இல்ல.. இன்னைக்கு சண்டேவாச்சே... பிரியாணி.. ஏதும் கிடையாதா....//
எல்லாம் உண்டு அனைத்தையும் பூனைக்கூரியரில் அனுப்பியுள்ளேன் பெற்றுக்கொள்ளவும்..
மங்குனி அமைச்சர் கூறியது...
பதிலளிநீக்குகாஞ்சி முரளி says:
6 ஜூன், 2010 10:03 am
ஏங்க.... மலிக்கா மேடம்...
////வருக வருக வந்தனம்.வந்தனம்//// இதுமட்டுந்தானா...!
வட உண்டா...! இல்ல.. இன்னைக்கு சண்டேவாச்சே... பிரியாணி.. ஏதும் கிடையாதா..../////
/சார், சார் என்னையும் சேத்துக்கங்க, மேடம் ரெண்டு பிரியாணி பார்சல்/
அச்சோ பாவம் மங்குனி அமைச்சர் சார் சார்ன்னு என்னா கெஞ்சி கெஞ்சிறாங்கோ அமைச்சரே இப்படி ஆளாய் பறந்தா பின்னே மக்களின்பாடு அதோகதிதான்.
சரி சரி சொன்னதுபோல் அனுபிச்சாச்சி.
/சந்தோஷிமகா கூறியது...
பதிலளிநீக்குஎன்ன ஒரு தெளிவான கருத்து சபாஷ் மலிக்கா. மிக அருமையாய் சொல்லியிருக்கீங்க. ஒவ்வொரு பெற்றோரும் இதேபோல் உணர்ந்தால் எப்படியிருக்கும் பிள்ளைகளின் படிப்பும் பாதுகாப்பும் மிக முக்கிய்மென்பதை அழகாய் சொல்லிட்டீங்க, வாழ்த்துக்கள்/
அதனால்தான் மகா சொல்லிகிட்டுயிருக்கேன். அவங்க புரிஞ்சிகிட்டு பின்பு குழந்தைகளுக்கு புரியவச்சாங்கன்னா ரொம்ப நல்லாயிருக்கும்.. ரொம்ப சந்தோஷம் அதான் பெயரிலேயே இருக்கே. நன்றி மகா..
நாடோடி கூறியது...
பதிலளிநீக்குஇந்த விசயத்தில் பெற்றோர்களுக்கு முதலில் தெளிவு வேண்டும்.. அருமையான கருத்துக்கள்..//
ஆமாம் ஸ்டீபன், மிக்க நன்றி..
நாஸியா கூறியது...
பதிலளிநீக்குநானும் ஹாஸ்டல் வாழ்க்கையை அனுபவித்தல் என்ற முறையில் சொல்கிறேன், நீங்கள் சொல்வது 100% சரி. நான் படித்தது மேலாண்மை என்பதாலும், அந்த நேரத்தில் ஓரளவுக்கு மனமுதிர்ச்சி இருந்ததாலும் இறைவன் அருளால் நல்ல அனுபவங்கள் மட்டுமே கிட்டின.
சின்ன வயசிலேயே பிள்ளைங்கள தனிமைப்படுத்துவது எனக்கு முற்றிலும் உடன்பாடில்லாத விஷயம். அழகா சொல்லிருக்கீங்க சகோதரி..//
அனுபவித்தவங்களு அதன் ஆழம் புரியும் இல்லையா நாஸியா.அனுபவமில்லாத எனக்கே இப்படியிருக்குன்னா உங்களுக்கெல்லாம் எப்படியிருக்கும்.
சிலநேரத்தனிமை நிச்சயம் தவறை உண்டுபடுத்தும் அதை நாமே உருவாக்கிவிட வேண்டாமென்பதுதான் என் தாழ்மையான கருத்து..
மிக்க நன்றி சகோதரி..
செல்வி.. கூறியது...
பதிலளிநீக்குஏன்பா யாரது இங்கிட்டு வந்து பிரியாணீ கேக்குறது. மங்குனிக்கும் முரளிக்கும் நல்ல பசியோ..
மலிக்கா உங்கள் ஒவ்வொரு பதிவும் மிக தெளீவாக இருக்கு நீங்க வக்கீலா?//
அச்சோ அப்படியெல்லாம் ஒன்னுமில்லைமா நான் சும்மா ஒரு கிறுக்கச்சி அவ்வளவுதான். நமக்கு லா வெல்லாம் தெரியாது.
//நான் ஏற்கனவே ஒரு மெயில் அனுப்பினேன் என் பிரச்சனையைச்சொல்லி அதற்க்கு உங்கபதில் தேவை ப்லீஸ். எழ் வாழ்க்கையை தெளிவாக்க ஒரு முடிவு சொல்லுங்க. உங்க தோழியாய் கேட்கிறேன் ப்லீஸ்.//
பார்த்தேன் நீங்கமட்டுமல்ல இன்னும் சிலபேரும் நான் வக்கிலுன்னு நெனச்சிக்கிட்டாங்க அப்படியெல்லாம் ஒன்றுமேயில்லை. ஏதோ மனதுக்குள் ஓடும் எண்ணங்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்ளும் விதமாய் இங்கு கிறுக்கிதள்ளுகிறேன் அவ்வளவுதான்.
தாங்களின் மெயிலுக்கு இரண்டொருநாளில் பதில் அனுப்புகிறேன். என் அறிவுரகளை அப்படியே ஏற்கவேண்டுமென்பதல்ல. தாங்களுக்கென்று ஒரு முடிவு வைத்திருப்பீர்கள் அதோடு இதுவும் ஒத்துப்போனால நீங்கள் தாளாரமாக செயல்படலாம். ஓகேவா. விபரம் மெயிலில்.
மிக்க நன்றி செல்வி.;
அபுஅஃப்ஸர் கூறியது...
பதிலளிநீக்குGood Advise
மிக்க நன்றி அபு.
NIZAMUDEEN கூறியது...
//அவர்களும் பிற்காலத்தில் விரும்புவார்கள். தான்மட்டும் தனியாக எந்த தொந்தரமில்லாமல் இருக்கவேண்டுமென்று, அதனால்தான் இன்று முதியோர்கள் இல்லம் களைகட்டிநிற்கிறது//
பெற்றோர்களுக்கு, தக்க நேரத்தில்
தகுந்த அறிவுரை.//
வாங்கண்ணா. தாங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..
// அமைதி அப்பா கூறியது...
பதிலளிநீக்குநீ படித்து பெரியாளாகி. உன்னை நாங்கள்பார்த்துக்கொண்டதுபோல். எங்களையும் நீ பார்த்துக்கொள்ளவேண்டுமென அவர்களுக்கு அறிவுறுத்துங்கள் அப்போதுதான் அவர்களுக்கு நமக்கென்று குடும்பமிருக்கு, அதுவும் நம்மை நம்பியிருக்கு, என்று மனஉறுதியோடு படிக்கவும். அதனால் பின்பு நல்ல நிலைக்கும் வரமுடியும்.நம்மையும் வைத்து காக்கமுடியும்.//
மிக அருமையான சிந்தனை. பெரும்பாலானோர், "நீ படித்தால் நீ நன்றாக இருப்பாய்" என்று சுயநலவாதிகளாக பிள்ளைகளை மாற்றிவிடுகிறார்கள்.
நானும் 'எந்த படிப்பில் சேரலாம்்?' என்று எழுதிவுள்ளேன். நேரம் கிடைத்தால் படித்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும
http://amaithiappa.blogspot.com/2010/05/blog-post.html
நன்றி.//
வாங்க வாங்க அமைதி அப்பா. பெயரிலேயே அமைதிதெரியுதே!
தாங்களின் முதல் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி.
வந்துபார்த்தேன் தெளிவா எழுதியிருக்கீங்க வாழ்த்துக்கள்..
கண்ணகி கூறியது...
பதிலளிநீக்குநல்ல பதிவு....
வாங்க கண்ணகி. மிக்க நன்றி..
naan lateu
பதிலளிநீக்குஹய்.... புது டிசைன்....
பதிலளிநீக்குகாலையில இல்லையே...
நல்லா... அழகா... இருக்கு...!
நட்புடன்...
காஞ்சி முரளி....
காஞ்சி முரளி கூறியது...
பதிலளிநீக்குஹய்.... புது டிசைன்....
காலையில இல்லையே...
நல்லா... அழகா... இருக்கு...!
நட்புடன்...
காஞ்சி முரளி
இப்போதுதான் முரளி வைத்துக்கொண்டி இருக்கிறேன்.
ஆனால் முகப்பில் உள்ள வெல்கம். நம்மோடதாவுல இருக்கோனும் அதை எப்படி ரிமூ செய்வதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்கேன்..
அக்கா உங்கள் தளத்தை பார்வையிட்டேன். அந்த விளம்பரத்தை நீக்க நீங்கள் உங்களுடைய டெம்ப்ளேட்டை எனக்கு ஈமெயில் அனுப்பவும்.
பதிலளிநீக்குஏனென்றால் அந்த டெம்ப்ளேட்டின் கோடிங்கை பார்த்தால் தான் உங்களுக்கு விளக்கமாக நான் கூற முடியும்.
yamsasi2003@gmail.com - இந்த முகவரிக்கு அனுப்பவும்.
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குநல்ல பதிவு.
பதிலளிநீக்குபெற்றோர்,குழந்தைகள் இருவர் இடையிலும் பரஸ்பர புரிந்து கொள்ளுதல் அவசியம்.
சூப்பர் டெம்பிளேட் அசத்துறீங்க மல்லி.
பதிலளிநீக்குஉங்க எண்ணத்தைப்போல..
பதிவுக்கு பாராட்டுக்கள்..
காஞ்சி முரளி கூறியது...
பதிலளிநீக்குPart - 2
அடுத்து...
///ஹாஸ்டலில் அன்னையின் அன்போ, தந்தையின் அரவணைப்போ கிடையாது. கிடைக்காது. நினைக்கலாம் அதெல்லாம் பார்த்தா படிப்பு எப்படி வருமென கண்டிப்போடு இருந்தால்தான் படிப்பு ஏறுமெனவும். தனிமைபடுதப்பட்டால் தன்னால் முன்னேறிவிடுவார்களெனவும் நினைப்பது சரியானதா!///
இந்த கருத்து முற்றிலும் சரியே...
நம் சமுதாயத்தில் மேல்நாட்டு கலாச்சார ஆதிக்கத்தின் விளைவாய்.... எப்போது... கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து... அன்பும், பாசமும், நேசமும் மறைந்து போய்.. தனிக் குடித்தனம் என்ற மனிதர்க்குரிய பாசம், அன்பு, நேசமில்லாமலே தனி மனிதனாய்... ஓர் விதத்தில் ஆதரவற்ற... அனாதைகளாய்... நடமாடும் சவங்களாய்... மனிதன் வாழ்க்கையை நடத்த முற்பட்டபோதே.. அவன் வாரிசுகளுக்கும் இந்த நிலைதான்... அவன் தன் மனைவி, பிள்ளைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை... பணம்... பணம் என பணம் பண்ணுவதிலேயே குறியாய் இருப்பதால்... பண்பு அவனை விட்டு அகன்றுவிட்டது... கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து வந்த அவன்.. மனைவி ஓர் பக்கமும், இவன் ஒரு பக்கமும் சம்பாதித்து.... பிள்ளைகளை உயர் கல்வியாம் மருத்துவம், பொறியியல் படிக்க வைக்க ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைக்கிறார்கள்.. இதனால்.. அவர்களுக்குள் உள்ள அன்பு, பாசம், நேசம் எல்லாம் மறந்து.. மரத்து போனபின் அவர்களின் பணமும்... இவர்களின் கல்வியும் இருந்தும்... மனிததிற்குரிய அன்பு, பாசம், நேசம் மரித்துப் போனபின் அவர்கள் மனிதர்களை இருந்தென்ன பயன்...
இறுதியாய்...
தேவையான நேரத்தில்...
மிகவும் தேவையான....
காலமறிந்து இந்த பதிவை வெளியிட்டுள்ளீர்கள்... அதற்கே ஓர் சபாஷ்...!
இப்பதிவும்... போட்டோக்களும்... கவிதையும்... அருமை..
நட்புடன்...
காஞ்சி முரளி...//
தனிமையை விரும்பும் பறவைக்குக்கூட்டம் தன்னந்தனியாய் தவிக்கும்போதே கூடிவாழும் கூட்டைத்தேடும்.
கருத்துக்களீலேயே நிறைய விளக்கங்கள் சொல்லி என்னைவிட மற்றவர்களுக்கு அழகாய் புரியவைக்கும் தாங்களுக்கு சபாஷ்..
மிக்க நன்றி முரளி..
/////ஹய்.... புது டிசைன்....
பதிலளிநீக்குகாலையில இல்லையே...
நல்லா... அழகா... இருக்கு...!
நட்புடன்...
காஞ்சி முரளி//////
இந்த மேற்சொன்ன வரிகளை திரும்பப் பெற்று கொள்கிறேன்... வருத்தங்களுடன் ....
sorry...!
காஞ்சி முரளி...
ஆக்கங்கள் நல்லா இருக்கு என்பதனை சொல்லாமல் அனைவரும் அறிவர்
பதிலளிநீக்கு