நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஒரு சொட்டேனும் சேமியுங்கள்!


நீரில்லாத வாழ்க்கையேது
நீரில்லாது நீயுமேது

பிறப்புமுதல் இறப்புவரை
தொடர்ந்துவரும் நீரும் இது
இவ்வுலத்தையே சுற்றிவளைத்து
ஆட்சிசெய்யும் தண்ணீர் இது!

ஒருதுளி நீருக்குள்ளே
உருவாகும் உயிர்களிது
பத்துமாதம் பத்திரமாய்
பனிக்குடமென்னும் தண்ணீருக்குள்
உயிர்வாழுமது!

அழுதுகொண்டே பிறக்கும்போது
தண்ணீர் வரும் கண்ணீராக
அள்ளியணைத்து அன்னைதருவாள்
தன் நீரைக்கலந்த அமுதமாக!

நீரில்லாத வாழ்க்கையேது
நீரில்லாது நீயுமேது!

தேகம் கழுவ வேண்டும்தண்ணீர்
தேனீர் அருந்த வேண்டும்தண்ணீர்
பயிர்வளர்க்க வேண்டும்தண்ணீர
பசுமைக்கொஞ்ச வேண்டும்தண்ணீர்!

கொடும் பசியைக்கூட அடக்கிவிடும்
கொஞ்சம் தண்ணீர்
கொடும் பாவியையும் தவிக்கவிடும்
கொஞ்சம் தண்ணீர்!

நீரில்லாத வாழ்க்கையேது
நீரில்லாது நீயுமேது!

கடலோடு உறவாடி
தண்ணீரை
களவாடும் கருமேகங்கள்
பஞ்சம் விரித்தாடும் நேரத்தில்
கண்ணீரை துடைத்து
பசிபோக்கும் சிறுதூறல்கள்!

வான்மழை தண்ணீரை
தானம் தரும் நேரத்தில்
வரவேற்று வீட்டில் வைக்க
தொட்டிகட்டு
சொட்டு சொட்டாய் சேகரித்து
நிலத்தடியை குளிரூட்டு!

நீரில்லாத வாழ்க்கையேது
நீரில்லாது நீயுமேது!

உயிருக்கு உயிர்கொடுக்கும்
உன்னத தண்ணீரை
ஒருபோதும்
உயிர் நோகச்செய்யாதே
ஒவ்வாத மாசுகளை
நன்நீருக்குள் கலக்காதே!

ஐம்பூதங்களில் ஒன்றான தண்ணீரை
அளவுக்குமீறி அவதிகள் செய்யாதே
அவசியமில்லாமல் அத்துமீறி புழங்காதே
பத்திரமாய் பாதுகாத்து பதப்படுத்து
ஒரு சொட்டு
தண்ணீரேனும் சேகரித்து.....

[இணைய இதழ் தமிழ்குறிஞ்சியில் வெளியான என்கவிதை]
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

36 கருத்துகள்:

  1. நீரில்லாத வாழ்க்கையேது
    நீரில்லாது நீயுமேது!


    ...... True.

    இணைய இதழ் தமிழ்குறிஞ்சியில் வெளியான இந்த அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நீரை சேமிக்க நீரோடையில் நீர் இட்ட நீர் இடுக்கை கருத்துகள் நிரம்பி வழியுது...அருமை..மல்லி(கா)... வழிமொழிகிறேன்....

    பதிலளிநீக்கு
  3. நீரின் அவ‌சிய‌த்தை க‌விதை வ‌டிவில்... அருமை...

    பதிலளிநீக்கு
  4. //உயிருக்கு உயிர்கொடுக்கும்
    உன்னத தண்ணீரை
    ஒருபோதும்
    உயிர் நோகச்செய்யாதே//

    யோசிக்க வேண்டிய கேள்வி!!!

    பதிலளிநீக்கு
  5. நீரின் அவசியத்தை அழகாய்
    சொல்லிட்டீங்க!!
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. //ஒவ்வாத மாசுகளை
    நல்நீருக்குள் கலக்காதே//

    சிந்திப்பார்களா? நம் மனிதர்கள்
    தமிழ்குறிஞ்சியில் வெளியான இந்த அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. நிச்சயமாக சேமிப்போம் ....

    பதிலளிநீக்கு
  8. //தேகம் கழுவ வேண்டும்தண்ணீர்
    தேனீர் அருந்த வேண்டும்தண்ணீர்
    பயிர்வளர்க்க வேண்டும்தண்ணீர
    பசுமைக்கொஞ்ச வேண்டும்தண்ணீர்!//
    வரிகளில் கவிதைலயம் கொஞ்சுகின்றது.நீரின் மகத்துவத்தை அழகுற கவிதையில் சொல்லி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  9. உயிருக்கு உயிர்கொடுக்கும்
    உன்னத தண்ணீரை
    ஒருபோதும்
    உயிர் நோகச்செய்யாதே
    ஒவ்வாத மாசுகளை
    நல்நீருக்குள் கலக்காதே!//

    இதையெல்லம் புரிஞ்சா கலக்குவாங்கலா சாயப்படறைகளின் கழிவுநீர் மற்றும் சாக்கடைகளை நல்ல நீருக்குள் கலக்கிடுறாங்க அவங்களுக்கு புரியனும்.

    சூப்பருங்க நல்ல உரைக்கும்படி இன்னும் அழுத்தமாச்சொல்லுங்க
    நாங்கப்டும் கஷ்டம் எங்களுக்குதான் தெரியும்..

    பதிலளிநீக்கு
  10. நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. கண்டிப்பாக நீரை சேமிப்போம். கவிதை அழகு...

    பதிலளிநீக்கு
  12. ///நீரில்லாத வாழ்க்கையேது.... நீரில்லாது நீயுமேது!///

    முதல் இரு வரிகளிலேயே கவிதையின் theme சொல்லிவிட்டீர்கள்....

    அடுத்து...
    ///அழுதுகொண்டே பிறக்கும்போது தண்ணீர் வரும் கண்ணீராக
    அள்ளியணைத்து அன்னைதருவாள்.... தன் நீரைக்கலந்த அமுதமாக!////

    மிகச் சிறந்த வரிகள்...

    கடலோடு உறவாடி.... தண்ணீரை களவாடும் கருமேகங்கள்...
    பஞ்சம் விரித்தாடும் நேரத்தில்.... கண்ணீரை துடைத்து.... பசிபோக்கும் சிறுதூறல்கள்!////

    இவ்வரிகளில் முதல் வரியில் கடல் நீரை களவாடும் மேகங்கள்.. superb....
    அடுத்த வரிகளில் பஞ்சத்தைப் போக்கி, கண்ணீரை துடைக்கும் தூறல்கள்... touble super...


    ///வான்மழை தண்ணீரை.... தானம் தரும் நேரத்தில்... வரவேற்று வீட்டில் வைக்க
    தொட்டிகட்டு சொட்டு சொட்டாய் சேகரித்து நிலத்தடியை குளிரூட்டு!////

    மடமனிதர்களுக்கு நல்ல அறிவுரை... கவிதை வரிகளில்... தொலைநோக்குப் பார்வையில்....

    ///உயிருக்கு உயிர்கொடுக்கும்... உன்னத தண்ணீரை... ஒருபோதும்
    உயிர் நோகச்செய்யாதே////
    தண்ணீருக்கும் உயிருண்டென்றும்... அவ்வுயிரை நோகச் செய்யாதே என்ற அறிவுரையும் superb...

    இறுதியாய்...
    இக்கவிதை முழுதும்....
    இயற்கையை போற்றியும்...,
    இயற்கையுடன் இணைந்தும்...
    வாழ
    வழிகாட்டும்
    அழகான கவிதை...
    மிகச் சிறந்த கவிதை...

    வாழ்த்துக்கள்...

    நட்புடன்..
    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துக்கள் மலிக்கா. தெளிவான கருத்துக்கள் அழகான வார்த்தைகளில்!

    பதிலளிநீக்கு
  14. சிந்திக்கும் வரிகள்.. தண்ணீர் தேவை. சிக்கனமாய் இருப்போம்.

    வாழ்த்துகள் மலிக்கா அக்கா.., நீங்கள் குறிப்பிட்ட தொடர்பதிவு எழுதியுள்ளேன். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  15. இணைய இதழ் தமிழ்குறிஞ்சியில் தங்கள் கவிதை வெளியானதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மலிக்கா!
    ///அழுதுகொண்டே பிறக்கும்போது தண்ணீர் வரும் கண்ணீராக
    அள்ளியணைத்து அன்னைதருவாள்.... தன் நீரைக்கலந்த அமுதமாக!//// இது நான் வெகுவாக ரசித்த வரிகள்....
    மழைத்துளிகளாய் கவிதையெங்கும் கருத்துக்கள் முத்து முத்தாய் சிதறிக்கிடக்கின்றன!! வாழ்த்துக்கள்!!! தொடரட்டும்.....

    பதிலளிநீக்கு
  16. நடைமுறைக்கு தேவையான ஆலோசனை. நல்ல பதிவு.

    உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  17. //[இணைய இதழ் தமிழ்குறிஞ்சியில் வெளியான என்கவிதை]
    அன்புடன் மலிக்கா//



    எல்லா இதழ்லிலும் வர தகுதியுள்ள ஒரு தரமான, அவசியமான கவிதை , வாழ்த்துக்கள் மேடம்

    பதிலளிநீக்கு
  18. மலிக்கா.... இன்றுதான் வந்திருக்கிறேன்...
    உங்கள் வீட்டுக்கு ஒரு புதுவரவு... அது நானேதான்.
    கவிதை அருமை. அந்த மஞ்சள் குருவியும் பைப்பும் சூப்பர் படம்.

    பதிலளிநீக்கு
  19. ################
    உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி

    http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
    ################

    பதிலளிநீக்கு
  20. அருமை அருமை மலிக்கா.


    ஆனா இனி நீங்க என்னை பிரபான்னு கூப்பிட்டா ( அக்கா வேண்டாம் உங்கலவிட நான் வயதில் சின்னவல் என்று என்னுகிறோன் ) இந்த பக்கம் வருவேன். இல்லைனா வரமாட்டேன்.



    என் தளத்தில் பதில் இட்டதுக்கு மிக்க நன்றி மல்லிகா.

    பதிலளிநீக்கு
  21. மன்னார்குடி கூறியது...
    நிச்சயமாக.


    மிக்க நன்றி.மன்னார்குடி..

    //Chitra கூறியது...
    நீரில்லாத வாழ்க்கையேது
    நீரில்லாது நீயுமேது!


    ...... True.

    இணைய இதழ் தமிழ்குறிஞ்சியில் வெளியான இந்த அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.

    மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி. சித்ராமேடம்..

    பதிலளிநீக்கு
  22. seemangani கூறியது...
    நீரை சேமிக்க நீரோடையில் நீர் இட்ட நீர் இடுக்கை கருத்துகள் நிரம்பி வழியுது...அருமை..மல்லி(கா)... வழிமொழிகிறேன்....//


    மிகுந்த சந்தோஷம் மிக்க நன்றி.
    சீ[மாங்] கனி



    /நாடோடி கூறியது...
    நீரின் அவ‌சிய‌த்தை க‌விதை வ‌டிவில்... அருமை...//

    மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி. ஸ்டீபன்..





    துபாய் ராஜா கூறியது...
    அருமை.

    பதிலளிநீக்கு
  23. ஜெய்லானி கூறியது...
    //உயிருக்கு உயிர்கொடுக்கும்
    உன்னத தண்ணீரை
    ஒருபோதும்
    உயிர் நோகச்செய்யாதே//

    யோசிக்க வேண்டிய கேள்வி!!!

    யோசியிச்சிக்கிட்டேயிருந்தா எப்புடி. சீக்கிரம் யோசிங்க.


    சைவகொத்துப்பரோட்டா கூறியது...
    நீரின் அவசியத்தை அழகாய்
    சொல்லிட்டீங்க!!
    வாழ்த்துக்கள்..//


    வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி. சை கொ. ப.

    பதிலளிநீக்கு
  24. S Maharajan கூறியது...
    //ஒவ்வாத மாசுகளை
    நல்நீருக்குள் கலக்காதே//

    சிந்திப்பார்களா? நம் மனிதர்கள்
    தமிழ்குறிஞ்சியில் வெளியான இந்த அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.//


    வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி. மகராஜன்..




    mythees கூறியது...
    நிச்சயமாக சேமிப்போம் ....//

    மிக்க மகிழ்ச்சி... mythees

    பதிலளிநீக்கு
  25. ஸாதிகா கூறியது...
    //தேகம் கழுவ வேண்டும்தண்ணீர்
    தேனீர் அருந்த வேண்டும்தண்ணீர்
    பயிர்வளர்க்க வேண்டும்தண்ணீர
    பசுமைக்கொஞ்ச வேண்டும்தண்ணீர்!//
    வரிகளில் கவிதைலயம் கொஞ்சுகின்றது.நீரின் மகத்துவத்தை அழகுற கவிதையில் சொல்லி விட்டீர்கள்.

    மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி ஸாதிக்காக்கா...




    //சுப்பு கூறியது...
    உயிருக்கு உயிர்கொடுக்கும்
    உன்னத தண்ணீரை
    ஒருபோதும்
    உயிர் நோகச்செய்யாதே
    ஒவ்வாத மாசுகளை
    நல்நீருக்குள் கலக்காதே!//

    இதையெல்லம் புரிஞ்சா கலக்குவாங்கலா சாயப்படறைகளின் கழிவுநீர் மற்றும் சாக்கடைகளை நல்ல நீருக்குள் கலக்கிடுறாங்க அவங்களுக்கு புரியனும்.

    சூப்பருங்க நல்ல உரைக்கும்படி இன்னும் அழுத்தமாச்சொல்லுங்க
    நாங்கப்டும் கஷ்டம் எங்களுக்குதான் தெரியும்..//

    சுப்பு எத்தனை சொன்னாலும் பலருக்கு புரிவதேயில்லை சொல்லுவதை சொல்லிக்கொண்டேயிருப்போம் எப்போதாவது விழாமலாபோகும்
    மிக்க நன்றிமா.

    பதிலளிநீக்கு
  26. SUFFIX கூறியது...
    நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.//


    மிகுந்த சந்தோஷம் ஷஃபியண்ணா

    //அஹமது இர்ஷாத் கூறியது...
    கண்டிப்பாக நீரை சேமிப்போம். கவிதை அழகு...//

    அழகாய் ஒரு நன்றி இர்ஷாத்..

    பதிலளிநீக்கு
  27. Kanchi Murali கூறியது...
    ///நீரில்லாத வாழ்க்கையேது.... நீரில்லாது நீயுமேது!///

    முதல் இரு வரிகளிலேயே கவிதையின் theme சொல்லிவிட்டீர்கள்....

    அடுத்து...
    ///அழுதுகொண்டே பிறக்கும்போது தண்ணீர் வரும் கண்ணீராக
    அள்ளியணைத்து அன்னைதருவாள்.... தன் நீரைக்கலந்த அமுதமாக!////

    மிகச் சிறந்த வரிகள்...//

    மிக்க மகிழ்ச்சி..


    ///கடலோடு உறவாடி.... தண்ணீரை களவாடும் கருமேகங்கள்...
    பஞ்சம் விரித்தாடும் நேரத்தில்.... கண்ணீரை துடைத்து.... பசிபோக்கும் சிறுதூறல்கள்!////

    இவ்வரிகளில் முதல் வரியில் கடல் நீரை களவாடும் மேகங்கள்.. superb....
    அடுத்த வரிகளில் பஞ்சத்தைப் போக்கி, கண்ணீரை துடைக்கும் தூறல்கள்... touble super...//

    மிகுந்த touble சந்தோஷம்.


    ///வான்மழை தண்ணீரை.... தானம் தரும் நேரத்தில்... வரவேற்று வீட்டில் வைக்க
    தொட்டிகட்டு சொட்டு சொட்டாய் சேகரித்து நிலத்தடியை குளிரூட்டு!////

    மடமனிதர்களுக்கு நல்ல அறிவுரை... கவிதை வரிகளில்... தொலைநோக்குப் பார்வையில்....//

    சொல்லி என்ன லாபம் என்றாகிவிடாமல் இருந்தால் சரியே இல்லையா முரளி.

    ///உயிருக்கு உயிர்கொடுக்கும்... உன்னத தண்ணீரை... ஒருபோதும்
    உயிர் நோகச்செய்யாதே////
    தண்ணீருக்கும் உயிருண்டென்றும்... அவ்வுயிரை நோகச் செய்யாதே என்ற அறிவுரையும் superb...//

    மிக்க நன்றி..

    இறுதியாய்...
    இக்கவிதை முழுதும்....
    இயற்கையை போற்றியும்...,
    இயற்கையுடன் இணைந்தும்...
    வாழ
    வழிகாட்டும்
    அழகான கவிதை...
    மிகச் சிறந்த கவிதை...

    வாழ்த்துக்கள்...

    நட்புடன்..
    காஞ்சி முரளி....
    //

    வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி
    மிக்க நன்றி நன்றி

    பதிலளிநீக்கு
  28. ராமலக்ஷ்மி கூறியது...
    வாழ்த்துக்கள் மலிக்கா. தெளிவான கருத்துக்கள் அழகான வார்த்தைகளில்!//

    வாழ்த்துக்களுக்கு.மிக்க மகிழ்ச்சி
    மிக்க நன்றி ராமுமேடம்..




    //கண்ணா.. கூறியது...
    அருமையான பதிவு...//

    மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  29. மின்மினி கூறியது...
    சிந்திக்கும் வரிகள்.. தண்ணீர் தேவை. சிக்கனமாய் இருப்போம்.

    வாழ்த்துகள் மலிக்கா அக்கா.., நீங்கள் குறிப்பிட்ட தொடர்பதிவு எழுதியுள்ளேன். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    பார்த்துட்டேன் சூப்பர்.

    மிக்க நன்றி மின்மினி..




    //கவிதன் கூறியது...
    இணைய இதழ் தமிழ்குறிஞ்சியில் தங்கள் கவிதை வெளியானதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மலிக்கா!
    ///அழுதுகொண்டே பிறக்கும்போது தண்ணீர் வரும் கண்ணீராக
    அள்ளியணைத்து அன்னைதருவாள்.... தன் நீரைக்கலந்த அமுதமாக!//// இது நான் வெகுவாக ரசித்த வரிகள்....
    மழைத்துளிகளாய் கவிதையெங்கும் கருத்துக்கள் முத்து முத்தாய் சிதறிக்கிடக்கின்றன!! வாழ்த்துக்கள்!!! தொடரட்டும்.//

    மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு
    சந்தோஷம் கலந்தமகிழ்ச்சி,
    மிக்க நன்றி கவிதன்..

    பதிலளிநீக்கு
  30. punitha கூறியது...
    நடைமுறைக்கு தேவையான ஆலோசனை. நல்ல பதிவு.

    உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்//

    சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி
    மிக்க நன்றி புனிதா..

    பதிலளிநீக்கு
  31. மங்குனி அமைச்சர் கூறியது...
    //[இணைய இதழ் தமிழ்குறிஞ்சியில் வெளியான என்கவிதை]
    அன்புடன் மலிக்கா//



    எல்லா இதழ்லிலும் வர தகுதியுள்ள ஒரு தரமான, அவசியமான கவிதை , வாழ்த்துக்கள் மேடம்../

    வருக வருக
    மிக்க நன்றி மங்குனி அமைச்சரே!

    பதிலளிநீக்கு
  32. athira கூறியது...
    மலிக்கா.... இன்றுதான் வந்திருக்கிறேன்...
    உங்கள் வீட்டுக்கு ஒரு புதுவரவு... அது நானேதான்.
    கவிதை அருமை. அந்த மஞ்சள் குருவியும் பைப்பும் சூப்பர் படம்.//

    வருக வருக. அதிரா வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி.
    மஞ்சள்குருவி அனுப்பியுள்ளேன் பாருங்கள். பறந்து வந்ததும் சொல்லுங்கள்..என்ன சேதி சொன்னதென்று..




    //ஜெய்லானி கூறியது...
    ################
    உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி

    http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
    ################//

    எடுத்து வந்து நீரோடையில் மிதக்கவிட்டாச்சில்ல ..நன்றிங்கண்ணா

    பதிலளிநீக்கு
  33. prabhadamu கூறியது...
    அருமை அருமை மலிக்கா.


    ஆனா இனி நீங்க என்னை பிரபான்னு கூப்பிட்டா ( அக்கா வேண்டாம் உங்கலவிட நான் வயதில் சின்னவல் என்று என்னுகிறோன் ) இந்த பக்கம் வருவேன். இல்லைனா வரமாட்டேன். //

    அச்சோ அப்படியெல்லாம் சொல்லாதீங்கக்கா. பச்சபுள்ளைய இப்புடியா மிரட்டுவது பாவம் பயந்துபோயிட்டேன்.
    இனி அக்கனெல்லாம் சொல்லமாட்டேன் ஓகேவா அக்கா[இது சும்மா]

    பிரபா பிரபா பிரபா. கூப்பிட்டது காதில் விழுதா. மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..



    //என் தளத்தில் பதில் இட்டதுக்கு மிக்க நன்றி மல்லிகா//

    மிக்க சந்தோசம்..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது