நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

புகை படிந்த பூக்கள்!விசால மண்ணில் விசித்திரப்பூக்கள்
விரகதாபத்தால் விஷம் தோய்க்கும்பூக்கள்

வெண்ணிறமாய் வேடம்தரித்து
வேஷமிடும் பூக்கள்
வேதனையில் வெந்துசாகும்
விபச்சாரப் பூக்கள்

புகைபடிந்து புகைப்படிந்து
பூத்துக்குலுங்கும் பூக்கள்
புன்னகையை கடன்வாங்கி
பூட்டுப்போடும் பூக்கள்

எஞ்சி மிஞ்சியதை
எடுத்துக்கொடுக்கும் பூக்கள்
எயிட்ஸையும் அள்ளிதரும்
எச்சில் பூக்கள்

ஏஞ்சலென ஆடிவரும்
எந்திரப் பூக்கள் -அதை
ஏக்கத்துடன் தேடிப்போகும்
ஏராளமான வண்டுகள்

புகை படிந்த பூக்களென்றாலும்
பூந்தென்றல் தாலாட்டும்
படிந்த புகையும்
பொலபொலவென கீழ்கொட்டும்

பூத்துச்சிணுங்கும் பூக்களாய்
புன்னகைத்து வாழ்ந்தாலும்
ஒருபோதும் இவர்களுக்கில்லை
புண்ணியங்கள் எந்நாளும்...

2

பூவே!
உன்மீது புகைபடிய வைத்த
காற்றை
கைது செய்யச்சொல்லி
என்காதலனை அனுப்பியுள்ளேன்


கலங்காதே
புகைபடிந்த உன்மீது
என்சுவாசத்தின்
ஸ்பரிசம் பட்டதும்
புத்தம் புதிதாய் பூத்துச்சிரிப்பாய்..[டிஸ்கி: இந்த தலைப்பு என்னுடயதல்ல!
காஞ்சி முரளியுடையது.
அவர்கள் எழுதிய ஒரு கவிதைத்தலைப்பில்
நாமும் எழுதிப்பார்ப்போமேன்னு.
மிக்க நன்றி முரளி.]


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

38 கருத்துகள்:

 1. thankyou...

  nanrigal..

  "நீரோடை" புதிய போட்டோ சூப்பர்....
  இது... இதுதான்... உண்மையான "நீரோடை"..

  'ஹிகூ'வில்

  ஹய்...
  நீரோடையில் - ஓர்
  "நீரோடை"....

  நாங்களும் கவிஞர்தானுங்கோ.... (அப்படின்னு நீங்கதானே சொன்னீங்க...)

  நட்புடன்...
  காஞ்சி முரளி...

  பதிலளிநீக்கு
 2. //பூவே!
  உன்மீது புகைபடிய வைத்த
  காற்றை கைது செய்யச்சொல்லி
  என்காதலனை அனுப்பியுள்ளேன்//

  இது "கருணை" கவிதை

  பதிலளிநீக்கு
 3. //
  பூவே!
  உன்மீது புகைபடிய வைத்த
  காற்றை
  கைது செய்யச்சொல்லி
  என்காதலனை அனுப்பியுள்ளேன்//

  அடடா!! என்னா ஆசை! என்னா ஆசை!! வேற யாரும் கிடைக்கலயா ?

  பதிலளிநீக்கு
 4. துள்ளி குதித்தோடும் நீரோடை (படம்) ஏன் தெளிந்த ஆறானது.!

  காட்டாறாக உருவாக என்னமோ!!இல்லை !!

  வரும் காலங்களில் பொங்கும் கடலாக மாற விருப்பமோ!!

  பதிலளிநீக்கு
 5. /எஞ்சி மிஞ்சியதை
  எடுத்துக்கொடுக்கும் பூக்கள்
  எயிட்ஸையும் அள்ளிதரும்
  எச்சில்ப்பூக்கள்//

  இதுபோல் அலையும் பெண்களிடம் தேடிசென்று வாங்கிகொல்கிறார்கள் மரணத்தை அதுவும் கொடும் மரணத்தை..

  சில ஐடங்களில் அரசாங்க அனுமதியுடன்வேறு நட்க்கு இந்த அசிங்கங்கள்..

  சூப்பர் கவிதைமா.
  நல்ல வரிகளீல் செதுக்கியுள்ளாய் நீண்டநாளூக்கு பின் உன் அம்மா

  மற்றபதிவுகளையும் படிச்சிசொல்கிறேன் அபா மிக விசாரித்தார்..

  பதிலளிநீக்கு
 6. முதலில் நன்றிகள் பலப்பல....

  ஏன்னா..! வலைதளத்திலும் என் கவிதை வரி (ஒரே ஒரு வரியாய் இருந்தாலும் )... அதுவும் ஓர் தலைப்பாய்.. அதற்குதான்...

  டிஸ்கியில் எனக்கு நன்றி தெரிவித்திருக்கக்கூடாது...
  நன்றி சொல்லவேண்டியவன் நான்தான்...

  எந்த தலைப்பை கொடுத்தாலும் உடன் கவி எழுதும் ஆற்றல் உள்ளவன்தான் கவிஞன் எனப்படுபவன்'... தங்களுக்கு கவிதை தலைப்பு கிடைத்த சில மணிநேரத்திலே இப்படி ஓர் சமூக சிந்தனையுடன் ஓர் கவிதை... மற்றொன்று அழகான காதல் கவிதை...

  தங்கள் கவித்திறனுக்கு வாழ்த்துக்கள்...

  //விரகதாபத்தில் விஷம் தோய்க்கும் பூக்கள்//
  /வெந்துசாகும் விபச்சாரப் பூக்கள்//
  /புகைபடிந்து புகைப்படிந்து பூத்துக்குலுங்கும் பூக்கள்//
  //எயிட்ஸையும் அள்ளிதரும் எச்சில் பூக்கள்//
  //எந்திரப் பூக்கள்//
  //புகை படிந்த பூக்களென்றாலும் பூந்தென்றல் தாலாட்டும்//
  // இவர்களுக்கில்லை புண்ணியங்கள் எந்நாளும்...//

  மேற்சொன்ன ஒவ்வோர் வரிக்கும் கருத்துக்கள் தெரிவிக்கலாம்... அப்புறம் பின்னூட்டமே ஓர் இடுகையாகிவிடும்...

  மேலே நான் குறிப்பிட்டுள்ள வரிகளை படித்தாலே (புதிய வரிகள்) தங்கள் திறமை விளங்கும்.. அதோடு துணிந்து ஒரு dry subject எடுத்து அதை சிறந்த, புதிய வார்த்தைகளால் வடித்த இந்த கவிதை.. சூப்பரோ சூப்பர்...!

  அடுத்து....

  //பூவே! உன்மீது புகைபடிய வைத்த காற்றை கைது செய்யச்சொல்லி என்காதலனை அனுப்பியுள்ளேன்///
  //கலங்காதே....புகைபடிந்த உன்மீது.. என்சுவாசத்தின் ஸ்பரிசம் பட்டதும் புத்தம் புதிதாய் பூத்துச்சிரிப்பாய்..///

  இரெண்டே வரிகளில்... அழகான காதல் கவிதையா?
  ஆமாம்! 'சுவாசத்தின் ஸ்பரிசம் (அதாவது தொடுதல்) '....அது எப்படியிருக்கும்... சுவாசத்திற்கு கைகள் இல்லையே கவிஞரே?
  "மாலைவேளையில் ஊட்டிமலையின் உயர்ந்த சிகரத்தில் நிற்கும்போது நம்மீது தவழும் சில்லென்ற காற்றின் சுகம்" இந்த வரிகளில்...

  இறுதியாய்...
  "புகை படிந்த பூக்கள்..!" தலைப்பு சூப்பெரோ சூப்பர் (சும்மாங்காட்டியும்.....! காக்கைக்கு தன் குஞ்சு 'பொன் குஞ்சு' அல்லவா..! கவிஞரே...!)

  புதிய வார்த்தைகளால் வடித்த நல்சமூகசிந்தனை கொண்ட -
  'கைது செய்யச்சொல்லி காதலனை' அனுப்பிய அழகான காதலுடன்கூடிய அருமையான கவிதை...

  கவிஞர் மலிக்காவுக்கு வாழ்த்துக்கள்...

  மீண்டும் பலப்பல நன்றியுடன்.... (எப்பவும் சொல்லிக்கிட்டேயிருப்போமுள்ள....)

  நட்புடன்...
  காஞ்சி முரளி.....

  பதிலளிநீக்கு
 7. "புகை படிந்த பூக்கள்" என்ற தலைப்பு மட்டுமே என் எண்ணத்தில் உருவான பாறை என்று வைத்துக்கொண்டால்...

  அப்பாறையில் தன் சிந்தனைச் செலுத்தி,
  காண்போர் வியந்து பாராட்டும் வண்ணம், கஷ்டப்பட்டு அழகிய (கவிதை) சிலையை வடித்த மலிக்கா என்ற சிற்பிக்குத்தான்
  இந்த முரளி என்ற பாறை நன்றி சொல்லவேண்டுமே தவிர...

  சிற்பி அந்தப் பாறைக்கு நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை...

  அதோடு, 'பூ' வெனும் வரிகளால்
  'பூமாலை' எனும் கவிதை எழுதி, அது"நீரோடை"யில் வெளிவந்தால்,
  மகிழ்ச்சி அடைபவர்களில் முதலாமவன் 'நார்' எனும் நான் மட்டுமே...!
  காரணம் பூவோடு சேர்ந்து இந்த நாரும் மணக்கும்...

  ஏனெனில் என் தலைப்பில் "வலைதள கவிஞர் மலிக்கா" கவிதை எழுதுவதென்பதைவிட ஓர் சிறப்பு, ஓர் மகிழ்ச்சி,ஓர் அங்கீகாரம் என் எழுத்துக்களுக்கு கிடைக்காது...

  அதனால் டிஸ்கியில் எனக்கு சொன்ன நன்றியை தயவுசெய்து "திரும்ப" பெறுக என நட்புடன் வேண்டுகிறேன்...

  நட்புடன்...
  காஞ்சி முரளி....

  பதிலளிநீக்கு
 8. விதி வசப்பட்ட விசித்திர பூக்கள் வித்யாசமாய் வீசப்பட்ட
  (க)விதை...அருமை மல்லி(கா)...

  பதிலளிநீக்கு
 9. விசால மண்ணில் விசித்திரப்பூக்கள்
  விரகதாபத்தால் விஷம் தோய்க்கும்பூக்கள்

  வெண்ணிறமாய் வேடம்தரித்து
  வேஷமிடும் பூக்கள்
  வேதனையில் வெந்துசாகும்
  விபச்சாரப் பூக்கள்//

  என்ன அருமையாக எழுதியிருக்கீங்க.
  தன்னையேவிற்று உயிர்வாழும் ஜென்மங்களுக்கு. இதை தெரிவித்தால் தேவலை.

  வாழ்த்துக்கள் மலிக்கா

  பதிலளிநீக்கு
 10. பு/கை படிந்த பூக்களென்றாலும்
  பூந்தென்றல் தாலாட்டும்
  படிந்த புகையும்
  பொலபொலவென கீழ்கொட்டும்/

  தலைப்பு யாருடையாகயிருந்தாலும் அதாற்குதகுந்தாற்போல் எழுத எங்கிருந்து கற்றீர்கள் மிக அருமை.

  தலைப்புதந்தவருக்கும் அதை கவிதைகடலாய் மாற்றிய தாங்களுக்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 11. ஒரு தலைப்பு, உங்களின் மனம் தொட்டு வந்த போது கவிதை பூக்களாய் வந்துள்ளது. பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 12. கலங்காதே
  புகைபடிந்த உன்மீது
  என்சுவாசத்தின்
  ஸ்பரிசம் பட்டதும்
  புத்தம் புதிதாய் பூத்துச்சிரிப்பாய்//

  mika arumai enna azakaay thoduththu irukkiiraay
  super super super

  பதிலளிநீக்கு
 13. எந்தலைப்பை கொடுத்தாலும் உடனடிக்கவிதை ஆச்சர்யம் ஆக எத்தனை அழகாய் அருமையாய் வரிகளில் விளையாடியிருக்கிறாய்
  உனக்குள் கவிகுடியிருக்கு மல்லி.
  சூப்பர்ப் வெகு அருமை.

  பதிலளிநீக்கு
 14. மலிக்காவிடம் இருந்து கவிதை நீரோடையாக கொட்டுதே.சூப்பர்.

  பதிலளிநீக்கு
 15. //எஞ்சி மிஞ்சியதை
  எடுத்துக்கொடுக்கும் பூக்கள்
  எயிட்ஸையும் அள்ளிதரும்
  எச்சில் பூக்கள்//

  கொடுமை மேடம்

  பதிலளிநீக்கு
 16. //கலங்காதே
  புகைபடிந்த உன்மீது
  என்சுவாசத்தின்
  ஸ்பரிசம் பட்டதும்
  புத்தம் புதிதாய் பூத்துச்சிரிப்பாய்//

  க‌விதை ந‌ல்லா இருக்கு...

  பதிலளிநீக்கு
 17. Kanchi Murali கூறியது...
  thankyou...

  nanrigal..

  "நீரோடை" புதிய போட்டோ சூப்பர்....
  இது... இதுதான்... உண்மையான "நீரோடை"..

  'ஹிகூ'வில்

  ஹய்...
  நீரோடையில் - ஓர்
  "நீரோடை"....

  நாங்களும் கவிஞர்தானுங்கோ.... (அப்படின்னு நீங்கதானே சொன்னீங்க...)

  நட்புடன்...
  காஞ்சி முரளி..

  கவிஞர் காஞ்சி முரளிஅவர்களே.

  ஹை நீரோடையில் ஒரு நீரோடை ஹைகூ சூப்பர்..

  நாங்கதான் சொல்லிட்டோமுல்ல நீங்க கவிஞர்ன்னு..

  பதிலளிநீக்கு
 18. S Maharajan கூறியது...
  //பூவே!
  உன்மீது புகைபடிய வைத்த
  காற்றை கைது செய்யச்சொல்லி
  என்காதலனை அனுப்பியுள்ளேன்//

  இது "கருணை" கவிதை//

  பூமீது கொண்ட காதலால் ஏற்ப்பட்ட கருணை இல்லையா மகராஜன். நன்றிங்க..

  பதிலளிநீக்கு
 19. ஜெய்லானி கூறியது...
  //
  பூவே!
  உன்மீது புகைபடிய வைத்த
  காற்றை
  கைது செய்யச்சொல்லி
  என்காதலனை அனுப்பியுள்ளேன்//

  /அடடா!! என்னா ஆசை! என்னா ஆசை!! வேற யாரும் கிடைக்கலயா/

  ஆசை யாரத்தான் விட்டிச்சி என்னைய விட
  ஏன் ஜெய்லானி எங்க மச்சானப்புடிக்கலையா உங்களுக்கு. ரொம்ப நல்லவருங்கங்கோ.

  பதிலளிநீக்கு
 20. சாரதாவிஜயன் கூறியது...
  /எஞ்சி மிஞ்சியதை
  எடுத்துக்கொடுக்கும் பூக்கள்
  எயிட்ஸையும் அள்ளிதரும்
  எச்சில்ப்பூக்கள்//

  இதுபோல் அலையும் பெண்களிடம் தேடிசென்று வாங்கிகொல்கிறார்கள் மரணத்தை அதுவும் கொடும் மரணத்தை..

  சில ஐடங்களில் அரசாங்க அனுமதியுடன்வேறு நட்க்கு இந்த அசிங்கங்கள்..

  சூப்பர் கவிதைமா.
  நல்ல வரிகளீல் செதுக்கியுள்ளாய் நீண்டநாளூக்கு பின் உன் அம்மா

  மற்றபதிவுகளையும் படிச்சிசொல்கிறேன் அபா மிக விசாரித்தார்..//

  ஏம்மா இத்தனைநாள் வரலை. அப்பா நலமா?

  உங்க கருத்து எனக்கு உற்சாக டானிக்மா.
  நானும் அப்பாவை விசாரித்ததாக சொல்லுங்க..

  பதிலளிநீக்கு
 21. சைவகொத்துப்பரோட்டா கூறியது...
  பூக்கள் பளிச்சின்னு இருக்கு......
  அருமை!!!!!!!

  ஓஅப்படியா. நான் சர்ஃபெல்லாம் போடலை பரோட்டா.
  சும்மா தொட்டேன் அதான் இத்தனை பளிச் பளிச்.

  நன்றி சை கொ ப
  mythees கூறியது...
  ஸ்மைலி

  பதிலளிநீக்கு
 22. mythees கூறியது...
  ஸ்மைலி !

  நாங்களும் ஸ்மைல் பண்ணுறோம் ஓகே.


  /நாடோடி கூறியது...
  க‌விதை ந‌ல்லா இருக்கு.../
  மகிழ்ச்சி ஸ்டீபன்
  /மன்னார்குடி கூறியது...
  அருமை./

  நன்றிங்க..

  பதிலளிநீக்கு
 23. Kanchi Murali கூறியது...
  முதலில் நன்றிகள் பலப்பல....

  ஏன்னா..! வலைதளத்திலும் என் கவிதை வரி (ஒரே ஒரு வரியாய் இருந்தாலும் )... அதுவும் ஓர் தலைப்பாய்.. அதற்குதான்...//

  நானும் உங்களை பாராட்டுகிறேன் இப்படி ஒரு தலைப்பை தேர்ந்தெடுதமைக்கு.

  .டிஸ்கியில் எனக்கு நன்றி தெரிவித்திருக்கக்கூடாது...
  நன்றி சொல்லவேண்டியவன் நான்தான்.../

  நண்பர்களுக்குள் யார் சொல்லிகிட்டாலும் ஒன்றுதான்.

  /எந்த தலைப்பை கொடுத்தாலும் உடன் கவி எழுதும் ஆற்றல் உள்ளவன்தான் கவிஞன் எனப்படுபவன்'... தங்களுக்கு கவிதை தலைப்பு கிடைத்த சில மணிநேரத்திலே இப்படி ஓர் சமூக சிந்தனையுடன் ஓர் கவிதை... மற்றொன்று அழகான காதல் கவிதை...

  தங்கள் கவித்திறனுக்கு வாழ்த்துக்கள்...//

  இப்படி ஒரு தலைப்பை பார்த்தும் உடனே எழுதனுமுன்னு திடீரென்று தோன்றிய வார்த்தைகளை வைத்து
  சரியோ சரியில்லையோ யோசிக்கவில்லை எழுதி முடித்து பார்த்தேன் நன்றாக இருப்பதாய் தோன்றியது தாமதிக்காமல் பப்ளிஸ் செய்துட்டேன்

  //விரகதாபத்தில் விஷம் தோய்க்கும் பூக்கள்//
  /வெந்துசாகும் விபச்சாரப் பூக்கள்//
  /புகைபடிந்து புகைப்படிந்து பூத்துக்குலுங்கும் பூக்கள்//
  //எயிட்ஸையும் அள்ளிதரும் எச்சில் பூக்கள்//
  //எந்திரப் பூக்கள்//
  //புகை படிந்த பூக்களென்றாலும் பூந்தென்றல் தாலாட்டும்//
  // இவர்களுக்கில்லை புண்ணியங்கள் எந்நாளும்...//

  மேற்சொன்ன ஒவ்வோர் வரிக்கும் கருத்துக்கள் தெரிவிக்கலாம்... அப்புறம் பின்னூட்டமே ஓர் இடுகையாகிவிடும்...

  மேலே நான் குறிப்பிட்டுள்ள வரிகளை படித்தாலே (புதிய வரிகள்) தங்கள் திறமை விளங்கும்.. அதோடு துணிந்து ஒரு dry subject எடுத்து அதை சிறந்த, புதிய வார்த்தைகளால் வடித்த இந்த கவிதை.. சூப்பரோ சூப்பர்...!//

  வரிகள் புதியவைகள்தான் புதிய சிந்தனைகளையும் புதிய வார்த்தைகளையும் தோண்டியெடுக்கும் வண்ணம் தாங்களின் தலைப்பு தந்து உதவியமைக்கு மிக்க நன்றி..

  அடுத்து....

  //பூவே! உன்மீது புகைபடிய வைத்த காற்றை கைது செய்யச்சொல்லி என்காதலனை அனுப்பியுள்ளேன்///
  //கலங்காதே....புகைபடிந்த உன்மீது.. என்சுவாசத்தின் ஸ்பரிசம் பட்டதும் புத்தம் புதிதாய் பூத்துச்சிரிப்பாய்..///

  இரெண்டே வரிகளில்... அழகான காதல் கவிதையா?
  ஆமாம்! 'சுவாசத்தின் ஸ்பரிசம் (அதாவது தொடுதல்) '....அது எப்படியிருக்கும்... சுவாசத்திற்கு கைகள் இல்லையே கவிஞரே?
  "மாலைவேளையில் ஊட்டிமலையின் உயர்ந்த சிகரத்தில் நிற்கும்போது நம்மீது தவழும் சில்லென்ற காற்றின் சுகம்" இந்த வரிகளில்...//

  சுவாசத்திற்க்கு கைகளில்லையென்று யார்சொன்னது. அதன் ஸ்பரிஷத்தை உணரும்போது கைகளைவிட மென்மையாய் இருக்கும் கவிஞரே!

  //இறுதியாய்...
  "புகை படிந்த பூக்கள்..!" தலைப்பு சூப்பெரோ சூப்பர் (சும்மாங்காட்டியும்.....! காக்கைக்கு தன் குஞ்சு 'பொன் குஞ்சு' அல்லவா..! கவிஞரே...!)//

  சொன்னாலும் சொல்லைவில்லையினாலும் சூப்பரோ சூப்பர்தான்..காகைக்கு மட்டுமல்ல அனைத்துக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சுதானே! [ஹி ஹி ஹி]

  /புதிய வார்த்தைகளால் வடித்த நல்சமூகசிந்தனை கொண்ட -
  'கைது செய்யச்சொல்லி காதலனை' அனுப்பிய அழகான காதலுடன்கூடிய அருமையான கவிதை...

  கவிஞர் மலிக்காவுக்கு வாழ்த்துக்கள்...

  மீண்டும் பலப்பல நன்றியுடன்.... (எப்பவும் சொல்லிக்கிட்டேயிருப்போமுள்ள....)

  நட்புடன்...
  காஞ்சி முரளி.....//

  நாங்களும் பதிலுக்கு நன்றிகள் பலபல சொல்லிக்கிட்டேயிருப்போமுல்ல.

  நன்றி முரளி..

  பதிலளிநீக்கு
 24. Kanchi Murali கூறியது...
  "புகை படிந்த பூக்கள்" என்ற தலைப்பு மட்டுமே என் எண்ணத்தில் உருவான பாறை என்று வைத்துக்கொண்டால்...

  அப்பாறையில் தன் சிந்தனைச் செலுத்தி,
  காண்போர் வியந்து பாராட்டும் வண்ணம், கஷ்டப்பட்டு அழகிய (கவிதை) சிலையை வடித்த மலிக்கா என்ற சிற்பிக்குத்தான்
  இந்த முரளி என்ற பாறை நன்றி சொல்லவேண்டுமே தவிர...

  சிற்பி அந்தப் பாறைக்கு நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை...//

  பாறையில்லாமல் சிற்பி எதைக்கொண்டு சிற்பம் செதுக்குவான்.
  ஆகவே பாறைக்கும் வாழ்த்துக்கள் அதை பக்குவமாய் செதுக்கிய சிற்பிக்கும் வாழ்த்துக்கள் ஓகேவா..

  /அதோடு, 'பூ' வெனும் வரிகளால்
  'பூமாலை' எனும் கவிதை எழுதி, அது"நீரோடை"யில் வெளிவந்தால்,
  மகிழ்ச்சி அடைபவர்களில் முதலாமவன் 'நார்' எனும் நான் மட்டுமே...!
  காரணம் பூவோடு சேர்ந்து இந்த நாரும் மணக்கும்...//

  பூ கோக்க நார்வேண்டுமே இல்லையின்னா
  பூ செடியோடு வாடுமே
  சரிதானே

  /ஏனெனில் என் தலைப்பில் "வலைதள கவிஞர் மலிக்கா" கவிதை எழுதுவதென்பதைவிட ஓர் சிறப்பு, ஓர் மகிழ்ச்சி,ஓர் அங்கீகாரம் என் எழுத்துக்களுக்கு கிடைக்காது...

  அதனால் டிஸ்கியில் எனக்கு சொன்ன நன்றியை தயவுசெய்து "திரும்ப" பெறுக என நட்புடன் வேண்டுகிறேன்...

  நட்புடன்...
  காஞ்சி முரளி....//

  ஒருவர் நமக்கு ஒன்றை தரும்போது அதற்காக நன்றி சொல்வதில் தவறில்லை நட்பென்றபோதும் அந்த நட்புக்கும் செலுத்தவேண்டிய நேரத்தில் மரியாதை செலுத்துவதுதானே உண்மையான நட்பு
  அந்தவிதத்தில் இதுவும்.
  இதை நீக்கவேண்டியதில்லை என்பது என்கருத்து..

  நட்புடன் மலிக்கா

  பதிலளிநீக்கு
 25. seemangani கூறியது...
  விதி வசப்பட்ட விசித்திர பூக்கள் வித்யாசமாய் வீசப்பட்ட
  (க)விதை...அருமை மல்லி(கா)...

  கனி சீமாங்கனி மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி.


  //சசி கூறியது...
  விசால மண்ணில் விசித்திரப்பூக்கள்
  விரகதாபத்தால் விஷம் தோய்க்கும்பூக்கள்

  வெண்ணிறமாய் வேடம்தரித்து
  வேஷமிடும் பூக்கள்
  வேதனையில் வெந்துசாகும்
  விபச்சாரப் பூக்கள்//

  என்ன அருமையாக எழுதியிருக்கீங்க.
  தன்னையேவிற்று உயிர்வாழும் ஜென்மங்களுக்கு. இதை தெரிவித்தால் தேவலை.

  வாழ்த்துக்கள் மலிக்கா//


  மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி சசி

  பதிலளிநீக்கு
 26. Chitra கூறியது...
  ஒரு தலைப்பு, உங்களின் மனம் தொட்டு வந்த போது கவிதை பூக்களாய் வந்துள்ளது. பாராட்டுக்கள்!//

  பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சித்ராமேடம்..

  பதிலளிநீக்கு
 27. ஸ்டீபன் கூறியது...
  பு/கை படிந்த பூக்களென்றாலும்
  பூந்தென்றல் தாலாட்டும்
  படிந்த புகையும்
  பொலபொலவென கீழ்கொட்டும்/

  தலைப்பு யாருடையாகயிருந்தாலும் அதாற்குதகுந்தாற்போல் எழுத எங்கிருந்து கற்றீர்கள் மிக அருமை.

  தலைப்புதந்தவருக்கும் அதை கவிதைகடலாய் மாற்றிய தாங்களுக்கு பாராட்டுக்கள்.

  5 ஏப்ரல், 2010 9:55 pm


  !
  sathik கூறியது...
  கலங்காதே
  புகைபடிந்த உன்மீது
  என்சுவாசத்தின்
  ஸ்பரிசம் பட்டதும்
  புத்தம் புதிதாய் பூத்துச்சிரிப்பாய்//

  mika arumai enna azakaay thoduththu irukkiiraay
  super super super//

  மிக்க மகிழ்ச்சியும் சந்தோஷமும் நன்றி சாதிக்

  malar கூறியது...
  எந்தலைப்பை கொடுத்தாலும் உடனடிக்கவிதை ஆச்சர்யம் ஆக எத்தனை அழகாய் அருமையாய் வரிகளில் விளையாடியிருக்கிறாய்
  உனக்குள் கவிகுடியிருக்கு மல்லி.
  சூப்பர்ப் வெகு அருமை.//

  எல்லாம் உங்களைப்போன்றவர்களால்தான்
  ஊக்கத்திற்க்கும் ஆக்கத்திற்க்கும் மிக்க நன்றி மலர் அடிக்கடி வந்துபோங்கப்பா.

  பதிலளிநீக்கு
 28. முதலில் காஞ்சி முரளி அவர்களுக்கு நன்றிகளை சொல்லலாம் .... உங்களை இது போன்றதொரு அருமையான படைப்பை வெளிகொனரத்தூண்டியமைக்கு....!
  பொதுவாகவே எந்த ஒரு தலைப்பையும் எழுதும் திறனுடையவர்கள்தான் முழுமையான கவிஞராக பிரகாசிக்கிறார்கள்!!!
  புகைபடிந்த பூக்கள் கவிதை மிக அருமை..... நீங்கள் அதில் உங்கள் கருத்தை பதிந்த விதம் அழகு!!!

  பதிலளிநீக்கு
 29. ஸாதிகா கூறியது...
  மலிக்காவிடம் இருந்து கவிதை நீரோடையாக கொட்டுதே.சூப்பர்.//

  அக்காவந்து கவிநீராடத்தான்.

  நன்றிக்கா
  / மங்குனி அமைச்சர் கூறியது...
  //எஞ்சி மிஞ்சியதை
  எடுத்துக்கொடுக்கும் பூக்கள்
  எயிட்ஸையும் அள்ளிதரும்
  எச்சில் பூக்கள்//

  கொடுமை மேடம்.

  ஆமங்க சார் ரொம்பக்கொடுமை..

  நன்றி அமைச்சர் சார்

  பதிலளிநீக்கு
 30. /சே.குமார் கூறியது...
  //கலங்காதே
  புகைபடிந்த உன்மீது
  என்சுவாசத்தின்
  ஸ்பரிசம் பட்டதும்
  புத்தம் புதிதாய் பூத்துச்சிரிப்பாய்//

  க‌விதை ந‌ல்லா இருக்கு.../

  மிக்க நன்றி குமார்..

  பதிலளிநீக்கு
 31. கவிதன் கூறியது...
  முதலில் காஞ்சி முரளி அவர்களுக்கு நன்றிகளை சொல்லலாம் .... உங்களை இது போன்றதொரு அருமையான படைப்பை வெளிகொனரத்தூண்டியமைக்கு....!
  பொதுவாகவே எந்த ஒரு தலைப்பையும் எழுதும் திறனுடையவர்கள்தான் முழுமையான கவிஞராக பிரகாசிக்கிறார்கள்!!!
  புகைபடிந்த பூக்கள் கவிதை மிக அருமை..... நீங்கள் அதில் உங்கள் கருத்தை பதிந்த விதம் அழகு!!!//

  நிச்சியமாக கவிதன் முரளிக்கு நன்றிக்குமேல் நன்றி சொல்லனும்.
  நான் எழுதியதை வந்து வாசித்து அதற்க்கு தகுந்தாற்போல் கருத்துக்கள் சொல்லும் தாங்கள் அனைவருக்குமே நான் நன்றி சொல்ல கடமைப்பட்டவள்..

  மிக்க நன்றி கவிதன் வருகைக்கும் வசந்தமான கருத்துக்கும்..

  பதிலளிநீக்கு
 32. ///கவிதன் கூறியது...
  முதலில் காஞ்சி முரளி அவர்களுக்கு நன்றிகளை சொல்லலாம் .... உங்களை இது போன்றதொரு அருமையான படைப்பை வெளிகொனரத்தூண்டியமைக்கு....!////

  மலிக்கா...! கவிதன் அவர்கள் பெயரிலேயே "கவிதை"யை வைத்துக்கொண்டு எனக்கு நன்றி சொல்வது... it's too much... என்று என் எண்ணம்...

  காரணம்...

  தலைப்பை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்... அத்தலைப்புக்கு கவிதை... அதுவும் தலைப்புக்கு ஏற்ற -

  பொருத்தமுள்ள வார்த்தைகளையும் -
  அர்த்தம் பொருந்திய வரிகளையும் கொண்டு ஓர் கவிதை உருவாக்குவதென்பது -

  அதிலும் சமூகச் சிந்தனையுடன், சமூக அக்கறையுடன் -

  தலைப்பிலுள்ள வார்த்தைகளை கவிதையினுள் கொண்டுவந்து -

  ஓர்.... சாரி... இரண்டு சிறந்த கவிதைகளை வடிப்பதென்பது ஓர் உயிர் ஜனித்தலுக்கு சமம்...

  அச்சாதனையை செய்த கவிஞர் மலிக்காவை பாராட்டினால் தகும் கவிதன்...

  ////நிச்சியமாக கவிதன்...... முரளிக்கு நன்றிக்குமேல் நன்றி சொல்லனும்.////

  it's too much... மலிக்கா...

  நட்புடன்...
  காஞ்சி முரளி....

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது