நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என்னை வாழ்த்திய நல்ல உள்ளங்கள்

காவியத்திலகம் திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள்.

நான் எழுதிய மரணிக்கும்போது[சங்கமம் உரைநடைப்போட்டிக்காக நானெழுதிய கவிதை] மற்றும் ”வலி”யென்ற இருகவிதைகளை வாசித்துவிட்டு.
மிகுந்த மகிழ்வோடு அவர்கள் மேடையில் பகிர்ந்துக்கொண்ட பகிர்வு இதோ உங்களிம் பகிர்ந்துகொள்வதில் ஆனந்தம் அடைகிறேன்..

“மகள் மலிக்காவின் கவிதைத் தொகுப்பை வாசித்தேன். இக்காலத்தில் யாப்பிலக்கணத்தை கற்றுவிட்டு கவிதைஎழுதுபவர்களுக்குகூட

இதுபோல் எழுதவருவதில்லை. ஆனால் சிலருக்கு வருகிறது. அப்படி வருவது தெய்வம் கொடுத்த வரம்! அப்படித்தான் மலிக்காவின் கவிதைகளும்!

அவர் எனக்கு அறிமுகப்படுத்தபட்டபோது அவ்வளவாக படித்தவராக அறிமுகம் படுத்தப்படவில்லை. ஆனால் அவருடைய கவிதைகளை படித்தபோது அவருக்குள் இருக்கும் ஆளுமையையும், உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடிந்தது.

நான் ஒரு மரபுக்கவிதைக்காரன்! புதுக்கவிதையில் நாட்டமில்லையென்பது அல்ல ஆனால் நான் புதுக்கவிதை செய்வதில்லை. 10,000 மரபுக்கவிதைகளை எழுதியிருக்கிறேன்!

இருந்தாலும்கூட இடையிடையே புதுக்கவிதைகளையும் வாசிப்பதுண்டு
அதில் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன் சிலகவிதைகளில் அதிர்ச்சியும் அடைந்திருக்கிறேன். மலிக்காவின் கவிதைத்தொகுப்பை வாசித்தபோது சில கவிதைகளில் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறேன்.

அதன்பின்புதான் அவரை தொலைபேசியில் அழைத்து
“மகளே உன்கவிதைகளை வாசித்தேன். மிக நன்றாக எழுதியிருக்கிறாய்! அதில் சில சில கவிதைகளை செப்பனிடல்கள் செய்தால் நீ ஒரு சிறந்த கவிதைத் தொகுப்பை வெளிடலாம் என அவருக்கு ஊக்கம் கொடுத்தேன். இன்று அவரை ஊக்குவிக்க காரணமும் அதுவே என்று நினைக்கிறேன்.

என்ன கவிதையை படித்துவிட்டு இவர் இப்படி சொல்கிறா?ர் என நீங்கள் கேட்கலாம். நான் ஏற்கனவே மரபுக்கவிதைக்காரன் என்று சொல்லிவிட்டேன், அப்படியிருந்தும் அவரின் கவிதைகளில் பலவற்றில் இரண்டுகவிதையை தற்போது வாசிக்கிறேன். கேளுங்கள்...

அதில் ஒன்று “மரணிக்கும்போது” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இந்தகாலத்திலே படித்த பெண்கள் பெண்ணியம் என்ற ஒன்றை பிடித்துக்கொண்டு அலைகிறார்கள். பெண்களெல்லாம் கணவரை மதிக்கக்கூடாது. ஆணுக்கு சரிசமம். ஆணைவிட பெண் உயர்ந்தவள் என்று பேசுகிறார்கள்.
ஆனால்
இங்கே இந்த கவிதையிலே மலிக்கா சொல்லியிருப்பது என்னை மிகவும் கவர்ந்தது. இதோ உங்களுக்கும் சொல்கிறேன். கேளுங்கள்.

உனக்காகவே நானென்று
என்னை நீ
உச்சிமுகர்ந்தாய்
அத்தருணமே
என்மனம்
சாந்தி அடையக்கண்டேன்

நான் பிறக்க
நீ வரம்கேட்டாய்
என்னை மணக்க
வரம்கேட்டாய்
நமதன்பின் வெளிப்பாடாய்
நம்வாரிசுகளின்
வரம்கேட்டாய்
எத்தடையுமின்றி
எல்லாமே கிடைத்தன

[அதாவது மேற்சொன்ன அத்தனையும் கேட்டதும் கிடைத்தது]

என்னவனே!
எனக்கு
வரமாக கிடைத்தவனே!
எனக்காக
ஒருவரம் இறைவனிடம்
கேட்பாயா?

[தன் கணவனை விழித்து அதாவது நினைத்து அவனிடம் கேட்கிறாள். மேற்சொன்ன அத்தனையும் உனக்காக நீ கேட்டாய், இதைமட்டும் எனக்காகக் கேள். என்கிறாள் இதற்குபிறகுதான் இக்கவிதை உணர்வுப்பூர்வமான கவிதையாக மாறுகிறது கேளுங்கள்.
இங்கே பெண்ணியம் பேசுபவர்கள் இருந்தால் உருகிப்போவார்கள்.

இல்லையென்றால் அதை மறந்தே போவார்கள்.]

என்விழிநீர் உன்னைத்தழுவ
உன் மார்புக்குழிக்குள் நான்
முகம் புதைத்திருக்கும் வேளையில்
எனக்கான
மரணம் நிகழவேண்டுமென்று...
இது ஒரு நல்ல கவிதையல்லவா?

உன்நெஞ்சில நான் சாஞ்சிருக்கும்போது
இதுபோன்றுதான் எனக்கு மரணம் வரவேனுமென்று விரும்புகிறாள். பூவோடும் பொட்டோடும் போகணும் என்றால் இப்படிதான் போகணும். அதையும் தன் கணவனிடமே சொல்லி இறைவனிடம் கேட்கச்சொல்கிறாள். எவ்வளவு ஒரு நல்ல கவிதை! என்று அவர்கள் பேசியபோது நெஞ்சம் நெகிழ்ந்துபோனேன்...

மகளே!

கவிதை படித்தேன்
களிப்புற்றேன்
நன்றியொடு வாழ்த்துக்கள்
நவின்றேன்.
இன்று
என் தாய்நாடு
ஏகுகின்றேன்
இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடுவான்
மீண்டும் சந்திப்போம்.
--வாப்பா--

அமீரக தமிழ் கவிஞர் பேரவைத்தலைவர். அமீரக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியகழகத்தலைவர்.
அவர்கள் என்னை வாழ்த்தி எழுத்திய கவிதை.

அதிகம் 
படித்தவரில்லை
என் துணைவி
பணிவுடனா சொன்னார்
பாரூக்?
இல்லை-துணிவுடன்
அல்லவா சொன்னார்!

இது போதுமே
இல்வாழ்வும்
கவிதையாக!

இவரின்
’இறுமாப்பு’தான்
இவர் துணையை
கவி புனைய
வைத்ததோ?

இறை நாடின்
அந்த நாளும்
விரைவில்
வர வேண்டும்!

கவிதை யாத்தவரே
காவியங்கள் படைக்க

இவர் பாராட்டைப்
பெற்ற
காவியத்திலகமே
இவர் வரிகள்போல்
இவரைப் பாராட்ட
==================
வாழ்த்துக்களுடன்
அப்துல் கதீம்.

அமீரக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக
இலக்கிய அணிச் செயலாளர்
கவிஞர் ப. அத்தாவுல்லா. அவர்கள் வாழ்த்தி எழுதியது
குமுதம் ஆனந்தவிகடன். போன்ற பத்திரிக்கைகளில் 20 வருடங்களாக சிறுகதைகள் எழுதிவரும் சிறுகதைகள் எழுதிவரும் எழுத்தாளர்
திரு ஷேக் சிந்தா மதார்
அவர்கள் எழுத்திய வாழ்த்துக்கவிதை



அன்பு மகளே,
அன்புடன்
கவிதையை வடித்த அழகு,
அவையினில்
அதனைப் படித்த அழகு,
அன்பைக் கொண்டே
முடித்த அழகு,
அனைத்துமே
எனக்குப் பிடித்த அழகு.

உங்கள் திறமை மேலும் மெருகேற
இறையை இறைஞ்சுகிறேன்...

ஷேக் சிந்தா மதார்..........

கவிஞர் கமால் அவர்களின் வாழ்த்துக்கவிதை

சகோதரி திருமதி மலிக்கா அவர்களே
கவிதாயினி சகோதரி மலிக்கா......

வஞ்சப்புகழ்ச்சி செய்பவர் நடுவே
நெஞ்சப்புகழ்ச்சி செய்பவர் இவர்

இவர் பேனாவும் பேசும்
- இந்தப்
பெண்“நா”வும் பேசும்
பெண் நா நீளமென்பர்
இவர் நாவோ ஆழம்
பேனா மட்டுமே நீளம்
நீல மையால் இவர்
செய்வதெல்லாம்
எழுத்துக் கோலம்

பேதையைக் கவிதை என்பர்
இலக்கியத்தில்
கவிதையே கவிதை
செய்தால் என்னாகும்
இவர் கவிதைகள்
எல்லாம் பொன்னாகும்.

திரைக்குப் பின்னால்
கவிதை வடிப்பார்
முகத்திரை போட்டு
கவிதை படிப்பார்
சமூக அவலங்களை
ஒரு பிடி பிடிப்பார்
பலர் முகத்திரையைக் கிழிப்பார்
 – மொத்தத்தில்
எல்லா மேடைகளிலும்
முத்திரையைப் பதிப்பார்

அற்புதமான கவிதை வடித்தீர்
நற்கவிகளை மேலும் படைப்பீர்
என் வாழ்த்துக்களைப் பிடிப்பீர்...

வாழ்க! வளர்க! வாழ்த்துக்களோடு
அன்புடன்
சகோதரர் கமால்.

பத்திரிக்கை ஆசிரியரும் சிறுகதை எழுத்தாளருமான சகோதரர்
திருச்சி சையது அவர்கள் எழுதிய வாழ்த்துக்கவிதை


அன்புத்தங்கையே
அழகிய நடையில் கவிதை
அதை கோர்க்கும் வரிகள் அருமை
தெளிவுடன் எழுதும் திறமை
அதை செயல்படுத்தும்
முறையும் அருமை

நலமுடன் அனைத்தும் பெற்று
நானிலம் போற்றிட வாழ்வீர்
நல்கவியினை உலகுக்குத்தந்து
நற்பண்புடன் சிறந்து வளர்வீர்.

அன்புடன் அண்ணன்
சையது முஸ்தபா



அன்பு நெஞ்சங்கள் எனக்காக எழுதிய கவிகளும், வாழ்த்துக்களும். எனக்கு மிகுந்த மகிழ்வைத்தருகிறது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். பெரியவர்களின் துஆக்களும். ஆசிகளும். வாழ்த்துக்களும். பாராட்டுக்களும். இன்னும் இன்னும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் துணைபுரியவேண்டும்

இறைவனின் துணையுடன் நல்கவிகளையும். நல்லெண்ணத்துடன் கூடிய நற்செய்திகளை இவ்வுலகிற்கு  இன்னும் சிறப்பான படைப்புகளை கொடுக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியவேண்டும்.இங்கு வந்து பார்வையிட்டு கருத்துக்களை தெரிவிக்கும். இன்னும் என் பதிவுகளைபார்த்துச்செல்லும் தாங்களனைவருக்கும். என் உள்ளம் கனிந்த நன்றிகள் பல..தாங்கள் அனைவரின் வாழ்த்துக்களும்.ஊக்கமும், கருத்துக்களும். என்றும் வேண்டும்

என்றென்றும்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

29 கருத்துகள்:

  1. அன்பு மகளே! அத்தனை வாழ்த்துக்களோடும் இந்த அன்னையின் வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொள்.

    இன்னும் இன்னும் சிறப்புகடவுள் வழிக்காட்டுவார்

    பதிலளிநீக்கு
  2. ரியலி எக்ஸ்லண்ட் சூப்பர் மலிக்கா.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள்.

    மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. அன்பு தோழி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், உங்கள் கவிதை உலகெங்கும் உங்கள் கவிதை நீரோடையாக ஓட என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப பெருமையா இருக்கு மல்லிகா
    காவியத்தாயின் மடியில்
    வெற்றிநடை போட வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. அருமை வாழ்த்துகள் தங்கச்சி.

    இம்பூட்டு பெரிய இடுக்கை போட்டு விட்டீர்களே!

    பதிலளிநீக்கு
  7. எல்லோருடைய
    வாழ்த்துக்களுடன்
    எனது
    வாழ்த்துக்களும்
    கரம் கோர்த்து.......
    வாழ்த்துகிறது.........

    வாழ்த்துக்கள்............

    நட்புடன்....
    காஞ்சி முரளி................

    பதிலளிநீக்கு
  8. ( கவி )நீரோடை வற்றாத கடலாக மாற வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  9. இந்த கவிதைகள், உங்கள் திறமைக்கும் அன்புக்கும், இறை அருள் தந்த வெற்றி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. அன்பு சகோதரியே,

    உள்ளொன்று வைத்து புறமொன்று பேச தெரியாதவனாய் இந்த சகோதரன்.

    கவிதையை கவிதை ஏற்றியதும். கவிதையை கவிஞர்கள் பலர் பாமாலையாய் சூட்டி உங்கள் கவிதைக்கும், உங்களுக்கும் பெருமையளித்து என் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி ஆனந்தத்தை அளிக்கின்றது.

    மேலும் தமிழுக்கு பெருமை சேர்த்திட. தமிழ்போல் பல்லாண்டுகள் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்.

    இவன்,
    தஞ்சை.வாசன்

    பதிலளிநீக்கு
  11. இப்படிப் பட்டவர்களின் வாழ்த்துக்கு பின் நான் என்ன சொல்ல..? வாழ்த்துக்கள் மலிக்கா

    பதிலளிநீக்கு
  12. நான் நேற்றே இதை படித்தேன் , தமிழ் ஃபாண்ட் வேலை செய்யாததினால் உடன் கருத்து சொல்ல முடியலை , வாழ்த்துக்கள் மலிக்கா , மிகவும் சந்தோசமாக இருக்கு உங்களை நினைத்து .

    பதிலளிநீக்கு
  13. மிக்க மகிழ்ச்சி.. இனிய வாழ்த்துகள் இன்னும் சிகரம் தொட!

    பதிலளிநீக்கு
  14. உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் சேரட்டும்!!

    பதிலளிநீக்கு
  15. ரொம்ப சந்தோஷமாக இருகுப்பா உன்னை நினைக்கைஅயில்.
    நம்ம பெண்கள் நிறைய இதுபோன்றுவரனும் எல்லாதுறையிலும் சிறந்துவிளங்கனும். இறைவன் அவர்களுக்கு துனையிருக்கனும்.

    மிக்க மகிழ்ச்சிபா நானும் வாழ்த்துரேன் எல்லார்கூடவும் சேர்ந்து அல்லா உனக்கு எல்லா பாகியத்தையும் தரட்டும் ஆமீன்..

    பாசமுள்ள தோழியாய் இன்னும் முகங்கானாமல்..

    சித்திமா

    பதிலளிநீக்கு
  16. தமிழ்குடும்பத்திற்ம் வாப்பா.நீயில்லாமல் சரியில்ல போரடிக்குது..

    மிகுந்த சந்தோசம் மலி குட்டி இன்னும் முன்னேர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. இன்னும் நிறைய எழுதி..
    நிறைவான பாராட்டுக்கள் பெற வாழ்த்துக்கள் தோழி.

    பதிலளிநீக்கு
  18. /சாரதாவிஜயன் கூறியது...
    அன்பு மகளே! அத்தனை வாழ்த்துக்களோடும் இந்த அன்னையின் வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொள்.

    இன்னும் இன்னும் சிறப்புகடவுள் வழிக்காட்டுவார்..

    இந்த அன்பு ஒன்றுபோதுமா. மனதாரவாழ்த்துக்கள் பெறும்போது
    மனம் மகிழ்ச்சியின் உச்சத்தில் நிற்கிறது. மிக்க நன்றி மா...

    பதிலளிநீக்கு
  19. முகில் கூறியது...
    ரியலி எக்ஸ்லண்ட் சூப்பர் மலிக்கா.
    வாழ்த்துக்கள்//

    வாங்க முகில் எப்படியிருக்கீங்க.மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  20. அக்பர் கூறியது...
    வாழ்த்துகள்.

    மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்./

    மிக்க நன்றி அக்பர்




    சைவகொத்துப்பரோட்டா கூறியது...
    வாழ்த்துக்கள்..//

    மிக்க நன்றி சைவகொத்துபரோட்டா..

    பதிலளிநீக்கு
  21. /Jaleela கூறியது...
    அன்பு தோழி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், உங்கள் கவிதை உலகெங்கும் உங்கள் கவிதை நீரோடையாக ஓட என் வாழ்த்துக்கள்/

    அன்பு அக்காவே உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  22. /அபுஅஃப்ஸர் கூறியது...
    ரொம்ப பெருமையா இருக்கு மல்லிகா
    காவியத்தாயின் மடியில்
    வெற்றிநடை போட வாழ்த்துக்கள்/

    இறைவன் நாடினால் நிச்சயம் எதுவும் நடக்கும். மிக்க நன்றி அபு..

    பதிலளிநீக்கு
  23. /நட்புடன் ஜமால் கூறியது...
    அருமை வாழ்த்துகள் தங்கச்சி./

    ரொம்ப சந்தோஷம் ஜமால்காக்கா.

    /இம்பூட்டு பெரிய இடுக்கை போட்டு விட்டீர்களே/

    இதுக்கேவா! நல்லவேளை இன்னும் நான்கைந்திருக்கிறது சேர்த்திடலாமென்றிருந்தேன். சிரமத்திற்கு பொருந்திக்கொள்ளுங்கள் இனி இப்பூட்டு பெரிசெல்லாம் போடாம பாத்துகிறேன்..

    பதிலளிநீக்கு
  24. /Kanchi Murali கூறியது...
    எல்லோருடைய
    வாழ்த்துக்களுடன்
    எனது
    வாழ்த்துக்களும்
    கரம் கோர்த்து.......
    வாழ்த்துகிறது.........

    வாழ்த்துக்கள்............

    நட்புடன்....
    காஞ்சி முரளி/

    நட்புகளின் வாழ்த்துக்கள் என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது நிச்சயம் நான் கொடுத்துவைத்தவளே!

    மிக்க நன்றி முரளி..

    பதிலளிநீக்கு
  25. Mrs.Menagasathia கூறியது...
    வாழ்த்துக்கள் மலிக்கா!!/

    மிக்க நன்றி மேனகா சத்தியா.


    /பிரியமுடன் பிரபு கூறியது...
    வாழ்த்துக்கள்/

    மிக்க நன்றி பிரபு..

    பதிலளிநீக்கு
  26. வரியில் கோலேச்சி,
    வரலாற்றில் இடம் பிடிக்க,
    வாழ்த்துக்கள் அம்மையே!

    பதிலளிநீக்கு
  27. அக்கா பெரியவர்களெல்லாரும் வாழ்த்தியிருப்பதை பார்க்கும் போது உங்கள் மேல் மேலும் மேலும் பெருமிதம் உருவாகிரது எனக்கு.பெருமையாக இருக்கிரது உங்களின் தோழியாய் நான் இருப்பதை நினைத்து.நன்றி அக்கா.மேலும் மேலும் சிறப்பன கவிதைகளை கொடுத்து வாருங்கள்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது