நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இறையச்சம் எங்கே?



குடித்து குடித்து கெடுகிறாய் உன்
குடலை வேகவைத்து கொல்கிறாய்
குடும்ப நிம்மதியையும் சேர்த்து
குழைத்துக்கொள்ளும் மனிதனே

இறையச்சம் எங்கே
உனது
இறையச்சம் எங்கே

வசதியிருந்தும் வாய்பிருந்து
வசதியற்ற ஏழையிடம் வட்டிக்குமேல்
வட்டிவாங்கிப் பிழைக்கிறாய் -அவர்களின்
வயிற்றெருச்சலை வாங்கிக்குவித்து தன்
வாழ்கையையே  கெடுத்துக்கொள்ளும் மனிதனே

இறையச்சம் எங்கே
உனது
இறையச்சம் எங்கே

வறுமைகளை போக்கிவிட எத்தனையோ
வழிகளிருந்தும் வழி தவறிப் போகிறாய்
வியாதி தரும் வெறுப்பு தரும்
விபச்சாரத்தையே தொழிலாக்கிக்கொள்ளும் மனிதனே

இறையச்சம் எங்கே
உனது
இறையச்சம் எங்கே

அளவு நிறுவைகளில் குறைக்கிறாய்
அநியாயம் செய்து பிழைக்கிறாய்
அடுத்தவரின் பொருளுக்காக
ஆசைப்படும் மனிதனே

இறையச்சம் எங்கே
உனது
இறையச்சம் எங்கே

அனாதைகளின் சொத்துக்களை
அபகரித்துக் கொள்கிறாய்
அத்துமீறும் செயலைக்கூட
அலச்சியமாய் செய்யத்துடிக்கும் மனிதனே

இறையச்சம் எங்கே
உனது
இறையச்சம் எங்கே

ஆடைகளை குறைத்து குறைத்து
அங்கங்களை அழகுக்காட்டி
அடுத்தவரையும் பாவத்துக்கு
அழைத்து தூண்டும் மனிதனே

இறையச்சம் எங்கே
 உனது
இறையச்சம் எங்கே

மனத்துக்கும் பிடிக்காமல்
மகிழ்சியையும் கொடுக்காமல்
மற்றவருக்காக வாழ்ந்துகொண்டு
மனசாட்சிக்கு துரோகம் செய்யும் மனிதனே

இறையச்சம் எங்கே
உனது
இறையச்சம் எங்கே

உதிரம் கொடுத்து உழைப்பும் கொடுத்து
உயிராய் வளர்த்த பெற்றோரை
உன்னால் பேணிக்காக்க முடியாமல்
உதறிவிட்டு முதியோரில்லம் சேர்த்துவிடும் மனிதனே

இறையச்சம் எங்கே
உனது
இறையச்சம் எங்கே

நலவு செய்தால் நன்மையுண்டு
நாளை நமக்கும் வாழ்வு உண்டு
நல்லது கெட்டது அறிந்து கொண்டு
நலமாய் வாழ முயல்வோம் என்றும்...



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

23 கருத்துகள்:

  1. மீண்டும் ஒரு நல்ல பொதுநலக்கவிதை. ஹராமான காரியங்களைவிட்டும் வல்ல இறைவன் நம்மை விலக்கி வைப்பானாக.

    பதிலளிநீக்கு
  2. நாத்தீகத்தை பரப்பி, கடவுள் இல்லையென்று சொல்லிச் சொல்லி இந்த சமூகத்தை நாம் மிகவும் கெடுத்துவிட்டோம். கடவுள் மேல் பயம் குறைய குறைய குற்றங்களும், சமூக கேடுகளும் அதிகரிக்கின்றன என்று தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  3. இதோ, உங்களின் பக்கங்களில் நான் முதன் முறையாக வந்துள்ளேன்.
    இந்த கவிதையில் பொதுநல சிந்தனைகள் ஏராளம். வாழ்த்துகள்
    (நான் தெய்வ நம்பிக்கை அற்றவன்)
    //இறையச்சம் எங்கே
    உனது
    இறையச்சம் எங்கே
    // இந்த அச்சம் இருந்தாலும் இதை எல்லாம் செய்வார்கள்
    இங்கு 'தோஷத்திற்கு' ஆயிரம் பரிகாரங்கள் உண்டு

    பதிலளிநீக்கு
  4. இறையச்சத்தை பற்றி நல்லதொரு பகிர்வு

    இப்போதெல்லாம் மனிதர்களிடையே எங்கே இறையச்சம் இருக்கு

    பதிலளிநீக்கு
  5. எல்லோரையும் ஒரு பிடி பிடிச்சிருக்கீங்க..எந்த கேள்விக்கும் விடை கிடையாது, இறையச்சம் இருந்தாலொழிய‌

    பதிலளிநீக்கு
  6. சமூக பார்வையில் ஒரு நல்ல கவிதை..நன்று !!!

    பதிலளிநீக்கு
  7. தங்களின் கோப பட்டியல் கவிதை நல்லாயிருக்குங்க.

    பதிலளிநீக்கு
  8. அருமயான கவிதை.
    தங்களிடம் இறை உணர்வு உள்ளது.
    தொருங்கள் ஆண்டவன் அருள் செய்வான்

    பதிலளிநீக்கு
  9. இறையச்சம் எங்கே
    உனது
    இறையச்சம் எங்கே...

    மிக அழகு தோழி...
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  10. Manasoodu manasatchi pesuvathumathiri irrunthathu... Sattaiyai Questions...

    - Trichy Syed

    பதிலளிநீக்கு
  11. சமூகச்சாடல் ரொம்பவும் கோபமா இருக்கீங்க சகோ...!

    குர்-ஆனில் நபிகள் கூறியதும் கவனத்திற்க்கு வருகின்றன மது அருந்தாதே வட்டிக்கு பணம் கொடுக்காதே போன்றன...!

    அருமை சகோ..!

    பதிலளிநீக்கு
  12. //உதிரம் கொடுத்து உழைப்பும் கொடுத்து
    உயிராய் வளர்த்த பெற்றோரை
    உன்னால் பேணிக்காக்க முடியாமல்
    உதறிவிட்டு முதியோரில்லம் சேர்த்துவிடும் மனிதனே//

    இவனுங்களை எல்லாம் மனிதன் என்று சொல்லாதீர்கள் மலிக்கா...நல்ல கவிதை

    பதிலளிநீக்கு
  13. நல்லா சொல்லியிருக்கீங்க

    -------------------

    பிரியமுடன்...வசந்த் கூறியது...

    சமூகச்சாடல் ரொம்பவும் கோபமா இருக்கீங்க சகோ...!

    குர்-ஆனில் நபிகள் கூறியதும் கவனத்திற்க்கு வருகின்றன மது அருந்தாதே வட்டிக்கு பணம் கொடுக்காதே போன்றன...!
    ]]

    தம்பி வசந்த் குர்-ஆன் முழுக்க முழுக்க இறைவனின் வார்த்தைகள் கொண்டது - நபிகள் மூலமாக நமக்கு அருளப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. நட்புடன் முரளி...........

    "ஆடைகளை குறைத்து குறைத்து
    அங்கங்களை அழகுக்காட்டி
    அடுத்தவரையும் பாவத்துக்கு
    அழைத்து தூண்டும் மனிதனே"......

    என்ற மேற்சொன்ன வரிகள்....

    அதிலும் "ஆடைகளை குறைத்து குறைத்து
    அங்கங்களை அழகுக்காட்டி
    அடுத்தவரையும் பாவத்துக்கு
    அழைத்து தூண்டும்" என்ற வரிகள்
    1௦௦க்கு 1௦௦௦ சதவிகிதம் முற்றிலும் உண்மை...

    எனது மனதில் அமிழ்ந்து கிடக்கும் எனது எண்ணங்களை...

    என்னால் எழுத முடியாதை...

    தங்கள் கவிதை வரிகளில்
    கண்டு பெரிதும் உவக்கிறேன்.....

    அற்புதம்.... கவியே......

    பாராட்டுக்கள்..........

    நட்புடன்
    - காஞ்சி முரளி

    பதிலளிநீக்கு
  15. நட்புடன் முரளி...........
    "ஆடைகளை குறைத்து குறைத்து
    அங்கங்களை அழகுக்காட்டி
    அடுத்தவரையும் பாவத்துக்கு
    அழைத்து தூண்டும் மனிதனே"......

    என்ற மேற்சொன்ன வரிகள்....

    அதிலும் "ஆடைகளை குறைத்து குறைத்து
    அங்கங்களை அழகுக்காட்டி
    அடுத்தவரையும் பாவத்துக்கு
    அழைத்து தூண்டும்" என்ற வரிகள்
    1௦௦க்கு 1௦௦௦ சதவிகிதம் முற்றிலும் உண்மை...

    எனது மனதில் அமிழ்ந்து கிடக்கும் எனது எண்ணங்களை...

    என்னால் எழுத முடியாதை...

    தங்கள் கவிதை வரிகளில்
    கண்டு பெரிதும் உவக்கிறேன்.....

    அற்புதம்.... கவியே......

    பாராட்டுக்கள்..........

    நட்புடன்
    - காஞ்சி முரளி

    பதிலளிநீக்கு
  16. சமூக சிந்தனை கவிதை

    வாழ்த்துக்கள் சகோதரி

    விஜய்

    பதிலளிநீக்கு
  17. இறையச்சம் எங்கே
    உனது
    இறையச்சம் எங்கே
    ///

    உண்மைய சொல்லனுமுனா?!?!?
    வெளி உலகத்துக்குதான் இறையச்சம் எல்லாம்

    இறையச்சதோடு தவறு செய்யாமல் இருப்பவன் என்று எவறும் இல்லை என்பதே என் எண்ணம்

    பதிலளிநீக்கு
  18. பின்னூட்டமிட்டு தாங்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்ட அனைத்து சகோதர தோழமைக்களுக்கும் என்மனமார்ந்த நன்றி நன்றி நன்றி.

    பதிலளிநீக்கு
  19. /உண்மைய சொல்லனுமுனா?!?!?
    வெளி உலகத்துக்குதான் இறையச்சம் எல்லாம்

    இறையச்சதோடு தவறு செய்யாமல் இருப்பவன் என்று எவறும் இல்லை என்பதே என் எண்ணம்/

    வாங்க பிரபு இறையச்சம் என்பது வெளியுளகத்திற்கல்ல. நம் உள்ளச்சத்திற்கு நாம் மாறு செய்யும் போதுதான் இறையச்சத்தை மறந்து பல தவறுகளை புரிகிறோம்

    வெளியுலகிற்காக இறையச்சம்போல் நடிப்பவரை நாம் ஏன் கண்டுகொள்ளவேண்டும்.
    நம் உள்ளச்சத்திற்க்கு கட்டுப்படுவோம் இறையச்சம் தானாய் தோன்றும்.

    எல்லாவற்றிக்கும் இறைவன் துணையிருப்பான் என்பது என் கருத்து.

    வருக்கைகும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  20. velkannan கூறியது...
    இதோ, உங்களின் பக்கங்களில் நான் முதன் முறையாக வந்துள்ளேன்.
    இந்த கவிதையில் பொதுநல சிந்தனைகள் ஏராளம். வாழ்த்துகள்
    (நான் தெய்வ நம்பிக்கை அற்றவன்)
    //இறையச்சம் எங்கே
    உனது
    இறையச்சம் எங்கே
    //

    / இந்த அச்சம் இருந்தாலும் இதை எல்லாம் செய்வார்கள்
    இங்கு 'தோஷத்திற்கு' ஆயிரம் பரிகாரங்கள் உண்டு/

    அப்படிப்பட்டவர்களை நாம் ஒன்றும் செய்யமுடியாது சகோதரரே. அவர்களாக தன் தவறை உணராதவரை.. மிக்க நன்றி முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும். தொடர்ந்து வருக..

    பதிலளிநீக்கு
  21. மலிக்கா ,
    இவர்களைப் பார்த்து நாம் அல்லவா
    அச்சம் கொள்ள வேண்டி இருக்கிறது.
    சாட்டை அடி சாடல்கள் நன்று.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது