நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தூள்கிளப்பிய பதிவர்கூட்டம்

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் பதிவர்கள் கூடி கலக்கல் ஆர்ப்பாட்டம்
அண்ணாச்சி அழைக்கிறார் பதிவர்கள் எல்லாம் ஒன்றுகூடி படம் காட்டப்போகிறோம் என்ற ட்ரைலரைப்பார்த்து நாமளும் போகலாமுன்னு
முன்பதிவு செய்ததோடு வெள்ளியன்று கிளம்பும் நேரத்தில் ஞாபகம் வரவே உடனே போன்செய்தேன்

ஹலோ ஆலினார் அம்புலிமாமா கடையா? ஆமாங்க யார் பேசுறது நாந்தான் அன்புடன் மலிக்கா. சொல்லுங்க என்னவேணும். இல்லைங்க ஏற்கனவே ஆர்டர் கொடுத்திருக்கேன் பதிவர்கூட்டத்துக்குன்னு சொல்லி முடிக்கு முன் ஓ அதுவா, நீங்க கேட்டிருந்த அத்தனையும் எங்க சிலவிலேயே அனுப்பிச்சாச்சி, எல என்னசொல்தீகன்னே அதாம்மா வாழ்க கோசம்போட 50 ஆள். டிரம்ஸ் வாசிக்கிர கோஸ்டி. வாட்டர்ஃப்ரூப் மேடை செட்டிங்.[அட அடிக்கடி மழை வந்துக்கிட்டு கிடக்குல்ல அதுக்குதேன்] என எல்லாம் அனுப்பியாச்சி, ஏங்க நானும் பதிவர்தாங்கர பேனரு ன்னு இழுத்தப்ப

அதுசரி உம்பேரு என்னசொன்னேன்னாரு அட நந்தாங்க பதிவர் அன்புடன் மலிக்கா. சரியாபோச்சிபோ இன்னுமா நீ கிளம்பள அங்கே படம்போட்டு பொட்டிய தூங்கி பிரியாணிபோட்டு சட்டிய தூக்கிப்பாகளே என்ன நீ பொளைக்கத்தெரியாத புள்ளயா இருக்கியே இதுக்கெல்லாம் முன்னாடியே போய் துண்டப்போடக்கூடாதா ன்னு சொல்லிகிட்டே இருக்கும்போது டக்குன்னு போனவச்சிட்டு மணியப்பாத்தா மதியம் 2..

சிம்மபாரதியின் போன் உங்க இடத்துக்கே வந்து சாப்பாடெல்லாம் போடுகிறோம் வந்துடுங்கப்பா என்றபோது இல்லை இங்கு கெஸ்டெல்லாம் வந்திருக்காங்க சாப்பாட்டுக்குபின் வருகிறேன் எனக்காக எல்லாரும் சாப்பிடாம இருந்திடாதீங்கன்னு சொன்னேன் [ஆமா இவுக போறவறைக்கும்தாம் உக்காந்துகீன்னு இருக்கபோறாகலாக்கும் சரி சரி.] காலையில் சொல்லியதை நினைவில் கொண்டு புறப்பட தயாராகிவிட்டேன்

மதியம் மணி 2, 10 புறப்பட்டது எங்கள் வாகனம், இடையே போனில் சிம்மபாரதிடம் லொக்கேஷன் கேட்டா அவுக அண்ணாச்சிகிட்டே கொடுத்துட்டாக[ அவுக துபைகாரவுக] அண்ணாச்சி நலம் விசாரிச்சிட்டு நம்மகிட்ட லொகேஷன் சொல்லப்போனாக நமக்குத்தான்[ ஹி ஹி ஹி] ஒரு நிமிசம் மச்சான்கிட்டதரேன் சொல்லி போனை நாசூக்க கொடுத்துட்டோமுள்ள.

 என்னுடைய போன் அடித்தது எடுதால் நம்ம ஜலீலாக்கா. என்னப்பா நீங்க கிளம்பளையா/ இதோ கிளம்பிட்டேங்கா, நீங்கதான் வரமுடியல கவலைபடாதீங்க ஒன்னுவிடாம வந்து சொல்லிவிடுகிறேன் என்று சொன்னபோது நீங்க சொல்லும்போது என்காதில் புகை வந்திடனும் என்றார்கள் ஓகே என்று போனைவைத்து நிமிர்ந்தபோது,
அண்ணாச்சி சொன்ன இடத்து கரகீட்டா வந்துவிட்டு மீண்டும் போன் சிம்மபாரதிக்கு செய்துபோது அவங்க வந்து கூட்டிகிட்டு போனங்க

ஒரு சுத்து சுத்தி [அந்த புத்தம் புதிய பில்டிங்க அண்ணாச்சி அவங்க கூட்டுகாரகங்களும் சேர்ந்துதான் இரண்டுநாளைக்கு முன்னாடி திறந்துவைத்தாக கேள்வி] அந்த ஃபிளாட்டிற்கு போனால்!!!!!!!!!!!!! வாசல் கதவிலேயே அண்ணாச்சி மிரட்டுகிறார் ஸ்ஸ்ஸ்ஸ் அண்ணாச்சி அழைக்கிறார் என போஸ்டரில் [அண்ணாச்சி குனிந்த தலை நிமிராமல்] போட்டு நம்மை அழைத்தார்கள்.

வாசலில் நுழைந்ததும் பாட்டுச்சத்தம் தூள்கிளப்பியது
அங்கே வரவேற்ற அண்ணாச்சி மற்றும் ஜெஸிலா, அவரது கணவர். மற்றும் ஹுசைன்னம்மா நின்றிருந்தார்கள்.

எங்க அண்ணாவும்கூடவந்ததால் மச்சான் சொன்னார்கள் நீ இங்கு இரு நான் சாகுலைபோய்விட்டுட்டு வருகிறேன்னு [அவங்களை துபையில் விடனும் 3, மணிக்கு டூட்டி] என்றுசொல்லி இந்த பச்சபுள்ளயமட்டும் அந்தகூட்டதில் விட்டுவிட்டு போய்டாங்க.

அங்கே நின்றிருந்த தோரணையை வைத்து நீங்கதானே ஹுசைன்னம்மா என்றேன் பக்கத்தில் நின்றிருந்தவர் ஜெஸிலா. அவர்களை ஏற்கனவே பாக்கியராஜ் பட்டிமன்றத்தில் பேசியபோது பார்த்திருக்கிறேன்
அறிமுகப்படுத்திகொண்டோம். [பிரியாணி திண்புட்டு பாக்கு போட்டுகொண்டு நின்னாகபோல இருவரும்]

சரி சரி உள்ளேவாங்கப்பா படம் காட்டப்போறாங்கன்னாங்க [உள்ளே செல்ல சிறுதயக்கம்தான் ஏன்னா மெஜாரிட்டியா நாங்க இல்லையேன்னுதான்] ஒருவழியா உள்ளேபோனதும் நீங்க சாப்பிடலையா கீழை ராசாவின் [அவுங்களத்தான் அவுக புரொபைலில் பார்த்திருக்கோமுள்ள.]
மற்றும் அண்ணாச்சியின் [இவுங்கள போஸ்டரில்]அன்பான உபசரிப்பு. சாப்பிட்டுவிட்டு வந்துட்டோம் என சொல்லிவிட்டு சுற்றிலும் பார்த்தா

சுவற்றில் ஆங்காங்கே வீற்றிருந்த போஸ்டர்கள் அடிச்சு தூள் கிளப்பு என்பதைபோல் இருந்தது அங்கே கிடந்த சோபாக்களில் அத்தனை ஜென்டில்மேன்களும் அமர்ந்தால் அரட்டை அடிக்கமுடியாது என்பதால் மைனாரிட்டியான எங்களுக்கு மரியாதை பலமாகி ஷோபகளில் இடம் கிடைத்தது[ அண்ணாச்சி ஏற்கனவே இதுக்குதான் துண்டை போட்டுமுன்பதிவு செய்துகொள்ளுங்கள் என்று சொன்னது ஞாபகம் வந்தது]

நிறைய பதிவர்கள் வந்திருந்தார்கள் ஆனால் எனக்குதான் யார் யாருன்னு பெயரோ ஊரோ தெரியலை எனக்கு அங்கு ஏற்கனவே தெரிந்தவங்கன்னு சிம்மபாரதியும். ஜியாவுதீன் அண்ணனும்தான், மற்றும் தமிழ்தேரில் உறுப்பினர்களும் இருந்தார்கள் [இதுக்குதான் ஆலினார்அம்புலிமாமாவிடம் நானும் பதிவர்தான் நானும் பதிவர்தான் ன்னு போட்டு ஒரு பேனர் கேட்டிருந்தேன் கையில் பிடித்திருந்தாலாவது தெரிந்திருக்கும்]

நிஜமாய் தியேட்டருக்குள் போனதைபோன்ற ஒருபிரம்மிப்பு, புரெஜக்டர் வைத்து
படம் தொடங்கியதுமே பாரதியின் வீரமிகு வார்தைகள் மனதுக்கு இதத்தை தந்தது. அடுத்தடுத்து மொக்கயும் 75/ கொலைவெறியும் 25/ விதமும் அட்டகாசமாக. அருமையான இசையும் காமெடியும்

கலந்து வயிறுகுலுங்க சிரிக்கவைத்தது [காசுகொடுக்காமல் ஓசியில் தியேட்டரில் இருந்து சிரித்தது இன்னும் சிரிக்கச்சொன்னது] அப்பப்பா தியேட்டர் தோற்றதுபோங்க விசிலும் கைதட்டலும் யூத்தல்லவா [ஹங் ஹங் எல்லாரையும் இல்லைங்கோ] சரி போனா போகுது அன்றிருந்த அனைத்து யூத்தும் ஒன்றிணைந்து சிரித்தகாட்சி மறக்கமுடியாத நிகழ்ச்சி.

என்ன அண்ணாச்சி இந்த டிரஸ் போனமுறை பதிவர்கூட்டதுக்கு போட்டதா? ஆமாம்பா அப்ப போட்டது இன்னும் கிளட்டவில்லை, ஆஸிப் மீரான் என்ற அண்ணாச்சி சொல்லியபோது எழுந்ததே சிரிப்பொலி..

இதுதான் அபூ அஃப்ஷர் என்று ஜெஸிலா சொன்னாங்க அட இது நம்ம ஊர்காரவுங்களாச்சேன்னு ஜெஸிலாவிடம் சொல்லி அதிரையான்னு கேட்க்கச்சொன்னேன். அவங்க கேட்டபோது ஆமாம் நான் அதிரைதான் என்றதும் என்னை தெரிகிறதா? என்றேன் மாலிக்கிடம் [அபு அப்ஷர் என்பது அவரது மகன்] உடனே ஜெஸிலா, இப்படி கண்ணைமட்டும் காட்டி என்னை தெரியுமான்னா எப்படிதெரியும் என்றார்களே பார்க்கனும். [ஏன்னா நான் பர்தாவில் ஃபுல் க்ளோஸிங்]பின்பு நான் நாந்தான் இன்னார்வீட்டு பிள்ளை என்றதும் புரிந்துகொண்டு புருவம் உயர்த்தினார் நாங்க ஒரே தெருவுக்காரங்கப்பா..
ரொம்ப வருசமாச்சில்லன்னு பேசியதில் மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது..

அப்புறம் என்பக்கத்து ஷோபாவில் பார்த்தால் கவிஞானி ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள்.சிறப்பு விருந்தினாராக அழைக்கப்பட்டுடிருந்தார்கள்.
பக்கத்தில் சென்று வாப்பா என்றழைத்தபோது. அம்மா நீயா முகம்முழுவதும்கவர் செய்திருந்ததால் நீயென்று தெரியவில்லைமா என்று சொல்லி பக்கத்தில் அமரச்சொன்னார்கள். சிறிதுநேரம் என் கவிதைகளைப்பற்றி உரையாடினார்கள்.எவ்வளவு பெரிய மனிதர்களையெல்லாம் நம்மோடு இணைத்தது நம் எழுத்துக்கள் என்று மனதுக்குள் மகிழ்ந்துகொண்டேன்.

பின்பு நான் ஹுசைன்னமா பக்கத்தில் வர எத்தனித்தபோது அம்மணிக்கு போன்வந்ததும் வெளியில் போனாங்க கூடவே நானும் ஒட்டிக்கொண்டு வெளியானேன்.

வாசலுக்கு முன்னால் உன்ன சிறிய கோரிடரில் மூன்று பெண்களும் பேசிகொண்டு நின்றோம். போன் நமபர்கள் பகிர்ந்துகொண்டோம் படம் முடிந்ததும் கனிசமான பேர் வெளியேறியதும் என்னாடா இன்னும் மச்சானைக்காணவில்லையே எனபோன் செய்தேன் இதோ வந்துகொண்டிருக்கிறேன் என்றார்கள் அதற்குள்ளா முடிந்துவிட்டது எனகேட்டார்கள் ஆமாம் எனக்காக ஹுசைன்னமா வெய்ட் பண்ணுராங்க சீக்கிரம் வாங்கன்னு சொல்லி போனை வைத்தேன்.

சொல்லி 12 நிமிடத்திற்குள் கீழே வந்துட்டேனே வந்துவிடுகிறாயா என்றார்கள் அப்போது அண்ணாச்சிவந்து உள்ளேவாங்கன்னு அழைக்க. மீண்டும் மச்சானிடமிருந்து போன் காரை போட்டுவிட்டு மேலேவரலாமுன்னா பார்க்கிங் கிடைக்கலை நீயே வந்துடேன் என்றார்கள், ஓகேன்னு நானும் கிளம்பிட்டேன், நான் கிளபுகிறேன் என தலையை ஆட்டியபடியே அனைவரிடமும் சொல்லிவிட்டு மாலிக்கை அழைத்து என்னுடன் பள்ளியின் அருகே வரை வரமுடியுமா என்றேன், வருகிறேன் என அபு அப்சரையும் கையில் பிடித்துக்கொண்டு கிளம்பி வாசலுக்கு வந்தபோது,

திரும்பிப்பார்த்தேன் கதவில் அண்ணாச்சி அழைக்கிறார் [என்றிருந்த போஸ்டரை பார்த்து அடுத்த தடவை நிச்சயம் கையில் பேனரோடு வந்துவிடுகிறேன் என எனக்குள் சொல்லிக்கொண்டு நடையைகட்டினேன்] என்னைவிட்டுவிட்டு மாலிக் கிளம்ப. காரில்வந்து அமர்ந்தபோது மச்சான் என்னப்பா இத்தனை சீக்கிரமாக முடிந்துவிட்டது நான் போகும்போது தொடங்கி வருவதற்குள் முடிந்துவிட்டதா என்றார்கள். நான்தான் கடைசியாபோய் முதலில் வந்த ஆள் என்றேன்.

பதிவர்கள் அனைவரையும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் மனதில் நிறைந்திருந்தது . நம்தமிழ் நம்எண்ணங்கள் நம்எழுத்துக்கள் நம்மை தேசம்விட்டு தேசம் வந்தும் எங்கெங்கே இருந்தநம்மை ஒன்றிணைத்த பதிவர்கூட்டத்தை நினைத்து மிகுந்த பெருமைகொண்டேன். இதேபோல் அனைத்து பதிவர்களையும் ஒருநாள் சந்திக்கும் வாய்ப்புவரும் என்ற நம்பிக்கையான மகிழ்ச்சியிலேயே இந்நிகழ்ச்சியை முடித்துக்கொள்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக...........

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அன்புடன் மலிக்கா

59 கருத்துகள்:

  1. ///அதுசரி உம்பேரு என்னசொன்னேன்னாரு அட நந்தாங்க பதிவர் அன்புடன் மலிக்கா. சரியாபோச்சிபோ இன்னுமா நீ கிளம்பள அங்கே படம்போட்டு பொட்டிய தூங்கி பிரியாணிபோட்டு சட்டிய தூக்கிப்பாகளே என்ன நீ பொளக்கத்தெரியாத புள்ளயா இருக்கியே இதுக்கெல்லாம் முன்னாடியே போய் துண்டப்போடக்கூடாதா ன்னு சொல்லிகிட்டே இருக்கும்போது டக்குன்னு போனவச்சிட்டு மணியப்பாத்தா மதியம் 2..////

    .........என்னமா எழுதுறீக.......... எழுத்து நடை அசத்தல்.

    பதிலளிநீக்கு
  2. //நீங்க கேட்டிருந்த அத்தனையும் எங்க சிலவிலேயே அனுப்பிச்சாச்சி, எல என்னசொல்தீகன்னே அதாம்மா வாழ்க கோசம்போட 50 ஆள். டிரம்ஸ் வாசிக்கிர கோஸ்டி. வாட்டர்ஃப்ரூப் மேடை செட்டிங்.[அட அடிக்கடி மழை வந்துக்கிட்டு கிடக்குல்ல அதுக்குதேன்] என எல்லாம் அனுப்பியாச்சி, ஏங்க நானும் பதிவர்தாங்கர பேனரு ன்னு இழுத்தப்ப//

    என்ன‌ ஒரு ப‌க்கா பிளானிங்

    பதிலளிநீக்கு
  3. ஹஹஹ. செம நக்கல்... என் காதுலயும் புகை வருது... சும்மா பின்னிட்டேள் போங்கோ...

    பதிலளிநீக்கு
  4. //நாங்க ஒரே தெருவுக்காரங்கப்பா..
    ரொம்ப வருசமாச்சில்லன்னு பேசியதில் மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது..//

    இதுதான் பதிவுலகின் ஆச்சர்யங்கள்.. நிறைய நட்புகளை கொடுக்கும்.

    அபு அப்ஸர் அவரு பையன் பேரா..?!!

    நானும் அவரோட பேருன்னுதான் நினைச்சுகிட்டு இருந்தேன்..


    அப்புறம் இந்த பதிவுல பட்டையை கிளப்பி இருக்கீங்க..

    :))

    பதிலளிநீக்கு
  5. நல்ல கவரேஜ். இப்படியே ஒவ்வொரு பதிவாக படித்தால், நானும் கலந்துகொண்ட உணர்வு வந்துவிடும். :)

    பதிலளிநீக்கு
  6. //விசிலும் கைதட்டலும் யூத்தல்லவா [ஹங் ஹங் எல்லாரையும் இல்லைங்கோ//

    ஹங்.. ஹங்... என்ன இருமல்ல துருப்பிடிச்சிருக்கா :)

    பதிலளிநீக்கு
  7. மொத்தத்துல பிரியானி கிடைச்சுதா இல்லயா?

    பதிலளிநீக்கு
  8. ம்... நானும் பதிவர் தான், நானும் பதிவர் தான் அப்படின்னு வடிவேல் குரல கூவிட்டிங்க . நல்லா இருந்தது .

    பதிலளிநீக்கு
  9. ஹலோ ஆலினார் அம்புலிமாமா கடையா? ஆமாங்க யார் பேசுறது நாந்தான் அன்புடன் மலிக்கா. சொல்லுங்க என்னவேணும். இல்லைங்க ஏற்கனவே ஆர்டர் கொடுத்திருக்கேன் பதிவர்கூட்டத்துக்குன்னு சொல்லி முடிக்கு முன் ஓ அதுவா, நீங்க கேட்டிருந்த அத்தனையும் எங்க சிலவிலேயே அனுப்பிச்சாச்சி, எல என்னசொல்தீகன்னே அதாம்மா வாழ்க கோசம்போட 50 ஆள். டிரம்ஸ் வாசிக்கிர கோஸ்டி. வாட்டர்ஃப்ரூப் மேடை செட்டிங்.[அட அடிக்கடி மழை வந்துக்கிட்டு கிடக்குல்ல அதுக்குதேன்] என எல்லாம் அனுப்பியாச்சி, ஏங்க நானும் பதிவர்தாங்கர பேனரு ன்னு இழுத்தப்ப"

    பதிவர் கூட்டத்தில் நானும் பங்கேற்றது போல ஓர் நேரடி ஒலிபரப்பு!
    சூப்பர்!

    நட்புடன்..... காஞ்சி முரளி

    பதிலளிநீக்கு
  10. நேரில் பார்த்த மாதிரியே உணர்வு.

    நல்ல பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  11. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க !!! படிக்க ஆர்வமா இருந்தது !!! நகைசுவையோடும் இருந்தது !!!

    பதிலளிநீக்கு
  12. //வயிறுகுலுங்க சிரிக்கவைத்தது [காசுகொடுக்காமல் ஓசியில் தியேட்டரில் இருந்து சிரித்தது இன்னும் சிரிக்கச்சொன்னது] அப்பப்பா தியேட்டர் தோற்றதுபோங்க விசிலும் கைதட்டலும் யூத்தல்லவா [ஹங் ஹங் எல்லாரையும் இல்லைங்கோ] சரி போனா போகுது அன்றிருந்த அனைத்து யூத்தும் ஒன்றிணைந்து சிரித்தகாட்சி மறக்கமுடியாத நிகழ்ச்சி.//

    மலிக்கா சரியான காமடியுடன் எழுதியிருக்கீங்க, நீங்கள் உங்க ஊர் காரர் அபு அஃப்ஸ்ரை சந்த்தித்து உங்களுக்கு ரொம்ப சந்தோஷத்தை தந்திருக்கும். அடுத்த முறையும் இதே போல் போய் வந்து பதிவு போடுங்கள். இதே நல்ல ஒன்று விடாம விளக்கமா போட்டு விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  13. //அடுத்த தடவை நிச்சயம் கையில் பேனரோடு வந்துவிடுகிறேன் என எனக்குள் சொல்லிக்கொண்டு நடையைகட்டினேன்] //

    அது சரி

    பதிலளிநீக்கு
  14. ரொம்ப சந்தோசமாவும் இருக்கு, நாம கலந்துக்க முடியாமப்போச்சேன்னு வருத்தமாவும் இருக்கு.

    ஓஹ். மாலிக்கும் வந்திருந்தானா. சரிதான்.

    விழா சிறப்பாக இருந்திருக்கு. மாஷா அல்லாஹ்.

    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  15. ஆஹா லைவ் கமெண்டரி க்ளாஸ் போங்க...

    //நானும் பதிவர்தான் நானும் பதிவர்தான் ன்னு போட்டு ஒரு பேனர் கேட்டிருந்தேன் கையில் பிடித்திருந்தாலாவது//

    நானும் கூட அந்த பேனரை புடிச்சிக்கிட்டு வந்திருக்கனும், அவ்வளவு பதிவர்கள்

    //நாங்க ஒரே தெருவுக்காரங்கப்பா..
    ரொம்ப வருசமாச்சில்லன்னு பேசியதில் மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது..
    //

    இந்த பதிவுலகம் எப்படியெல்லாம் சேர்த்து வைக்குது என்பது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி...

    பதிலளிநீக்கு
  16. ஆஹா லைவ் கமெண்டரி க்ளாஸ் போங்க...

    //நானும் பதிவர்தான் நானும் பதிவர்தான் ன்னு போட்டு ஒரு பேனர் கேட்டிருந்தேன் கையில் பிடித்திருந்தாலாவது//

    நானும் கூட அந்த பேனரை புடிச்சிக்கிட்டு வந்திருக்கனும், அவ்வளவு பதிவர்கள்

    //நாங்க ஒரே தெருவுக்காரங்கப்பா..
    ரொம்ப வருசமாச்சில்லன்னு பேசியதில் மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது..
    //

    இந்த பதிவுலகம் எப்படியெல்லாம் சேர்த்து வைக்குது என்பது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி...

    பதிலளிநீக்கு
  17. மலிக்கா, ஒண்ணுவிடாம அப்படியே வரிசையா எழுதிட்டீங்க. நீங்க போனது ஜின்னா அவர்கள் ஒரு சிறு உரையாற்றினார்கள். அதுமட்டும்தான் நீங்க மிஸ் பண்ணது.

    நீங்க அபூ அப்ஸரிடம் நான் யாருன்னு தெரியுதான்னு கேட்க, அவர் என்ன பதில் சொல்லன்னு தெரியாம பேய்முழிமுழிச்சதும் எனக்கு நினைச்சு நினைச்சு சிரிப்பா வந்துது.

    பதிலளிநீக்கு
  18. ஆஹா.. நல்லா என்ஜாய் பண்ணியிருக்கீங்க.. என்ன பண்ணுறது என்னால தான் வர முடியல இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை பாப்பொம்..

    நாங்களும் வெள்ளிக்கிழமை அன்னைக்கு டேஸ்டி பிரியாணிதான் சாப்பிட்டோமே! :)

    பதிலளிநீக்கு
  19. உங்களுக்குள்ள இவ்வளவு நகைச்சுவையா...?

    பதிலளிநீக்கு
  20. சகோதரி, பதிவுலகில் கிடைக்கும் நல்ல விஷயங்களின் மிக முக்கியமாக கருதுவது நல்ல நண்பர்கள் கிடைப்பது...

    மிக நன்றாய் எழுதியிருக்கிறீர்கள்...

    பிரபாகர்.

    பதிலளிநீக்கு
  21. மலிக்கா,நீங்கள் விவரித்து இருப்பது எந்த ஊர் பேச்சு?வழக்கு?தஞ்சையும்,சென்னையும்,தென்மாவட்டமும் கலந்த கலவை ரசிக்கும் படியாக இருந்தது.நீங்களும்,உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான அபு அஃப்ஸரும் சந்தித்தது நல்ல சர்ப்ரைஸ்.

    பதிலளிநீக்கு
  22. "ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தூள்கிளப்பிய பதிவர்கூட்டம்"

    இது ஒரு நேரடி ஒளிபரப்பு.

    பதிலளிநீக்கு
  23. அருமையாக தொகுத்து எழுதியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  24. மன்னிக்கனும் நான் பதிவைப்பத்தியோ பதிவர்சந்திப்பைப்பற்றியோ எதையும் சொல்லப்போவது இல்லை இந்தப்பதிவை படிக்கும் போது என் முன் தோன்றியது முகம் தெரியாத மச்சான் ஞாபகம் தான்

    எத்தனை பெயருக்கு உங்களைப்போல் அமையும்

    அல்ஹம்துலில்லாஹ்

    அவசரத்தில் உள்ளேன் பிரகு விபரமாக எழுதுகிரேன்

    பதிலளிநீக்கு
  25. Chitra கூறியது...
    ///அதுசரி உம்பேரு என்னசொன்னேன்னாரு அட நந்தாங்க பதிவர் அன்புடன் மலிக்கா. சரியாபோச்சிபோ இன்னுமா நீ கிளம்பள அங்கே படம்போட்டு பொட்டிய தூங்கி பிரியாணிபோட்டு சட்டிய தூக்கிப்பாகளே என்ன நீ பொளக்கத்தெரியாத புள்ளயா இருக்கியே இதுக்கெல்லாம் முன்னாடியே போய் துண்டப்போடக்கூடாதா ன்னு சொல்லிகிட்டே இருக்கும்போது டக்குன்னு போனவச்சிட்டு மணியப்பாத்தா மதியம் 2..////

    .........என்னமா எழுதுறீக.......... எழுத்து நடை அசத்தல்./

    மிக்க நன்றி தோழி சித்ரா..

    பதிலளிநீக்கு
  26. க‌ரிச‌ல்கார‌ன் கூறியது...
    //நீங்க கேட்டிருந்த அத்தனையும் எங்க சிலவிலேயே அனுப்பிச்சாச்சி, எல என்னசொல்தீகன்னே அதாம்மா வாழ்க கோசம்போட 50 ஆள். டிரம்ஸ் வாசிக்கிர கோஸ்டி. வாட்டர்ஃப்ரூப் மேடை செட்டிங்.[அட அடிக்கடி மழை வந்துக்கிட்டு கிடக்குல்ல அதுக்குதேன்] என எல்லாம் அனுப்பியாச்சி, ஏங்க நானும் பதிவர்தாங்கர பேனரு ன்னு இழுத்தப்ப//

    /என்ன‌ ஒரு ப‌க்கா பிளானிங்../

    பின்ன பிளான்பன்னாமா நாங்க எதையும் செய்யிரதில்லைங்க்ணா

    பதிலளிநீக்கு
  27. /நாஞ்சில் பிரதாப் கூறியது...
    ஹஹஹ. செம நக்கல்... என் காதுலயும் புகை வருது... சும்மா பின்னிட்டேள் போங்கோ.../

    புகை வந்துடுத்தா?

    சும்மா சொள்லாதேள்; உங்க அளவுக்கெல்லாம் நம்மாளா பின்னமுடியதுங்கண்ணா.. நன்றி பிரதாப்..

    பதிலளிநீக்கு
  28. கண்ணா.. கூறியது...
    //நாங்க ஒரே தெருவுக்காரங்கப்பா..
    ரொம்ப வருசமாச்சில்லன்னு பேசியதில் மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது..//

    இதுதான் பதிவுலகின் ஆச்சர்யங்கள்.. நிறைய நட்புகளை கொடுக்கும்.

    அபு அப்ஸர் அவரு பையன் பேரா..?!!

    நானும் அவரோட பேருன்னுதான் நினைச்சுகிட்டு இருந்தேன்..//

    ஆமா கண்ணா. எனக்கே அங்குபோய்தான் தெரியும்..

    /அப்புறம் இந்த பதிவுல பட்டையை கிளப்பி இருக்கீங்க../
    /

    அப்படியா மிக்க சந்தோஷம்...

    பதிலளிநீக்கு
  29. /பீர் | Peer கூறியது...
    நல்ல கவரேஜ். இப்படியே ஒவ்வொரு பதிவாக படித்தால், நானும் கலந்துகொண்ட உணர்வு வந்துவிடும். :)/

    ஆகா இதுகூட நல்லாயிருக்கே. சந்தோஷம் பீர் அண்ணா..

    பதிலளிநீக்கு
  30. சென்ஷி கூறியது...
    //விசிலும் கைதட்டலும் யூத்தல்லவா [ஹங் ஹங் எல்லாரையும் இல்லைங்கோ//

    ஹங்.. ஹங்... என்ன இருமல்ல துருப்பிடிச்சிருக்கா :)/

    அட ஆமாங்க இருமல் வந்தப்ப[ நீங்க போனபதிவர்கூட்டத்தில் பாய் பாயை எடுத்துக்கிட்டு சுத்தினதபார்ததும்] துருப்பிடுச்சிடுச்சிங்க..

    பதிலளிநீக்கு
  31. என்னமோ போங்க

    எல்லாம் நல்லாயிருந்தா சரிதான்.

    (வித்தியாசம கமெண்ட் போட்டாத்தான் நம்மளையும் கவணிப்பாங்க :) )

    பதிலளிநீக்கு
  32. /அண்ணாமலையான் கூறியது...
    மொத்தத்துல பிரியானி கிடைச்சுதா இல்லயா?/

    என்ன அண்ணாமலையாரே நீங்க [இன்னோருமொற ]இடுகைய படிங்க.

    அப்பத்தான் பிரியாணி கிடைச்சுதா இல்லையான்னு தெரியும்..

    பதிலளிநீக்கு
  33. sarusriraj கூறியது...
    ம்... நானும் பதிவர் தான், நானும் பதிவர் தான் அப்படின்னு வடிவேல் குரல கூவிட்டிங்க /

    என்ன செய்றது சாருக்கா நிலமை
    அப்படி

    .// நல்லா இருந்தது .//

    என்ன நான் கூவினதா.. ரொம்ப நன்றி சாருக்கா

    பதிலளிநீக்கு
  34. Kanchi Murali கூறியது...
    ஹலோ ஆலினார் அம்புலிமாமா கடையா? ஆமாங்க யார் பேசுறது நாந்தான் அன்புடன் மலிக்கா. சொல்லுங்க என்னவேணும். இல்லைங்க ஏற்கனவே ஆர்டர் கொடுத்திருக்கேன் பதிவர்கூட்டத்துக்குன்னு சொல்லி முடிக்கு முன் ஓ அதுவா, நீங்க கேட்டிருந்த அத்தனையும் எங்க சிலவிலேயே அனுப்பிச்சாச்சி, எல என்னசொல்தீகன்னே அதாம்மா வாழ்க கோசம்போட 50 ஆள். டிரம்ஸ் வாசிக்கிர கோஸ்டி. வாட்டர்ஃப்ரூப் மேடை செட்டிங்.[அட அடிக்கடி மழை வந்துக்கிட்டு கிடக்குல்ல அதுக்குதேன்] என எல்லாம் அனுப்பியாச்சி, ஏங்க நானும் பதிவர்தாங்கர பேனரு ன்னு இழுத்தப்ப"

    பதிவர் கூட்டத்தில் நானும் பங்கேற்றது போல ஓர் நேரடி ஒலிபரப்பு!
    சூப்பர்!/

    ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிங்க.. வருகைக்கும் நட்பான கருத்துக்கும் மிக்க நன்றி..

    நட்புடன்..... காஞ்சி முரளி/

    நட்புடன் மலிக்கா..

    பதிலளிநீக்கு
  35. /அக்பர் கூறியது...
    நேரில் பார்த்த மாதிரியே உணர்வு.

    நல்ல பகிர்வு. நன்றி./

    ஓ சந்தோஷம் சந்தோஷம்
    மிக்க நன்றி அக்பர்..

    பதிலளிநீக்கு
  36. aazhimazhai கூறியது...
    ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க !!! படிக்க ஆர்வமா இருந்தது !!! நகைசுவையோடும் இருந்தது !!!/

    மிகுந்த மகிழ்ச்சி தோழி கல்யாணி நன்றி..




    T.V.Radhakrishnan கூறியது...
    நல்ல பகிர்வு.

    மிக்க நன்றி ராதாகிருஸ்ணன்

    பதிலளிநீக்கு
  37. Jaleela கூறியது...
    //வயிறுகுலுங்க சிரிக்கவைத்தது [காசுகொடுக்காமல் ஓசியில் தியேட்டரில் இருந்து சிரித்தது இன்னும் சிரிக்கச்சொன்னது] அப்பப்பா தியேட்டர் தோற்றதுபோங்க விசிலும் கைதட்டலும் யூத்தல்லவா [ஹங் ஹங் எல்லாரையும் இல்லைங்கோ] சரி போனா போகுது அன்றிருந்த அனைத்து யூத்தும் ஒன்றிணைந்து சிரித்தகாட்சி மறக்கமுடியாத நிகழ்ச்சி.//

    /மலிக்கா சரியான காமடியுடன் எழுதியிருக்கீங்க, நீங்கள் உங்க ஊர் காரர் அபு அஃப்ஸ்ரை சந்த்தித்து உங்களுக்கு ரொம்ப சந்தோஷத்தை தந்திருக்கும். அடுத்த முறையும் இதே போல் போய் வந்து பதிவு போடுங்கள். இதே நல்ல ஒன்று விடாம விளக்கமா போட்டு விட்டீர்கள்/

    எல்லாம் உங்களுக்காகத்தான் ஜலீலாக்கா. இப்ப கண்ணுவழியா புகை வருதா? அதுசரி அடுத்ததும் நான்மட்டும் போறதா நீங்க இல்லாமாலா நெவர்..

    பதிலளிநீக்கு
  38. // அதுசரி உம்பேரு என்னசொன்னேன்னாரு அட நந்தாங்க பதிவர் அன்புடன் மலிக்கா. சரியாபோச்சிபோ இன்னுமா நீ கிளம்பள அங்கே படம்போட்டு பொட்டிய தூங்கி பிரியாணிபோட்டு சட்டிய தூக்கிப்பாகளே என்ன நீ பொளைக்கத்தெரியாத புள்ளயா இருக்கியே இதுக்கெல்லாம் முன்னாடியே போய் துண்டப்போடக்கூடாதா ன்னு சொல்லிகிட்டே இருக்கும்போது டக்குன்னு போனவச்சிட்டு மணியப்பாத்தா மதியம் 2.. //

    அட என்னம்மா இவ்வளவு லேட்டாவா போறது. நானா இருந்தா பிரியாணிக்கு முதல்ல போய் வேட்டியைப் போட்டு ரிசர்வ் செய்துருப்பேன். பரவாயில்லை. பிரியாணி எப்படி இருந்ததுன்னு சொல்லவேயில்லை. நன்றி மலிக்கா.

    பதிலளிநீக்கு
  39. / Jaleela கூறியது...
    //அடுத்த தடவை நிச்சயம் கையில் பேனரோடு வந்துவிடுகிறேன் என எனக்குள் சொல்லிக்கொண்டு நடையைகட்டினேன்] //

    அது சரி/

    சரியோ சரி ஜலீலாக்கா..

    பதிலளிநீக்கு
  40. S.A. நவாஸுதீன் கூறியது...
    ரொம்ப சந்தோசமாவும் இருக்கு, நாம கலந்துக்க முடியாமப்போச்சேன்னு வருத்தமாவும் இருக்கு.

    ஓஹ். மாலிக்கும் வந்திருந்தானா. சரிதான்.

    விழா சிறப்பாக இருந்திருக்கு. மாஷா அல்லாஹ்.

    வாழ்க வளமுடன்./


    ரொம்ப சந்தோஷமாக இருந்தது நவாஸண்ணா. 10, 13. வருடங்களிருக்குமுன்னு நினைக்கிறேன்
    ஊரில் பார்த்தஞாபகம் மாலிக்கை..

    இருந்தாலும் அடையாளம் கண்டுகொண்டேன்.

    நம்ம ஊர்வாசிகாளக நிறைய பேர்கள் எழுதுவதுகண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது..

    மிக்க நன்றி நவாஸண்ணா..

    பதிலளிநீக்கு
  41. அபுஅஃப்ஸர் கூறியது...
    ஆஹா லைவ் கமெண்டரி க்ளாஸ் போங்க...

    //நானும் பதிவர்தான் நானும் பதிவர்தான் ன்னு போட்டு ஒரு பேனர் கேட்டிருந்தேன் கையில் பிடித்திருந்தாலாவது//

    நானும் கூட அந்த பேனரை புடிச்சிக்கிட்டு வந்திருக்கனும், அவ்வளவு பதிவர்கள்

    //நாங்க ஒரே தெருவுக்காரங்கப்பா..
    ரொம்ப வருசமாச்சில்லன்னு பேசியதில் மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது..
    //

    இந்த பதிவுலகம் எப்படியெல்லாம் சேர்த்து வைக்குது என்பது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி.../

    எதிரே பார்க்கதாத ஒன்று அதிர்ச்சியாக இருந்தாலும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி.

    பதிவுலகம் பழைய நாட்க்களையும் திருப்பிபோடவைக்கிறது....

    பதிலளிநீக்கு
  42. ஹுஸைனம்மா கூறியது...
    மலிக்கா, ஒண்ணுவிடாம அப்படியே வரிசையா எழுதிட்டீங்க. நீங்க போனது ஜின்னா அவர்கள் ஒரு சிறு உரையாற்றினார்கள். அதுமட்டும்தான் நீங்க மிஸ் பண்ணது./

    ஆமாம் ஹுசைன்னம்மா. அவர்களின் உரையை மிஸ்பண்ணிட்டேன்..

    /நீங்க அபூ அப்ஸரிடம் நான் யாருன்னு தெரியுதான்னு கேட்க, அவர் என்ன பதில் சொல்லன்னு தெரியாம பேய்முழிமுழிச்சதும் எனக்கு நினைச்சு நினைச்சு சிரிப்பா வந்துது./

    பின்னே 10 15.. வருடங்களூக்கு முன் சிறுவயது பசங்களாக பார்த்துகொண்டது. இடையிலே இதுவரையிலும் பார்த்தைல்லை அல்லவா? அதனால இருக்கும் அதிலும் நான் முகம் திறந்திருந்தாலாவது கொஞ்சம் விளங்கியிருக்கும்..

    எப்படியோ போகனும் இருவரும் பிளான்பண்ணிபோய்விட்டுவந்து இப்படி பதிவும் போட்டுவிட்டோம் இப்ப சந்தோஷமா?

    பதிலளிநீக்கு
  43. அருமையாக எழுதியிருக்கீங்க

    நன்றி!!!!!

    பதிலளிநீக்கு
  44. / நாஸியா கூறியது...
    ஆஹா.. நல்லா என்ஜாய் பண்ணியிருக்கீங்க.. என்ன பண்ணுறது என்னால தான் வர முடியல இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை பாப்பொம்../

    நீங்க இல்லாமல் என்ஜாயா? நாஸியா வாங்க அடுத்தமுறை வந்தா உங்களுக்கும் தெரியும். எப்படின்னு

    /நாங்களும் வெள்ளிக்கிழமை அன்னைக்கு டேஸ்டி பிரியாணிதான் சாப்பிட்டோமே! :)/

    ஹய் நாங்களும் எங்கவீட்டில் நெய்சோறும் கறியும் துண்ணுட்டுதானே போனோம் [பிரியாணியா துண்ணு சலிச்சிபோச்சி]

    பதிலளிநீக்கு
  45. /புலவன் புலிகேசி கூறியது...
    உங்களுக்குள்ள இவ்வளவு நகைச்சுவையா...?/

    ஏன் புலி நம்பமுடியலையா. சும்மா பேசுகிறதுபோல் எழுதினேன் நல்லாதான் ஒர்கவுட் ஆகுது.. கண்டினிவ் பண்ணலாமோ..

    பதிலளிநீக்கு
  46. /பிரபாகர் கூறியது...
    சகோதரி, பதிவுலகில் கிடைக்கும் நல்ல விஷயங்களின் மிக முக்கியமாக கருதுவது நல்ல நண்பர்கள் கிடைப்பது...

    மிக நன்றாய் எழுதியிருக்கிறீர்கள்...

    பிரபாகர்./

    வாஸ்துவம்தான் அண்ணா. நல்ல நட்புகள் கிடைப்பது சந்தோஷம்..

    மிக்க நன்றி பிரபாகரண்ணா..

    பதிலளிநீக்கு
  47. /ஸாதிகா கூறியது...
    மலிக்கா,நீங்கள் விவரித்து இருப்பது எந்த ஊர் பேச்சு?வழக்கு?தஞ்சையும்,சென்னையும்,தென்மாவட்டமும் கலந்த கலவை ரசிக்கும் படியாக இருந்தது./

    வாங்க ஸாதிக்காக்கா. ஓ அதுவா எல்லாம் கலந்த கலவைன்னு நீங்களே சொல்லிட்டீங்க அதான் ஆலினார் அம்புலிமாமா, என்ன சரிதானேக்கா..

    /நீங்களும்,உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான அபு அஃப்ஸரும் சந்தித்தது நல்ல சர்ப்ரைஸ்./

    ஆமாங்கா சந்தோஷம் கலந்த ஆச்சர்யம்..

    பதிலளிநீக்கு
  48. கிளியனூர் இஸ்மத் கூறியது...
    நல்ல கலக்கல்

    மிக்க நன்றி இஸ்மத் அவர்களே..


    SanjaiGandhi™ கூறியது...
    :))))//

    அம்மாடியோ பெரிய கமெண்ட் போட்டதுக்கு பாராட்டுக்கள் சஞ்சய்..

    பதிலளிநீக்கு
  49. /ஜீவன்பென்னி கூறியது...
    "ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தூள்கிளப்பிய பதிவர்கூட்டம்"

    இது ஒரு நேரடி ஒளிபரப்பு./

    ஆகா உங்கள் கருத்துல் கிடைத்தது மகிழம்பூ..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. ஜீவன்பொன்னி..

    பதிலளிநீக்கு
  50. /குசும்பன் கூறியது...
    அருமையாக தொகுத்து எழுதியிருக்கீங்க./

    வாங்க வாங்க குசும்பன்.. மிகுந்த மகிழ்ச்சி வந்ததற்கும் கருத்துக்கள் தந்தமைக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  51. ராஜவம்சம் கூறியது...
    மன்னிக்கனும் நான் பதிவைப்பத்தியோ பதிவர்சந்திப்பைப்பற்றியோ எதையும் சொல்லப்போவது இல்லை இந்தப்பதிவை படிக்கும் போது என் முன் தோன்றியது முகம் தெரியாத மச்சான் ஞாபகம் தான்

    எத்தனை பெயருக்கு உங்களைப்போல் அமையும்

    அல்ஹம்துலில்லாஹ்//

    நிச்சியம் சத்தியமான வார்தைகள் அமைவதும் அமைத்துதருவதும் ஆண்டவனின் அருள்.
    அதை அன்பாக பேணிகபாதுகாத்துக்கொள்வது நம்முடைய கையில்..

    கொடுத்துவைத்தவள் என்றுசொல்லிக்கொள்வதில் பெருமையெனக்கு..

    //அவசரத்தில் உள்ளேன் பிரகு விபரமாக எழுதுகிரேன்..//

    வாந்து பொருமையா எழுதுங்கள் மிக்க நன்றி ராஜவம்சம்..

    பதிலளிநீக்கு
  52. /நட்புடன் ஜமால் கூறியது...
    என்னமோ போங்க

    எல்லாம் நல்லாயிருந்தா சரிதான்.//

    //(வித்தியாசம கமெண்ட் போட்டாத்தான் நம்மளையும் கவணிப்பாங்க :) )//


    வாங்க வாங்க ஜமாலண்ணா. வரும்போதே நல்லாயிருந்தா சரிதான்ன்னு கடமைக்கு சொல்வதுபோலிருக்கு ஹா ஹா

    [வித்தியாசமாக பதில் சொன்னாத்தான் என்னையும் கவனிப்பாங்கா]

    தாங்களின் முதல் வருகைக்கும் வித்தியாசமான கமெண்ட்டுக்கும் மிக்க மகிழ்ச்சி இதேபோல் தொடந்து வித்தியாசமாக கருத்தச்சொல்ல வாங்க..

    பதிலளிநீக்கு
  53. பித்தனின் வாக்கு கூறியது...
    // அதுசரி உம்பேரு என்னசொன்னேன்னாரு அட நந்தாங்க பதிவர் அன்புடன் மலிக்கா. சரியாபோச்சிபோ இன்னுமா நீ கிளம்பள அங்கே படம்போட்டு பொட்டிய தூங்கி பிரியாணிபோட்டு சட்டிய தூக்கிப்பாகளே என்ன நீ பொளைக்கத்தெரியாத புள்ளயா இருக்கியே இதுக்கெல்லாம் முன்னாடியே போய் துண்டப்போடக்கூடாதா ன்னு சொல்லிகிட்டே இருக்கும்போது டக்குன்னு போனவச்சிட்டு மணியப்பாத்தா மதியம் 2.. //

    /அட என்னம்மா இவ்வளவு லேட்டாவா போறது. நானா இருந்தா பிரியாணிக்கு முதல்ல போய் வேட்டியைப் போட்டு ரிசர்வ் செய்துருப்பேன். பரவாயில்லை. பிரியாணி எப்படி இருந்ததுன்னு சொல்லவேயில்லை. நன்றி மலிக்கா./

    அதுசரி அவுகளா நீங்க!!!!!
    நாந்தான் பிரியாணியை கண்ணாலையே பார்கலையே! ஏன்னா நந்தான் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டுதானேபோனேன்,
    மணி 2,10. ச்சி அதான் லேட்டாச்சி..

    மிக்க நன்றி பித்தன் சார்..

    பதிலளிநீக்கு
  54. /ராம் கூறியது...
    அருமையாக எழுதியிருக்கீங்க

    நன்றி!!!!!/

    வாங்க ராம். வந்தமைக்கும் கருத்துக்கள்தந்தமைக்கும் மிகுந்த மகிழ்ச்சி. மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  55. வரும்போதே நல்லாயிருந்தா சரிதான்ன்னு கடமைக்கு சொல்வதுபோலிருக்கு ஹா ஹா]]

    கடமையேன்னு சொல்லலைமா

    சொல்வது கடமைன்றதால் சொன்னேன்


    இனி வருவோம்ல :)

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது