நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இப்படியும் சில





வெட்டிக்கொண்டே
இருந்தநேரத்திலும்
தாலாட்டும் காற்றுக்குள்
தலைகோதிக்கொண்ட மரங்கள்..


மடித்துக்கிடந்த
எச்சில் இலையில்
மிச்சம் மீதீ தேடிய
பிஞ்சுவிரல்கள்..

சாக்கடைநாத்தத்தில்
முக்குளிப்பதால்
சந்ததிகளின் தேகத்தில்
சந்தனவாசம்..

இடையோரத்தில் குறுகுறுத்தது
முதலாளியின் கண்
இழுத்துமூடிய முந்தானையில்
இருமழழையின்முகம்..

ஆறடிஉயரம் அந்தரத்தில்
தொங்கியது
அரைசாண் வயிற்றுக்கு
ஆகாரம் வேண்டி..

விடியவிடிய கத்தியது
காவலுக்கிருந்த நாய்
கழுத்தில்கட்டிய கயிற்றை
தளர்த்திவிடச்சொல்லி..

தன்வம்சத்தை
விருத்தியாக்கிவிட்டு
தன்னை சாய்த்துக்கொள்ளும்
வாழை..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

32 கருத்துகள்:

  1. தியாகங்களை பட்டியலிட்டு அழகாக சொல்லி இருக்கிங்க மலிக்கா. எளிமையான நடை, கருத்துக்களின் ஆழம் இவையே தங்கள் கவிதைகளின் ப்ள்ஸ் பாயின்ட்!!

    பதிலளிநீக்கு
  2. வாவ்

    அருமை அருமை அருமை.

    தலைகோதிய மரங்கள், பிஞ்சு வரல்கள், சந்தனவாசம், மழலையின் முகம் என ஒவ்வொன்றும் க்ளாஸ்.

    பதிலளிநீக்கு
  3. எப்பவுமே வித்தியாசமான சிந்தனைகள்.இன்னும் விரியட்டும்.

    பதிலளிநீக்கு
  4. ஆழமாக கருத்துக்கள் அடங்கிய கவிதை நல்லாயிருக்கு..

    பதிலளிநீக்கு
  5. வெட்டிக்கொண்டே
    இருந்தநேரத்திலும்
    தாலாட்டும் காற்றுக்குள்
    தலைகோதிக்கொண்ட மரங்கள

    ரொம்ப நல்ல்ல இருக்கு

    பதிலளிநீக்கு
  6. நல்லா இருக்குங்க எல்லாமே.

    பதிலளிநீக்கு
  7. //விடியவிடிய கத்தியது
    காவலுக்கிருந்த நாய்
    கழுத்தில்கட்டிய கயிற்றை
    தளர்த்திவிடச்சொல்லி..
    //

    என்ன சொல்ல மலிக்கா பின்றீங்க...

    பதிலளிநீக்கு
  8. மீண்டும் மீண்டும் வரதூண்டுகிறது இவ்வலைபூவிற்கு..அத்தனை கவிகளும் அருமை பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  9. அழகான வரிக்கவிதைகள். பாராடுக்கள்.

    பதிலளிநீக்கு
  10. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் தோழி. நல்லாருக்கு.

    பதிலளிநீக்கு
  11. பாராட்டுக்கள் மலிக்கா. நான் இப்பதான் முதலாவ்தா உங்கள் பதிவ பாக்கறேன். பெயர்க்காரணம்?(ஏதவது இருந்தா)(மலிக்கா? அல்லது மல்லிகா?)

    பதிலளிநீக்கு
  12. ஒவ்வொரு கருத்தும் அருமை

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  13. /அண்ணாமலையான் கூறியது...
    பாராட்டுக்கள் மலிக்கா. நான் இப்பதான் முதலாவ்தா உங்கள் பதிவ பாக்கறேன். பெயர்க்காரணம்?(ஏதவது இருந்தா)(மலிக்கா? அல்லது மல்லிகா?)/

    முதல்வருகைக்கும் பார்ராட்டுகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அண்ணாமலையரே தொடர்ந்துவாருங்கள்..

    என் பெயர் மலிக்கா... மல்லிகா அல்ல

    பதிலளிநீக்கு
  14. உங்கள் கவிதையில் முதிர்ச்சி தெரியுதுங்க.

    ஸூப்பர்

    பதிலளிநீக்கு
  15. "Sinna sinna varthaikalil periya periya visayankalai sooli eruntheerkal"

    Varikali puthukavithaiyin nadai puthitha irrunthathu....

    unkal kavithaikalil thedal irrukirathu...

    nalla ilakiyavathi neenkal!

    - trichy syed

    பதிலளிநீக்கு
  16. நானும் புதுசா வந்திருக்கிறேன். என்னையும் உங்களின் வலைக் குழாமில் இணைத்துக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  17. /SUFFIX கூறியது...
    தியாகங்களை பட்டியலிட்டு அழகாக சொல்லி இருக்கிங்க மலிக்கா. எளிமையான நடை, கருத்துக்களின் ஆழம் இவையே தங்கள் கவிதைகளின் ப்ள்ஸ் பாயின்ட்!!/

    மிகுந்த மகிழ்ச்சி ஷஃபியண்ணா.
    புத்தம்புது பொழிவுடன் மீண்டும் ஷபியண்ணா வந்தமைக்கு மிக்க நன்றி..




    /பூங்குன்றன்.வே கூறியது...
    பலே..பலே..கருத்துள்ள கவிதை தோழி./

    மிக்க நன்றி தோழமையே..

    பதிலளிநீக்கு
  18. /S.A. நவாஸுதீன் கூறியது...
    வாவ்

    அருமை அருமை அருமை.

    தலைகோதிய மரங்கள், பிஞ்சு வரல்கள், சந்தனவாசம், மழலையின் முகம் என ஒவ்வொன்றும் க்ளாஸ்./

    சந்தோசம் நவாஸண்ணா..



    / பெயரில்லா கூறியது...
    very nice

    /
    மிக்க நன்றி பெயரில்லதவங்களே.

    பதிலளிநீக்கு
  19. /ஹேமா கூறியது...
    எப்பவுமே வித்தியாசமான சிந்தனைகள்.இன்னும் விரியட்டும்./

    நிச்சியமாக விரிவடைசெய்யனும் தோழி..


    /வாசமுடன் கூறியது...
    ஆழமாக கருத்துக்கள் அடங்கிய கவிதை நல்லாயிருக்கு../



    மிக்க நன்றி வாசமுடன்//

    பதிலளிநீக்கு
  20. /கமலேஷ் கூறியது...
    வெட்டிக்கொண்டே
    இருந்தநேரத்திலும்
    தாலாட்டும் காற்றுக்குள்
    தலைகோதிக்கொண்ட மரங்கள

    ரொம்ப நல்ல்ல இருக்கு//

    மிக்க நன்றி கமலேஷ்..

    /திருச்சி சையது கூறியது...
    karuththukkaL wiRaiwtha kavithai
    //


    மிக்க நன்றிதிருச்சி சையது ..

    பதிலளிநீக்கு
  21. /வானம்பாடிகள் கூறியது...
    நல்லா இருக்குங்க எல்லாமே./

    மிக்க நன்றி வானம்பாடிகள்..


    //sarusriraj கூறியது...
    கவிதை ரொம்ப நல்லா இருக்கு//

    மிக்க நன்றி சாருக்கா..

    பதிலளிநீக்கு
  22. /புலவன் புலிகேசி கூறியது...
    //விடியவிடிய கத்தியது
    காவலுக்கிருந்த நாய்
    கழுத்தில்கட்டிய கயிற்றை
    தளர்த்திவிடச்சொல்லி..
    //

    என்ன சொல்ல மலிக்கா பின்றீங்க...//

    மிக்க நன்றி தோழனே..

    பதிலளிநீக்கு
  23. /ஜீவன் கூறியது...
    மீண்டும் மீண்டும் வரதூண்டுகிறது இவ்வலைபூவிற்கு..அத்தனை கவிகளும் அருமை பாராட்டுக்கள்..

    மிக்க நன்றி ஜீவன்..





    /நிலாமதி கூறியது...
    அழகான வரிக்கவிதைகள். பாராடுக்கள்./

    பாராட்டுக்களுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி..

    பதிலளிநீக்கு
  24. கவிதை(கள்) கூறியது...
    ஒவ்வொரு கருத்தும் அருமை

    வாழ்த்துக்கள்

    விஜஜ்//


    மிக்க நன்றி சகோதரரே..

    பதிலளிநீக்கு
  25. /விக்னேஷ்வரி கூறியது...
    தேர்ந்தெடுத்த வார்த்தைகள் தோழி. நல்லாருக்கு./


    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்ரி தோழி மீண்டும் மீண்டும் வருக,..

    பதிலளிநீக்கு
  26. /ராஜவம்சம் கூறியது...
    உங்கள் கவிதையில் முதிர்ச்சி தெரியுதுங்க.

    ஸூப்பர்//

    தேங்ஸ் ராஜவம்சம்..

    பதிலளிநீக்கு
  27. /மலர்வனம் கூறியது...
    "Sinna sinna varthaikalil periya periya visayankalai sooli eruntheerkal"

    Varikali puthukavithaiyin nadai puthitha irrunthathu....

    unkal kavithaikalil thedal irrukirathu...

    nalla ilakiyavathi neenkal!//


    தொடர்ந்த வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மலர்வனம்...

    பதிலளிநீக்கு
  28. /நினைவுகளுடன் -நிகே- கூறியது...
    நானும் புதுசா வந்திருக்கிறேன். என்னையும் உங்களின் வலைக் குழாமில் இணைத்துக் கொள்ளுங்கள்/


    புத்தம் புதிய மலரே வருக இணைத்துக்கொண்டாச்சி நிகோ..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது