நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இறையில்லம்



இடித்து தள்ளப்பட்டது இறையில்லம்
   அதற்கு தீர்வே தெரியவில்லையே
இன்றுவரையும்

மனிதம் மீறிப்பட்டது சிலமனிதமிருகங்களால்
  அதற்கு முடிவே தெரியவில்லையே
இன்றுவரையும்

வந்திடுமே நல்தீர்பென்று வருடங்கள்
   பதினேழையும்கடந்தும் வந்திடவில்லையே
இன்றுவரையும்

பிறர்மதத்தை இழிவாய் நினைத்து
  தன்மதத்தை உயர்த்தும் மனிதன்
மனிதனில் சிறந்தவனா?

மனிதமனங்களை கொன்றுசிதைத்து
  அதில் மகிழ்வுகாணும் மனிதன்
மனிதனில் புனிதவனா?

மனிதா மனிதா கேள்கேள்
  மனசாட்சியிருந்தால்
அதைகேள்

நீ செய்தது சரியா பிழையா
  இது மாபெரும்
பாவமில்லையா?

மனிதனாய் பிறந்துவிட்டு
  மனசாட்சியைகொன்றது
முறையா?

எப்போது கிடைத்திடும் நியாயம்
அதற்காக வேண்டுகிறோம் நாளும்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

15 கருத்துகள்:

  1. இறைவனை நேசி இன்பம் பெறுவாய் என்கிறீர்கள், அங்கே தான் பிரச்சினையே, மதத்துக்கு ஒரு கடவுள், ஜாதிக்கு ஒரு கடவுள், குலத்துக்கு ஒரு கடவுள், குடும்பத்துக்கு ஒரு கடவுள், தனி மனிதனுக்கு ஒரு கடவுள், அப்புறம் தனி மனிதனுக்கே இரண்டு மூன்று கடவுள் வரை போய் விட்டது.

    கவிக்கோவோ அல்லது மு.மேத்தாவோ எழுதிய கவிதை ஒன்று உண்டு,
    இறையில்லம் இடித்தான்
    ஏனென்றேன்
    இறைவனுக்கு இல்லம்
    கட்ட என்கிறான்

    கடவுளை நம்பாத ஏற்காத நாத்திகர்கள் தி.க. தோழர்கள் சொன்னார்கள், கடவுள் இல்லை என்று சொன்ன்னவன் இது வரை எந்த கோவிலையும் இடித்ததில்லை. இடித்தவர்கள் எல்லாம் கடவுள் இருக்கிறது என்று சொல்கிறவர்கள் தான்.

    மசூதி இடிக்கப்பட்டவுடன் பால்தாக்கரே இப்படி சொன்னார்,
    இடித்தவர்களில் சிவசேனாவினரும் இருந்தால் மகிழ்ச்சி
    காண்ட்ராக்டர்களை கூப்பிட்டு இடிக்க சொன்னால் கூட இவ்வளவு சீக்கிரம் இடித்து தள்ளியிருக்க மாட்டார்கள், கரசேவகர்கள் செய்தார்கள்

    வைரமுத்து எழுதினார்

    மாண்புமிகு மதவாதிகளே

    சில கேள்விகள் கேட்பேன்
    செவி தருவீரா?

    அயோத்திராமன்
    அவதாரமா? மனிதனா?

    அயோத்திராமன்
    அவதாரமெனில்
    அவன்
    பிறப்புமற்றவன்
    இறப்புமற்றவன்

    பிறவாதவனுக்கா
    பிறப்பிடம் தேடுவீர்?

    அயோத்திராமன்
    மனிதன்தான் எனில்
    கர்ப்பத்தில் வந்தவன்
    கடவுள் ஆகான்
    மனிதக் கோயிலுக்கா
    மசூதி இடித்தீர்?

    -

    உங்களின் கவிதை கிடைக்காத ஒன்றை தேடுகிறது, நியாயத்தை தான் சொல்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. இடிக்கப்பட்டது பள்ளி அல்ல
    ஆயிரம்கோடி இஸ்லாமியர்களின்
    இதயங்கள்

    பதிலளிநீக்கு
  3. 17 வருடங்களாய் அறிக்கை மட்டுமே தயார் செய்து கொண்டு இருக்கிறார்கள். இனி விசாரணை, தீர்ப்பு, தண்டனை எத்தனை வருடங்களோ.

    தாமதமாக வழங்கப்பட்ட தீர்ப்பு நிராகரிக்கப்பட்ட தீர்ப்பு என்பது அவர்களே சொன்னதுதான். அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது அரசு.

    பதிலளிநீக்கு
  4. 17 வருடம் ஓடிவிட்டாலும் இடித்த அன்றுதான் அனைவரும் நினைவு கூறுகிறார்கள், அதை மீட்க வேண்டும் என்ரு போராடுகிறோம். இடிக்கப்பட்டாலும் அங்கே பூஜைகள் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது அதற்கு அங்கே உள்ள அரசாங்கமும் ஒத்துப்போகிறது. நாம் தீர்ப்பு வரும் என்று காத்திருக்க வேண்டியதுதான்....

    பதிலளிநீக்கு
  5. நேற்று வசந்த் டிவியில் புலன் விசாரணை பார்த்தேன். காஞ்சிபுரம் காம அர்ச்சகரை பற்றிய நிகழ்ச்சி. அந்த அர்ச்சகர் நல்லவரில்லை. அதோடு முடித்துக்கொள்ளவேண்டும். ஆனால் நிகழ்ச்சி முடிவில் ஒரு நாதாரி பேசுகின்றான், இதுபோல் நிகழ்வுகள் கிறிஸ்டியன் இடமும் உண்டு, இஸ்லாமியநிடமும் உண்டு என்று. இடு தேவையில்லாத பேச்சு. அந்த அர்ச்சகர் நல்லவரில்லை. அதோடு முடித்துக்கொள்ளவேண்டும். இது வசந்த் டிவியின் உள் குத்தா?.

    பதிலளிநீக்கு
  6. மசூதியை இடித்தது கோயில் கட்ட அல்ல,ஒன்றுபட்ட இரண்டு பிரிவு மக்களை பிளக்க.தங்களின் பிரிவினைத் திட்டத்தை வளர்த்துக்கொள்ள. இறைவன் நாடினால் அடுத்த வருடம் டிசம்பர் 6 ல் எந்த ஆர்ப்பாட்டமும் இருக்காது.

    பதிலளிநீக்கு
  7. இந்த காட்டுமிராண்டித்தனம் உலகில் வேறு எங்கும் நிகழ்ந்ததில்லை

    எனது இந்த கவிதையை பாருங்கள்
    http://vijaykavithaigal.blogspot.com/2009/09/blog-post_30.html

    Vijay

    பதிலளிநீக்கு
  8. நல்ல கேட்ருக்கீங்க....ஆனா நீங்க கேட்டதுதான் இங்க கிடைக்கிறது கஷ்டமான விஷயம்....(நியாயம் தான்..வேறென்னா)

    பதிலளிநீக்கு
  9. கிளியனூர் இஸ்மத் கூறியது...

    இடிக்கப்பட்டது பள்ளி அல்ல
    இதயங்கள்

    Yes.

    - Syed

    பதிலளிநீக்கு
  10. /nagoreismail கூறியது...
    இறைவனை நேசி இன்பம் பெறுவாய் என்கிறீர்கள், அங்கே தான் பிரச்சினையே, மதத்துக்கு ஒரு கடவுள், ஜாதிக்கு ஒரு கடவுள், குலத்துக்கு ஒரு கடவுள், குடும்பத்துக்கு ஒரு கடவுள், தனி மனிதனுக்கு ஒரு கடவுள், அப்புறம் தனி மனிதனுக்கே இரண்டு மூன்று கடவுள் வரை போய் விட்டது./

    இறைவனை நேசிக்கச்சொல்வது தவறா? அவரவர்கள் தங்கள் இறைவனை நேசிப்பதில் தவறில்லையே, ஆனால் ஆண்டவனின் பெயரைச்சொல்லி அநியாயங்கள் செய்வதுதான் சரியில்லை என்பது என்கருத்து.

    //உங்களின் கவிதை கிடைக்காத ஒன்றை தேடுகிறது, நியாயத்தை தான் சொல்கிறேன்//

    நம்பிக்கைதானே மனிதவாழ்க்கை கிடைக்கும் என்று நம்பியிக்கிறோம் இறைவனின் நாட்டமிருந்தால் நிச்சயம் நியாயம்கிடைக்கும்என்ற நம்பிக்கையுடன் ..

    தாங்களின் முதல்வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ...

    பதிலளிநீக்கு
  11. /கிளியனூர் இஸ்மத் கூறியது...
    இடிக்கப்பட்டது பள்ளி அல்ல
    ஆயிரம்கோடி இஸ்லாமியர்களின்
    இதயங்கள்/

    மிக்க நன்றி இஸ்மத் அவர்களே..

    //லெமூரியன்... கூறியது...
    நல்ல கேட்ருக்கீங்க....ஆனா நீங்க கேட்டதுதான் இங்க கிடைக்கிறது கஷ்டமான விஷயம்....(நியாயம் தான்..வேறென்னா)//



    மிக்க நன்றி லெமூரியன்..


    /மலர்வனம் கூறியது...
    கிளியனூர் இஸ்மத் கூறியது...

    இடிக்கப்பட்டது பள்ளி அல்ல
    இதயங்கள்

    Yes.

    - Syed/


    மிக்க நன்றி மலர்வனம்..

    பதிலளிநீக்கு
  12. /அபுஅஃப்ஸர் கூறியது...
    17 வருடம் ஓடிவிட்டாலும் இடித்த அன்றுதான் அனைவரும் நினைவு கூறுகிறார்கள், அதை மீட்க வேண்டும் என்ரு போராடுகிறோம். இடிக்கப்பட்டாலும் அங்கே பூஜைகள் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது அதற்கு அங்கே உள்ள அரசாங்கமும் ஒத்துப்போகிறது. நாம் தீர்ப்பு வரும் என்று காத்திருக்க வேண்டியதுதான்..../

    மிக்க நன்றி அபு அஃப்ஸர்..

    /கவிதை(கள்) கூறியது...
    இந்த காட்டுமிராண்டித்தனம் உலகில் வேறு எங்கும் நிகழ்ந்ததில்லை

    எனது இந்த கவிதையை பாருங்கள்
    http://vijaykavithaigal.blogspot.com/2009/09/blog-post_30.html

    Vijay/

    மிக்க நன்றி சகோதரர் விஜய்..

    பதிலளிநீக்கு
  13. /அபுஅஃப்ஸர் கூறியது...
    17 வருடம் ஓடிவிட்டாலும் இடித்த அன்றுதான் அனைவரும் நினைவு கூறுகிறார்கள், அதை மீட்க வேண்டும் என்ரு போராடுகிறோம். இடிக்கப்பட்டாலும் அங்கே பூஜைகள் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது அதற்கு அங்கே உள்ள அரசாங்கமும் ஒத்துப்போகிறது. நாம் தீர்ப்பு வரும் என்று காத்திருக்க வேண்டியதுதான்..../

    மிக்க நன்றி அபு அஃப்ஸர்..

    /கவிதை(கள்) கூறியது...
    இந்த காட்டுமிராண்டித்தனம் உலகில் வேறு எங்கும் நிகழ்ந்ததில்லை

    எனது இந்த கவிதையை பாருங்கள்
    http://vijaykavithaigal.blogspot.com/2009/09/blog-post_30.html

    Vijay/

    மிக்க நன்றி சகோதரர் விஜய்..

    பதிலளிநீக்கு
  14. / S.A. நவாஸுதீன் கூறியது...
    17 வருடங்களாய் அறிக்கை மட்டுமே தயார் செய்து கொண்டு இருக்கிறார்கள். இனி விசாரணை, தீர்ப்பு, தண்டனை எத்தனை வருடங்களோ.

    தாமதமாக வழங்கப்பட்ட தீர்ப்பு நிராகரிக்கப்பட்ட தீர்ப்பு என்பது அவர்களே சொன்னதுதான். அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது அரசு./

    மிக்க நன்றி நவாஸண்ணா..

    பதிலளிநீக்கு
  15. //இப்படிக்கு நிஜாம்.., கூறியது...
    மசூதியை இடித்தது கோயில் கட்ட அல்ல,ஒன்றுபட்ட இரண்டு பிரிவு மக்களை பிளக்க.தங்களின் பிரிவினைத் திட்டத்தை வளர்த்துக்கொள்ள. இறைவன் நாடினால் அடுத்த வருடம் டிசம்பர் 6 ல் எந்த ஆர்ப்பாட்டமும் இருக்காது.//

    சகோதரத்துவத்தை முறியடிக்க முயன்றால் தோல்வியே மிஞ்சும்..
    இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் நாடி ஆர்ப்பட்டம் இல்லாமலே போகட்டும்..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது