பாலைவன பனியில் நனைந்துகொண்டே நடந்துபோது
பொங்கிவந்த மனகுமுறலை பொறுத்திடமுடியாமல்
வெளிறிக்கிடந்த வானத்தையே வெறித்துபார்த்து
வெதும்பிகரைந்தது கண்ணீர்
பத்துக்கு பதிமூன்றை நம்பி
இருந்தெல்லாம் விற்று போதாகுறைக்கு
பத்துக்கு பதினைந்தாக வட்டிக்கும்வாங்கி
வெளிநாட்டுக்கு வேலைக்கு வந்தால்
இன்றுபோகுமோ வேலை நாளைபோகுமோ
என்ற நிலைக்கு தள்ளப்பட்டு
அடுத்ததுநானோ அடுத்ததுநானோ என
காலையில் வேலைக்குபோகும் மனம்கலங்கியபடி
ஒவ்வொருநாளும் பொழுதுபோக்கும் அவஸ்தை
அனலில் புளுவாய் துடித்தபடி
குடும்பச்சுமை கடன்சுமை இதற்கு
நடுவே வேலைகள் பறிபோகும்நிலை
என்னசெய்வது என்னசெய்வது என்றெண்ணியபடியே
இருதலைக்கொள்ளியாய் தவித்திடும்மனது
சொட்டச்சொட்ட பனியில் நனைந்தபோதும்
நெஞ்சுக்குள் மட்டும் பற்றி எறிகிறது நெருப்பு
சோறுபோட்ட நாடு சுகம் பெறுமா -இல்லை
சுமைகளின் பாரம் கூடிப்போகுமா?
எல்லாம்வல்ல இறைவன் இருள்நீக்கி
அருள்புரியவேண்டும்
இன்னல்களை போக்கி மகிழ்ச்சியை
தந்திடவேண்டும்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
துபை நிலைமை ரொம்ப மோசமாத்தான் இருக்கும்போல. என்ன பன்றது எங்க ரிஜ்க் இருக்கோ அங்கதான் கிடைக்கும். இருந்தாலும் மனம் பதைப்பதையும் தடுக்கமுடியாதுதான்.
பதிலளிநீக்குஅருமை... அமீரகத்தின் பரிதாப நிலைமையை வேதனையாக சொல்லிருக்கீங்க...
பதிலளிநீக்குநிலைமை படுமோசம்...
அருமையா சொல்லியிருக்கீங்க பெரும்பான்மையா இங்கு வாழு(ரு)ம் அனைவரும் நிலை அப்பட்டமாய் தெரியபடுத்தியிருக்கிறீர்கள்...
பதிலளிநீக்குmmm very nice kavithai
பதிலளிநீக்குஉண்மையின் பிம்பம் இந்த கவிதையில் பிரதிபலிக்கிறது.
பதிலளிநீக்குநல்லா இருக்கு தோழி.
உலக நடப்பை அழகாக பேசுகிறது...
பதிலளிநீக்குஉங்கள் கவிதை...
வாழ்த்துக்கள்...
சதம் தாண்டுனவுடன் அடிச்சி ஆடலானு அடக்கி வாசிச்சிங்களா தொடர்ந்து சமூகசிந்தனையான கவிதைகள் சமூகத்து மிதான உஙகள் பார்வை என்னை வெகுவாக சிந்திக்கவைத்துள்ளது
பதிலளிநீக்குகடவுளை நம்பினோர் கை விடப்படார்
/S.A. நவாஸுதீன் கூறியது...
பதிலளிநீக்குதுபை நிலைமை ரொம்ப மோசமாத்தான் இருக்கும்போல. என்ன பன்றது எங்க ரிஜ்க் இருக்கோ அங்கதான் கிடைக்கும். இருந்தாலும் மனம் பதைப்பதையும் தடுக்கமுடியாதுதான்/
இறைவன் நாடி எல்லாம் நலம்பெறட்டும் ..
/பிரியமுடன்...வசந்த் கூறியது...
பதிலளிநீக்குஅருமையா சொல்லியிருக்கீங்க பெரும்பான்மையா இங்கு வாழு(ரு)ம் அனைவரும் நிலை அப்பட்டமாய் தெரியபடுத்தியிருக்கிறீர்கள்.../
ரொம்ப தேங்ஸ் சகோ..
/நாஞ்சில் பிரதாப் கூறியது...
பதிலளிநீக்குஅருமை... அமீரகத்தின் பரிதாப நிலைமையை வேதனையாக சொல்லிருக்கீங்க...
நிலைமை படுமோசம்.../
எக்ஸ்பிரஸ் வேகத்தில் நலன்கள் வந்து சேரட்டும்..
/பூங்குன்றன்.வே கூறியது...
பதிலளிநீக்குஉண்மையின் பிம்பம் இந்த கவிதையில் பிரதிபலிக்கிறது.
நல்லா இருக்கு தோழி./
மிக்க நன்றி தோழமையே..
/sarusriraj கூறியது...
mmm very nice kavithai/
மிக்க நன்றி சாருக்கா தாங்களின் தொடர்க்கத்தும் மிக்க மகிழ்ச்சி
/கமலேஷ் கூறியது...
பதிலளிநீக்குஉலக நடப்பை அழகாக பேசுகிறது...
உங்கள் கவிதை...
வாழ்த்துக்கள்.../
கருத்துகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கமலேஷ்..
/ராஜவம்சம் கூறியது...
பதிலளிநீக்குசதம் தாண்டுனவுடன் அடிச்சி ஆடலானு அடக்கி வாசிச்சிங்களா தொடர்ந்து சமூகசிந்தனையான கவிதைகள் சமூகத்து மிதான உஙகள் பார்வை என்னை வெகுவாக சிந்திக்கவைத்துள்ளது/
தொடர்ந்துவந்து தங்களின் உற்சாகமான
கருத்துக்களினால் ஊக்கம் தந்தரும் தாங்களுக்கு மிக்க நன்றி..
/கடவுளை நம்பினோர் கை விடப்படார்/
நிச்சியமாக இறைவனின் துணையிருப்பான் என்றென்றும்..
Velinattil valum wulaipalarkal anaivarin manawoodathai eyalpaka... etharthamaka eluthi irruntheeral...
பதிலளிநீக்குSaka manithanin meethu ulla akkaraiyen velippadu ithu...
kadaisiyaka ellarukkum serthu neenkal anndavanidem pirarthanai panniyathu unkal nalla manasai kattiyathu...
Kavingnan enpavan verum karpanil mattum eluthamal... kanavukaloodu mattume valama. ... yatharthamana visayankalaiyum irrukka vendum endru unkal kavithai wunarthiyathu...
nallla manitharkalin pirarthanaikalai kaduvul niraivetri vaippar endru solvarkal...
Neenkal nalla manuchi!
- Trichy Syed
பாலையான வாழ்க்கையைப்
பதிலளிநீக்குபசுஞ்சோலையாய் ஆக்கவே
பாலைவன நாட்டுக்கே
பறந்து வந்த பறவைகள் நாங்கள்...
இச்சையை மறந்தோம்;
இன்பத் தாய்நாட்டை துறந்தோம்;
பச்சிளம் குழந்தைகளை பாராமுகமானோம்;
பணத்தால் வேலியிட்டு உறவுகளை தூரமாக்கினோம்...
இருளகற்றும் மெழுகுவர்த்தியானோம்;
இனிய சுக(ம்)ந்தம் தரும் ஊதுபத்தியானோம்;
"பொருளிலார்க்கு இவ்வுலகில்லை"
பொருள்பதிந்த திருக்குறளுக்கு பதவுரை ஆனோம்;
"இல்லானை இல்லாலும் வேண்டாள்;
ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்;அவன்
சொல் செல்லாமல் போய்விடும்" என்றாள்
ஔவ்வையார் அன்றே......
மூதாட்டியின் மூதுரைக்கும்
முழுமையான விரிவுரை நாங்களே...
பாதாளம் வரை பாயும் பணமே
பாருலகை இயக்குமென்று புரிந்தது மனமே
-"kavianban"KALAM, Adirmapattinam
00971-50-8351499
shaickkalam@yahoo.com