நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அன்னையே அமுதம் தா


அவசர உலகமென்றபோதும்
அன்னை என்றென்றும் அன்னையே!

அழகு குறைந்து விடும் என்று
அழுகிற குழந்தைக்கு அமுதூட்ட
மறுக்கலாமா

ஆபீஸ்போகும் அவசரமானாலும்
அன்னம் ஊட்டிவிட நேரமில்லாமல்
போகலாமா

பெற்றபிள்ளைகளிடம் மனம்விட்டு பேச
பெற்றவளுக்கு நேரமில்லை
பணப்பிடியில் சிக்கிக்கொண்டு
பாசத்தை ஒதுக்கி   பறந்து திரிகிறாள்

பணம்வந்து சேர்ந்தபின்
பந்தபாசம் வந்து கிட்டுமா
தள்ளி தள்ளிபோனப்பின்
சேயின் மனம் ஒட்டுமா

அவசர உலகில் எல்லாம் அத்தியாவசியம்
ஆனால்
அதைவிட பிள்ளைகளின் பாசம் முக்கியம்

மெழுகாய் உருகியபோதும்
சற்றுசாந்தாமாய் பிஞ்சுமனங்களையும்
நுகர்ந்து பாருங்கள்

அவர்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள்
அவர்கள்சொல்வதையும் காதுகொடுத்துகேளுங்கள்
அவர்களுடன் ஒன்றிவிளையாடுங்கள்

சேர்ந்து உண்ணுங்கள்
அணைத்து உறங்குங்கள்
சிரித்து மகிழுங்கள் சிறப்பாய் வாழுங்கள்............

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

15 கருத்துகள்:

  1. இன்றைக்கு மிகவும் தேவையான கருத்து.... பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அருமையான கருத்துள்ள கவிதை

    பதிலளிநீக்கு
  3. அழகான வரிகள்..மலிக்கா..GoodJob.!!
    அம்மா பிடிக்காதவன் உண்டா.?

    இதை படித்ததும் எனக்கு யாரோ சொல்லிய கவிதை நினைவுக்கு வருகிறது அதை பதிவு செய்கிறேன்..
    //வலித்து இருந்தால்
    சொல்லி இருக்கலாமே -உனக்குள்ளே
    மறித்து போயிருப்பே(னே)ன்
    பிறக்க வைத்து
    பிரித்து விட்டாயே
    உன்னிடமிருந்து என்னை ..!
    நிஜமாய் வலிக்கிறது அம்மா ........ ///

    பதிலளிநீக்கு
  4. //வலித்து இருந்தால்
    சொல்லி இருக்கலாமே -உனக்குள்ளே
    மறித்து போயிருப்பே(னே)ன்
    பிறக்க வைத்து
    பிரித்து விட்டாயே
    உன்னிடமிருந்து என்னை ..!
    நிஜமாய் வலிக்கிறது அம்மா ........//

    அடர்த்தியான, அழுத்தமான வரிகள்.

    பதிலளிநீக்கு
  5. பிஞ்சுக்களிடம் நெஞ்சம் நிறை அன்புடன் கொஞ்ச தாங்கள் கூறியிப்பது அருமையிலும் அருமை...

    பிரபாகர்.

    பதிலளிநீக்கு
  6. // சேர்ந்து உண்ணுங்கள்
    அணைத்து உறங்குங்கள்
    சிரித்து மகிழுங்கள் சிறப்பாய் வாழுங்கள்............ //

    ஒரு குழந்தையின் மன நிலையை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள். பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பத்தின் நிலை இதுதான்..

    வெரி நைஸ்..

    பதிலளிநீக்கு
  7. உண்மைதான் மலிக்கா...பலர் பாசம் தொலைத்து பணம் சேர்க்கின்றனர்...

    பதிலளிநீக்கு
  8. //ஆபீஸ்போகும் அவசரமானாலும்
    அன்னம் ஊட்டிவிட நேரமில்லாமல்
    போகலாமா
    //

    யதார்த்தமான் வரிகள்.........

    பதிலளிநீக்கு
  9. அவசரயுகத்தில் பாசம் பின்னுக்குப் போய்விடுகிறது.

    "சேர்ந்து உண்ணுங்கள்
    அணைத்து உறங்குங்கள்
    சிரித்து மகிழுங்கள் சிறப்பாய் வாழுங்கள்...."நல்லகருத்து.

    குழந்தைகள் வேண்டுவது இதைத்தான்.

    பதிலளிநீக்கு
  10. இயந்திர சூழலில் இந்த கவிதை உணர்த்தும் கருத்து மிக அவசியமே!

    பதிலளிநீக்கு
  11. அம்மாக்கு ஈடு இணை உண்டா ?

    எனக்கு இந்த கவிதை ஞாபகம் வருகிறது

    அன்பு என்ற தலைப்பில்
    மிகச்சிறிய கவிதை கேட்டார்கள்

    அம்மா என்றேன் உடனே

    கேட்டது அம்மாவாக இருந்தால்
    இன்னும் சின்னதாக சொல்வேன்
    நீ என்று

    விஜய்

    பதிலளிநீக்கு
  12. மிக நல்ல கவிதை தோழி.அன்னை தானே நம் எல்லோருக்கும் உயிர் கொடுத்த தெய்வம்.அந்த தெய்வத்திற்கு நீங்கள் தரும் சிறிய பரிசு இந்த கவிதை.

    பதிலளிநீக்கு
  13. என்னை ஊக்கப்படுத்தி கருத்துக்கள் தெரிவித்த அத்தனை நெங்சங்களுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்..

    முதல் முறையாக வந்திருக்கும் மாதவி: கருணாகரசு:
    கவிதைகள் விஜய்: தோழமைகளை அன்போடு அழைக்கிறேன், தொடர்ந்துவருமாறும் கேட்டுக்கொள்கிறேன்..

    பதிலளிநீக்கு
  14. அவசர உலகில் எல்லாம் அத்தியாவசியம்
    ஆனால்
    அதைவிட பிள்ளைகளின் பாசம் முக்கியம்

    I like it!

    trichysyed

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது