நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மல்லிகையே


வண்ணமல்லியே வசந்தமல்லியே
வாசம்வீசிடும் வசியக்காரியே

வெள்ளைமேனியில் பச்சை பாவாடை
அணிந்திருக்கும் நீ அழகுதேவதை

உன்பட்டுதேகத்தை
தொட்டுத்தொடுக்கையில்
எந்தன் விரல்களும்
வீணைமீட்டுதே

தொடுத்து முடித்ததும்
தலையில் வைக்கயில்
வாசம் வீசியே
சரங்களும் சரசம்பாடுதே

கொடியில் பூத்து
நீ
கொள்ளை கொள்கிறாய்

கூந்தல் ஏறியே
பலரின்
உறக்கம் கொல்கிறாய்

மணத்தைப்பரப்பியே
மயக்கவைப்பியே
மணப் பந்தலையும்
அலங்கரிப்பியே

சின்னமல்லியே உனக்கொரு
சேதி தெரியுமா
எந்தன் மன்னவன்
உன்னில் மயங்கவில்லையே

நானிருக்கையில்
அவனுக்கு
நீ எதற்கடி
என்கூந்தலுக்குள்
நீ ஒளிந்துகொள்ளடி....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

20 கருத்துகள்:

  1. /// மணத்தைப்பரப்பியே மயக்கவைப்பியே
    மணப் பந்தலையும் அலங்கரிப்பியே ///

    ம்ம்ம்....

    நல்லா இருக்குங்க கவிதை. கலுக்குறீங்க போங்க நானும் இந்த மாதிரி எழுதுவோம்னு பார்த்தா வார்த்தை கோர்வை வர மாட்டேங்குது!!

    பதிலளிநீக்கு
  2. ஒரு மல்லியே
    என்னொரு மல்லியை
    பற்றி கவிதை எழுதுகிறதே
    அடடே !!!
    ரொம்ப நல்லா இருக்குங்கோ...படிக்கும்போதே மணமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. மலிக்கா,

    13ந் தேதி தமிழ்ச்சங்கத்தின் நிகழ்ச்சிகளுக்கு வருவீர்களா?

    பதிலளிநீக்கு
  4. அருமை மலிக்கா.. என்ன ஒரு வார்த்தைகளின் அணிவகுப்பு.. அழகாக எழுதியுள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  5. கற்பனை ரெக்கை கட்டி பறக்குதுங்கோ.......செம சூப்பர்.

    பதிலளிநீக்கு
  6. // எந்தன் மன்னவன் உன்னில் மயங்கவில்லையே

    நானிருக்கையில் அவனுக்கு நீ எதற்கடி
    என்கூந்தலுக்குள் நீ ஒளிந்துகொள்ளடி....//
    ஆகா மல்லிகையை சக்களத்தி ஆக்கிட்டிங்க, பாவங்க அது. உங்களுக்கு எவ்வளவு ஹெல்ப் எல்லாம் பண்ணுது. அதைப் போயி இப்படி சொல்லிவிட்டீர்கள். கொஞ்சம் மாத்தி எழுதுங்க.

    எந்தன் மன்னவன் ஊடல் கொண்டால்
    நீயிருக்கையில் என்ன கவலை தோழி
    என் கூந்தலுக்குள் நீ ஓளிந்து கொண்டு
    மாலையில் மயக்கி என்னை அவன் மாலையாக்கு.

    இது எப்படி இருக்கு. நன்றி மல்லிக்கா....

    பதிலளிநீக்கு
  7. //உன்பட்டுதேகத்தை தொட்டுத்தொடுக்கையில்
    எந்தன் விரல்களும் வீணைமீட்டுதே

    தொடுத்து முடித்ததும் தலையில் வைக்கயில்
    வாசம் வீசியே சரங்களும் சரசம்பாடுதே//

    மல்லிகையின் மென்மை மலிக்கா கவிதைமூலம் அறிகிறேன். நல்ல கவிதை...

    பதிலளிநீக்கு
  8. சின்னமல்லியே உனக்கொரு சேதி தெரியுமா
    எந்தன் மன்னவன் உன்னில் மயங்கவில்லையே

    நானிருக்கையில் அவனுக்கு நீ எதற்கடி
    என்கூந்தலுக்குள் நீ ஒளிந்துகொள்ளடி....

    Rasikka vaithathu...

    Trichy Syed

    பதிலளிநீக்கு
  9. சகல கலா வள்ளி கலக்குங்க ம்ம்ம் வேற என்ன சொல்றது . எல்லா கவிதைகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  10. /ம்ம்ம்....

    நல்லா இருக்குங்க கவிதை. கலுக்குறீங்க போங்க நானும் இந்த மாதிரி எழுதுவோம்னு பார்த்தா வார்த்தை கோர்வை வர மாட்டேங்குது!!/

    நன்றி கேசவன்.. எழுதிப்பாருங்கள்
    மனதுக்குள் மனதைவைத்து, தானாக வரும்...

    பதிலளிநீக்கு
  11. /ஹுஸைனம்மா கூறியது...
    மலிக்கா,

    13ந் தேதி தமிழ்ச்சங்கத்தின் நிகழ்ச்சிகளுக்கு வருவீர்களா?/

    முதலில் மன்னிக்கனும் லேட்டாய் பதிலிடுவதற்க்கு..

    இல்லைமா இந்த வாரம் நாங்க துபைய தாண்டி வெளியே போகிறோம்
    தூரமாய்.. ஆதலால் வரயிலாதுமா நிச்சயம் ஒருநாள் உங்களை சந்திப்பேன்..

    பதிலளிநீக்கு
  12. அப்படியா மலிக்கா. சரி, இன்ஷா அல்லாஹ் பிறிதொரு முறை சந்திப்போம். வேறு யாராவது பதிவர்கள் வருகிறார்களா என்று தெரியுமா? முடிந்தால் மெயில் அனுப்புங்களேன். hussainamma@gmail.com

    பதிலளிநீக்கு
  13. மலிக்கா உங்கள் மணம் வீசும் மல்லிகை பதிவு சூப்பர்/

    பதிலளிநீக்கு
  14. / S.A. நவாஸுதீன் கூறியது...
    மல்லிகை நல்ல மனம் மலிக்கா./

    மணமணக்கும் கருத்துக்களை தொடர்ந்து தந்துகொண்டிருக்கும் அன்பான நவாஸண்ணாவுக்கு. மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  15. /பூங்குன்றன் வேதநாயகம் கூறியது...
    ஒரு மல்லியே
    என்னொரு மல்லியை
    பற்றி கவிதை எழுதுகிறதே
    அடடே !!!
    ரொம்ப நல்லா இருக்குங்கோ...படிக்கும்போதே மணமாக இருக்கிறது./

    அடடா பூங்குன்றாமே பூக்களை வாழ்த்துதே.. மிகவும் மகிழ்ச்சிங்கோ

    பதிலளிநீக்கு
  16. புலவன் புலிகேசி கூறியது...
    அருமை மலிக்கா.. என்ன ஒரு வார்த்தைகளின் அணிவகுப்பு.. அழகாக எழுதியுள்ளீர்கள்..

    மிகவும் சந்தோஷம்.புலிகேசி


    /ஷ‌ஃபிக்ஸ்/Suffix கூறியது...
    கற்பனை ரெக்கை கட்டி பறக்குதுங்கோ.......செம சூப்பர்./

    ஆமாங்கோ மணவிசூம் கருத்துக்களோடு மனம் ரெக்கைகட்டுத்துங்கோ ஷஃபி..

    பதிலளிநீக்கு
  17. பித்தனின் வாக்கு /எந்தன் மன்னவன் ஊடல் கொண்டால்
    நீயிருக்கையில் என்ன கவலை தோழி
    என் கூந்தலுக்குள் நீ ஓளிந்து கொண்டு
    மாலையில் மயக்கி என்னை அவன் மாலையாக்கு.

    இது எப்படி இருக்கு. நன்றி மல்லிக்கா..../

    எல்லாருக்குள்ளும் கவிஞன் ஒளிந்துகிடக்கிறான், நல்லாயிருக்கு பித்தனின் வாக்கு..மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  18. /தொடுத்து முடித்ததும் தலையில் வைக்கயில்
    வாசம் வீசியே சரங்களும் சரசம்பாடுதே//

    மல்லிகையின் மென்மை மலிக்கா கவிதைமூலம் அறிகிறேன். நல்ல கவிதை.../

    தொடர்ந்து கருத்துக்கள்தரும் பாலாஜிக்கு மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  19. கவியருவி பொருத்தமான பரிசே...!

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது