
தோழமையே தோழமையே
தோள்கொடுக்கும்
தோழமையே
உனைபார்த்து நாளாச்சி
அதனால மனபாரம்
கூடிப்போச்சி
ராக்கால வானமாய்
மனம் மூட
கறுத்தமேகமாய்
முகம் சோம்ப
இடிசத்தம்போல்
இதயத்திற்க்குள் இன்னல்
மின்னல்வந்து கண்ணுக்குள்
மின்ன
வான்மழையை எதிர்பார்த்த
வாடிய பயிராய்
உன்வரவை
எண்ணி எதிர்பார்த்திருக்கிறேன்
கறுத்தமேகம் கொட்டிடுமா
மழையை
மூடியவானம் தூறிடுமா
தூறலை
மனதிற்குள்
மெளனமாய் காத்திருக்கிறேன்
மயிலிறகாய் வருவாயா
தவியாய் தவித்து
தாகித்து நிற்கிறேன்
தாகம் தீர்க்க
தண்ணீர் கொஞ்சம் தருவாயா..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
ரொம்ப அற்புதுமா இருக்கு உங்களின் "நட்பான உறவு".நட்பின் வலிமை காரணமாக
பதிலளிநீக்குவார்த்தைகள் ரொம்ப நல்லா பொருந்தி நல்ல அர்த்தமுள்ள கவிதையா அமைந்திருக்கு..
ஆமா.யாருங்க அந்த அதிர்ஷ்டசாலி தோழன்???
/// தண்ணீர் கொஞ்சம் தருவாயா.. ///
பதிலளிநீக்குஅட நீங்க வேற... சென்னையை தண்ணி புரட்டி போட்டு கொண்டிருக்கிறது !!!
/// இறைவனை நேசி இன்பம் பெருவாய்
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள் ///
பெருவாய் - பெறுவாய் அத கொஞ்சம் மாத்திடுங்க !!!
கவிதை ரொம்ப நல்லா இருக்குமா
பதிலளிநீக்குநட்பு வாழ்க! அருமையான கவிதை மலிக்கா!
பதிலளிநீக்குதோழியே என்ன ஆச்சு வெகு நாட்களாகிவிட்டது தங்களுடன் உறையாடி.
பதிலளிநீக்குநல்ல நட்பு...அருமை மலிக்கா
பதிலளிநீக்குஇன்னும் கொஞ்சம் மெருகேற்றி எழுதியிருக்கலாம்........
பதிலளிநீக்குமுயற்சிக்கு வாழ்த்துக்கள்...........
அன்புத் தோழி மலிக்காவின் கை வண்ணங்களை வார்த்தைகளால் வரைய முடியுமோ? எத்தனை நாட்கள் ஆகி விட்டது தோழியுடன் சுகமாய் உறவாடி. தோழி மீண்டும் மீண்டும் வளர வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅன்புத் தோழி மலிக்காவின் கை வண்ணங்களை வார்த்தைகளால் வரைய முடியுமோ? எத்தனை நாட்கள் ஆகி விட்டது தோழியுடன் சுகமாய் உறவாடி. தோழி மீண்டும் மீண்டும் வளர வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு/பூங்குன்றன் வேதநாயகம் கூறியது...
பதிலளிநீக்குரொம்ப அற்புதுமா இருக்கு உங்களின் "நட்பான உறவு".நட்பின் வலிமை காரணமாக
வார்த்தைகள் ரொம்ப நல்லா பொருந்தி நல்ல அர்த்தமுள்ள கவிதையா அமைந்திருக்கு../
தோழமையென்பது தாய்மையைப்போன்று இருக்கனும்
அடிப்பது, அரவணைப்பது, அன்புபாரட்டுவது,கண்டிப்பது என அத்தனையும் கலந்திருக்கனும்
அதுதான் தோழமையின் உறவு.
மிக்க நன்றி பூங்குன்றன் தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும்...
ஆமா.யாருங்க அந்த அதிர்ஷ்டசாலி தோழன்???/
தோழமையின் பெயரை பட்டியல்போட இன்னொரு இடுகையிடனுமே... எப்படி?
/அட நீங்க வேற... சென்னையை தண்ணி புரட்டி போட்டு கொண்டிருக்கிறது !!!/
பதிலளிநீக்குஅப்ப ஏதோ ஒருவகையில் தண்ணீர்பிரச்சனை இருந்துகொண்டுதான் இருக்குங்கிறீங்க..
/// இறைவனை நேசி இன்பம் பெருவாய்
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள் ///
/பெருவாய் - பெறுவாய் அத கொஞ்சம் மாத்திடுங்க !!!/
மாற்றிவிட்டேன், எப்படி இத்தனைநாள் பார்க்காமல்போனேன்.. மிக்க நன்றி கேசவன்..
//கறுத்தமேகம் கொட்டிடுமா மழையை
பதிலளிநீக்குமூடியவானம் தூறிடுமா தூரலை
மனதிற்குள் மெளனமாய் காத்திருக்கிறேன்
மயிலிறகாய் வருவாயா
தவியாய் தவித்து தவிப்பாய் தெரிகிறேன்
தாகம் தீர்க்க தண்ணீர் கொஞ்சம் தருவாயா..//
ரசித்த வரிகள். தண்ணீருக்கா பஞ்சம். அதான் நல்லா மழைபெய்கிறதே.....
நல்ல கவிதை மலிக்கா.
பதிலளிநீக்குநுட்பாமான நட்பு தோழி ...........................
பதிலளிநீக்குநட்பிலும் கற்பு உண்டு .................
இது கவிதை அல்ல வரிகள் நான் பார்க்கவில்லை
உன் நட்பு தெரிகிறது
S.A. நவாஸுதீன் கூறியது...
பதிலளிநீக்குகவிதை ரொம்ப நல்லா இருக்குமா
ரொம்ப நன்றி நவாஸண்ணா..
அனுபவம் கூறியது...
நட்பு வாழ்க! அருமையான கவிதை மலிக்கா!
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அனுபவம்..
/sarusriraj கூறியது...
பதிலளிநீக்குதோழியே என்ன ஆச்சு வெகு நாட்களாகிவிட்டது தங்களுடன் உறையாடி./
ஆமாம் தோழி யாஹூவில் வர நேரமே இல்லைபா முடிந்தால் இன்று நிச்சயம் வருகிறேன் பசங்க நல்லா இருக்காங்களா..
புலவன் புலிகேசி கூறியது...
பதிலளிநீக்குநல்ல நட்பு...அருமை மலிக்கா
மிக்க நன்றி புலிகேசி..
/ஊடகன் கூறியது...
பதிலளிநீக்குஇன்னும் கொஞ்சம் மெருகேற்றி எழுதியிருக்கலாம்........
முயற்சிக்கு வாழ்த்துக்கள்..//
அப்படியா!!!!! இனி எழுத முயற்ச்சிக்கிறேன் ஊடகன். கருத்துக்களுக்கு நன்றி அடிக்கடி வந்து இதுபோன்று கருத்துக்கள் தாருங்கள்..
/SANTHOSHI கூறியது...
பதிலளிநீக்குஅன்புத் தோழி மலிக்காவின் கை வண்ணங்களை வார்த்தைகளால் வரைய முடியுமோ? எத்தனை நாட்கள் ஆகி விட்டது தோழியுடன் சுகமாய் உறவாடி. தோழி மீண்டும் மீண்டும் வளர வாழ்த்துக்கள்../
என்ன சந்தோஷி எப்படி இருக்கீங்க..
சந்தோஷ் எப்படியிருக்கான்,, எத்தனை நாளாச்சிப்பா, எல்லாரையும் மிஸ் பண்ரேனா,அச்சோ
இனி அப்படியிருக்கமாட்டேன் சந்தோஷி. டி கேக்கு வாங்கப்பா பேசலாம்..
தோழியின் வாழ்த்துக்களுக்கு மிகுந்த சந்தோஷம்..
/ரசித்த வரிகள். தண்ணீருக்கா பஞ்சம். அதான் நல்லா மழைபெய்கிறதே...../
பதிலளிநீக்குஅது நம்ம நாட்டில பாலாஜி [எப்படி தப்பித்தேன்]
இங்கு மழையே பெய்யலையே அதான்.. நன்றி பாலாஜி,,,
/வானம்பாடிகள் கூறியது...
பதிலளிநீக்குநல்ல கவிதை மலிக்கா/
நன்றி வானம்பாடிகள்...
/வெண்ணிற இரவுகள்....! கூறியது...
பதிலளிநீக்குநுட்பாமான நட்பு தோழி ...........................
நட்பிலும் கற்பு உண்டு .................
இது கவிதை அல்ல வரிகள் நான் பார்க்கவில்லை
உன் நட்பு தெரிகிறது/
நிச்சயம் நட்பிலும் கற்பு உண்டு..
உங்கள் நட்புக்கு நன்றி தோழமையே...
உண்மையா ஒரு நட்புக் கிடைத்துவிட்டால் அதுபோல் ஒரு உறவு உலகத்தில் வேறொன்றும் அமையாது மல்லிக்.கவிதையில் நல்ல மெருகு.
பதிலளிநீக்குUnkal nanparkal koduthu vaithavarkal Sinakithi!
பதிலளிநீக்கு- Trichy Syed
Touching to My Hearts...
பதிலளிநீக்குCongradulate....
Yours........anbudan