நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஆத்திரமும் கோபமும்



ஆத்திரம் அழகல்ல
கோபம் நல்ல குணமல்ல

ஆத்திரத்திரத்தினால் ஏற்படும்
அத்தனை செயல்களின் பாதிப்பும்

தன்னைமட்டும் சார்ந்ததல்ல
தன்னைச்சார்ந்தவர்களையும் பாதிக்கும்

ஆத்திரத்தால் எதை சாதிக்கிறாய்
நீ ஆத்திரப்படுகிறாய் என்பதற்காக வேண்டுமென்றால்

அன்றைய காரியங்கள் நிறைவேறும்  -ஆனால்
நாட்கள் நகர நகர அதுவே உனக்கு நரகமாகும்

கோபம் கொள்ளும்போது உன்னை நீ உற்றுப்பார்
உனக்குள் ஒரு மிருகம் இருப்பதை உணர்வாய்

ஆத்திரத்தால் கோபத்தால் அழிவுகளும் வருத்தங்களும்
மிஞ்சுமே தவிர வேறென்ன கிடைக்கும்

இளமையில் ஆத்தித்தையும் கோபத்தையும்
வித்திட்ட மனிதன்

முதுமையில் தனிமையையும் விரோதத்தையும்
அறுவடை செய்கிறான்

ஆத்திரம் அறிவை அகற்றிடும் ஆயுதம்
கோபம் கூடவே இருந்து குழிப்பறிக்கும் கொடுங்குணம்

அன்பினால் சதிக்க முடிந்ததை ஒன்றை
ஆத்திரத்தால் ஒருபோதும் சாதிக்கமுடியாது

குணத்தால் கோடானகோடி பெறுவது சுலபம்
கோபத்தால் சிறு கடுகுகூட கிடைப்பது கஷ்டம்

ஆத்திரமும் கோபமும் மிக மிக மிக
அத்தியாவசியமானால் மட்டுமே கையாளவேண்டும்
அதனைவிட ஆயிரமடங்கு சிறப்பு
அன்பை கையாண்டு வெற்றிகொள்வது..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

22 கருத்துகள்:

  1. மல்லிக்கா,அன்பின் வல்லமையையும் ஆத்திரத்தின் கொடுமையையும் அழகாய்ச் சொல்லியிருகிறீர்கள்.
    கொஞ்சம் மனசில எடுத்துக்கிட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு சும்மாவா சொன்னாங்க.

    நல்லா சொல்லி இருக்கீங்க மலிக்கா

    பதிலளிநீக்கு
  3. நல்லா சொல்லீருக்கீங்க...

    ஆனா, சில விசயங்களை பார்க்கும் போது கோவத்தை அடக்க முடியலையே?

    பல நேரங்களில் ஆத்திர பட்டாதான் வேளையே நடக்குது :(

    பதிலளிநீக்கு
  4. நல்ல பகிர்வு, ஆத்த்ரம் வரும்போது, சற்று நிதானமாக சிந்திக்க பழகிக்கொண்டால், சமாளித்து விடலாம். தொடர்ந்து நல்ல கருத்துக்களை தந்து கொண்டு இருக்கிறீர்கள் மலிக்கா!!

    பதிலளிநீக்கு
  5. நன்றாகச் சொன்னீர்கள். ஆத்திரம் கோபம் அகங்காரம் அழுகை ஆகியன அவர்தம் ஆற்றாமையை வெளிப்படுத்துபவை. கபீரன் அழகாய் சொல்லியிருக்கிறார். முடிந்தால் படித்துப் பாருங்கள்.
    http://kabeeran.blogspot.com/2009/10/blog-post_24.html

    பதிலளிநீக்கு
  6. //அன்பினால் சதிக்க முடிந்ததை ஒன்றை
    ஆத்திரத்தால் ஒருபோதும் சாதிக்கமுடியாது//


    உண்மை மாலிக்கா.....வள்ளுவன் கூறியது போல் அன்பிருக்கும் இடத்தில் நிச்சயம் பொதுவுடமையும் பிறக்கும்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல கவிதை, கவிதைக்கு சிறப்பே அந்த கடைசி வரிகள்தான். நன்றி.

    பதிலளிநீக்கு
  8. //ஹேமா கூறியது...
    மல்லிக்கா,அன்பின் வல்லமையையும் ஆத்திரத்தின் கொடுமையையும் அழகாய்ச் சொல்லியிருகிறீர்கள்.
    கொஞ்சம் மனசில எடுத்துக்கிட்டேன்.//

    அன்புத்தோழியே ஹேமா, தங்களின் அன்பான கருத்துக்கும் கொஞ்சம் மனசில எடுத்துக்கிட்டதற்கும் மிகுந்த சந்தோஷம்..

    பதிலளிநீக்கு
  9. /S.A. நவாஸுதீன் கூறியது...
    ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு சும்மாவா சொன்னாங்க.

    நல்லா சொல்லி இருக்கீங்க மலிக்கா/

    என் படைப்புகளுக்கு தவறாமல் கருத்துக்கள் தரும் நவாஸ் அண்ணாவிற்கு என்மனமார்ந்த நன்றிகள் பல

    தொடர்ந்துவந்து கருத்துக்கள் தந்து
    என்னை ஊக்கப்படுத்தவும்..

    பதிலளிநீக்கு
  10. /..:: Mãstän ::.. கூறியது...
    நல்லா சொல்லீருக்கீங்க.../

    மிக்க நன்றி

    /ஆனா, சில விசயங்களை பார்க்கும் போது கோவத்தை அடக்க முடியலையே?/

    அதைத்தான் அடக்கமுயற்ச்சி செய்யனும்.முயன்றால் முடியாதது என்று எதுமிருக்கா?

    பல நேரங்களில் ஆத்திர பட்டாதான் வேளையே நடக்குது :(

    [ நீ ஆத்திரப்படுகிறாய் என்பதற்காக வேண்டுமென்றால்
    அன்றைய காரியங்கள் நிறைவேறும் -ஆனால்] அதுவே வழக்கமாகிவிட்டால் நமக்கு பாதிப்பு அதனால் மற்றவரின் வெறுப்புக்கும் ஆளாகநேறிடும்,

    சில சமயங்களில் இவனுக்கு வேறவேலையே இல்லை இப்படித்தான் காரியமாகனுமுன்னா ஆத்திரப்பட்டுக்கொண்டே இருப்பான் அதனால் கண்டுக்காதே என்னும் அளவிற்கு போய்விடும்,

    என்ன நான்சொல்வது சரியா? மஸ்தான்..

    பதிலளிநீக்கு
  11. /ஷ‌ஃபிக்ஸ்/Suffix கூறியது...
    நல்ல பகிர்வு, ஆத்த்ரம் வரும்போது, சற்று நிதானமாக சிந்திக்க பழகிக்கொண்டால், சமாளித்து விடலாம். தொடர்ந்து நல்ல கருத்துக்களை தந்து கொண்டு இருக்கிறீர்கள் மலிக்கா!!/

    ரொம்ப நன்றி ஷஃபி,
    தொடர்ந்து ஆதரவுகள் என்னும் கருத்துக்கள்தரும்போது நல்லவிசயங்களை சொல்லனும்போல் தோன்றுகிறது,
    அதன்படி நடக்கிறார்களோ இல்லையோ அதை ஏற்றுகொள்ளும்போது மனம் மிகவும் சந்தோஷம் அடைகிறது..

    பதிலளிநீக்கு
  12. /bxbybz கூறியது...
    நன்றாகச் சொன்னீர்கள். ஆத்திரம் கோபம் அகங்காரம் அழுகை ஆகியன அவர்தம் ஆற்றாமையை வெளிப்படுத்துபவை. கபீரன் அழகாய் சொல்லியிருக்கிறார். முடிந்தால் படித்துப் பாருங்கள்./

    தாங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி,
    கபீரன்பனின் தளத்திற்கு சென்றுபார்தேன் மிகநன்றாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  13. /உண்மை மாலிக்கா.....வள்ளுவன் கூறியது போல் அன்பிருக்கும் இடத்தில் நிச்சயம் பொதுவுடமையும் பிறக்கும்./

    உண்மைதான் புலிகேசி, உண்மையானஅன்பு இருக்கும் இடத்தில் நிச்சியம் நல்லவைகள் அனைத்தும் நிறைந்திருக்கும்.. நன்றி.

    பதிலளிநீக்கு
  14. நல்லா சொல்லி இருக்கிங்க கோபத்தின் விளைவுகளை .ஆனாலும் சில சமயம் நம்மளை அறியாமல் தலை தூக்கிடுது ..

    பதிலளிநீக்கு
  15. அருமையாச் சொல்லி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  16. /இராகவன் நைஜிரியா கூறியது...
    நச்ன்னு சொல்லியிருக்கீங்க..

    மிக்க நன்றி, இராகவன் சார்..

    பதிலளிநீக்கு
  17. /பித்தனின் வாக்கு கூறியது...
    நல்ல கவிதை, கவிதைக்கு சிறப்பே அந்த கடைசி வரிகள்தான். நன்றி./

    மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  18. /sarusriraj கூறியது...
    நல்லா சொல்லி இருக்கிங்க கோபத்தின் விளைவுகளை .ஆனாலும் சில சமயம் நம்மளை அறியாமல் தலை தூக்கிடுது ../

    என்ன சாருக்கா நாமளே இப்படிசொன்னா எப்படி பொருமையும் பெண்ணும் ஒன்னாம்,

    நம்மள அறியாமலே தூக்கும் தலையை நாமே நம்மையறியாம தட்டிவிடனும்,, இதுஎப்படி...

    பதிலளிநீக்கு
  19. //வானம்பாடிகள் கூறியது...
    அருமையாச் சொல்லி இருக்கீங்க.//

    ரொம்ப சந்தோஷம் வானம்பாடிகளே,
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி..

    பதிலளிநீக்கு
  20. ஆத்திரமும் கோபமும் மிக மிக மிக
    அத்தியாவசியமானால் மட்டுமே கையாளவேண்டும்
    அதனைவிட ஆயிரமடங்கு சிறப்பு
    அன்பை கையாண்டு வெற்றிகொள்வது..

    4 lines Thirukural.

    - Trichy Syed

    பதிலளிநீக்கு
  21. //ஆத்திரத்தால் கோபத்தால் அழிவுகளும் வருத்தங்களும்
    மிஞ்சுமே தவிர வேறென்ன கிடைக்கும்

    இளமையில் ஆத்தித்தையும் கோபத்தையும்
    வித்திட்ட மனிதன்

    முதுமையில் தனிமையையும் விரோதத்தையும்
    அறுவடை செய்கிறான்

    ஆத்திரம் அறிவை அகற்றிடும் ஆயுதம்
    கோபம் கூடவே இருந்து குழிப்பறிக்கும் கொடுங்குணம்

    அன்பினால் சதிக்க முடிந்ததை ஒன்றை
    ஆத்திரத்தால் ஒருபோதும் சாதிக்கமுடியாது

    குணத்தால் கோடானகோடி பெறுவது சுலபம்
    கோபத்தால் சிறு கடுகுகூட கிடைப்பது கஷ்டம்//
    அக்கா நச்சுனு இருக்கு கவிதை ...அவ்வளவும் உண்மை..அனுபவத்தில் சொல்கிரேன்..சில நேரங்களில் சிலருக்கு இதை நான் சொல்ல விரும்புகிரேன் என் வாழ்வில் ஆனால் சொன்னாலும் ஆத்திரப்படும் இந்த மனிதர்களுக்கு எப்படி சொல்வது.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது