ஒரு [பஸ் ஸ்டாப்] பேருந்து நிலையத்தில் இருஅம்மாக்கள் தங்களின் குழந்தைகளுடன் பஸ்ஸிற்காக நின்றுகொண்டிருக்கும்போது
எதிர்சுவற்றில் ஒட்டியிருந்த மோசமானபோஸ்டர்
ஒன்றைபார்த்த அந்தசிறுமி தன் அம்மாவிடம்
அம்மா அம்மா பாவம்மா அந்தஅக்கா ரொம்ப ஏழவீட்டு அக்காமாதரி இருக்குமா அதானாலதான் அவுக தங்கச்சியோட பாவாடையை
போட்டு இருக்காக ரொம்ப ரொம்ப சின்னதா இருக்குமா
அதப்போயி படம்வேற புடிச்சிக்கீறாங்கம்மா என்று தன் பிஞ்சிமுகத்தில் பாவனையைகாட்டி அனுதாபத்தை வெளியிட.
எங்கடிம்மா என்று நிமிர்ந்து தன் குழந்தை நீட்டிய திசையில் பார்த்த அந்த அம்மாவின் முகம்போனபோக்கில் சீ கர்மம் கர்மம் ஏந்தான் இவளுகல கடவுள் படைத்தாரோ இப்படி அரகொறையா திறியவா என்று முனுமுனுத்துக்கொண்டே, சும்மயிருடி அத்த இத்த பார்த்து கைய்யகிய்யக்காட்டமா, என்று சட்டென தன் மகளையும் இழுத்துக்கொண்டு முகத்தை வேறுபுறம்திரும்ப.
பக்கத்தில் நின்ற மற்றொரு சிறுவன் தன் அம்மாவைபார்த்து
எப்பப்பாத்தாலும் நம்ம அப்பா உன்னய சீலையா எடுத்து காச கரியாக்குறா காச கரியாக்குறான்னே கத்திகிட்டே இருக்காருள்ளம்மா அத நீதாம்மா கேக்கமாட்டெங்கிற எப்பப்பாத்தாலும் புடவ புடவையா வாங்கி அப்பாட காசயெல்லம் வீணாக்குறத்துக்கு
இதுபோல் சின்னபாவாடை வாங்கினால் காசமிச்சப்படுத்தலாமுள்ள என்று சொல்லிமுடிக்கும்முன் விழுந்தது ஓர் அடி முதுகில், விர்ரென்று வலிக்க
அழுதுகொண்டே பார்த்தான் அம்மாவை
சனியனே இந்த எழவுக்குத்தான் உன்ன என்கிட்டும் கூட்டிகிட்டுபோவவே
சடவா வருது, எல்லாம் இந்த பாழாப்போன பட்டணத்துக்காரங்களும் சினிமாக்காரங்களும் செய்யிற வேளயால
இந்த பச்சபுள்ளயெல்லாம் கெட்டு குட்டியச் சுவராபோவுது,
எந்த எடத்துக்கும் கூடிக்கிட்டு போவமுடியல அங்கினக்கங்கின ஒரே ஒட்டுதுணியபோட்டுகிட்டு நிக்கிதுக ஆடுதுக அத்தவேற போட்டாபுடிச்சி இவுகபோடுறாக, பொண்ணா பொறந்த மானவெக்கம் வேணும் இவுகளுக்கு அதெல்லாம் ஒன்னுமில்லையோடி கண்ணாத்தா, இவுக கெட்டுபோறதோட மத்தவுகளையும் கெடுத்து நாசம்பன்னுதாகளே இவுக தாயிதகப்பன், சாதிசனம் யாரும் இத்த தப்புன்னு சொல்லமாட்டாகளோ,
என்ன காலமுண்டியிது அந்த கடவுள்தான் காப்பாத்தோனும்
அவுகளையல்லடி நம்மளத்தான் வா ன்னு சொல்லியபடி
மகனின் கையை தர தர வென இழுத்துச்சென்றாள் பொன்னம்மா.
என்னத்த சொல்லி என்னபண்ணக்கா என்னக்கித்தான் மாறுமோ இத்தப்போல உருப்படாத பொலப்பெல்லாம் நாமசொல்லியா எதுவும் மாறப்போவுது
இதெமாதரி மனுசங்கயெல்லாம் பிஞ்சிலேயே பழுத்துட்டாங்க இனி வெம்பித்தான் கீழேவிழுவாங்க, கேட்டா வயித்து பொழப்புக்குன்னுவாங்க
என்னமோ இவுகளுக்குமட்டுந்தேன் வயிறு பொழப்பு எல்லாம்,
நாமல்லாம் இல்லை கஞ்சியானாலும் குடிச்சிக்கிட்டு கிழிஞ்சதானாலும் மானத்தை மறச்சிக்கிட்டு,
காலம்போக போக இன்னும் இந்த உலகம் எப்படி இருக்கப்போவுதோ!
இந்த கண்ட்றாவி கலியுகத்தில்
நாமா நம்ம பசங்கள சாக்கிறதைய பாத்துவளக்கோனுமக்கா அப்புறம் கடவுள்விட்டவழி- ன்னு கண்ணாத்தாவும் தன் அருமைமகளின் கைகளை சற்று நடுக்கத்துடன் பிடித்தபடியே பொன்னம்மாவின் பின்னே போய் பஸ்ஸிலேறி அமர்ந்தார்கள், பஸ்ஸின் சன்னல்வழியே மீண்டும் போஸ்டர் எதிரே அரைகுறையாட எதிர்காலம் நினைவில் ஓட
காலத்தின் கோலத்தை நினைத்தபடி, கவலையில்
இருவரும் இருக்கையில் சாய்ந்தார்கள்...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
இரண்டு வேறு வேறு அம்மாக்கள்..........................ஆம் எல்லாருக்கும் தான் வயறு உள்ளது ......
பதிலளிநீக்குநல்ல கருத்து ...நல்ல படைப்பு
மல்லிக்கா இதுதான் இன்றைய நிலைமை.மாறியவர்களும் மாறியும் மாறாமலும் என்று.
பதிலளிநீக்குநல்ல கருத்து...வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குவட்டார மொழியில் அருமையா சொல்லி இருக்கீங்க மலிக்கா.
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குஇன்றைய நிலை அவலங்கள் உங்களின் இடுகையின்மூலம்....நல்ல இடுகை....
பதிலளிநீக்கு//வெண்ணிற இரவுகள்....! கூறியது...
பதிலளிநீக்குஇரண்டு வேறு வேறு அம்மாக்கள்..........................ஆம் எல்லாருக்கும் தான் வயறு உள்ளது ......
நல்ல கருத்து ...நல்ல படைப்பு//
மிக்க நன்றி மிகுந்த மகிழ்ச்சி
//ஹேமா கூறியது...
பதிலளிநீக்குமல்லிக்கா இதுதான் இன்றைய நிலைமை.மாறியவர்களும் மாறியும் மாறாமலும் என்று//
மாற நினைத்தாலும் மாறவிரும்பாத கூடங்களாகிவிட்டது,இன்றை சில பல, சித்தாந்தங்கள்..
ஏதோ எழுத்துக்களால் நம் ஆதங்கத்தை வெளிப்படுதத்தான் முடிகிறது, நன்றி ஹேமா
நல்ல கருத்து..
பதிலளிநீக்குஆடைகளை அவர்கள் தீர்மானிக்கிறார்கள்.
பதிலளிநீக்குஅவர்கள் என்ன உடை உடுக்க வேண்டும் என்று சொல்ல நாம் யார்?
ஆடைகளுடன் விகாரமாக நாம்!
வெளிநாடுகளில் பாருங்கள் எவ்வளவு இயல்பாக மக்கள் தங்கள் குடும்பத்துடன்
இத்தகைய ஆடைகளுடன் இருக்கிறார்கள் என்று!
மானம் என்ன ஆடையிலா ஒட்டிக் கொண்டுள்ளது?
வாங்க நாளும் நலமே விளையட்டும்,
பதிலளிநீக்குநடக்கும் அத்தனையும் நன்றாக நடக்கட்டும்,
//ஆடைகளை அவர்கள் தீர்மானிக்கிறார்கள்.
அவர்கள் என்ன உடை உடுக்க வேண்டும் என்று சொல்ல நாம் யார்?
ஆடைகளுடன் விகாரமாக நாம்!//
நிச்சியமாக அடுத்தவர்களின் விசயத்தில் தலையிட நாம் யார்?
இருந்த போதிலும் நம்முடைய சிலசெய்கைகளால் அடுத்தவர்கள் எவ்விதத்திலும் பாதிக்கக்கூடாது, அது மனரீதியாகவோ உடல் ரீதியாகவோ, என்ற எண்ணம்தான்,
//வெளிநாடுகளில் பாருங்கள் எவ்வளவு இயல்பாக மக்கள் தங்கள் குடும்பத்துடன்
இத்தகைய ஆடைகளுடன் இருக்கிறார்கள் என்று!//
தமிழ்நாட்டுக்கென்று ஒரு தனி மரியாதை இருக்கிறதல்லவா எத்தனை நாட்டவர்கள் நம்முடைய ஆடைகளைக் கண்டும்
கலாச்சாரத்தின் சாரம் கண்டும் மெய்சிலிர்த்திருக்கிறார்கள் அதெல்லாம்கூட கெடுகிறதே என்ற ஆதங்கம்தான்,
//மானம் என்ன ஆடையிலா ஒட்டிக் கொண்டுள்ளது//
இல்லையா?
மானம் மனதிலிருந்தால் போதுமா?
விந்தையாக இருக்கிறது,
இது ஒருசராசரி தமிழச்சியின் மனநிலையின் ஆதங்கம்தான்
எழுத்துக்களால் வெளிவந்துவிட்டது.
தாங்களின் முதல் வருகைக்கும் தங்களின் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி
மீண்டும் வருக
நலமே விளைக
வேதனை :(
பதிலளிநீக்குஇதைத்தான் நாகரீக முன்னேற்றம் என்றுச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள்.
Samuka Akkaraiyoodu ...
பதிலளிநீக்குYatharthamaka....
Kallam Kabadam illatha kiramathu Manithanin Vellai Manasoodu...
Oru Thayin Wunarwukaloodu...
irrunthathu...
Trichy Syed
Anbu Thankaikku...
பதிலளிநீக்குKulanthaikalmeethu pasam ulla oru thayin manasu ithil irrunthathu...
With love
Sabira Syed
// காலம்போக போக இன்னும் இந்த உலகம் எப்படி இருக்கப்போவுதோ!
பதிலளிநீக்குஇந்த கண்ட்றாவி கலியுகத்தில் //
ரொம்ப சரியாக சொன்னீர்கள். நினைக்கவே பயமாக இருக்கின்றது. நான் நெட்டில் இரு கல்லூரிச் சிறுமிகள் மற்றும் மாணவர்கள் உரையாடலைக் கேட்டபொழுது, எதிர்காலத்தில் அப்பா அல்லது அம்மா, மகளிடம் எதுக்கும் பாதுகாப்பா இருனு சொல்ற நிலைமை வரும்னு நினைக்கின்றேன்.
//புலவன் புலிகேசி கூறியது...
பதிலளிநீக்குநல்ல கருத்து...வாழ்த்துக்கள்//
கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி புலிகேசி
//S.A. நவாஸுதீன் கூறியது...
பதிலளிநீக்குவட்டார மொழியில் அருமையா சொல்லி இருக்கீங்க மலிக்கா.//
ஏதோ நமக்கு தெரிந்த கொஞ்சவட்டார வார்த்தைகள் வைத்துக்கொண்டு எழுதினேன், யாராவது என்ன இப்படி எழுதிகீறீங்கன்னு கேட்டுடுவாகளோன்னு பயந்தேன்,
அருமையா இருக்குன்னு நீங்க சொன்னபின்புதேன் மகிழ்ச்சியாயிருக்கு,
மிக நன்றி நவாஸுதீன்..
//Jaleela கூறியது...
பதிலளிநீக்குஅருமையான பதிவு//
சந்தோஷம் ஜலீலாக்கா
//க.பாலாசி கூறியது...
பதிலளிநீக்குஇன்றைய நிலை அவலங்கள் உங்களின் இடுகையின்மூலம்....நல்ல இடுகை....//
அவலங்களைகூறக்கூட பயமாக இருக்கு பாலாஜி, மிக்க நன்றி..
//Mrs.Menagasathia கூறியது...
பதிலளிநீக்குநல்ல கருத்து//
மிக்க நன்றி மேனகாசத்தியா..
//பீர் | Peer கூறியது...
பதிலளிநீக்குவேதனை :(
இதைத்தான் நாகரீக முன்னேற்றம் என்றுச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள்//
நாகரீக மோகம் தலைதூக்கி ஆடுவதால்தான் மனிதமனம் தலைகவிழ்ந்து நிற்கிறது.நன்றி பீர்
மலிக்கா ரொம்ப நல்லா இருக்கு இந்த பதிவு
பதிலளிநீக்குஅருமையான கருத்தை அழகாக சொல்லியுள்ளீர்கள்...
பதிலளிநீக்கு//மலர்வனம் கூறியது...
பதிலளிநீக்குSamuka Akkaraiyoodu ...
Yatharthamaka....
Kallam Kabadam illatha kiramathu Manithanin Vellai Manasoodu...
Oru Thayin Wunarwukaloodu...
irrunthathu...//
மிக்க மகிழ்ச்சி மலர்வனமாக வலம்வரும் சகோதரர் திருச்சி சையத்,
தாங்களின் கருத்துக்களுக்கு
ரொம்ப நன்றி..
//Sabira Syed கூறியது...
பதிலளிநீக்குAnbu Thankaikku...
Kulanthaikalmeethu pasam ulla oru thayin manasu ithil irrunthathu...
With love
Sabira Syed//
வருக வருக சாபிரா தாங்களின் முதல் வருக்கும் அன்பான கருத்திற்க்கும் மிக்க மகிழ்ச்சி தொடர்ந்துவாருங்கள்..
/பித்தனின் வாக்கு கூறியது...
பதிலளிநீக்கு// காலம்போக போக இன்னும் இந்த உலகம் எப்படி இருக்கப்போவுதோ!
இந்த கண்ட்றாவி கலியுகத்தில் //
ரொம்ப சரியாக சொன்னீர்கள். நினைக்கவே பயமாக இருக்கின்றது. நான் நெட்டில் இரு கல்லூரிச் சிறுமிகள் மற்றும் மாணவர்கள் உரையாடலைக் கேட்டபொழுது, எதிர்காலத்தில் அப்பா அல்லது அம்மா, மகளிடம் எதுக்கும் பாதுகாப்பா இருனு சொல்ற நிலைமை வரும்னு நினைக்கின்றேன்/
வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை,
அந்நிலையை அடையாதிருக்க வேண்டிக்கொள்வோம்.
எத்தனை பொத்திபொத்தி வளர்த்தபோதும், சில பிள்ளைகள் அத்துமீறிப்போவதை தடுக்க பெற்றோர்களாலே முடிவதில்லை இது தற்போது நடக்கும் உண்மைகள்.
இதில் பெற்றவர்கள்தான் பாவம், வளர்த்த வளப்பு சரியில்லையின்னு கூசாமல் சொல்லிடுவோம்.
தாங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி..
மல்லிகா அருமை தாய்மார்களின் ஆதங்கத்தை அழுத்தமாக சொல்லியுள்ளிர்கள் நன்றி தோழி நம் சந்ததியர்களை இறைவன் தான் பாதுகக்கனும்.
பதிலளிநீக்கு