நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மானே தேனே மயிலே


மானே,,,,,,, மலைத்தேனே-- உனைக்கண்டு மலைத்தேனே
எனைநானும் மறந்தேனே

மலைத்தேன் சொட்டச் சொட்ட
மலர்கள் கொட்டக் கொட்ட
மூச்சுக்காற்று முட்ட முட்ட
மனசுக்குள் வந்ததென்ன

கண்ணாம்பூச்சி ஆட்டத்தில
கண்ணிரெண்டும் கட்டிவிட்டு
கண்ணெதிரே நின்றுகொண்டு
கண்ணிமைக்காமல் ரசித்தென்ன

பஞ்சியில் நெருப்பாகி
பற்றிக்கொண்டு எறிந்ததென்னெ
நெருப்புக்குள் நீராகி
நெஞ்சிக்குள் நின்றதென்ன

தேனே,,,,,,,, திகைத்தேனே- தினம் தினம் தொடர்ந்தேனே
உனைநானும் நினைத்தேனே

உள்ளத்துக்குள் நீயும் துள்ள -உன்
மெளனம் என்னைக்கொல்ல
எனையே நான் மறந்து
மரம்போல் நின்றதென்ன

மெல்லிய காற்றாகி
மேனியில் படர்ந்ததென்ன
வண்டுக்குள் பூவாகி
என்னை நீ வதைத்ததென்ன

ஆழ்மனம் ஆர்பரித்து அதில்
ஆசைகள் கூத்தடிக்க
அடிநெஞ்சை தொட்டு தொட்டு
அடி அத்தனையும் கோர்த்ததென்ன


மயிலே,,,,, மறுக்காதே-- எனை நீயும் மறக்காதே
உனை நீயே மறைக்காதே...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

13 கருத்துகள்:

 1. கவிதை நல்லா இருக்கு மலிக்கா. போட்டோ ரொம்ப் சூப்பர்

  பதிலளிநீக்கு
 2. / S.A. நவாஸுதீன் கூறியது...
  கவிதை நல்லா இருக்கு மலிக்கா
  போட்டோ ரொம்ப் சூப்பர்/

  ரொம்ப ரொம்ப சந்தோஷம்

  பதிலளிநீக்கு
 3. மலிக்கா,கவிதை காதல் தேன் சொட்டச் சொட்ட.உண்மையில் படத் தேர்வு அருமை.

  பதிலளிநீக்கு
 4. மலிக்கா படம் ரொம்ப அருமை. இதயத்துடிப்பை இங்கேயே பார்த்துக்கலாம் போல. கவிதையும் நல்லாயிருக்கு.

  பதிலளிநீக்கு
 5. ஹேமா கூறியது...
  மலிக்கா,கவிதை காதல் தேன் சொட்டச் சொட்ட.உண்மையில் படத் தேர்வு அருமை.//

  மகிழ்ச்சி ஹேமா, தோழைமைகளின் வர்ணனையின்போதுதான் நமக்குள் புது உற்சாகமே உருவாகிறது,

  நன்றி ஹேமா

  பதிலளிநீக்கு
 6. இப்படிக்கு நிஜாம்.., கூறியது...
  மலிக்கா படம் ரொம்ப அருமை. இதயத்துடிப்பை இங்கேயே பார்த்துக்கலாம் போல. கவிதையும் நல்லாயிருக்கு//

  எதிரொலித்துவிட்டதே,கவிதை மற்றும் படத்தின் ஒளி, மிகுந்த சந்தோஷம் நிஜாம்.

  பதிலளிநீக்கு
 7. // உள்ளத்துக்குள் நீயும் துள்ள -உன்
  மெளனம் என்னைக்கொல்ல
  எனையே நான் மறந்து
  மரம்போல் நின்றதென்ன

  மெல்லிய காற்றாகி
  மேனியில் படர்ந்ததென்ன
  வண்டுக்குள் பூவாகி
  என்னை நீ வதைத்ததென்ன //
  அற்புதமான வரிகள், நல்ல கவிதை, காதலின் நயம் அழகு. மிகவும் நன்று.

  பதிலளிநீக்கு
 8. // உள்ளத்துக்குள் நீயும் துள்ள -உன்
  மெளனம் என்னைக்கொல்ல
  எனையே நான் மறந்து
  மரம்போல் நின்றதென்ன

  மெல்லிய காற்றாகி
  மேனியில் படர்ந்ததென்ன
  வண்டுக்குள் பூவாகி
  என்னை நீ வதைத்ததென்ன //
  அற்புதமான வரிகள், நல்ல கவிதை, காதலின் நயம் அழகு. மிகவும் நன்று.

  பதிலளிநீக்கு
 9. Anbu mayamana intha kavithaiyai padikkum poothu ooril irrukum asai manaiviyin anbu mugam ninaivuku vanthathu Sakothari!

  - Trichy Syed

  பதிலளிநீக்கு
 10. Anbana ullathil irrunthuthan ithupool anban kavithaikal varamudiyum...

  musthafa

  பதிலளிநீக்கு
 11. //அற்புதமான வரிகள், நல்ல கவிதை, காதலின் நயம் அழகு. மிகவும் நன்று.//

  பித்தனின் வாக்கு பொய்யாகுமா
  மிகுந்த மகிழ்ச்சி சார், தாங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
  மிக்க நன்றி மீண்டும் வருக.

  பதிலளிநீக்கு
 12. /மலர்வனம் கூறியது...
  Anbu mayamana intha kavithaiyai padikkum poothu ooril irrukum asai manaiviyin anbu mugam ninaivuku vanthathu Sakothari!

  - Trichy Syed/

  அன்போடு கருத்துக்கள் வழக்கும் மலர்வனத்திற்கு மனமார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
 13. /பெயரில்லா கூறியது...
  Anbana ullathil irrunthuthan ithupool anban kavithaikal varamudiyum...

  musthafa/

  மிக்க நன்றி முஸ்தபா, மீண்டும் வருக கருத்துக்களைதருக..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது