நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தேடுதல்அன்பு என்ற
அருமருந்து
அகிலமெங்கும்
கொட்டிகிடக்கிறது

உள்ளொன்று வைத்து
புறமொன்றும்
பணக்காரன்
என்றால் ஒருமுகம்
பாமரன்
என்றால் ஒருமுகமென
பிரித்துப்பார்ப்பதா


தேடுகிறேன் தேடுகிறேன்
தெளிவான முகங்களை
அதில்
எது தெளிவென்று
இன்றுவரை புரியவில்லை

அத்தனை முகங்களுக்குள்ளும்
அன்பும் உண்டு
ஆன்மாவும் உண்டு
ஆன்மீகமும் உண்டு
ஆதங்கமும் உண்டு

’ஆதலால்’
எந்த மனிதர்கருக்குள்
எது இருந்தபோதிலும்
மரணம் வரும்வரை
மனிதர்களாய் வாழ்வோம்

பொய்முகங்கள் புணையாமல்
பெயருக்காக பழகாமல்
மனம் பொருந்திய அன்போடு
மனமகிழ்வுடன் வாழ்வோம்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

2 கருத்துகள்:

  1. மனம் பொருந்திய அன்போடு மகிழ்வோடு சொல்கிறேன், ரமலான் முபாரக்!

    பதிலளிநீக்கு
  2. மனநிறைவோடு தாங்களின் வாழ்த்துகளை ஏற்க்கொள்கிறேன் சுமஜ்லாக்கா

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது