நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஏதோ நடக்கிறது




திடீரென்று
சடசடவென கொட்டிய மழை
பெருந்துளிகளாகி
என்தேகத்தைத்தொட
சட்டென்று
குடையெடுத்து பட்டென்று
விரித்தேன்

ஆனபோதும்
நனைந்துகொண்டிருந்தேன்
சுற்றும் முற்றும்
பார்த்தபோதுதான் தெரிந்தது
மழை மனதிலும்
நான்
வெறும் குடையிலும்..





அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

நட்பான உறவு

Free Myspace Glitters @ GlitterUniverse.com


தோழமையே தோழமையே
தோள்கொடுக்கும்
தோழமையே
உனைபார்த்து நாளாச்சி
அதனால மனபாரம்
கூடிப்போச்சி

ராக்கால வானமாய்
மனம் மூட
கறுத்தமேகமாய்
முகம் சோம்ப

இடிசத்தம்போல்
இதயத்திற்க்குள் இன்னல்
மின்னல்வந்து கண்ணுக்குள்
மின்ன
வான்மழையை எதிர்பார்த்த
வாடிய பயிராய்
உன்வரவை
எண்ணி எதிர்பார்த்திருக்கிறேன்

கறுத்தமேகம் கொட்டிடுமா
மழையை
மூடியவானம் தூறிடுமா
தூறலை

மனதிற்குள்
மெளனமாய் காத்திருக்கிறேன்
மயிலிறகாய் வருவாயா
தவியாய் தவித்து
தாகித்து நிற்கிறேன்
தாகம் தீர்க்க
தண்ணீர் கொஞ்சம் தருவாயா..



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

மல்லிகையே


வண்ணமல்லியே வசந்தமல்லியே
வாசம்வீசிடும் வசியக்காரியே

வெள்ளைமேனியில் பச்சை பாவாடை
அணிந்திருக்கும் நீ அழகுதேவதை

உன்பட்டுதேகத்தை
தொட்டுத்தொடுக்கையில்
எந்தன் விரல்களும்
வீணைமீட்டுதே

தொடுத்து முடித்ததும்
தலையில் வைக்கயில்
வாசம் வீசியே
சரங்களும் சரசம்பாடுதே

கொடியில் பூத்து
நீ
கொள்ளை கொள்கிறாய்

கூந்தல் ஏறியே
பலரின்
உறக்கம் கொல்கிறாய்

மணத்தைப்பரப்பியே
மயக்கவைப்பியே
மணப் பந்தலையும்
அலங்கரிப்பியே

சின்னமல்லியே உனக்கொரு
சேதி தெரியுமா
எந்தன் மன்னவன்
உன்னில் மயங்கவில்லையே

நானிருக்கையில்
அவனுக்கு
நீ எதற்கடி
என்கூந்தலுக்குள்
நீ ஒளிந்துகொள்ளடி....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது