நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எதைத்தொலைத்தோம்

எதையோ தினம் தினம் தேடுகிறோம்

அப்படி எதை தொலைத்தோம்?
நித்தம் நித்தம் கனவில் வருவதை
நிஜங்களாக்க துடிக்கிறோம்.
கண்ணுக்குள் வலம்வந்து

நெஞ்சுக்குள் குடிகொண்ட
குடும்பத்தை விட்டு விட்டு-
காகிதபணத்திற்காக கடல்கடந்து
கானகம் வந்தோம்

நாடுவிட்டு நாடுவந்தும்-நாம்
நினைத்தது நடக்கலையே! என
நம்மை நாமே தேற்றித்தேற்றி   நம்
கவலைகளை மறக்கிறோம்
பாலைவனம் வந்தபின்னே   நம்

குடும்பம் சோலைவனம் ஆனபோதும்  நாம்
இழந்தது எல்லாம் திரும்பிடுமா?
நம் இளமை மீண்டும் வந்திடுமா? என
ஆயிரமாயிரம் கேள்விகளை கேட்கும்
மனதிடம் ஆறுதலும் சொல்லுகிறோம்

அமைதியை தேடித்தேடி  தினம்
ஆளாய்ப்பறக்கிறோம்  அது
நம் ஆன்மாக்குள்ளே இருப்பதை
அறிய மறுக்கிறோம்

எதையோ தொலைந்ததாய் நினைத்து நினைத்து
நித்தம் நித்தம் தேடுகிறோம்  ஆனால்
எதைத்தொலைத்தோம் என்றுதான்
“விடை தேடுகிறோம்”



[இந்த கவிதை /எதை தேடுகிறோம்/  என்ற தலைப்பிற்காக   அமீரகத்தில் வெளியாகும் தமிழ்தேர் இதழுக்காக நான் எழுதியது]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

கவிக்காக ஒரு கவிதை


உன் கவித்தடாகத்தில் கவிதை நீராடவந்தேன்
அதில் ஆயிரமாயிரம் தாமரைகள் தத்தளித்தபடி
தடாகத்தின் ததும்பளில் ஆனந்தகும்மியடித்தபடி

காதலின் பரிமாணங்கள் கலைகட்டியிருந்தன
அழுகையின் அர்த்தங்கள் அரங்கேறியிருந்தன
சிரிப்பின் சிலம்பொலிகள் சினிங்கிக்கொண்டிருந்தன

உணர்வுகளின் பிம்மங்கள் மிளிர்ந்துமிளிரின
உணர்ச்சிகளின் உச்சங்கள் உள்ளங்களை தொட்டன
உண்மைகளின் சுவடுகள் உண்மையில் சுட்டன

பொய்களை வடித்து வடித்து
சிலகவிகளை படைத்திருந்திருந்தாலும்
சொட்டச்சொட்ட வடியும் கொம்புத்தேனாய் இனித்தது

தினம் தினம் கவிபடைக்கிறாய்
தித்திப்பாய் வரிகொடுக்கிறாய்
திகட்டாமல் உணர்வுகளின் பிம்பங்களை
கொட்டிகுமித்திருக்கிறாய்


பிறரின் மனங்களை கவிகளால் படம்பிடிக்கிறாய்
அதனால் பலமனங்களிலும் இடம்பிடிக்கிறாய்
தொடர்ந்து தொடரட்டும் உன்கவிப்பணி
தொடர்ந்து வரட்டும் பலரின் விழிஇனி....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

ஒரே தவிப்பு

மஞ்சத்தின் கட்டிலில் கிடந்துகொண்டு
வெற்றுமடியையே உற்றுப்பார்த்தபடி
மனம்குமுறி அழுதாள் மங்கை
மழழை வரம் கேட்டு

குப்பைத்தொட்டியில் கூளங்களுக்குநடுவில்
குட்டிக் கைகால்களை உதைத்தபடி
கூக்குரலிட்டுஅழுதது மழழை
அன்னை வரம் கேட்டு......



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது