எதையோ தினம் தினம் தேடுகிறோம்
அப்படி எதை தொலைத்தோம்?
நித்தம் நித்தம் கனவில் வருவதை
நிஜங்களாக்க துடிக்கிறோம்.
கண்ணுக்குள் வலம்வந்து
நெஞ்சுக்குள் குடிகொண்ட
குடும்பத்தை விட்டு விட்டு-
காகிதபணத்திற்காக கடல்கடந்து
கானகம் வந்தோம்
நாடுவிட்டு நாடுவந்தும்-நாம்
நினைத்தது நடக்கலையே! என
நம்மை நாமே தேற்றித்தேற்றி நம்
கவலைகளை மறக்கிறோம்
பாலைவனம் வந்தபின்னே நம்
குடும்பம் சோலைவனம் ஆனபோதும் நாம்
இழந்தது எல்லாம் திரும்பிடுமா?
நம் இளமை மீண்டும் வந்திடுமா? என
ஆயிரமாயிரம் கேள்விகளை கேட்கும்
மனதிடம் ஆறுதலும் சொல்லுகிறோம்
அமைதியை தேடித்தேடி தினம்
ஆளாய்ப்பறக்கிறோம் அது
நம் ஆன்மாக்குள்ளே இருப்பதை
அறிய மறுக்கிறோம்
எதையோ தொலைந்ததாய் நினைத்து நினைத்து
நித்தம் நித்தம் தேடுகிறோம் ஆனால்
எதைத்தொலைத்தோம் என்றுதான்
“விடை தேடுகிறோம்”
[இந்த கவிதை /எதை தேடுகிறோம்/ என்ற தலைப்பிற்காக அமீரகத்தில் வெளியாகும் தமிழ்தேர் இதழுக்காக நான் எழுதியது]
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
உண்மை தான் தோழி.நம் இந்திய தேசத்தை விட்டு கடல் கடந்து நம்மில் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு செல்வது பணத்தை ஈட்டத்தான்.அந்த பணம்
பதிலளிநீக்குஈட்டும் காலங்களில் நம் சொந்த ஊரில் நடக்கும் நல்லது,கேட்டது என்று எந்த சமயங்களிலும் நம்மால் கலந்து கொள்ளமுடியாமல் மனதின் உள்ளயே புழுங்கி அவஸ்தை படும் இனங்களாக மட்டுமே நாம் இருக்கிறோம். உங்களின் கவிதையை படிக்கும்போது கொஞ்சமா ஆறுதலாகஇருக்கிறது.
உண்மைதான் மலிக்கா....
பதிலளிநீக்குஇக்கரைக்கு அக்ககரை பச்சை நிம்மதியை தேடி நிம்மதி இழந்து வாழ்வு ..........
பதிலளிநீக்குஅழகாய்ச் சொன்ன ஏக்கங்கள் நன்று
பதிலளிநீக்குஉணர்வுகளை வெளிப்படையாக வடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தோழி. ஆனால் அந்த உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் உள்நாட்டில் சொந்தங்கள் ஆடம்பர வாழ்க்கையை எதிர்பார்ப்பது அவர்களால் புரிந்து கொள்ளப் பட வேண்டும்
பதிலளிநீக்குமிக அருமை
பதிலளிநீக்குஇதையும் கொஞ்சம் பாருங்கள்
http://theyaa.blogspot.com/2009/11/blog-post_20.html
உணர்வுகளை வெளிப்படையாக வடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தோழி. ஆனால் அந்த உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் உள்நாட்டில் சொந்தங்கள் ஆடம்பர வாழ்க்கையை எதிர்பார்ப்பது அவர்களால் புரிந்து கொள்ளப் பட வேண்டும்
பதிலளிநீக்குஅருமை சகோ...
பதிலளிநீக்குதங்கள் பெயர் கன்னடம் மாதிரியிருந்தது அதுதான் நான் அப்படி நினைத்துவிட்டேன் போல பெங்களூரென்று மன்னிக்க...
எதைத் தொலைத்தோமோ அது இங்கேய தொலைக்கபட்டது.
பதிலளிநீக்குஎதைத் தொலைக்கவிருக்கிறமோ அது இங்கேயே தொலைக்க்ப்படும்...
ஹீஹீஹீ எதிர் கவுஜ..
உங்க கவிதை நல்லாருக்கு...
கவிதை ரொம்ப அருமை மலிக்கா.
பதிலளிநீக்குஇதே பொருளில் நான் எழுதிய இதையும் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள் நேரம் கிடைக்கும்போது.
http://syednavas.blogspot.com/2009/07/blog-post_19.html
/பூங்குன்றன் வேதநாயகம் கூறியது...
பதிலளிநீக்குஉண்மை தான் தோழி.நம் இந்திய தேசத்தை விட்டு கடல் கடந்து நம்மில் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு செல்வது பணத்தை ஈட்டத்தான்.அந்த பணம்
ஈட்டும் காலங்களில் நம் சொந்த ஊரில் நடக்கும் நல்லது,கேட்டது என்று எந்த சமயங்களிலும் நம்மால் கலந்து கொள்ளமுடியாமல் மனதின் உள்ளயே புழுங்கி அவஸ்தை படும் இனங்களாக மட்டுமே நாம் இருக்கிறோம். உங்களின் கவிதையை படிக்கும்போது கொஞ்சமா ஆறுதலாகஇருக்கிறது./
எழுத்துக்களால் ஆறுதல்தரமுடிவதை நினைத்து பெருமையாக இருக்கு. மிகவும் சந்தோஷம் தோழமையே...
/புலவன் புலிகேசி கூறியது...
பதிலளிநீக்குஉண்மைதான் மலிக்கா....
மிக்க நன்றி முருகவேல்...
கவிக்கிழவன் கூறியது...
இக்கரைக்கு அக்ககரை பச்சை நிம்மதியை தேடி நிம்மதி இழந்து வாழ்வு ..
நிஜம்தான் யாதவன்...
/பூங்கோதை கூறியது...
பதிலளிநீக்குஉணர்வுகளை வெளிப்படையாக வடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தோழி. ஆனால் அந்த உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் உள்நாட்டில் சொந்தங்கள் ஆடம்பர வாழ்க்கையை எதிர்பார்ப்பது அவர்களால் புரிந்து கொள்ளப் பட வேண்டும்/
புரிந்தும் புரியாததுபோல் நடக்கிறது சில மனிதமனங்கள் பூங்கோதை..
வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி..
/வானம்பாடிகள் கூறியது...
அழகாய்ச் சொன்ன ஏக்கங்கள் நன்று/
மிகவும் மகிழ்ச்சி வானம்பாடிகளாரே...
/தியாவின் பேனா கூறியது...
பதிலளிநீக்குமிக அருமை
இதையும் கொஞ்சம் பாருங்கள்/
பார்த்தேன் தியா.. மிகவும் சந்தோஷமாக இருக்கு, என்னைபற்றி. என் எழுத்துக்களைபற்றி தாங்களின் ஆய்வு மிக்க நன்று
இதுபோன்று ஆராயும்போதுதான் நமக்குள் என்னென்ன இருக்கு என்பதே நமக்கு தெரிகிறது.
அதனால் இன்னும் நல்ல முன்னேஏற்றத்துடன் எழுதனும் என்ற எண்ணம் மேலோங்குகிறது..
உங்களை ஆய்விற்க்கும் கருத்திற்க்கும் என் மனமார்ந்த நன்றி தியா...
/பிரியமுடன்...வசந்த் கூறியது...
பதிலளிநீக்குஅருமை சகோ...
தங்கள் பெயர் கன்னடம் மாதிரியிருந்தது அதுதான் நான் அப்படி நினைத்துவிட்டேன் போல பெங்களூரென்று மன்னிக்க.../
என்ன பிரியமான சகோதரா. மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு
[மன்னிப்பு எனக்கு எந்தமொழியிலும் பிடிக்காத வார்த்தை ஹ ஹா ஹா]
நான் அதிரை சிட்டுக்குருவி..
வாழ்க்கையை உணர்த்திய அருமையான கவிதை.
பதிலளிநீக்குஅமைதியை தேடித்தேடி தினம்
பதிலளிநீக்குஆளாய்ப்பறக்கிறோம் அது
நம் ஆன்மாக்குள்ளே இருப்பதை
அறிய மறுக்கிறோம்
Nam manasoodu pesuvathu pool ullathu...
Trichy Syed