நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உலகத்தமிழ் பல்கலைகழக விருது.



எழுத்தறிவித்தவனுக்கே புகழனைத்தும்.

20 -2-2016 நேற்று காலை 11 மணிக்கு
 மதுரை பாப்பீஸ் ஹோட்டலில் அமெரிக்க வாஷிங்டன் உலக தமிழ் பல்கலைகழக விருதுவழங்கும்விழாவில்

அரங்கத்தில்
அறிவாற்றல்மிக்க அறிஞர்களுக்கும் முனைவர்களுக்கும் மத்தியில்,
தரப்பட்ட இருக்கையில், முக்காடிட்டிட்ட உடலுக்குள் அறிவுசெல்களை திறந்து, மனதுக்குள் எதையோ சாதித்த உணர்வோடு நான், உள்ளம் முழுவதும் படபடப்போடும் இனம்புரியா இருதயத்துடிப்போடும்
பூக்கவா புதையவா என்ற நிலையில் எனது இருக்கையில் அமர்ந்திருக்கையில்

அழைப்பொலியின் வழியே தமிழ்குயிலொன்று எனது நூலின் தலைப்பைக்கூறி அழைத்தது செவிக்குள் ஊடுருவ என்ன நடக்கிறதென அறியாது மிதப்பதுபோல் எழுந்து நடந்த கால்கள் மேடையேறி மேன்மைமிகு நீதிபதி, வழக்கரிஞர். ஐஏஸ் அதிகாரி,அரசியல்வாதி, முனைவர், இவர்கள் மற்றும் விழா நாயகர் அமெரிக்க வாஷிங்டன் உலக தமிழ் பல்கலைகழககத்தின் நிறுவனர் திரு செல்வன் குமார்,அவர்கள் முன்னிலையில் எனக்கான விருது வழங்கப்பட, அறிஞர்கள் வருகையாளர்களின் கைத்தட்டல்களுக்கிடையில் ஏக இறைவனை மனதுக்குள் சஜதாசெய்தபடி[சாஷ்டாங்கம்] தரப்பட்ட விருதை பெற்றுக்கொண்டு வந்தேன்..

எனது இரண்டாம் நூலான பூக்கவா புதையவா விருதுக்கு தேர்வாக காரணமாயிருந்த மணிமேகலை பிரசுர நிறுவனர் திரு ரவி தமிழ்வாணன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவித்துக்கொண்டேன். பல பல தொழில்துறை சார்ந்தவர்கள் சமூக நலப்பணித் தொண்டர்கள்,கவிஞர்கள், எழுத்தாளர்களென பலரை சந்திக்கும் அரியவாய்ப்பு, அனைவருக்கும் எனக்கு ஊக்கம்தரும் வகையில் என்னுடன் உரையாடியது இன்னுமின்னும் எழுத்தவேண்டுமென ஒரு மிகதெளிவான உந்துதலை தந்தது.

மேலும்

விழா நாயகரிடம் உரையாடியபோது மிகவும் சந்தமாய் பேசினார், நீங்களெல்லாம் விடாது தொடர்ந்து எழுதனும்மா, உன் எழுத்தில் ஓர் அழுத்தமும் தெளிவும் உள்ளது  உனது அடுத்த நூலுக்கு நானே முன்னுரை தருவேன், என தனது விசிட்டிங்கார்டை தந்து ஊக்கப்படுத்தியது எழுத்தின் மேல் இன்னும் ஒரு வலுவான நம்பிக்கையும் ஏக இறைவன் எனக்களித்திருக்கும் இவ்வாய்ப்பினை நல்வழியில் பயன்படுத்தி இன்னும் சிறப்பாக எழுதவேண்டுமென உறுதிகொண்டேன் மனதில்..

சிறுவருத்தம் என்னுடன் இவ்விருதுக்கு எனது மச்சான் அருகில் இல்லாததுதான்..

நீரோடை வழியே எனது எண்ணங்கள் வெளியுலகத்திற்க்கும் ஓடின நல்லுணர்வோடு, என்னெழுத்துக்களை ஊக்கமூட்டியே இந்நிலையை அடையவைத்திருக்கும் தங்கள் அனைவருக்குமே என் வாழ்நாள் நன்றிகள் உயிர்மூச்சு உள்ளவரை என் எழுத்தின் எழுச்சி எழுந்துகொண்டேயிருக்கும் இறைநாடின்..

இவ்விருதை எனக்களித்து என்னை இலக்கியபாத்தைக்குள் இன்னும் முன்னேறிச்செல்ல ஊக்குவித்த அமெர்க்க உலகதமிழ் பல்கலை கழகத்திற்க்கு எனது உளமார்ந்த நன்றிகள்..

 இவ்விருதை வாங்குகையில், இஸ்லாம்  பெண்ணை அடிமைப்படுத்துவதாக கூறப்படுவதை எண்ணி வருந்தினேன், என் மார்க்கம் எனக்கு மிகுந்த பாதுகாப்போடு எல்லாவிதமான சுதந்திரமும் அளித்திருந்தும் அதனைபற்றி தவறான கண்ணோட்டம் உருவாவதற்கு  யார் காரணம் என ஆதங்கத்தோடு..

3 கருத்துகள்:

  1. வாழ்த்துகள் கவிஞரே!


    தாங்கள் மென்மேலும் பல கருத்தான கவிதைகள் படைத்திடவும்
    பல உயர் விருதுகள் பெற்றிடவும் துஆ செய்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் சகோகதரர் அவர்களின் துஆக்களை இறைவன் ஏற்று அருள்வானாக..

    நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ..

    பதிலளிநீக்கு
  3. அன்புதோழி/சகோதரி படிக்கும் போது மெய் சிலிர்த்து விட்டது,படித்து கொண்டே வரும் போது உங்கள் மச்சானும் கூட இருந்தால் இரட்டிப்பு சந்தோஷ பட்டு இருப்பீங்க என நினைத்தேன் எழுதி இருந்தீங்க, வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ,முதல் முதல் நான் வாழ்த்தியது பலித்து விட்டது, ரொம்ப சந்தோஷம்,

    // உங்கள் கவிதை உலகமெங்கும் நீரோடையாக ஓடட்டும்//

    எல்லா புகைப்படத்தையும் சேருங்கள்

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது