நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இப்படியும் சில....
பெயரற்ற
குயிலொன்றின்
குரலை இரவல்வாங்கி
என்னிதய செய்தியொன்றை
இரங்கலாக
உன்கல்லிதய செவிகளுக்கும்....
மயானதேசத்து
மலர்களை கொய்து
என்மன ரணங்களை
சாராக
உன்துரோகநாவின் நரம்புகளுக்கும்.....
அகோர
எரிப்பிளம்பின் அனலெடுத்து
காற்றாக
அமைதிகுலைத்த
உன் தீயெண்ணங்களுக்கும்.....
பாடம்புகட்ட
அனுப்பிவைத்துள்ளேன்
உணர்வறுத்து உறவற்றப்போன
உன்னையது
ஒன்றும் செய்யாதெனத் தெரிந்தும்....அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

5 கருத்துகள்:

 1. நித்தியதேவி16 மே, 2015 அன்று PM 3:56

  பெயரற்ற
  குயிலொன்றின்
  குரலை இரவல்வாங்கி
  என்னிதய செய்தியொன்றை
  இரங்கலாக
  // மெல்லிய இதயத்தின் மெளனவலியாய் உணர்கிறேன் மலிக்கா. இது எனக்குமானதுப்பா..

  நித்தியதேவி
  நட்புடன்...

  பதிலளிநீக்கு
 2. வாங்க நித்தி. நலமா. ஆங்காங்கே இப்படியும் சில, என்ன செய்ய நிலையில்லா மனதால் தடுமாறும் நினைவு..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிமா..

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  வரிகளை இரசித்தேன் அருமை.. பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. வாங்க ரூபன் .தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் அன்பான நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 5. அன்புள்ள சகோதரி ‘அன்புடன் மலிக்கா’ அவர்களுக்கு வணக்கம்! இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால், தங்களின் வலைத்தளம், இன்றைய (08.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

  வலைச்சர இணைப்பு இதோ:

  வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள்
  http://blogintamil.blogspot.in/2015/06/8.html

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது