நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பெரும் உபகாரி .




கொடைகளில்பெருங்ககொடை
இறையருளும் திருக்கொடை

இம்மாதத்தில் பிடிப்பது
உண்ணா நோன்பு மட்டுமல்ல
இது உயர்பதவியையும் பெற்றுதரும்
உன்னதமான மாண்பு!

பசியின் நிலையறிய- இழி
இச்சைகள் களைந்தெறிய
வரியவர் நிலை உணர்ந்து
வாரி வழங்கும் குணமறிய!

பதினொரு மாதங்கள் சேர்த்த
பாவங்களை எண்ணி கரைந்தழுக -இனி
பாவக்கறைகள் படியாதிருக்க
படைத்தோனை நினைத்துருக !

காலி வயிறுக்கும்
கடும் நா வறட்சிக்கும்
மனோ இச்சைகளைத் துறந்து
மறையோனை நினைப்பதற்க்கும்!

பசித்திருந்து தனித்திருந்து விழித்திருந்து
பாவசெயல்களிலிருந்து விலகியிருப்பவைக்கும்
கிடைத்திடுமே கூலி கூலி நற்கூலி
இறைவன் வழங்கிடும் ஏற்றமிகு கூலி!

கண்ணீர்விட்டு கையேந்தி கேட்டிடு
கருணையாளன் தந்திடுவான்
கண்ணியமிகுந்த
சுவர்கமென்னும் உயர் பதவி

...விருந்தாளியல்ல நோன்பு
உடலுக்கும் உலக்குக்கும் பல
நிலைகளை புரியவைத்து பாடஞ்சொல்லித்தரும்
பெரும் உபகாரி.......





அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

10 கருத்துகள்:

  1. வணக்கம்
    உண்மைதான்
    ரமளான் பற்றி சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் கவிதை வடிவில்பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. அன்பு. சகோ ரூபனின் வருகைக்கும் நேச கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி மா..

      நீக்கு
  2. வணக்கம்

    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எப்போதுதான் பார்ப்பது.......: சித்திரையில் - பார்ப்போம் சிங்காரியே சொல்லு நித்திரையும் போனதடி நின்று பதில் சொல்லும் சித்திரை மாத சுடும்வெயில் சுர் என்று என்னை...

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. அன்பு. சகோ பாப்புவின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  4. பதில்கள்
    1. வாங்க குமார் நலமா.வருகைக்கும் அன்புவாழ்துத்துக்கும் மிக்கநன்றிமா

      நீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது