மாசற்ற காதலெல்லாம்
மலையேறி போச்சிங்கண்ணே
காதலர்கள் மாசாகிப் போனதால
களிசடைக் காதலாசிங்கண்ணே
காசுள்ள காதல் மட்டும்
களிகண்டு நிற்குதண்ணே
கற்புள்ள காதலெல்லாம்
கசிங்கிதான் போசிங்கண்ணே
மனமொப்பி வாழும் வாழ்க்க
மண்ணுக்குள் புதையுதண்ணே
பணப்பையி நிரம்பக் கண்டா
பம்பரமா மனங்க சுத்துதண்ணே
மனம் ஊனம் ஆவதால
மனிதமெல்லாம் சிதையுதண்ணே
உடல் ஊனம் பெரிசுயில்ல-இத
உணரும் மனம் எவ்ளோ அண்ணே
மதிப்புள்ள காதல் கண்டால்
மனமகிழ்வு கொள்ளுமண்ணே
மாசில்லா காதல் வாழ்ந்தால்
மாசற்று பூமி சுத்துமண்ணே....
===================================
காதல் என்ற எழுத்துக்குதான்
கால் துணைக்கால் முக்கியம்
மாசில்லா காதலுக்கு தேவையில்லை
மனமிருந்தால் தோளே காலாகும்
இணையே பெருந்துணையாகும்.
==========================================
கவிதை வயல் 62க்காக எழுதியது..
”கவியருவி”
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
மனம் ஊனம் ஆவதால
பதிலளிநீக்குமனிதமெல்லாம் சிதையுதண்ணே
உடல் ஊனம் பெரிசுயில்ல-இத
உணரும் மனம் எவ்ளோ அண்ணே///
எப்படித்தான் பொட்டில் அடிப்பீங்களோ மலிக்கா, இப்படி வார்த்தையால அடிக்கிறீங்க.
சபாஷ் போடவா
சலாம் போடவா..
இரண்டையும் சேர்த்துபோடுகிறேன்
வாழ்க வளமுடன் நலமுடன்..
வீரமணி ஆறுமுகம்..
மனம் ஊனம் ஆகிப் பல வருசங்கள் ஆச்சிங்க...!
பதிலளிநீக்குமனமொப்பி வாழும் வாழ்க்க
பதிலளிநீக்குமண்ணுக்குள் புதையுதண்ணே
பணப்பையி நிரம்பக் கண்டா
பம்பரமா மனங்க சுத்துதண்ணே
மனம் ஊனம் ஆவதால
மனிதமெல்லாம் சிதையுதண்ணே
உடல் ஊனம் பெரிசுயில்ல-இத
உணரும் மனம் எவ்ளோ அண்ணே
உண்மைதான்... மனம் ஊனமாகி பல காலமாகிப் போச்சு அக்கா...
நல்ல கவிதை.