வகை வகையாய் சுவை சுவையாய்
சுத்திகரிக்கப்பட்ட உணவு
வாயிருந்தும் கையிருந்தும்
எடுத்துண்ண முடியாத
உடல் வருத்தும் நோவு
உண்டு களித் தொதிக்கிய
உண்ணாமல் குதறித் தள்ளிய
மிச்ச மீதி கழிவு
உயிர் போக்கும் பசிக்கு
உதவும் கவள உணவு
நுனி நாக்கின் ருசி
அடி நாக்கடையும்போது மறைந்து
உண்டதெல்லாம் செரித்த பின்னே
உமட்டிக்கொண்டு வரும் இழிவு
இதற்குத்தானே இதற்குத்தானே
எதையும் செய்ய தூண்டி
எல்லை தாண்டும்
எல்லாமும் தாண்டும் மனது
பசியென வந்துவிட்டால்
பத்தென்ன பதினொன்றுமறியாது
ருசிகொண்ட பேர்களுக்கெல்லாம்
பசியினருமை பார்த்தாலும் உணராது
எத்தியோப்பியா நிலை[உடல்]களை
ஒரு கணமேனும் சிந்தித்து பாரு
ஒரு பருக்கையேனும்
சிந்திவிட மனம் வருமோ கூறு
மலமாகப்போகும் உணவுக்குதான்
இத்தனை பெரும்பாடு - மனிதா[பிறர்]
மரணிக்குமுன் பசிக்கு
இயன்றவரை நல் உணவளித்து உதவு...
கவிதை வயல் - 40 திற்காக எழுதியது.
”கவியருவி”
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
//எத்தியோப்பியா நிலை[உடல்]களை
பதிலளிநீக்குஒரு கணமேனும் சிந்தித்து பாரு
ஒரு பருக்கையேனும்
சிந்திவிட மனம் வருமோ கூறு//
சூப்பர் மேம், இவங்களை நினைக்கவெல்லாம் எங்கமேன் எங்களுக்கு நேரம் நாங்கதான் காலத்தின் பின்னே ஓடிக்கிட்டேயிருக்கோமே.
இனி கவளம் வைக்கும்போதெல்லாம் இந்த கவிதை நியாபகத்திற்க்கு வரும் நன்றி மேம்..
எத்தியோப்பியாவின் நிலை வருத்தம் அளிக்கிறது...
பதிலளிநீக்குVethanaithaan sako
பதிலளிநீக்கு