நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஆவதும் அழிவதும் உன்னாலே!


காரி உமிழ்ந்தேனே
கண் கண்ட
காட்சியின்  முன்னிலையில்
கடுங்சொற்கள் கிடைத்தும்
கட்டுக்குள்ளானது என்னிலையில்

பெண்ணே
உன்னாலும்தான்-பல
பழி பாவங்கள் தொடர்கிறது
கொலைகளும்
கற்பழிப்புகள் நிகழ்கிறது

பெண்ணென்பவளே
பெரும் பொக்கிஷம்
அதை பாதுகாக்க தவறினாலோ
அதுவே அவளுக்கு
ஆழகாலவிசம் என்பது
உலகறிந்த விசயம்
ஆனாலது உனக்கு
விளங்க மறுப்பதுதான்
எனக்கு ஆதங்க ஆவேசம்

பூவையரே உன் மேனி
புற்பூண்டோ! தெருச்செடியோ
போவதும் வருவதும்
பொழுது போக்கிற்காக
மேய்ந்துவிட்டு போக!

பெண்களுக்கென
மறைவிடங்கள்
கொடுக்கப்படிருந்தும்
தனியிடங்கள்
தடுக்கப்படிருந்தும்

பொதுயிடத்தில் நீ குளித்து
பெண்ணே நீ நடந்து வருகையிலே
எதிர்வரும் கண்களுகெல்லாம்
ஏகபோக விருந்தாகிறாயே
எல்லோருர் முன்னிலையில் உடைமாற்றி
எதிராளியின் மனதின்
ஏக்கத்திற்கு எண்ணையுற்றுகிறாயே!


ஆணை ஏன் குற்றம் சொல்ல
பெண்ணே உன் நடத்தை
சரியில்லையெனும்போது
சந்தர்ப்பம் சருக்கிவிட்டால்
சகதியென்ன சந்தனமென்ன
சத்தியவானும் சாத்தன்தான்

நீரில் நனைந்த தேகம்
நிர்கதியாய் திறந்து கிடக்க
அதை
நேரில் காணும் கண்களுக்கோ
நெசவு செய்வதுபோல் கிடந்தடிக்க
ஆசைக்கு தூபம்போடும்
அடியே உனது செயல்
அடுத்தோரையும் - பாவத்திற்க்கு
அழைக்குதே உனது நிலை

வாழைக் குமரிக்கும்
வனப்பு கோதைக்கும்
துளியும் வெட்கமில்லை
வளர்த்த வளர்ப்புகளும்
வளர்க்கும் வளர்ப்புகளும்
வர வர சரியேயில்லை - இதில்
ஆணைக் குற்றம் சொல்வதில்
நியாயமேயில்லை

நாய்களுக்குதான்
ஆறறிவில்லை
நடுரோட்டிலது
பிறந்தமேனியாக திரிந்தாலும்
தவறில்லை

"ஆனால்"

பெண்ணே
உனக்கு அறிவுண்டு
இருந்தும் பயனில்லை
திருமேனி திறந்துகிடந்தால்
உனக்குத்தானே
தீராத தொல்லை
தெருவில் வருவோர் போவோர்
தீண்டினால் கேட்பார் யாருமில்லை

ஈக்கள் எங்கு மொய்க்கும்?
இனிப்பிருக்கும் இடத்தினிலே
இல்லை
கழிவிருக்கும் தளத்தினிலே

நீ
கழிவாக வேண்டியயிடத்தில்
இனிப்பாகி
இனிப்பாக வேண்டிய இடத்தில்
கழிவாக ஆவதினால்
தீயவைகள் ஆகிறது
நல்லவைகள் அழிகிறது

நீ குளித்துவந்த கோலம்கண்டு
நீ உடை மாற்றும் நிலைகண்டு
கண்கொத்திப் பாம்பாய்
உன்னை ஆண்களின் கண்கொத்தி
நின்றது கண்டு

கண்கூசி  நின்றேன்
உன் செயல்கண்டு
காரி உமிழ்ந்தேன்
பெண்ணே உன்னை
நானும் ஒரு
பெண்ணாகயிருந்தும் அங்கு.


//நீண்ட நாளைக்கு பின் டிஸ்கி எழுகிறேன்..//

பொதுயிடத்தில் பெண்கள் உடைமாற்றக்கூடாது 
கொட்டையிடத்தில் தகவல் பலகை 
இருந்தும் என்ன பயன்?
எண்ணை சோப்புதேய்த்துக்குளிக்கூடாது
பட்டைதீட்டி பலகையில் தகவல்
இருந்தும் என்ன பயன்?
சுத்தமாக வைத்திருக்கவேண்டும்
சுத்த தமிழில் சொல்லில் வடித்து
இருந்தும் என்ன பயன்
அசுத்தத்தை தவிர அங்கு வேறுயில்லை

எல்லா சொல்லும் இருக்கு தமிழ[வழக்]கத்தில்
ஆனால்
யாருமதை செயவதில்லையே புழக்கத்தில்

ஆதங்கம்தான்
நம்ம நாடு
நம்ம இனம்
நம்ம மக்கள் 
என்ற ஆதங்கம்தான்
வேறு என்னசொல்ல..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

12 கருத்துகள்:

  1. தொடர் வருகையை நிறைவாக செய்யும் அன்புச்சகோவிற்க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

    பதிலளிநீக்கு
  2. என்ன... மலிக்கா மேடம்...

    குற்றாலச் சாரல் மழையில்...
    குதூகலகமாய்
    நனைந்து..
    சில்லென்ற பொதிகைத் தென்றலை
    அனுபவிப்பதை விட்டுவிட்டு
    அங்கேயும்...
    கவிதையா?

    நம்ம பழக்கத்தோஷம்
    நம்மவிட்டு எங்கேயும் போகாது...

    நல்ல கவிதைதான்...
    ஆனால்...

    எழுத்தின் வீச்சும்...
    வரிகளின் வெப்பமும் கொண்ட
    கவிதையைக் காண்கிறபோதே
    தெரிகிறது...

    அங்கே என்ன நடந்திருக்குமென்று...

    இருந்தாலும்...
    ரொம்ப நாளக்கப்புறம்
    ஓர் “ஆவேசக் கவிதை”...

    ஏனுங்க...

    குற்றாலம் போனோமா?
    மகன பார்த்தோமா?
    அப்படியே
    குற்றால அருவில குளிச்சோமா?
    ஐந்தருவி, பாலருவி, தோட்ட அருவின்னு
    சுத்தி சுத்தி வந்து குளிச்சோமா...
    இயற்கைய ரசிச்சோமா?

    அப்படீன்னு இல்லாம

    “சமூக அக்கறை“யல்லா எதுக்கு?

    நட்புடன்...
    காஞ்சி முரளி..



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனையோ முறை குற்றாலம் போயிருக்கேன் சகோ, இதுவரை நான் பொதுவில் நீராடியதில்லை இனியும் போகலாம் அப்போதும் நீராடப்போவதுமில்லை, நம்மவேலையென்னவெனில், இறைவன் படைத்த இவ்வுலகை நம்மால் இயன்ற அளவு சுற்றிப்பார்த்து,இயற்கை கண்களால் அள்ளிக் குடித்து, மனதால் எண்ணம் எழுப்பி, எழுத்தால் [கவி]வடிப்பதுமட்டுமே.

      பொது இடத்தில் குளிப்பது அவரவரை பொருத்தது [எங்களுக்கு உகந்ததல்ல இது எவ்வளவு நல்லது என அனுபவிக்கும்போதே புரியும்]ஆனால் அது மற்றவரை எவ்விதத்திலும் பாதிக்காத வன்னம் பார்த்துக்கொள்வது மிக மிக அவசியம், அப்படியில்லையெனில் விளைவுகள் விபரீதமாகி பின் வருத்தம் கொள்வதில் என்ன லாபம்.

      ஆண் எப்படியிருந்தாலும் யாரும் அதைப்பற்றி கண்டுகொள்ளாத இவ்வுலகம், பெண்ணின் சிறு அங்க அசைவையும் ஊசிக்கண்கொண்டு நோக்குமென்பதை உலகமறிந்தது என்பதை காஞ்சியாருக்கு நான் சொல்லவேண்டியதில்லை..

      நீக்கு
    2. தாங்கள் சொல்வது உண்மைதான்... மறுக்கவில்லை...

      ஆனால்...

      உலகவியலில்..
      எதார்த்த நிலை என்பதே வேறல்லவா...

      அதைத்தான் சொன்னேன்...

      நீக்கு
    3. எதார்த்தவியல் பலநேரம் எதிராளியாகவும் ,எதிராளிக்கு சாதகமாகவும் ஆகிவிடுவதே வேதனை.

      என்ன செய்வது பலநேரங்களில் கண்களை மூடிக்கொண்டே நடக்கவேண்டியும் காதுகளை பொத்திக்கொண்டேயிருக்கவேண்டியும் உள்ளது. இருந்தபோதும் எழுத்து என்ற வடிகால் என்னிடமிருப்பதால் கொட்டித்தீர்க்கவேண்டியும் உள்ளது..

      நீக்கு
  3. ///ஆகவே அனைத்தும் நீங்கள்
    அதனுள்ளே ஓரமாய் நான்..////

    இது கொஞ்சம் ஓவராத் தெரியல... கவிஞரே...

    அனைத்தும் நாங்களாம்...
    அதனுள் ஓரமாய் நீங்களாம்...

    என்ன...?
    என்னதிது...?

    மாத்திப் போடுங்க...

    அனைத்தும் நான் (கவிஞர் மலிக்கா ஃபாரூக்)...
    அதாவது...

    நீரோடை முழுவதும்
    நீங்கள்...

    வந்துபோவனாய்...
    கருத்துரையிடுபவனாய்...
    ஓர் ஓரமாய் நாங்கள்....

    இதுதான் கரெட்...

    எப்புடி??????????????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னயிருந்தாலும் நீங்களெல்லாம்தான் நடுவில் அதனுள்ளேதான் நான் இதை மறுக்கமுடியாதுங்கோ,

      வந்துபோவதினாலும் கருத்திட்டுபோவதினாலும்தானே நீரோடையில் [கவி]நீர் குறையவிடாமல் ஓடுது..

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்திற்கும்
      மிகுந்த சந்தோஷம் சகோ.

      நீக்கு
  5. அருமையான கவிதை அக்கா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. Unmaiyana karuthukal adangkiya varikal.
    Penkal pothu idaththil
    Kulithal pala kanparvarkal
    palayidangkalukku azaimothum.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது