நாணயத்தின் மறுபெயர்
நாணயம் தொலைந்துபோய்
நாளாகிவிட்டது
நாகரீகம்கெட்ட உலகில்!
நாணயமானது
நம்பிக்கை துரோகத்தின்
மறுபெயரானது
நவீனயுகத்தில்!
நாணயங்களின் அகோர
நடனத்தால்
நாணயம் தவறி
நயமிழந்துவிட்டது!
அந்நாணயத்தில்
தலையும் பூவும்
இந்நாணயத்தில்
மோசடியும் துரோகமும்!
நம்பிக்கைகள் சிதைந்து
நாளாகிவிட்டது
நாணயம் தொலைந்துபோய்
நெடுநாளாகிவிட்டது
நவநாகரீக யுகத்தில்...
நாணயம் தலைப்பிற்காக எழுதிய கவிதை
அழகாய் வாசிப்பவர் சகோதரி சைஃபா மாலிக் , அதற்கான அருமையான விமர்சனம் தருபவர் சகோதரி கெளசி அவர்கள். சகோதரிகள் இருவருக்கும் லண்டன் பாமுகம் டிவிக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
nalla kavi...
பதிலளிநீக்குநா நயம் மிக்க கவிதை! காணொளியும் தந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குஅருமை... உண்மை...
பதிலளிநீக்குArumaiyana varikal malikka nanayam ippavellam keddupooyviddathu. Superma.
பதிலளிநீக்குநாணயம் நயம்பட கவிதையாகி காணொளி வழியாக வந்து செவிக்கும் மனதுக்கும் இதமாகியது .உள்ளதை உயர்வாக தந்த்தமைக்கு நன்றி
பதிலளிநீக்கு