நாணயத்தின் மறுபெயர்
நாணயம் தொலைந்துபோய்
நாளாகிவிட்டது
நாகரீகம்கெட்ட உலகில்!
நாணயமானது
நம்பிக்கை துரோகத்தின்
மறுபெயரானது
நவீனயுகத்தில்!
நாணயங்களின் அகோர
நடனத்தால்
நாணயம் தவறி
நயமிழந்துவிட்டது!
அந்நாணயத்தில்
தலையும் பூவும்
இந்நாணயத்தில்
மோசடியும் துரோகமும்!
நம்பிக்கைகள் சிதைந்து
நாளாகிவிட்டது
நாணயம் தொலைந்துபோய்
நெடுநாளாகிவிட்டது
நவநாகரீக யுகத்தில்...
நாணயம் தலைப்பிற்காக எழுதிய கவிதை
அழகாய் வாசிப்பவர் சகோதரி சைஃபா மாலிக் , அதற்கான அருமையான விமர்சனம் தருபவர் சகோதரி கெளசி அவர்கள். சகோதரிகள் இருவருக்கும் லண்டன் பாமுகம் டிவிக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
தற்பெருமையில்லை பேரானந்தம்.
சந்தோஷம், மகிழ்ச்சி இரண்டுக்கும் வழிவகுத்த இறைவனுக்கே புகழனைத்தும்.
எனது எழுத்துகளுக்கு கிடைக்கும் எந்த ஒரு நன்மையான விசயமானாலும் அது இறைவனைச்சார்ந்ததே, அப்படியான சந்தோஷங்கலையும் மகிழ்ச்சியையும் தரும் இறைவனை நேசிப்பதில் பெருமிதம்கொள்கிறேன்.
தடாகம் நடத்திய சர்வதேசபோட்டியில் முதன்மைக்கு கிடைத்த கவியருவி பட்டம். இலங்கையிலிருந்து கூரியரில் வந்தது. அளவில்லா மகிழ்ச்சி, இந்த பட்டத்தை அளித்த தடாகம் வட்டத்திற்க்கும் அதன் தலைவி
கலைமகள் ஹிதாயாரிஸ்வி ராத்தா அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.
மேலும்
முகநூலில் கவிதை வயலின் 100 வது கவிதையான எனது கவிதை சிறப்பு பாராட்டுப்பெற்றது சந்தோஷத்தை தந்தது. கவிதை வயலை சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கும் சகோ றாபி அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
சந்தோஷம் மகிழ்ச்சி இரண்டும் கலந்த கலவையாக அதே நேரத்தில் நெகிழக்கூடிய விசயமாக என்னைப்பற்றிய சிலவரிகள்
அதிரை அருட்கவி தாஹா அவர்கள் அதிரை நியூஸ் பேட்டியில் என்னைப்பற்றி ”பிறை”யெனசொல்லியிருப்பது நெகிழ்வைத் தருகிறது.
அதிரை திரு கவிஞர் தாஹா [மாமா] அவர்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்.
அதுமட்டுமல்லாது, என்வலைதளைங்களை அன்றாடம் பார்வையிட்டு நான் எழுதுபவைகளை ரசிப்பதோடுமட்டும் நின்றுவிடாது அதனை உள்வாங்கி. என்னை பலதளங்களின் அறிமுகப்படுத்துவது, குறிப்பாக வலைச்சரம் என்ற வலைதளத்தில் , அடிக்கடி பிற உறவுகளால்,பிறமக்களுக்கு நான் அறிமுகப்படுத்தப்படுவதுகண்டு ஆனந்தப்படுகிறேன். என் எழுத்துகளுக்கு மூலமே என்னை யாரென்று அறியாமலே என் எழுத்துகளை உள்வாங்கி என்னை ஊக்கப்படுத்தும் இணையதள நெஞ்சகள்தான் அதிகம்.
என்னைப்பலருக்கு தெரியப்படுதியிருக்கு எனது எழுத்து அதை அறியும்போது அழுதேவிடுகிறேன், அப்படியான பலநிகழ்வுகளில் ஒன்று கீழக்கரை
தாசீம்பீவி மகளீர் கல்லூரி சுமையா தாவுத் அவர்களை நான் சந்தித்தபோது ஏற்ப்பட்டது, அதேபோன்று கடந்த 20 நாளைக்கு முன்பு எதாச்சையாக அறிமுகமானபோது பேசிகொண்டேயிருக்கையில் புத்தக ÷செல்பில் ஜின்னாஹ் வாப்பாவின் புத்தகம் இருப்பதுகண்டு இது காப்பியக்கோ புத்தகமாச்சேனு எடுத்தப்ப. உங்களுக்கு தெரியுமா இவர்களை என அவர்கள் வியக்க, ம் தெரியுமேன்னு சொன்னப்ப, அட நீங்கதான் அந்த நீரோடை மலிக்காவா, நீங்கதானா அதுன்னு ஆச்சர்யத்தோடு சந்தோஷம் கலந்து உங்களைதான் பார்க்கனுமுன்னு இருந்தேன்மா, ஜின்னா வாப்பா சொல்லியிருக்காங்க என்று ,எனது அண்ணனிடமும் மச்சானிடம் என்னமா எழுதுறாங்கன்னு என்னைப்பற்றியே வியந்து கூறியது சந்தோஷத்திலும் சந்தோஷத்தை தந்தது
அப்படியான சந்தோஷத்தை தந்தவங்க வேற யாருமில்லை,
சென்னை நியூகாலேஜ் Associate professor, தமிழ்மாமணி, செந்தமிழ் செம்மல்,கவிச்சுடர், Dr, முகம்மது மரைக்காயர் அவர்கள்தான், ஆக என் எழுத்துகளால் எனக்கு நிறைய சொந்தங்களும், நட்புகளும், கிடைக்கின்றன
இப்படியான ஓர் உன்னத எழுத்தை வழங்கிய இறைவனுக்கு எனது சிரம் பணிந்த வணக்கங்கள் எந்நாளும்.
எல்லாம் வல்ல இறைவனின் விதிமீறல்கள் தாண்டாது அதிரைக்கும் முத்துவிற்க்கும் பெருமை சேர்க்கும்விதமாகவும், எனது எண்ணங்களை தெளிவாக்கி அதனை பிறர் தெளியும்வண்ணமாகவும் எடுத்துரைக்கவும் எனது எழுத்துகள் நீரோடையாய் ஓட எல்லாம் வல்ல இறைவனை மனமுருகிவேண்டுகிறேன்.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
இயற்கையற்றதால்!

பூக்கள்
விழுந்தாலும்
நசுங்கிறது பூமி
பூபாளம் கேட்டும்
புண்ணியமில்லாமல்
புதைகிறது புற்பூண்டுகள்
போகுமிடமெங்கும்
வரண்ட பூமியின்
வம்சா வழிக்கிளைகள்
கால வினோதத்தால்
தன்நிலை மாற்றிய
கால சூழ்நிலைகள்
மழைநீரை தன்மடியியில்
ஏந்த முடியாமல்
தாய்மண்ணின் நிலை
தார்சாலை மோகத்தில்
தார்மீகத்தை யிழந்த
மண்சாலை
மக்கிபோக வழியற்றவைகளால்
மாசுகளின் பிடியில்
மனிதநிலை
தவியாய் தவிக்கிறது
இயற்கையின்
இலை தலை நிலை
”இப்படியே”
தொடரும் நிலைகளால் -பலரின்
வாழ்க்கையின் நிறம்
வெறுமையாக காட்சியளிக்கிறது
“ ‘ “
இதனால்தானோ என்னவோ
இந்திய ரூபாயின் மதிப்பும்
இறங்கிகொண்டே போகிறது..
---------------------------------------------
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)