சுதந்திரமாய்!
----------------
அந்நியரிடமிருந்து
பெற்ற விடுதலை
அடிமையாய் இன்னும்
அந்நிய கலாச்சாரத்தில்!
--------------------------------------
அதிக வாக்கெடுப்பில்
------------------------
பெரும்பாடுபட்டு
பெற்ற சுதந்திரம்
பெரும்பான்மை பெற்றது
அறைகுறை ஆடைகளில்!
----------------
சுதந்திர நாட்டில்
------------------------
சாசனம் எழுதிக்கொடுக்காமலே
அடிமாடுகளாகிபோன
மனிதயினம் ஆங்காங்கே
இன்னும் அகதிகளாய்!
அடிமைகளாய்!
சுதந்திரம் கிடைக்கப்பெற்றும்
கொடுக்கப்படாமலே!
கிடைக்கப்பெறாமலே!
----------------
கண் துடைப்பு!
-----------
சுதந்திரம் பற்றியப் பேச்சு
சுத்த பத்தமாய்
சுதந்திர தினத்தில் மட்டும்!
===========
கேட்காமல் கிடைக்கு சுதந்திரம்
===================
சுதந்திரத்தை
சுகந்தமாய்! சுதந்திரமாய்
சுவாசிக்கிறது
சுதந்திரம் வேண்டாத
சுதந்திரக்கொடி...
-------------------------------------------------
ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் எனது இதயங்கனிந்த சுதந்திரதின வாழ்த்துகள்.
சுதந்திர வாழ்த்துகளைச் சொல்ல
சுதந்திரம் கொடுத்த வாழ்க்கைக்கும்
சுதந்திரதினத்துக்கும்
சுகந்தமான நன்றிகள்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
Very Good...
பதிலளிநீக்குV g malikka. Anaittum unmai. super
பதிலளிநீக்குஅருமை... அருமை...
பதிலளிநீக்குஇனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.
அத்தனை துளிப்பாக்களும் மிக அருமை சகோதரி...
பதிலளிநீக்குஅன்பின் நெஞ்சகளின் அன்பான கருத்துப் பூக்களுக்கு நெஞ்சார்ந்த அன்புவாசம் நிரம்பிய நன்றிகள்..
பதிலளிநீக்குஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/08/5_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...