தவறு என்கிறது
மனசாட்சி
சரி என்கிறது
ஆசைப்பட்சி
கூட்டிக்கழித்தால்
இரண்டும் சரிதான் என்கிறது
குறுக்குபுத்தி,.
வேண்டாம் என்கிறது
மனசாட்சி
வேண்டும் என்கிறது
ஆசைப்பட்சி
கூட்டிக்கழித்தால்
இரண்டும் ஒன்றுதான் என்கிறது
குறுக்குபுத்தி,.
நிறைவு என்கிறது
மனசாட்சி
நிறைவில்லை என்கிறது
ஆசைப்பட்சி
கூட்டிக்கழித்தால்
இரண்டும் சரிதான் என்கிறது
குறுக்குபுத்தி,.
நிம்மதி தேடுது
மனசாட்சி
நிம்மதியை தொலைக்குது
ஆசைப்பட்சி
கூட்டிக்கழித்தால்
இரண்டும் சரிதான் என்கிறது
குறுக்குபுத்தி,.
உண்மையை விரும்புது
மனசாட்சி
பொய்மையை விரும்புது
ஆசைப்பட்சி
கூட்டிக்கழித்தால்
இரண்டும் ஒன்றுதான் என்கிறது
குறுக்குபுத்தி,.
நிலைக்கத் துடிக்குது
மனசாட்சி
நிலைகுலையத் துடிக்குது
ஆசைப்பட்சி
கூட்டிக்கழிக்கத்தெரியாமல்
கவுந்து கிடக்குது
குறுக்குபுத்தி
எதுவும் புரியாமல் தவிப்பதே
எனது நிலையாச்சி,..
---------------------------------
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
ஏதோ குழப்பம் இருப்பது உறுதியாச்சி...
பதிலளிநீக்குமனசாட்சி
பதிலளிநீக்குஆசைபட்சி
குறுக்குப்புத்தி
பற்றிய
ஆஹா .......
அருமையானதோர் கவிதை.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
கனவு என்பது ஆசை...
பதிலளிநீக்குநனவு என்பது மனம்...
இரண்டுமே...
இணைபிரியா
இணைசேரா
இணைகோடுகள்தான்...
ஆசைப்பட்சியை அடக்கி
மனசாட்சியை வெல்பவனே...
இவ்வுலகை வெல்பவன்...
கவிதை அருமை...
கனவு என்பது ஆசை...
பதிலளிநீக்குநனவு என்பது மனம்...
இரண்டுமே...
இணைபிரியா
இணைசேரா
இணைகோடுகள்தான்...
ஆசைப்பட்சியை அடக்கி
மனசாட்சியை வெல்பவனே...
இவ்வுலகை வெல்பவன்...
கவிதை அருமை...
கனவு என்பது ஆசை...
பதிலளிநீக்குநனவு என்பது மனம்...
இரண்டுமே...
இணைபிரியா
இணைசேரா
இணைகோடுகள்தான்...
ஆசைப்பட்சியை அடக்கி
மனசாட்சியை வெல்பவனே...
இவ்வுலகை வெல்பவன்...
கவிதை அருமை...
அருமை அருமை
பதிலளிநீக்குபெரும்பாலான சமயங்களில்
நம் கட்டுப்பாட்டையும் மீறி
ஆசைப் பட்சிதான் ஜெயித்துத் தொலைக்கிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
கருத்து மிக்க பதிவு. நன்றிகள் பல.
பதிலளிநீக்கு