நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சிறகு கொடுப்பாரோ!


திருமணபந்தம் தொட்டுத்தொடர
இருமனங்கள் இணையும் முன்னே
இருட்டியது வாழ்க்கை இருமாதத்தில்
இளம் வயதில் இதயத்தில் இடி
இறப்பு வந்தது விபத்தால் உயிர்பலி

விளங்காதவள் இவளென்று
வசைபாடும் சுடுசொற்களால்
வாட்டம்கொண்டு நெஞ்சம் ஆட்டம் காண
விதவைக்கோலம் வீட்டுசிறையால்
விரக்தி கண்ட உள்ளம்

வீதி இறங்கினாலும்
வெடுவெடுக்கும் முகங்களால்
வெதும்பித் ததும்ப- மனதுக்குள்
வேதனைகளும் வேடிக்கைக் காட்டிட

இரு விழிகள் எறிய
இமைகள் சுமையால் சரிய
இதயத்தின் நரம்பெல்லாம்
இறுகியே ரணமாக

நிலவை மேகம் மூடும்போதெல்லாம்
நினைவுகள் மெல்ல திறக்க
நெஞ்சத்தின் அறையெங்கும்
நெருப்பு அனல்கள் பறக்க

பட்டாம்பூச்சியின் ரெக்கைதன்னை
பட்டென பிடுங்கிய மாயமென்ன
பட்டுபோன தன் மகளின் வாழ்வைபார்த்து
பெற்றமனங்கள் படும் துயரங்களென்னென்ன!

பாவை மெல்ல உருகுவதும்
பசலை நோயால் வாடுவதும்
பாவம் யாரும் அறிவாரோ
பசுங்கிளிக்கு வாழ்வுச்சிறகு கொடுப்பாரோ!

வழி தேடும் பயணங்கள்
வலி சொல்லும் சலனங்கள்
விழி மெல்லும் விரசங்கள்
வாழ வகைதேடும் எண்ணங்கள்

மனதுக்குள்ளே பல புழுக்கங்கள்
மறைத்து வாழும் சந்தர்ப்பங்கள்
எழுதுகோல் வழியே கவலைகள்
எழுதிட தீருமோ! இதுபோன்ற ஏக்கங்கள்!


டிஸ்கி// திருமணமான கொஞ்ச[நாட்கள்]காலத்திலேயே கணவரை பிரிந்துவா]டு[ழும் எத்தனையோ பாவைகள் அதில் ஒரு சிலரை நானும் கண்டதுண்டு அவர்களின் ஏக்கங்கள் கனவுகள் துயரங்கள். அவையெல்லாம் சொல்லில் வடிக்கத்தெரியவில்லை. ஆனாலும் அவர்களுக்குள் இருக்கும் வேதனைகளை தோளிறக்கிவைக்க ஒரு தோள் தேவை அது நட்பைவிட அன்பாக ஆனால் அது அவர்களுக்கு சிறந்ததாக இருக்கும் என எண்ணிக்கொண்டே எழுதுகிறேன்! 
எனது சிறு வேண்டுகோள் இதுபோன்றவர்களை மணம்முடிக்க விரும்பும் உள்ளங்கள் எவரேனும் உண்டா! இருந்தால் இதில் தெரியப்படுத்துங்கள். இது ஒரு மாற்றுமத சகோதரி ஒருத்திகாண தேடல்!


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

15 கருத்துகள்:

 1. நம்மை முட்டாள் ஆக்கும் கூகுள் !

  Read This Story : http://mytamilpeople.blogspot.in/2012/04/profit-sharing-phenomenon.html

  பதிலளிநீக்கு
 2. நம்மை முட்டாள் ஆக்கும் கூகுள் !

  Read This Story : http://mytamilpeople.blogspot.in/2012/04/profit-sharing-phenomenon.html

  பதிலளிநீக்கு
 3. யாராவது சிற்கு கொடுக்க என் பிராத்தனைகள்

  அருமையான் அவஙக் மனதை கவிதையாய் வடித்தது அருமை தோழி

  பதிலளிநீக்கு
 4. நல்ல கவிதை
  அவர்கள் படும் வேதனைகளை
  ஆழமாய் சொல்லிடீங்க சகோ

  நல்
  மனமுடையோர்
  இறகு கொடுப்பார்கள் என்று
  நம்புவோம் பிராத்திப்போம் சகோ

  உங்களின் நன் சேவைக்கு நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 5. சிறகொடிந்த கிளிகளுக்கு -சிறகு கொடுக்க சீர்மிகு என்னம்கொண்ட இளைஞர்கள் நிச்சயம் வருவார்கள்-காத்திருங்கள் கன்மனிகளே!-காலமுண்டு கலங்கிடாதீர்கள்!

  பதிலளிநீக்கு
 6. தாங்கள் செய்வது மிக நல்லதொரு முயற்சி. விரைவில் வெற்றிபெற பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. ///வழி தேடும் பயணங்கள்
  வலி சொல்லும் சலனங்கள்
  விழி மெல்லும் விரசங்கள்
  வாழ வகைதேடும் எண்ணங்கள்///


  ரொம்ப நாளாச்சு...!

  இதுபோல "மலிக்கா வரிகள்" பார்த்து...!


  என்பண்றது...!

  துபைல இருந்தப்ப...!

  "அந்த
  அந்திவானம் பெரியதுதான்...

  ஆனால்...!

  சிந்தனையின்
  சிறகுகள்... அந்த
  வானத்தையே கடந்து
  வான் எல்லையைத் தொட்டு வந்தது...!

  இப்போதைய
  இருப்போ...

  பிறந்த மண்...!

  சிந்தனைச் சிறகுகள்
  சுருங்க ஆரம்பித்துவிட்டது போலிருக்கே...!


  ஓகே...!

  ரொம்ப நாளைக்கப்புறம்
  வலியின்
  வலிமையான கவிதை...!

  வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
 8. மனதுக்குள்ளே பல புழுக்கங்கள்
  மறைத்து வாழும் சந்தர்ப்பங்கள்
  எழுதுகோல் வழியே கவலைகள்
  எழுதிட தீருமோ! இதுபோன்ற ஏக்கங்கள்!

  //

  உனக்குதான் எவ்வளவு பெரிய மனசு மல்லி.
  உன் எழுத்துகள் பிறருக்காக கண்ணீரும் விடுகிறது கவலையும் படுகிறது. ஆச்சர்யத்துடன் ஆனந்தப்படுகிறேன் தோழியல்லவா? வாழவேண்டும் நீ பல்லாண்டு

  பதிலளிநீக்கு
 9. நிலவை மேகம் மூடும்போதெல்லாம்
  நினைவுகள் மெல்ல திறக்க
  நெஞ்சத்தின் அறையெங்கும்
  நெருப்பு அனல்கள் பறக்க//

  அவர்களின் உணர்வுகளை அப்ப்டியே வார்த்தையில் கொண்டு வந்துட்டீங்களேக்கா இதுதான் உண்மைக்கவி..

  பதிலளிநீக்கு
 10. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
  அன்பு சகோதரி அவர்களுக்கு இரு கவிதைகளும் அருமையானவை இன்னும் சொல்லப்போனல் என்னங்களின் பிரதிப்பளிப்புகள் உங்களின் பனி தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. வேதனை வேதனை வரிகளெங்கும் வேதனை.
  சொல்லில் வடித்தமைக்கு நன்றி.. சொல்லமுடியாமல் ஏங்கியதவித்த எனது உள்ளத்தில் உள்ள வலிகள். இதுபோன்று பலருண்டு..சொல்ல்முடியாமல் சொல்லத்தெரியாமல்..

  இது யாருக்காக அவர் எந்த மாதம்.. சொன்னால் அறிய ஏதுவாக இருக்கும்..

  பதிலளிநீக்கு
 12. முதலில் இஸ்லாத்தை தழுவிய பெண்மணி விதவைப் பெண்ணை கதிஜா (ரலி ) அவர்களை முதன் முதலில் திருமணம் செய்து வழிகாட்டியவர் நபி(ஸல்) அவர்கள் . இஸ்லாத்தில் விதவை என்ற காரணத்தினால் திருமணம் செய்யாமல் இருப்பதில்லை. மனம் ஒன்று படும்பொழுது வயதும் மற்ற காரணங்களும் தடையாக இருப்பதில்லை இஸ்லாத்தில் "விதவை மறுமணம்” போன்ற உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது மற்றும் அதனை ஊக்குவிக்கின்றது
  நான் வியட்நாம் போயிருந்தபோது போரினால் பல ஆண்கள் மடிய ஆயிரக் கணக்கில் விதவைகள் இருப்பதனைக் கண்டேன், அவர்கள் வாழ்வு அமெரிக்கர்களால் நாசமாகுவதையும் பார்க்க முடிந்தது. இந்த நிலை ஈராக் ஈரான் போர் வந்தபோது ஏற்பட்டபோது கோமினி அவர்கள் விதவைகளை திருமணம் செய்யச் சொல்லி வேண்டிக் கொண்டதால் அங்கு இறைவன் அருளால் தவறு நடக்காமல் போனது.

  இந்த நிலை ஆப்க்கானிலும் ,காஸ்மீரிலும் வராமல் இறைவன் பாதுகாக்க வேண்டும்
  மிகவும் அருமையான கவிதை. அனைவருக்கும் மனதில் ஆழமாக பதியும். இளவயதில் விதவையாக இருந்து துணையின்றி வாழ்வது இறைவன் அனுமதித்த ஒன்றை மறுப்பதாகிவிடும். வெறும் இச்சையை நாடி செய்துக் கொள்வதல்ல திருமணம், அதில் காதல்,அன்பு,பாசம், நேசம்,ஆறுதல் அடைதல், கருத்து பரிமாறிக் கொள்ளுதல்,குழந்தைப் பேறு வழியாக பரம்பரையை உருவாக்குதல் இன்னும் எத்தனையோ அடங்கும். இந்த அறிய வாய்ப்பினை விடுபவர் தவறு செய்தவர் ஆகிவிடுவார்.
  உங்கள் கவிதை என்னை நிறையவே எழுதத் தூண்டுகின்றது. நானும் கல்லூரியில் படிக்கும் போது நபிவழியைப் பின் பற்றி விதவையை திருமணம் செய்துக் கொள்ள மிகவும் ஆசைப்பட்டேன், இறைவன் எனக்கு அந்த வாய்ப்பினை கொடுக்கவில்லை.
  வாழ்க ,வளர்க உங்கள் சேவை ,
  தயவு செய்து "டிஸ்கி//" வேண்டாம்
  அது படிப்பின் வேகத்தையும் ஆழ்மனத்தின் உணர்வுகளைத் தருவிக்கும் ஒன்றுதலையும் தடைபோடுகின்றது,இது அன்பின் வேண்டுகோள்

  இன்ஷால்லாஹ் இது பற்றி நானும் எழுத மிகவும் விரும்புகின்றேன்.அதற்கு முன் இது இப்பொழுதே உங்கள் கவிதை எனது(நமது) வலைபூவிலும் வரும்

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது