நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சொல்லத் துடிக்கும் மனசு

svr.pamini
மனசென்பது ஓர் மர்மக்கோட்டை
மந்திரமின்றி செய்திடும் பலபல சேட்டை
மதில்மேல் பூனையாகி- பிற
மனிதர்களையும் ஆடிடும் வேட்டை!

ஓரா யிரமென்ன ஓர் லட்சமென்ன
ஓடும் எண்ணங்களையெல்லாம்
ஒரு நிலைபடுத்திக்கொள்ளயியன்ற
ஓர் உன்னத மனப்பை-அது

வண்ண வண்ண கனவுகளில் மிதக்கும்
வரையரையற்று எல்லை மீறியும் நடக்கும்
வறுமைக்கும் பொறாமைக்கும் அஞ்சும்
வலிகளையும் வேதனைகளையும் தாங்கும்!

வஞ்சங்களையும் வாஞ்சைகளையும் தேக்கும்
வகுத்த பாதையிலும் வழிதவறாது பயணம் செய்யும்
சந்தேகங்களையும் சந்தோஷங்களையும் சுமக்கும்
சாதனைகளையும் சோதனைகளையும் வெல்ல நினைக்கும்!

சொல்லத் துடிக்கும் மனசு-அதனை
சொல்லத் தெரியாமல் துடிக்கும்
சொல்லில்லாது பேசிச் சிரிக்கும்-பலநேரம்
சொக்கவைத்து சிக்கலாக்கும்

பாதையில்லாது வெகுதூரம் நடக்கும்
சிறகில்லாது வானிலும் பறக்கும்
உருவமேயில்லாது வெகுலாவகமாய் நடிக்கும்-மனசு
உணர்வுகளால் மட்டுமே துடிக்கும்

மனசென்ற மாய மந்திரம்
மர்மங்களை உள்ளடக்கிய அபூர்வம்
மனமுடுக்கெங்கும் மகாசமுத்திரம்-அது
மனிதயினத்துக்கு கிடைத்ததோ
மாபெரும் வரம்...........

இக்கவிதை அமீரகத்தில் வலம் வரும் தமிழ்தேர் மாதஇதழில் வெளியான கவிதை.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

11 கருத்துகள்:

 1. மொத்தத்துல மனம் ஒரு குரங்குன்னு சொல்றாங்களே அது தப்பாஆஆஆ...அவ்வ்வ்வ்வ் :-)))

  பதிலளிநீக்கு
 2. குரங்கோ சிரங்கோ மொத்தத்தில் அது இல்லையின்னா மனிதயினம் எங்கோஓஓஓஓஓஓஓ எங்கே. ஹா ஹா..

  பதிலளிநீக்கு
 3. மனதின் ஒவ்வொரு அசைவையும் சொல்லிட்டீங்க. அதுதானே மனிதனை பாடாய் படுதுகிறது.. வெரி நைஸ் கீபிட்டப் மல்லிக்கா

  பதிலளிநீக்கு
 4. மனசு அது ஒரு தினுசு-மனசு அது நினைப்பது பெரிசு-மனசு அது மனிதனை மனிதனாக்கும் தராசு-மனசு வைத்தால் மனசுக்கு நல்மனசு வரும்-இல்லையேல் மனசுக்குள் மாசு வரும்-மனசு போன போக்கில் போனால் மனசு மனுசனிடம் தங்காது-மனசு மனசா இருந்தால் மனுசன் மனுசனாய் இருப்பான்.

  பதிலளிநீக்கு
 5. மனம் பற்றிய கவிதை
  அருமை பாராட்டுக்கள் வாழ்த்தக்கள் சகோ

  பதிலளிநீக்கு
 6. மொத்தத்துல மனம் ஒரு குரங்குன்னு சொல்றாங்களே அது தப்பாஆஆஆ

  பதிலளிநீக்கு
 7. மனம் ஒரு குரங்கா சிரங்கா சந்தேகம் தீருங்கோ.

  ஆனாலும் கவித கவித.. சூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊப்பர்

  பதிலளிநீக்கு
 8. பாதையில்லாது வெகுதூரம் நடக்கும்
  சிறகில்லாது வானிலும் பறக்கும்
  உருவமேயில்லாது வெகுலாவகமாய் நடிக்கும்-மனசு
  உணர்வுகளால் மட்டுமே துடிக்கும்///

  அருமையான கவிதை அக்கா.. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது