நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

புதையவா! பூக்கவா!

 
காதலென்னும் கீதை அது
கல்லும் கற்கண்டுமான மாயை-அதனை
கடந்து போகும் பாதை
கடைசியில் எங்குசேர்க்குமோ ஏது விடை!

கண்களும் கண்களும் சந்திக்கும்பொழுது -அதை
காணாது சிந்திக்கும்பொழுது
காதல்கொண்டு நிந்திக்கும்பொழுது
கனவுக்குள்ளும் கவியெழுதும்பொழுது!

குரலெழும்பாமல் கவிபாடும்
கைகள் அசையாது நடனமாடும்
மனதுக்குள் மெளவுனராகம்
மத்தளத்தோடு மேடைபோடும்!

உயிருக்குள் ஓடியாடி
உதிரங்கள் உரக்க பேசும்
உதடுகள் ஒட்ட நினைத்து
ஓர நின்றே எட்டிப் பார்க்கும்!

ஒவ்வொரு நொடியும்கூட
ஓராயிரம் யுகங்களாகும்
அழகான ஆழ்மனம்கூட
அடியோடு சாயக்கூடும்!

அடிக்கடி குறிஞ்சி பூக்கும்
அதிசயங்கள் நேரில் தோன்றும்
அந்திநேர பொழுதில்கூட
ஆகாயம் வெயிலைக் காட்டும்!

தன்னந்தனியாய் தவிக்கச் செய்யும்
தனியே சிரித்து அழவும் வைக்கும்
நிம்மதியை நிழலில் வைத்து
நெடுந்தூரம் பயணிக்க வைக்கும்!

ஆதாள பாதாளமெல்லாம்
அழகாய் கடக்க வைக்கும்
பலவேளை அதனுள்ளே
படுவேகமாய் புதையவைக்கும்!

புரியாத புதிராகி
புதைகுழியில் சிக்கவைக்கும்
புரிந்துவிட்டால் வாழ்க்கைமொத்தம்
புத்தம் புதிய சொர்க்கமாகும்..

இக்கவிதை எழுத்து.காமில் எனது முதல் கவிதை.  அன்பான வரவேற்போடு என்னை வரேற்று.ஊக்கமென்னும் கருத்துக்களால் நெகிழச்செய்த எழுத்து.காமிற்க்கும் அங்குள்ள உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

25 கருத்துகள்:

 1. வாங்கம்மா. தங்களின் தொடர் வருகைக்கும்.வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 2. கவிதை கலக்கலோ கலக்கல். எழுத்துவிலும் பார்த்தேன் ரசித்தேன்.

  மிக அருமையாக வடிவமைக்கிறீர்கள் எண்ணத்தை. எழுத்தை. ரசனையை. திறமைக்கு வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 3. அருமையான கவிதை
  திரும்பத் திரும்பப் படிக்கச் சொல்லும்
  சொல்லாட்சி.அற்புதம்
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. புரியாத புதிராகி
  புதைகுழியில் சிக்கவைக்கும்
  புரிந்துவிட்டால் வாழ்க்கைமொத்தம்
  புத்தம் புதிய சொர்க்கமாகும்..

  nesamavaaaaa?.

  பதிலளிநீக்கு
 5. இங்கேயுமா....???????

  ///புரியாத புதிராகி
  புதைகுழியில் சிக்கவைக்கும்
  புரிந்துவிட்டால் வாழ்க்கைமொத்தம்
  புத்தம் புதிய சொர்க்கமாகும்..///

  புதைகுழி...!
  சொர்க்கம்...!
  வேறுபாடா இருக்கே...!

  சரி..! சரி...!
  பெரியவுக சொன்னா
  பெருமாள் சொன்னமாதிரி..!

  ஏ...! எதுன்னு கேட்கப்படாது...!

  Photoவும்...!
  காதலுக்கான அர்த்தமும்...
  அதன் கவிதை வரிகளும் அருமை...!

  பதிலளிநீக்கு
 6. சரி...! சரி..!

  மீண்டும்
  முதல்ல இருந்து ஆரம்பிக்கிறேன்...!

  நீங்க..!

  துபாயா..!
  இல்ல..
  இந்தியாவா...!

  பதிலளிநீக்கு
 7. காதல் புரியும் வரை அதுபடுத்தும் பாடு இருக்கே...அதையும் சொல்லி கவிதை எழுதுங்க மல்லிக்கா !

  பதிலளிநீக்கு
 8. //துபாயா..!
  இல்ல..
  இந்தியாவா...!//

  இல்லீங்கய்யா அவுக அதிராம்பட்டினம்.

  அதுசரி நீங்க என்ன லண்டனா?

  மலிக்கா உங்களுக்காக நான் முரளியிடம் கேட்டுவிட்டேன் சரியா.

  இந்த முரளி இருக்காங்களே அவங்க சின்னவங்களா பெரியவங்களா மலிக்கா.
  பெயர் சொல்லி அழைச்சா கோபம்வந்துவிடபோகுது அதுக்குத்தான் கேட்டேன்..

  பதிலளிநீக்கு
 9. கவிதை மிகப்பிரமாதம்
  கவிஞர்களுகே காதல்ன்னா ரொம்ப பிடிக்கும்போல. சின்ன கேள்வி மலிக்கா காதல் சொர்க்கமா? நரகமா?

  கேட்டு என்ன செய்யபோற என்று நினைக்ககூடாது காதல் செய்யலாமுன்னு யோசிக்கிட்டு இருக்கேன் அதான்..

  பதிலளிநீக்கு
 10. // சின்ன கேள்வி: மலிக்கா காதல் சொர்க்கமா? நரகமா?///

  அவிங்க காதல்...
  சொர்க்கத்தின் சொர்க்கம் நண்பரே...!

  காரணம்..!

  அவிங்க மச்சானா பண்ணின லவ்வு இருக்கே...!
  உங்கவூட்டு லவ்வு... எங்கவூட்டு லவ்வு..! இல்ல... மலிக்காவோட லவ்வு...!
  அந்தளவுக்கு "டபுள்... டபுள்... ஸ்ட்ராங்" லவ்வு...!

  இது எப்படி உங்களுக்கு தெரியும்னு கேட்டீங்கன்னா...!

  நாங்க கண்டுபிடிச்சோம்...!
  ஹி.. ஹி..ஹி...!

  நெசமாலுமே...! நீங்க ஒண்ணா அவிகள கேளுக சொல்வாக...!

  பதிலளிநீக்கு
 11. பாலமுருகன். கூறியது...

  கவிதை கலக்கலோ கலக்கல். எழுத்துவிலும் பார்த்தேன் ரசித்தேன்.

  மிக அருமையாக வடிவமைக்கிறீர்கள் எண்ணத்தை. எழுத்தை. ரசனையை. திறமைக்கு வாழ்த்துக்கள்..//

  வாங்க பாலா. ரசித்து படிதமைக்கு மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்புநிறைந்தகருத்துக்கு மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 12. NIZAMUDEEN கூறியது...

  அற்புதம்...
  அருமை...//
  அடடா வாங்க நிஜாமுதீன் அண்ணா. நலமா.
  வருகைக்கும் கருத்துக்கும் பூங்கொத்து..

  பதிலளிநீக்கு
 13. Ramani கூறியது...

  அருமையான கவிதை
  திரும்பத் திரும்பப் படிக்கச் சொல்லும்
  சொல்லாட்சி.அற்புதம்
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்.//

  அய்யாவின் கருதுரைகள் நெஞ்சை குளிர்ச்சியாக்கியது. வாழ்த்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி அய்யா..

  பதிலளிநீக்கு
 14. பித்தனின் வாக்கு கூறியது...

  புரியாத புதிராகி
  புதைகுழியில் சிக்கவைக்கும்
  புரிந்துவிட்டால் வாழ்க்கைமொத்தம்
  புத்தம் புதிய சொர்க்கமாகும்..

  nesamavaaaaa?.//

  என்னது நெசமாவா நம்ம பித்தனய்யாவா இது அச்சோ உண்மைதான் கிள்ளிபார்த்துகிட்டேன்.. அதுசரி உங்களை ”தானே:காத்து இந்தபக்கம் எட்டிபக்கவச்சிருக்கோ.. ஹா ஹா

  ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீக கொழுக்கட்டை தீர்ந்துபோச்சே. பிரியாணி சூடா அனுப்பிவச்சிருக்கோம். வெள்ளக்காக்காவிடம்..

  பதிலளிநீக்கு
 15. காஞ்சி முரளி கூறியது...

  இங்கேயுமா....???????//


  சரி சரி இதயம் பார்த்து பத்திரம்..

  ///புரியாத புதிராகி
  புதைகுழியில் சிக்கவைக்கும்
  புரிந்துவிட்டால் வாழ்க்கைமொத்தம்
  புத்தம் புதிய சொர்க்கமாகும்..///

  புதைகுழி...!
  சொர்க்கம்...!
  வேறுபாடா இருக்கே...!//

  வேறுபாடு இல்லையின்னா காதல் கசக்குமய்யா கசக்குமய்யா .. சும்மா.

  சொர்க்கமுன்னா அதன் எதிர்பதம் நரகமுன்னுதான் வரனுமா கொஞ்சம் வித்தியாசமா சொல்லவுடுங்கப்பு.. ஹி ஹி..


  //சரி..! சரி...!
  பெரியவுக சொன்னா
  பெருமாள் சொன்னமாதிரி..!

  ஏ...! எதுன்னு கேட்கப்படாது...!//

  பெரியவா சொர்க்கம் நரகமுன்னுதான் சொல்லியிருக்காவோ. இது சின்னபுள்ள சொன்னதால இப்படிதானிருக்கும் எப்புடி..

  //Photoவும்...!
  காதலுக்கான அர்த்தமும்...
  அதன் கவிதை வரிகளும் அருமை...!//

  கலரை தூக்கிவிட்டுகின்னோம். நன்றியோ நன்றினு சொல்லி..

  பதிலளிநீக்கு
 16. காஞ்சி முரளி கூறியது...

  சரி...! சரி..!

  மீண்டும்
  முதல்ல இருந்து ஆரம்பிக்கிறேன்...!

  நீங்க..!

  துபாயா..!
  இல்ல..
  இந்தியாவா...!//

  நான் முதல்ல இருந்தே முத்துப்பேட்டைதான் அச்சோ அச்சோஓஓஓஓஓஒ

  பதிலளிநீக்கு
 17. ஹேமா கூறியது...

  காதல் புரியும் வரை அதுபடுத்தும் பாடு இருக்கே...அதையும் சொல்லி கவிதை எழுதுங்க மல்லிக்கா !//

  காதல் நுணுக்கங்கள் அதல் வலி வேதனைகள் உங்கள் கவிதையில்தான் நிறைய கற்றுக்கொண்டேன் தோழி.

  நிச்சயம் எழுதுகிறேன்..

  அன்புக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 18. kalai. கூறியது...

  mika arumaiyaana varuikal malikka vazthukal//
  மிக்க நன்றி கலை..

  பதிலளிநீக்கு
 19. iyayavaan.. கூறியது...

  //துபாயா..!
  இல்ல..
  இந்தியாவா...!//

  இல்லீங்கய்யா அவுக அதிராம்பட்டினம்.//

  ஹா ஹா நான் ரெண்டுங்கலந்த ஊருங்கோ.அதாவது அதிரையும் முத்துவும்.இணைந்த இருஊருகள்.

  //அதுசரி நீங்க என்ன லண்டனா?//

  அடடடாஆஆஆஆ. அவுக அமெரிக்காவுக்கு பக்கத்துல இருக்கும் காஞ்சிப்பட்டி..

  //மலிக்கா உங்களுக்காக நான் முரளியிடம் கேட்டுவிட்டேன் சரியா.//

  என்ன வம்புல மாட்டிவிட எத்தன பேர் கிளம்பியிருக்கீகப்பூ

  //இந்த முரளி இருக்காங்களே அவங்க சின்னவங்களா பெரியவங்களா மலிக்கா.
  பெயர் சொல்லி அழைச்சா கோபம்வந்துவிடபோகுது அதுக்குத்தான் கேட்டேன்..//

  அவுக ரொம்ப ரொம்ப பெரியசின்னவங்க..
  நீங்க பேர்சொல்லி அழைக்கிற அளவுக்கு இருக்காதுன்னு நெனக்கிறேன் அதுசரி நீங்க எப்புடி. உங்கள யின்னான்னு அழைக்கிறது.

  பதிலளிநீக்கு
 20. iyayavaan.. கூறியது...

  கவிதை மிகப்பிரமாதம்
  கவிஞர்களுகே காதல்ன்னா ரொம்ப பிடிக்கும்போல. சின்ன கேள்வி மலிக்கா காதல் சொர்க்கமா? நரகமா?

  கேட்டு என்ன செய்யபோற என்று நினைக்ககூடாது காதல் செய்யலாமுன்னு யோசிக்கிட்டு இருக்கேன் அதான்..//

  அட அதுவா அது அவரவர் மனதை பொருத்தது.

  அடடடே நீங்க காதலிக்கபோறீங்களா! ஆல்த பெஸ்ட். பிட்டெல்லாம் அடிச்சி இந்த பரிச்சைக்கு போகக்கூடாது சுயமா சிந்திச்சிதான் எழுதோனும் ஓகேவா..

  பதிலளிநீக்கு
 21. காஞ்சி முரளி கூறியது...

  // சின்ன கேள்வி: மலிக்கா காதல் சொர்க்கமா? நரகமா?///

  அவிங்க காதல்...
  சொர்க்கத்தின் சொர்க்கம் நண்பரே...!

  காரணம்..!

  அவிங்க மச்சானா பண்ணின லவ்வு இருக்கே...!
  உங்கவூட்டு லவ்வு... எங்கவூட்டு லவ்வு..! இல்ல... மலிக்காவோட லவ்வு...!
  அந்தளவுக்கு "டபுள்... டபுள்... ஸ்ட்ராங்" லவ்வு...!

  இது எப்படி உங்களுக்கு தெரியும்னு கேட்டீங்கன்னா...!

  நாங்க கண்டுபிடிச்சோம்...!
  ஹி.. ஹி..ஹி...!

  நெசமாலுமே...! நீங்க ஒண்ணா அவிகள கேளுக சொல்வாக...!//

  அட நம்ம சகோ சொன்னது நெசமான நெசமுங்கோ. ஆனா யின்னா கலியாணத்துக்கு பிறகுதானுங்கோ லவ்வோ லவ்வு. அதுக்குமுன்னாடி இதெல்லாம் யின்னானே சத்தியமா தெரியாதுங்கோ..

  அதனால்தான் எங்க லவ்வு ரொம்ப டிரிபுள் ஸ்ட்ராங்.. ஹா ஹா

  பதிலளிநீக்கு
 22. ///ஆனா யின்னா கலியாணத்துக்கு பிறகுதானுங்கோ லவ்வோ லவ்வு. அதுக்குமுன்னாடி இதெல்லாம் யின்னானே சத்தியமா தெரியாதுங்கோ..///

  இன்னான்யின்னே தெரியாதாம்.....!!!!!!!!!!!
  இத நாங்க நம்பனும்...!

  ஹோ.. ஹோ...! நல்ல காமெடி...!

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது