நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பாவிகளே!தனிமையைப் போக்கி
வெருமையை நீக்கி-
வெற்றிடத்தை நிரப்பி
தாய்மை வரம் வேண்டியுருகும்
தாய்வயிற்றில் உருவாகாமல்

தத்தாரிகளாகத் திரிந்து
தாசிகளாய் அலையும்
தறுதலைகளின் வயிற்றிலா?
ஈறைந்து மாத
இருட்டறை சிறைவாசம்
கிடைக்கவேண்டும் எங்களுக்கு!

ஈன்றெடுத்த பந்தம்
தொடர்ந்துவிடுமென அறிந்து
தொட்டுக்கூட பார்க்காமல்
தொப்புள்க் கொடியையும் அறுக்காமல்
தூக்கி எரியப்படுகிறோமே!
துடிக்கும் உணர்வுகள் அடங்காமலே!

சிறைவாசம் நீங்கி
சிலிர்க்கும் தேகம்
சிலநொடிகளுக்குள்
சில்லிட்டு அடங்குகிறதே!
பனிக் குடத்தில் நீந்திய உடல்
சனிக் குளத்தில்
உயிருக்கு போராடியபடி!

சாதி சனமற்று
சமாதியாக வழியற்று
சாக்கடையில் மிதக்கிறதே!
எங்களின் உயிரற்ற உடல்
மானமிழந்தவர்களின் சந்ததிகளாய் 
மரகட்டையானபடி! 

பாவிகளே!
இரக்கமில்லையா?உங்களுக்கு
இல்லை 
இதயமென்பதே  இல்லையா?
உங்கள் தேகத்துக்குள்!

இரக்கமற்ற அரக்கர்களே! 
மனிதகுல துரோகிகளே!
நீங்கள் செய்யும் பாவத்துக்கு
தண்டனைகள் எங்களுக்கா!
மண்ணில் உலவும் மாபாவிகளே!


டிஸ்கி// என்னக்கொடுமையிது  முகநூலில் இந்தபோட்டோவைபார்த்ததும் மனம் சற்றுநேரம் விம்மி கரைந்து துடித்தது. இப்படியெல்லாம் கூட செய்வாங்களா பாவமல்ல இக்குழந்தைகள். என்ன மனித ஜென்மங்கள் ச்சே.../


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

27 கருத்துகள்:

 1. அய்யோ மனம் துடிக்கிறது. கண்கள் கரைகின்றது, உள்ளம் குமுறுகிறது..

  சே.. பெண்குலத்திற்கே இழுக்கான இத் ---------களை இவர்களை கண்டறிந்து சித்திரைவதை செய்து கொல்ல வேண்டும், மற்ற -----------க்கும் இது பாடமாக அமைய வேண்டும்...

  பொறுக்கமுடியவில்லை இக் கொடுமையை...

  பாவம் பிஞ்சுகள் இவர்களின் காமவெறிக்கு பலியாகும் கொடுமை தீர்வது எப்போது....??!!

  பதிலளிநீக்கு
 2. உண்மையில் அழுததுமனம் வார்த்தையில்லை சொல்வதற்கு உலகத்துக் கொடுமைகள் அரங்கேறிக்கொண்டிருக்கிறதே

  பதிலளிநீக்கு
 3. பாவிகளுக்கு இது பாவமாக தெரியாது தம்பி.அவர்களுக்கு தேவை எதுவோ அதுமட்டுமே அவர்களின் நோக்கம். தேவை தீர்ந்ததும் மீண்டும் பாவத்தின் பக்கம்..

  ஈனப்பிறவிகளுக்கு பிறக்கும் இதுபோன்ற ஈச்சங்கன்றுகள் இதுபோன்றவர்களின் இருக்காமல் இறப்பதே மேல் என நினைத்து மரித்துவிடுகிறதோ என்னவோ..

  /தீர்வது எப்போது.// அதை தேடியே ஓடுது நாட்கள்..

  பதிலளிநீக்கு
 4. நேசமுடன் ஹாசிம் கூறியது...

  உண்மையில் அழுததுமனம் வார்த்தையில்லை சொல்வதற்கு உலகத்துக் கொடுமைகள் அரங்கேறிக்கொண்டிருக்கிறதே//

  முடிவுரை எழுதமுடியாமல் முண்டியத்துக்கொண்டு அரங்கேறிக்கொண்டிருக்கிறது பாவகாரியங்கள்..
  புனித பூமி பாவமனிதர்களால் புழுங்கிக்கொண்டிருக்கிறது சகோ..

  பதிலளிநீக்கு
 5. என்ன கொடுமையிது சகோதரி
  ஆண்டவனும் பொறுக்க மாட்டானே
  குழந்தைகளிடம் கூட
  கருணை காட்ட முடியாத
  கயமைவாதிகள்
  என்ன சொல்ல

  பதிலளிநீக்கு
 6. காமமும்..
  வேட்கையும்
  பசியும் அதிகவதிகமாகி....!

  மனிதமும்
  மனிதாபிமானமும்
  மறைந்து...!
  மிருககுணம்
  மிகுந்து...!
  "மிருகமுள்ள மனித"னாகிவிட்டான் என்பதற்கு உதாரணமே இக்காட்சி...!

  தான் வாங்கி வந்தது
  "வரம்" என நினைத்த
  அப்பிஞ்சு அறியாது..

  அது "சாபம்" என்று...!

  வன்புலி...!
  சீரும்சிங்கம்...!
  கொத்தும் ராஜநாகம்...!
  பாய்ந்து கொள்ளும் சிறுத்தை...!
  இவற்றை விட கொடியவளின் கொடியவள்
  இப்பிஞ்சை வாய்க்காலில் வீசியவள்....!

  வழக்கம் போல் கவிதை அருமை...!

  பதிலளிநீக்கு
 7. கல் நெஞ்சக்கார பாவிகள்.

  அருமை கவிதை!

  பதிலளிநீக்கு
 8. மலிக்கா, ஏன்ப்பா அந்தப் படத்தைப் போட்டிருக்கீங்க? பாத்துப் பதறிட்டேன். எடுத்துடுங்க ப்ளீஸ். இனி கொஞ்ச நாள் அந்தப் படம் கண்லயே நிக்கும். எடுத்துருங்கப்பா.

  பதிலளிநீக்கு
 9. இப்படியான பாவிகளை ஓடஓடவிட்டு வெட்டனும். பெண்ணா அவள் இப்ப்டி போட்டுவிட்டு போயிருக்காளே. கல்ல ----------டியா. அச்சொ நெஞ்சம் பதறுதே. நல்லாவேயிருக்கமாட்டா இப்படிசெய்தவ..

  கவிதை செருப்படி கொடுதிருக்கீங்க அக்கா.. திருந்தாஜென்மங்களை சூடுவச்சி திருத்தட்னும்..

  பதிலளிநீக்கு
 10. யா அல்லாஹ்! இந்தக் கொடுமைகளைச் செய்யும் பாவிகளுக்கு தக்க தண்டனைக் கொடுத்து, அத்துடன் திருந்தி வாழக்கூடிய நேர்வழியையும் கொடுப்பாயாக!

  படத்தைப் பார்க்கவே பொறுக்க முடியவில்லை தோழி :( கவிதை வரிகளும் குழந்தை பேசுவதாய் இருப்பதால் கண்கள் ரொம்பவே கலங்குகின்றன :((

  பதிலளிநீக்கு
 11. படத்தைக் கண்டதுமே,

  அப்பதகச் செயலை புரிந்த ”அந்த யாரோ “ - வை

  இதுவரை நான் அறிந்திருந்த அத்தனை கெட்டவார்த்தைகளாலும் திட்டிக் தீர்த்தேன், மனதுக்குள்.

  ச்சே!

  பதிலளிநீக்கு
 12. ச்சே... இதயமே இல்லாத ராட்சசப் பிறவிகள்தான் இப்படிச் செய்ய முடியும். மனம் வலித்தது மலிக்கா இதைப் பார்த்ததும். பல காலம் இந்தப் படமும் உன் கவிதையும் தந்த பாதிப்பு மனதிலிருந்து போகாதம்மா...

  பதிலளிநீக்கு
 13. A.R.ராஜகோபாலன் கூறியது...

  என்ன கொடுமையிது சகோதரி
  ஆண்டவனும் பொறுக்க மாட்டானே
  குழந்தைகளிடம் கூட
  கருணை காட்ட முடியாத
  கயமைவாதிகள்
  என்ன சொல்ல//
  யாருமே பொருக்கமுடியாத வேலைகளை செய்வதில் கில்லாடியானவர்களே இக்காரியத்தை செய்திருக்கமுடியும் அண்ணா..கருணையா கிலோ என்னவிலை எனகேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவர்களிடம் எப்படி கருணையெல்லாம் இருக்கும் கயவர்களிடம் அதெல்லாம் எதிர்ப்பார்க்கமுடியாதண்ணா..

  பதிலளிநீக்கு
 14. "மிருகமுள்ள மனித"னாகிவிட்டான் என்பதற்கு உதாரணமே இக்காட்சி...!//

  மிருகத்தை கேவலப்படுதவேண்டாம் சகோ. அதுக்கூட தான்பெற்றதை பாதுகாக்கமுயற்சிக்கும்..

  //வன்புலி...!
  சீரும்சிங்கம்...!
  கொத்தும் ராஜநாகம்...!
  பாய்ந்து கொள்ளும் சிறுத்தை...!
  இவற்றை விட கொடியவளின் கொடியவள்
  இப்பிஞ்சை வாய்க்காலில் வீசியவள்..//

  உண்மையான உண்மை சகோ. வீசியவளோ வீசியவனோ அல்லது அதற்க்கு துணைபோனவர்களோ யாராகயிருந்தாலும் அவர்கள் நல்லவர்களில்லை மனசாட்சியற்றவர்கள் என்பதுமட்டும் உறுதி..

  பதிலளிநீக்கு
 15. Rathnavel கூறியது...

  வேதனையாக இருக்கிறது.//

  வேதனையிலும் வேதனைதான் இது அய்யா..

  //ஹேமா கூறியது...

  என்ன கொடுமை கடவுளே !//
  கொடுமையிலும் கொடுமை தோழி..

  பதிலளிநீக்கு
 16. NIZAMUDEEN கூறியது...

  கல் நெஞ்சக்கார பாவிகள்.

  அருமை கவிதை!//

  நெஞ்சமேயில்லாதவர்கள் நிஜாமண்ணா. இருந்திருந்தா இந்த பாதகச்செயலை செய்திருப்பாங்களா?

  பதிலளிநீக்கு
 17. ஹுஸைனம்மா கூறியது...

  மலிக்கா, ஏன்ப்பா அந்தப் படத்தைப் போட்டிருக்கீங்க? பாத்துப் பதறிட்டேன். எடுத்துடுங்க ப்ளீஸ். இனி கொஞ்ச நாள் அந்தப் படம் கண்லயே நிக்கும். எடுத்துருங்கப்பா.//

  இதைகண்டதும் மிகவும் பதறிட்டேன் ஹுசைனம்மா. இப்படியெல்லாம்கூட செய்வாங்களா இல்ல சும்மா கிராபிக்ஸ் செய்திருக்காங்களான்னு இது நிஜமாக இருக்கக்கூடாதுன்னு வேண்டிக்கொண்டேன் ஹூம் பின்புதான் புரிந்தது நிஜம்தானென்று.

  இந்தபோட்டோவை வேண்டுமென்றுதான் போட்டேன். இதுப்போல் இனியாரும் செய்துவிடக்கூடாது என்றும் எப்படியெல்லாம் உலகில் அநியாயம் தலைவிறித்தாடுகிறது என்றும் தெரிவிக்கவேண்டுமென்ற எண்ணத்தில்தான் ஹுசைனம்மா.

  பதிலளிநீக்கு
 18. ஆரியா கூறியது...

  இப்படியான பாவிகளை ஓடஓடவிட்டு வெட்டனும். பெண்ணா அவள் இப்ப்டி போட்டுவிட்டு போயிருக்காளே. கல்ல ----------டியா. அச்சொ நெஞ்சம் பதறுதே. நல்லாவேயிருக்கமாட்டா இப்படிசெய்தவ..

  கவிதை செருப்படி கொடுதிருக்கீங்க அக்கா.. திருந்தாஜென்மங்களை சூடுவச்சி திருத்தட்னும்..//

  யாருமே செய்யதுனியாத செய்ல்களை சிலர் சர்வசாதரணமாக செய்துவிடுகிறார்கள். தன் சுகங்களுக்காக. இப்படியான ஈன ஜென்மங்களை ஒன்றும் செய்யமுடியாது
  ஆர்யா....

  பதிலளிநீக்கு
 19. asma கூறியது...

  யா அல்லாஹ்! இந்தக் கொடுமைகளைச் செய்யும் பாவிகளுக்கு தக்க தண்டனைக் கொடுத்து, அத்துடன் திருந்தி வாழக்கூடிய நேர்வழியையும் கொடுப்பாயாக!//

  ஆமீன்

  //படத்தைப் பார்க்கவே பொறுக்க முடியவில்லை தோழி :( கவிதை வரிகளும் குழந்தை பேசுவதாய் இருப்பதால் கண்கள் ரொம்பவே கலங்குகின்றன :((//

  பாவமல்லவா இந்த இளம் பிஞ்சுகள் அதனை சுமக்க தெரிந்த பாவிக்கு! அதன் பிஞ்சு முகம் கண்டும் தன்னோடு வைத்துக்கொள்ள தெரியவில்லையே.. காலக்கொடுமை..தோழி..

  பதிலளிநீக்கு
 20. சத்ரியன் கூறியது...

  படத்தைக் கண்டதுமே,

  அப்பதகச் செயலை புரிந்த ”அந்த யாரோ “ - வை

  இதுவரை நான் அறிந்திருந்த அத்தனை கெட்டவார்த்தைகளாலும் திட்டிக் தீர்த்தேன், மனதுக்குள்.

  ச்சே!//

  என்னைபோலவே செய்திருக்கீங்க சத்ரியன். இதோ இப்பொழுதுவரை திட்டிதீர்கிறேன்..

  பதிலளிநீக்கு
 21. கணேஷ் கூறியது...

  ச்சே... இதயமே இல்லாத ராட்சசப் பிறவிகள்தான் இப்படிச் செய்ய முடியும். மனம் வலித்தது மலிக்கா இதைப் பார்த்ததும். பல காலம் இந்தப் படமும் உன் கவிதையும் தந்த பாதிப்பு மனதிலிருந்து போகாதம்மா...//

  ஆமாம் கணேஷண்ணா. இப்பிறவிகள் தங்களின் சுகங்கள் மட்டுமே பெரிதென நினைக்கும் பாவிகள். அவர்களின் சுகங்களுக்காக தான் பெற்றதுகளை துச்சமென எரிந்துவிட்டு மீண்டும் தன் வேலைகளை செய்ய துவங்கியிருக்கும் துத்தேரிகள்..

  சிலவைகள் நம் மனதைவிட்டு நீக்காங்காது அதில் இதுவும் நிச்சயம் ஒன்று..

  பதிலளிநீக்கு
 22. மனம் பதறியது, கண்கள் கலங்கியதுன்னு கமெண்ட் போட்டால் அது நிச்சயம் டெம்ப்ளேட் கமெண்டாக போய்விடும் அபாயம் இருந்தாலும் வேறு சொல்ல வார்த்தை இல்லை சகோதரி. இப்படி வீசியவர்கள் நிஜமாவே மனிதர்கள்தானா இல்லை மனித உருவில் இருக்கும் பேய்களா?
  அவர்களுக்கு இதயம் துடிப்பதில்லையா? இல்லை துடிப்பது போல் நடிக்கிறதா?

  பதிலளிநீக்கு
 23. என்ன செய்வது.இது ஒரு கீழ்தர உலகம் என்பதை ஒவ்வொரு மனிதனும் நிருபித்து கொண்டுதான் இருக்கிறான்...

  பதிலளிநீக்கு
 24. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது