நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பாலையில் பவனிவந்த தமிழ்தேர்.

அமீரகத் தமிழ் இலக்கியக் கலைவிழா கடந்த 2011. மே- 27, அன்று வெள்ளி மாலை 6.மணி..துபை அல்கிசைஸ் பெண்கள் உயர்தொழில் நுட்பக் கல்லூரியின் அரங்கில் வானலை வளர்தமிழ் தமிழ்த்தேரின் 5 ஆண்டுவிழா.  நடைபெற்றது.

சிறப்பு விருந்திர்களாக
இலக்கியப் பேச்சாளர் தமிழ் ஆர்வலர். திரு பழநெடுமாறன் அவர்களும். கின்னஸ் புகழ். திருமதி ஆச்சி மனோரமா அவர்களும்[அவர்களின் குடும்பத்தார்களும்] மற்றும் பலர்கள் பங்கேற்றார்கள்.

திரு காவேரிமைந்தன் அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்துவழங்க, குழந்தை ஆனிஷா தமிழ்தாய் வாழ்த்துப்பாட. வானலை வளர் தமிழ் தமிழ்த்தேரின் தலைவர். சிவ் ஸ்டார் பவன் திரு கோவிந்தசாமி அவர்கள்  வரவேற்புரை நிகழ்த்த இனிதே தொடங்கியது விழா.
செல்வி நிவேதிதா குழுவினரின் நடனமும். மதர் டிரீம்ஸ் குழுவினரின் இசையும். மற்றும் அழகிய சிறுவனின் அழகான குரலில் கானமும்[மனநிலைகுன்றிய குழந்தையென்றே சொல்லமுடியாது அந்த அளவிற்கு மிக அற்புதமாக பாடிய கார்த்தி] மற்றும் தமிழ்தேரின் உறுபினர்களை வைத்து தொகுத்து , கீழைராசா அவர்கள் தயாரித்து வழங்கிய  மிக அருமையான குறும்படம் ஒன்று வெளியிடப்பட்டது. முகவை முகிலின் நூல்வெளியிடும் . மேஜிக் மேஜிக்  மற்றும் பலகுரல் மன்னரின் மிமிக்கிரியென  தொய்வில்லாமல் நடத்தப்பட்டது விழா.
விருந்தினர்களுக்கு பொன்னாடைபோர்த்தி பூங்கொத்துகள் வழங்கபட்டு கெளரவிக்கப்பட்டார்கள்.
ஆச்சிமனோராவிற்க்கு பொன்னாடை போர்த்தபட்டபோது.
அய்யா திரு.பழநெடுமாறன் அவர்களுக்கு பூங்கொத்து வழங்கப்பட்டபோது.
வானலை வளர் தமிழ் தமிழ்த்தேரின் 5 ஆம்.ஆண்டுவிழா மலர் வெளியிடப்பட்டபோது
 கின்னஸ் ஆச்சி அவர்களுக்கு வானலை வளர்தமிழ் தமிழ்த்தேர் ”முத்தமிழ் காவியம்” எனும் பட்டம் வழங்கியபோது
அய்யா திரு பழநெடுமாறன் அவர்களின் உணர்வுப்பூர்வமான பேச்சு. தமிழார்வத் தொண்டர்களுக்கு மகிழ்வைத் தந்தது.
 மேடையில் என்கைகளைப் பிடித்தபடியே ஆச்சி பேசியபோது .
ஆச்சி அவர்களின் பேச்சு பாட்டு மற்றும் கவிதையென அனைத்தையும் கேட்டு எல்லோரும் அதிசயித்தார்கள். முழுமூச்சில். காகிதத்தில் எழுதிவைத்திடாமலே  மிகஅருமையாக, போரில் தன்மகன் புறமுதுகு காட்டியதாக கூறியதும் அந்த தாயின் மனநிலை எவ்வாறு இருந்ததென தனது கம்பீரக்குரலில் கவிதை பாடிய தோரணை அசரவைத்தது என்றால் மிகையில்லை.
அரங்கம் ஆனந்ததில் திளைத்தபோது
விழாவில் அய்யாவிற்காகவும். ஆச்சிக்காகவும். திருமதி ஜியா நர்கீஸ் அவர்கள் கவிதை தொகுத்ததளித்து பிரமாதம். அதோடு ஆச்சி அவர்களுக்காக, சந்திரசேகர் அவர்கள் எழுதிய வரிகளை செல்வி நிவேதிதா பாடலாய் பாடியது அருமை. இடையிடையே ஜெயாபழனியும் நிவேதிதாவும் தொகுத்து வழங்கியதும் அழகு.
.
மேடையில் தனது குடும்பாத்தார்களுடன் ஆச்சி.
------------------------------------------------
விழா மிக சிறப்பாக நடந்தேறியது. கெளரவிக்கபடவேண்டியவர்கள் சிறப்பாக கெளரவிக்கபட்டார்கள் இடையில் குலுக்கல் பரிசுச்சீட்டு வழங்கபட்டு கடைசியில் பரிசும் வழங்கபட்டது. இதற்காக உழைத்து மிக சிறப்பாக நடத்திய வானலை வளர்தமிழ் தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்..
                                 ஆச்சியுடன் இந்த அசடு.
ஆச்சியோடு பேசியதில் ஆனந்தம். எனது  கவிதை நூலை கொடுததும் நீங்க எழுதியதாடா. ரொம்ப சந்தோஷமாக இருக்குமா என்றுஅவர்கள் என் கைகளைபிடித்துக்கொண்டு உரையாடியவிதம் பிடித்திருந்தது.

அய்யா திரு பழநெடுமாறன் அவர்களிடன் எனது உணர்வுகளின் ஓசை கவிதை நூலை கொடுத்துவிட்டு சிலமணித்துளிகள் உரையாடல். சாந்தமான குரலில் அன்பாக பேசினார்கள்.அவர்களின் எளிமையான தோன்றம். உணர்வுகலந்து பேசும்விதம் பிடித்திருந்தது.

மிக அருமையான அழகான இலக்கிய கலைவிழாவாக நடந்தேறியதில் மிகுந்த மகிழ்ச்சி..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

14 கருத்துகள்:

  1. சாஹிதாபானு14 ஜூன், 2011 அன்று PM 2:20

    கலக்குறீங்க மல்லி. மிக அழகிய கண்கள் மல்லி உங்களுக்கு..

    வாழ்த்துக்கள்..
    நேசமுடன் சாஹிதா..

    பதிலளிநீக்கு
  2. நிகழ்ச்சிகளில் நேரில் கலந்து கொண்டது போல மகிழ்ச்சி ஏற்பட்டது. நல்ல பதிவு. சாதனைகள் தொடரட்டும்.

    மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. பாலையை வசந்தமாக்கிய நிகழ்வை படங்களோடு பகிர்ந்தது அழகு ... உங்கள் பங்களிப்புக்கு வாழ்த்துகள் ...

    பதிலளிநீக்கு
  4. ஆடி அசைந்து
    அழகை அள்ளித்தரும்
    தங்கத்
    தமிழ்
    தேர் விழா
    நிகழ்வுகளை
    தமிழால்
    தனித்
    தன்மையால்
    தொகுத்தளித்த
    விதம்
    வியாபாம்
    வியப்பு
    விருந்து
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தால்
    எதிலும் எழிதில் வெற்றிகொள்ள முடியும்.
    இதைஉணர்த்தி நிற்கின்றது தங்களது வெற்றி!..
    வாழ்த்துக்கள் சகோதரி மென்மேலும் வளம்பெற....

    பதிலளிநீக்கு
  6. மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. பேஸ்புக்கிலிருந்து கிங்.14 ஜூன், 2011 அன்று PM 9:57

    அருமையாக தொகுத்து வழங்கியிருக்கீங்க மலிக்கா. நேரில்கண்ட உணர்வு. வானலைக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. பாலையை வசந்தமாக்கிய நிகழ்வை படங்களோடு பகிர்ந்தது அழகு //ரிப்பீஈஈஈஈஈஈட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு

    பதிலளிநீக்கு
  9. படங்கள் மிக அழகு தொகுத்தவிதம் அதைவிட அழகு. ஆச்சியுடன் நீங்கள் அதைவிடவிட அழகு. வாழ்த்துகள் மலிக்கா. இன்னும் பலமேடைகாண வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  10. நிகழ்வை படங்களோடு பகிர்ந்தது அழகு... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. புகைப்ப‌ட‌ங்க‌ள் அனைத்தும் அருமை. நேரில் சென்று வ‌ந்த‌ திருப்தி.. வாழ்த்துக்க‌ள் ச‌கோ..

    பதிலளிநீக்கு
  12. ungkapakaththula nikirathu kaaraikudi fathima antithanee.haa haa. avangka ponnu engkee. ningka avangka firanda. assoo assoo veenaangka malikka appuram kashdamakipookum.

    பதிலளிநீக்கு
  13. நல்ல நிகழ்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க

    பதிலளிநீக்கு
  14. ம்.. கலக்குங்க.. கலக்குங்க.. துபாயில, தமிழ் நிகழ்ச்சிகள்னா, இனி நீங்க இல்லாம இருக்காதுபோல!! வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது