நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

புழுங்கும் மலர்..

                                                                                    கிளிக்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

22 கருத்துகள்:

  1. குழந்தைதொழிலாளர்களின் உள்ளக்குமுறல்களை பட்டாசாக வெடித்து இருக்கிறீர்கள் சகோதரி...குழந்தைகளை படிக்கவைப்போம் பண்புள்ள சமுதாயத்தை உருவாக்குவோம்

    பதிலளிநீக்கு
  2. படிக்கும்போதே மனதை பிசைகிறது. பாவம் இந்தக்குழந்தகள்.

    ”கொடிது கொடிது
    இளமையில் வறுமை”

    //பூச்சரத்தைத்தொடுக்க வேண்டிய கைகள் பட்டாசுச்சரத்தை தொடுக்கின்றன//

    வேதனை தான்.

    சமூக சிந்தனையும் விழிப்புணர்வும் கொண்டநல்லதொரு படைப்பு.

    வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. மிக மிக அருமை
    குழந்தை தொழிலாளர்களின்
    அவல நிலையை
    பூக்கள் தொடுக்கும் விரலால்
    பட்டாசுத் தொடுப்பதைச் சுட்டிக் காட்டி
    நெஞ்சம் வெடிக்கச் செய்து போகிறது
    உங்கள் பதிவு
    மனங்கவர்ந்த நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அவலம் நாம் உரக்க குரல் கொடுக்கிறோம் இன்னும் கேட்காத மனங்கள் ஆயிரமாயிரம் உலகத்தில் திரும்பத்திரும்ப அதே தவறை செய்கிறது பாராட்டுகள் சகோ அருமையான கவிதை

    http://hafehaseem00.blogspot.com/2011/06/blog-post_12.html

    நன்றி

    பதிலளிநீக்கு
  5. ஆட்டுவிக்கும் வறுமையை போக்க
    ஆபத்து என்று தெரிந்தும் -என்னை
    அடகு வைத்து விட்டேன்

    என் நெஞ்சை தைத்த வரிகள்
    பல சிறுவர் சிறுமியர்களின்
    புன்னகையை பறித்து
    சிரிப்பதுதான் பட்டாசின்
    வழக்கம் என்பதை
    வலியாய் சொல்லி உள்ளவிதம்
    சிறப்பு சகோதரி
    உங்கள் சிந்தனையின் ஆழம்
    அளவிடமுடியாதது

    பதிலளிநீக்கு
  6. பொறுப்பான அன்பான பெற்றோர்கள் இப்படி குழந்தைகளை அனுப்பவதில்லை மலிக்கா. பெரும்பாலும் குடிகார தந்தை, தாயில்லாத குழந்தைகள்தான் இப்படி செல்கின்றனர். சில சமயம் சிரமப்பட்டு படித்து இந்த சூழ்நிலையில் இருந்து வெளிவர எண்ணினாலும் சரியான வேலைகள் கிடைப்பதில்லை. சிவகாசியில் நிறைய கல்லூரி நிறுவனங்கள் இருந்தும் மாற்றம் வரவில்லை.

    பதிலளிநீக்கு
  7. தரமானக்கவிதை.... எடுத்துக்கொண்ட கரு மிக சிறப்பு.

    பதிலளிநீக்கு
  8. பூத்துக் குலுங்கவேண்டிய பூக்கள்..

    புழுங்கி கருத்து போவதை உருக்கமாக வடித்த கவிதை ... இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தில்(ஜுன் 12 ) பொருத்தமாக வெளியிட்டு விழிப்புணர்வு எற்படுத்திய கவிதை...

    பதிலளிநீக்கு
  9. காங்கேயம் கோபி.12 ஜூன், 2011 அன்று PM 10:23

    கருப்பொருள் நிறைந்த கவிதை வலியை பதிவுசெய்துள்ளது. உணர்வுகளை உணரக்கூடியவராக இருக்கீங்க மலிக்கா வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  10. வறுமை தொலைந்தாலே ஒழிய இந்த நிலை மாறாது தோழி !

    பதிலளிநீக்கு
  11. குடும்ப வறுமை காரணமாக கல்வியினை இடை நடுவில் விட்டு விட்டு, தொழிலில் ஈடுபடும் குழந்தைத் தொழிலாளர்களின் தெருவோர வாழ்க்கையினையும், வறுமை நிலையினையும் படம் பிடித்துக் காட்டுகிறது உங்கள் கவிதை. என்று தான் இந்த நிலமை மாறுமோ?

    பதிலளிநீக்கு
  12. அற்புதமான வலிகள் நிறைந்த கவிதை....

    உலகம் எங்கோ தொலைவில் வளர்ந்துவிட்டது!!!
    வறுமை என்பது தொடர்ந்தும் வறுமைப்பட்டவர்களையே வாட்டிஎடுக்குன்றது....

    பதிலளிநீக்கு
  13. புழுங்கும் மலரின் வலி மிகவும் கொடுமையானது...

    பதிலளிநீக்கு
  14. ரீபீட்டா...!

    ச்சே...! facebookல பார்த்ததுதானே...!

    நல்லா எமாத்துராங்கப்பா....!

    பதிலளிநீக்கு
  15. வெடிக்காத பட்டாசும் உண்டே-படித்து
    வெடிக்காத இதயமும் உண்டோ
    படிக்காமல் பச்சிளம் மொட்டே-இங்கு
    பட்டாசு செய்வதா சிட்டே
    துடிக்காத நெஞ்சமும் காண-இத்
    துயர்கண்டு அனைவரும் நாண
    வடிக்காது அவர்வாழ கண்ணீர்-அரசே
    உடன்காண ஏற்றவழி எண்ணீர்
    மல்லிகா அவர்களே படமும்
    கவிதையும் அருமை

    புலவர் சா இராமநுசம்

    பதிலளிநீக்கு
  16. வறுமையை ஒலிப்போம் என குரல்கள்மட்டும்தான் ஒலித்துகொண்டுதான் உள்ளது மனங்களில் யாருக்கும் அதைச் செயல்படுத்த துணிவில்லை.

    கவிதை கண்ணீரை வரவழைக்கிறது ஒன்றுசெய்யமுடியாமல் இருக்கும் என்னைபோன்றால் வேறு என்ன செய்யயியலும்.

    பதிலளிநீக்கு
  17. அற்புதமான வலிகள்
    நிறைந்த கவிதை....

    பதிலளிநீக்கு
  18. வருகை புரிந்ததோடு உணர்வுகளைக்கொண்டு கருத்துகளை பகிர்ந்துகொண்ட அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.. தொடர்ந்து தங்களின் வருகையை எதிர்பார்க்கும் அன்புடன் மலிக்கா.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது