நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பெண் எழுத்து...

என் எழுத்து அதாவது பெண் எழுத்து இதைபற்றிய தொடர்தான் இது.  இன்று மார்ச் 17  எங்களின் இரு மனங்கள் இணைந்ததிருமணநாளில் என்னெழுத்தைபற்றி எழுத அழைத்த ஸாதிகா அக்காவிற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்.

எழுத்து இது எல்லோருக்கும் சொந்தம். எழுதப்படிக்கத்தெரியாதவர்கூட எண்ணும் எண்ணத்தை இதயத்தில் எழுதிக்கொள்ளலாம் நியாபங்களாக என்ன சரிதானே! எழுத்து இதன் எழுச்சியை கடந்த சிலகாலங்களாகதான் உணர்வுப்பூர்வமாக உணர்கிறேன் அதனை உளமாற நேசிக்கிறேன்.உள்ளதை சொல்லவேண்டுமென்றால் இப்போதுதான் எழுதிப்படிக்க கற்றுக்கொள்கிறேன்.

எழுத்தால் எதையும் உயர்தலாம். அதேபோல் எதையும் தாழ்த்தலாம் என்பதையும் உணர்த்திக்கொண்டிருக்கிறார்கள் இவ்வுலகத்தில். எழுத்துச்சுதந்திரம் இருப்பததென்பதற்க்காக எதையும் எழுதிவிடலாமென்று நினைப்பதல்ல, அது ஆணெழுத்தாக இருக்கட்டும். பெண்ணெழுத்தாக இருக்கட்டும்.தன் சுயலாபத்திற்காக தனக்கு எழுத்துச்சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக தன் உணர்வுகளை வெளிப்படுத்துவதாய் நினைத்து தாகதவைகளையும் தான்தோன்றிதனத்தையும். எழுத்துக்கள் மூலம் பரப்பி, பிற மனவுணர்வுகளை நோக்கடிப்பதிலும்.ஏன் சிலநேரம் அவ்வெழுத்தினால் உயிர்களைகூட சாகடிப்பதிலும் என்ன லாபம்?

ஆண். தன் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும், குளிரூட்டி குவித்தும். கிளர்ச்சியூட்டி சிலிர்த்தும். கோபக்கனல்கொண்டு கொதித்தும். எழுத்துக்களை படைக்க நினைக்கிறான். படைப்பான் எல்லைக்கோட்டைத்தாண்டி. பலநேரங்களில் அகம்புறம் அனைத்தும் கூனிக்குறுவதுபோலவும் அமையும். பெண். தன் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும், மென்மையாகவும். அதே சமயம் அதனுள் அடங்கிய பொருளை அழுத்தந்திருத்தமாகவும் தன் எழுத்துக்களால் படைக்க நினைக்கிறாள் படைப்பாள்.சிலநேரம் சற்று அத்துமீறி. ஆணைபோன்று எழுதுவதற்கு பெண்ணுக்கு தெரியாமல் அல்ல, ஆனால் அங்கேதான் பெண்மையின் ரகசியமிருக்கிறது.அதை வெளிப்படுத்திவிட்டால் அப்புறம் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடுமே! வித்தியாசங்கள் வேண்டும் அப்போதுதான் வாழ்க்கையிலும் சரி. மற்றவைகளிலும் சரி. ஒரு சுவாரஸ்யம் இருக்கும்.

ஆண் பெண் படைப்புகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும், வெவ்வேறு மாற்றங்களோடுதான் படைக்கப்பட்டுள்ளது. அதனை நாம் உணர்ந்திருந்திருக்கிறோம் உணர்த்தப்பட்டிருக்கிறோம்.இருவரும் வெவ்வேறு மாற்றங்களோடு படைக்கப்பட்டிருந்தாலும், இருவருக்கும் ஏற்படும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் ஒன்றாகயிருக்கும்போது அதை வெளிப்படுத்தும் முறைகளில் வித்தியாசங்கள் ஏற்ப்படும் இது இயற்கை.சிலநேரம் இதையும்மீறி ஒன்றிபோயிருக்கும் அது விதிவிலக்கு.

எழுத்துக்கள் என்பது விருட்ச்சத்தை தரக்கூடிய விதை.நல்லெண்ணங்களால் உருவாகும் நல்லெழுத்துக்கள் நற்விதைகளாகி நல் விருட்ச்சத்தைத்தரும் இந்த நானிலமே போற்றும்படி. தீய எண்ணங்களால் உருவாக்கப்படும் எழுத்துக்கள். சட்டென முளைத்து, சடசடவென பரவி, பட்டென சருகாகும் பலரின் சாபத்திற்குள்ளாகி. ஒரு எழுதுகோல்[தட்டச்சுவிரல்கள்] அதன் பணியை செவ்வன செய்தால் செழித்து நிற்கும் பலரின் வாழ்வு. அதே சீர்கெட செய்தால் செத்தொழியும் பல பலரின் மனவுணர்வு. 

ஆணின் சுதந்திரம்போல் பெண் சுதந்திரம் எதிர்பார்ப்பது சரியா? அது விபரீதத்தை உண்டாக்குமல்லாவா? அதேபோல் பெண் எழுத்துக்களிலும் ஓர் வரையரை வகுத்துக்கொள்வது நல்லது. அதேபோல் ஆண்களும் வகுத்துக்கொண்டால் இன்னும் சிறப்பாகும் [இது என் கருத்து யார்மீதும் திணிக்கவல்ல]  வரையரையோ எல்லைகளையோ பெண்ணுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டியதில்லை அது தானே வந்துவிடும்.[வராவிட்டால் அதுக்கு நாம் பொருப்பல்ல] நம் எண்ணங்களை எப்படி அமைத்து அதை எப்படி செயல்படுத்தவேண்டும் என்று தனக்கென்ற ஓர் எல்லை வகுத்துக்கொண்டு,[எழுத்துக்கு எல்லையில்லை என்று வீண்வாதங்கள் செய்துக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை] சொல்லவந்த செய்திகளை தீர்க்கமாகவும். அதே சமயம் தெளிவாகவும். சொல்லிவிட்டால் அதுவே தன் செயலுக்கும், தன் எழுத்துக்கும். கிடைத்த முதல்வெற்றி .

அதையே கொஞ்சம் வரையரையை மீறி மூர்க்கமாகவும்.முகம்சுழிக்கும் வார்த்தைகளாகவும் எழுதிப்பாருங்கள். சொல்லிப்பாருங்கள். என்ன கிடைக்குமென்று!.

நம்மிடமிருந்து உதிரும் வார்த்தைகள். அது வாயிலிருந்தாகட்டும். பேனாவிலிருந்தாகட்டும். அல்லது கணினிப்பலகையிலிருந்து தட்டச்சு செய்யும் விரல்களிருந்தாகட்டும். அவை மிக உயர்ந்தாக இருக்குமானால் நம் எழுத்துக்கள் கல்வெட்டில் பதிந்ததுபோலிருக்கும். காலங்கள் பல கடந்தபின்னும் பலமனங்களில் உன்னதமாக நிலைத்திருக்கும்..

ஏதோ எனக்கு தெரிந்தவைகளை உளறிவிட்டேன். எதுவும் கூடக்குறைய எழுதியிருந்தால் பொருந்திக்கொள்ளவும்.
என்னுடைய கருத்து பிறருக்கும் பிடித்துதான் ஆகவேண்டும்.அல்லது என்கருத்தோடு ஒத்துதான் போகவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. பிடித்திருந்தால் அதை ஏற்க்க மனமிருந்தால் அதைவிட சந்தோஷம் வேறுயில்லை.

அப்புறம் ஒன்றை சொல்லமறந்துட்டு போயிடப்போகிறேன். இது தொடர், அழைக்கனுமே  யாரையாவது. பெண்களாக அவர்களைபற்றி சொல்லிக்கொண்டிருந்தால் எப்புடி அதுக்கு எதிர்மறையான ஆண்களைத்தானே அழைக்கனும்.”யாரை அழைக்கலாம்:  ம்ம் ம்.

வக்கீல். மோகன் குமார்
டாக்டர். Dr PKandaswamyPhD
அய்யா.G.M  பாலசுப்ரமணியன் 
அய்யா  Ramani 


வாங்க  வாங்க வந்து உங்களோட கருத்துக்களையும் 
பதியுங்கள் பகிருங்கள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த நீரோடை
நிரம்பி வழியும் கவிதைநீரால்.

41 கருத்துகள்:

  1. நம்மிடமிருந்து உதிரும் வார்த்தைகள். அது வாயிலிருந்தாகட்டும். பேனாவிலிருந்தாகட்டும். அல்லது கணினிப்பலகையிலிருந்து தட்டச்சு செய்யும் விரல்களிருந்தாகட்டும். அவை மிக உயர்ந்தாக இருக்குமானால் நம் எழுத்துக்கள் கல்வெட்டில் பதிந்ததுபோலிருக்கும்

    good

    பதிலளிநீக்கு
  2. தொடர் கட்டுரை சுவாரஸ்யமாக இருக்கிறது..

    http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_17.html

    பதிலளிநீக்கு
  3. அன்புத்தங்கை மலிக்கா,
    உங்களின் அற்புதமான கருத்துக்கள் கண்டு வியந்து நிற்கிறேன்.ஒரு வித்தியாசமான தலைப்பு தந்து எழுதச்சொன்ன தோழி மதுமிதாவுக்கு நன்றிகள்.என் எண்ணங்களை பிரதிபலிப்பதாகவே இருந்தது உங்கள் கருத்துரைகள்.

    //என்னுடைய கருத்து பிறருக்கும் பிடித்துதான் ஆகவேண்டும்.அல்லது என்கருத்தோடு ஒத்துதான் போகவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை// மிகவும் தன்னடக்கத்துடன் கூறிய வரிகளாயினும் தன்னம்பிக்கை மிளிர்ந்த வரிகளது.
    தோழி மதுமிதா ஆண்களின் கருத்துக்களையும் அறிந்துகொள்ளலாமே என்பதற்கொப்ப நீங்கள் இத்தொடர்பதிவினை எழுத ஆண் பதிவர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது மிக நன்று.மிக்க நன்றி தங்கையே!

    பதிலளிநீக்கு
  4. எந்தக் குழப்பமுமில்லாத தெளிவான பதிவு
    எங்கெல்லாம் பெண்களின் பங்களிப்பு
    ஈடுபாடு அதிகம் உள்ளதோ அங்கெல்லாம்
    சிறந்ததும் உயர்ந்ததும் நிச்சயம் இருக்கும்
    பெண் எழுத்தாளர்கள் அதிகம் வர வரத்தான்
    இலக்கிய உலகமே எழுச்சி பெற்றது
    நமது பதிவுலகில் கூட மிகச் சரியான
    பிரச்சனைகளை மிகச் சரியாக அனுகக் கூடியவர்களும்
    பெண் பதிவர்களாகத்தான் உள்ளனர்
    மிக நல்ல நேர்மையான பதிவு
    தங்கள் பதிவைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. //சொல்லவந்த செய்திகளை தீர்க்கமாகவும். அதே சமயம் தெளிவாகவும். சொல்லிவிட்டால் அதுவே தன் செயலுக்கும், தன் எழுத்துக்கும். கிடைத்த முதல்வெற்றி//
    ஆம், உங்கள் பதிவிற்கும் இது பொருந்தும். மிக அழகாக சொல்லியிருகிறீர்கள். வாழ்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. மலிக்கா,இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.மேலும் மேலும் சிறப்புற்று நீடூழி வாழ என் உளப்பூர்வமான துஆக்கள்.

    பதிலளிநீக்கு
  7. "ஆண். தன் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும், குளிரூட்டி குவித்தும். கிளர்ச்சியூட்டி சிலிர்த்தும். கோபக்கனல்கொண்டு கொதித்தும். எழுத்துக்களை படைக்க நினைக்கிறான். படைப்பான் எல்லைக்கோட்டைத்தாண்டி. பலநேரங்களில் அகம்புறம் அனைத்தும் கூனிக்குறுவதுபோலவும் அமையும். பெண். தன் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும், மென்மையாகவும். அதே சமயம் அதனுள் அடங்கிய பொருளை அழுத்தந்திருத்தமாகவும் தன் எழுத்துக்களால் படைக்க நினைக்கிறாள் படைப்பாள்".

    இதுதான் உண்மை . சரியாக சொன்னீர்கள் .
    நீங்கள் கூறியவிதம் எனக்கு ரொம்பவும் பிடித்து இருக்கிறது

    பதிலளிநீக்கு
  8. மிகவும் அருமையாக எழுத்தில் வடித்துள்ளீர்கள்.....

    பதிலளிநீக்கு
  9. என் பதிவில் பின்னூட்டத்தில் உங்கள் அழைப்பினைப் பார்த்தேன்.உங்கள் பதிவு பெண் எழுத்துப் படித்தேன். இது தொடர், ஆதலால் இதற்கு, எதிர்மறையான ஆண்களை அழைக்க வேண்டும் என்று என் பெயரையும் சேர்த்திருக்கிறீர்கள்.மிக்க நன்றி. முதலில் உங்களுக்கு என் திருமண வாழ்த்துக்கள். எனக்கு ஒன்று புரியவில்லை மலிக்கா. கருத்துக்களை பதித்து பகிர அழைத்துள்ளீர்கள் நான் எங்கு பகிர்ந்து கொள்வது.?உங்கள் பதிவின் பின்னூட்டத்திலா.?என் பதிவிலா.?பெண் எழுத்துப் பற்றிய கருத்துக்களா?இல்லை வெறுமே எழுத்து பற்றிய கருத்தா.?எதையும் தெரிந்து செய்ய விரும்பும் எனக்குப் புரிய வையுங்களேன், ப்ளீஸ்.!

    பதிலளிநீக்கு
  10. கருத்துக்கள் அற்புதம்.. இப்போது பெண்கள் பலர் சுட்டிதனமாக இருக்கிறார்கள்.. அவர்கள் ஓவர் சுட்டியாக மாறும்போது அவர்கள் எழுத்தில் அவர்கள் வைத்திருந்த கட்டுபாடுகள் உடையகூடும்.. பக்குவபட்ட பெண்கள் எழுத்து, துளிர்விட்ட பெண்கள் எழுத்து, நடுநிலையான பெண்ணின் எழுத்து என பிரித்து எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ.???

    பதிலளிநீக்கு
  11. தெளிவாச் சொல்லிருக்கீங்க. ஆணுக்கு அதீத சுதந்திரம் இருப்பதுபோல தெரிந்தாலும், அவனுக்கும் சில கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.

    பதிலளிநீக்கு
  12. அஸ்ஸலாமு அலைக்கும்! எழுத்து பற்றிய உங்கள் கருத்துக்கள் அருமை தோழி. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. மிகவும் அருமையாக எழுத்தில் வடித்துள்ளீர்கள்.....

    17 மார்ச், 2011 12:50 pm

    G.M Balasubramaniam கூறியது...
    என் பதிவில் பின்னூட்டத்தில் உங்கள் அழைப்பினைப் பார்த்தேன்.உங்கள் பதிவு பெண் எழுத்துப் படித்தேன். இது தொடர், ஆதலால் இதற்கு, எதிர்மறையான ஆண்களை அழைக்க வேண்டும் என்று என் பெயரையும் சேர்த்திருக்கிறீர்கள்.மிக்க நன்றி. முதலில் உங்களுக்கு என் திருமண வாழ்த்துக்கள். எனக்கு ஒன்று புரியவில்லை மலிக்கா. கருத்துக்களை பதித்து பகிர அழைத்துள்ளீர்கள் நான் எங்கு பகிர்ந்து கொள்வது.?உங்கள் பதிவின் பின்னூட்டத்திலா.?என் பதிவிலா.?பெண் எழுத்துப் பற்றிய கருத்துக்களா?இல்லை வெறுமே எழுத்து பற்றிய கருத்தா.?எதையும் தெரிந்து செய்ய விரும்பும் எனக்குப் புரிய வையுங்களேன், ப்ளீஸ்.!//


    அன்பின் அய்யா அவர்களுக்கு. இது ஒரு தொடர். அதாவது நான் எழுதியுள்ள பெண் எழுத்துக்களைப்பற்றிய தாங்களின் எண்ண வெளிப்பாடுகளை தங்களுடைய வலைதளத்தில் பதிவாக வெளியிட வேண்டும்.
    ஒருவர் தரும் தலைப்பில் அல்லது அவர்களுடைய எண்ண வெளிப்பாடுக்கும் நம்முடைய வெளிப்பாடுகளுக்கும் என்ன நம்முடைய வெளிப்பாடுகளுகும் வித்தியாசங்கள் மாற்றங்கள் இருக்குமல்லவா அதுதான் இந்த தொடரின் நோக்கம் .

    அப்படியே இங்கு நான் எழுதியயுள்ள எனெண்ண வெளிப்பாடுகளில் ஏதேனும் குறை நிறை இருப்பினும் தெரியப்படுத்தலாம்

    உங்கள் வலையில் உங்கள் எண்ணத்தை ஒரு பதிவாக வெளியிடுங்கள். விருப்பப்பட்டால் நீங்கள் அதை தொடர யாரையும் அழைக்கலாம்..

    பதிலளிநீக்கு
  14. முதலில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  15. //எழுத்துக்கள் என்பது விருட்ச்சத்தை தரக்கூடிய விதை.நல்லெண்ணங்களால் உருவாகும் நல்லெழுத்துக்கள் நற்விதைகளாகி நல் விருட்ச்சத்தைத்தரும் இந்த நானிலமே போற்றும்படி. தீய எண்ணங்களால் உருவாக்கப்படும் எழுத்துக்கள்//


    உண்மை..

    பதிலளிநீக்கு
  16. பெண்மையில் ஆண்மை தான் பெண் எழுத்து.
    பெண் எழுத்தில் மூர்க்கம் இருக்காது. சின்னதொரு நளினம் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  17. //என்னுடைய கருத்து பிறருக்கும் பிடித்துதான் ஆகவேண்டும்.அல்லது என்கருத்தோடு ஒத்துதான் போகவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை//


    தெளிவாச் சொல்லிருக்கீங்க
    வாழ்த்துக்கள்!

    வாழ்த்துக்கள்!
    வாழ்த்துக்கள்!
    வாழ்த்துக்கள்!

    வாழ்த்துக்கள்!

    வாழ்த்துக்கள்!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  18. திருமண நாள் நல்வாழ்த்துக்கள்,,

    பதிலளிநீக்கு
  19. சலாம் மலிக்கா அக்கா...,உங்களுக்கே உரிய அழகிய நடையில் அசத்தலான வார்த்தைகளோடு பெண் எழுத்தை பற்றி தெளிவாக விளக்கிவிட்டீர்கள்.
    அதிலும் உங்களுக்கே உரிய வித்தியாசத்தில் ஆண்பதிவர்களையும் அழைத்துவிட்டீர்களே....
    இதில் ஆர்வம் இப்போது மிகுந்து விட்டது.இதை பற்றிய ஆண்களின் கருத்தும் தெரிந்துக் கொள்ளலாம் அல்லவா?
    வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் அக்கா..

    அன்புடன்,
    அப்சரா.

    பதிலளிநீக்கு
  20. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.அருமை மலிக்கா.

    பதிலளிநீக்கு
  21. திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

    கட்டுரை சுவாரஸ்யமாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  22. நீஙகள் கேட்டபடி பெண் எழுத்து குறித்து ஒரு பதிவிடுகிறேன் உஙகளைக் கேட்டவர்களும் உங்கள் தொடர்பாளர்களும் இதனைப்படித்தால் மகிழ்ச்சி அடைவேன்

    பதிலளிநீக்கு
  23. நம்மிடமிருந்து உதிரும் வார்த்தைகள். அது வாயிலிருந்தாகட்டும். பேனாவிலிருந்தாகட்டும். அல்லது கணினிப்பலகையிலிருந்து தட்டச்சு செய்யும் விரல்களிருந்தாகட்டும். அவை மிக உயர்ந்தாக இருக்குமானால் நம் எழுத்துக்கள் கல்வெட்டில் பதிந்ததுபோலிருக்கும்///

    தெளிவாச் சொல்லிருக்கீங்க உங்கள் கருத்துக்கள் அருமை..
    வாழ்த்துக்கள்!
    வாழ்த்துக்கள்!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  24. நீங்கள் கூறியவிதம் எனக்கு ரொம்பவும் பிடித்து இருக்கிறது
    திருமண நாள் நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  25. ///நம்மிடமிருந்து உதிரும் வார்த்தைகள். அது வாயிலிருந்தாகட்டும். பேனாவிலிருந்தாகட்டும். அல்லது கணினிப்பலகையிலிருந்து தட்டச்சு செய்யும் விரல்களிருந்தாகட்டும். அவை மிக உயர்ந்தாக இருக்குமானால் நம் எழுத்துக்கள் கல்வெட்டில் பதிந்ததுபோலிருக்கும்///

    அன்பு மலிக்கா உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள் எவ்விதம் உளறலாகும் மலிக்கா. ஹேட்ஸ் ஆப் டூ யூ. மணநாள் வாழ்த்துகளும். உங்களை அறிமுகம் செய்துவைத்த ஸாதிகாவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. நல்ல முயற்சி. வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு
  27. தெளிவாய் எழுதி உள்ளீர்கள் வாழ்த்துகள்

    அன்பான தொடர் பதிவு அழைப்பிற்கு நன்றி. தற்சமயம் மிகுந்த வேலை பளுவில் உள்ளேன். தற்போது வெளியிடும் பதிவுகள் அனைத்தும் முன்பே எழுதி Draft folder-ல் உள்ளவை. எழுத முயல்கிறேன். ஒரு வேளை எழுதா விடில் கோபிக்காதீர்கள்

    பதிலளிநீக்கு
  28. /sathish கூறியது...
    super.//

    மிக்க நன்றி சதீஷ்



    //r.v.saravanan கூறியது...
    நம்மிடமிருந்து உதிரும் வார்த்தைகள். அது வாயிலிருந்தாகட்டும். பேனாவிலிருந்தாகட்டும். அல்லது கணினிப்பலகையிலிருந்து தட்டச்சு செய்யும் விரல்களிருந்தாகட்டும். அவை மிக உயர்ந்தாக இருக்குமானால் நம் எழுத்துக்கள் கல்வெட்டில் பதிந்ததுபோலிருக்கும்

    good//

    மிக்க நன்றி சரவணன்..

    பதிலளிநீக்கு
  29. //சே.குமார் கூறியது...
    Nalla Alasal pakirvu...
    vazhththukkal...//

    வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி குமார்..



    வேடந்தாங்கல் - கருன் கூறியது...
    தொடர் கட்டுரை சுவாரஸ்யமாக இருக்கிறது..

    http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_17.html//

    மிக்க நன்றி கருன்..

    பதிலளிநீக்கு
  30. ஸாதிகா கூறியது...
    அன்புத்தங்கை மலிக்கா,
    உங்களின் அற்புதமான கருத்துக்கள் கண்டு வியந்து நிற்கிறேன்.ஒரு வித்தியாசமான தலைப்பு தந்து எழுதச்சொன்ன தோழி மதுமிதாவுக்கு நன்றிகள்.என் எண்ணங்களை பிரதிபலிப்பதாகவே இருந்தது உங்கள் கருத்துரைகள்.//

    நீங்கள் தந்த தலைப்பிற்கு எனகருத்துக்கள் தங்களுக்கும் பிடித்ததில் மிகுந்த சந்தோஷம் அக்கா. வித்தியாச சிந்தனைகள் தோன்றிக்கொண்டேயிருக்கவேண்டும் அப்போதுதான் நமுடைய சிந்தனைகள் விரிவடையும்.. மிக்க நன்றிக்கா..

    //என்னுடைய கருத்து பிறருக்கும் பிடித்துதான் ஆகவேண்டும்.அல்லது என்கருத்தோடு ஒத்துதான் போகவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை// மிகவும் தன்னடக்கத்துடன் கூறிய வரிகளாயினும் தன்னம்பிக்கை மிளிர்ந்த வரிகளது.
    தோழி மதுமிதா ஆண்களின் கருத்துக்களையும் அறிந்துகொள்ளலாமே என்பதற்கொப்ப நீங்கள் இத்தொடர்பதிவினை எழுத ஆண் பதிவர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது மிக நன்று.மிக்க நன்றி தங்கையே!//

    நம்முடைய எழுத்துக்கள் அவர்களின் எண்ணங்களில் எப்படியிருக்கிறது என்பதை அறியனுமல்லவா. அதர்காத்தான் அவர்களையும் அழைத்தேன்..
    தாங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றிக்கா..

    பதிலளிநீக்கு
  31. Ramani கூறியது...
    எந்தக் குழப்பமுமில்லாத தெளிவான பதிவு
    எங்கெல்லாம் பெண்களின் பங்களிப்பு
    ஈடுபாடு அதிகம் உள்ளதோ அங்கெல்லாம்
    சிறந்ததும் உயர்ந்ததும் நிச்சயம் இருக்கும்
    பெண் எழுத்தாளர்கள் அதிகம் வர வரத்தான்
    இலக்கிய உலகமே எழுச்சி பெற்றது
    நமது பதிவுலகில் கூட மிகச் சரியான
    பிரச்சனைகளை மிகச் சரியாக அனுகக் கூடியவர்களும்
    பெண் பதிவர்களாகத்தான் உள்ளனர்
    மிக நல்ல நேர்மையான பதிவு
    தங்கள் பதிவைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்.//

    வாங்க ரமணி சார். தாங்களின் அனுபமிக்க கருத்துக்களுக்கும் என் பதிவை தொடர நினைத்தமைக்கும் மனமார்ந்த நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  32. ஆணின் சுதந்திரம்போல் பெண் சுதந்திரம் எதிர்பார்ப்பது சரியா? அது விபரீதத்தை உண்டாக்குமல்லாவா? அதேபோல் பெண் எழுத்துக்களிலும் ஓர் வரையரை வகுத்துக்கொள்வது நல்லது.


    ......அப்படி ஒரு விபரீத சூழலை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும் நிலை மாறும் போது, ஆரோக்கியமான சமூதாயம் வந்து விடுமே.

    பதிலளிநீக்கு
  33. இனிய மணநாள் வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்..!!


    நல்ல சிந்தனை...!! அருமையான பதிவு :-)

    பதிலளிநீக்கு
  34. food//சொல்லவந்த செய்திகளை தீர்க்கமாகவும். அதே சமயம் தெளிவாகவும். சொல்லிவிட்டால் அதுவே தன் செயலுக்கும், தன் எழுத்துக்கும். கிடைத்த முதல்வெற்றி//
    ஆம், உங்கள் பதிவிற்கும் இது பொருந்தும். மிக அழகாக சொல்லியிருகிறீர்கள். வாழ்துக்கள்.

    அன்பான வாழ்த்திற்க்கும் அழகிய கருத்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது