நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஒரு காதலி காதகியானாள்.

அன்பேயென்றாள்
அரவணைத்தேன்
ஆருயிரேயென்றாள்
ஆட்டம் கொண்டேன்

அகிலமே நீதானென்றாள்
அடிபணிந்தேன்
உயிரே உனக்காகவென்றாள்
உருகி விட்டேன்

ஒருநாள் வந்து
ஓசையின்றி அழுதாள்
உதிர்ந்து விட்டேன்

அழுத முகத்தோடு
அழுத்தமான மனதோடு
அன்பே என்ற உதட்டால்
அண்ணா என்றழைத்தாள்

அழைத்த மறுநொடி
அடிதளம் அதிர அதிர
அதாளத்திற்குள் அழுத்தப்பட்டேன்
அண்ட சராசரம் அத்தனையும்
அப்படியே உரையக் கண்டேன்

அபூர்வமாய் தெரிந்த அவள்
அசிங்கமாய் தெரியக் கண்டேன்
அடுக்கடுக்காய் என் மனயேடு
அவளின் நினைவுகளை
அடிச்சுவடு தெரியாமல்
அழிக்கக் கண்டேன்

காதலல்ல காதலல்ல
அவள் என்மேல் கொண்டது
காதலல்ல
காதலின் பெயர்கொண்டு
காலமெல்லாம் எனை
கருகவைக்க வந்த
காதல் காதகி.

டிஸ்கி// பல இடங்களில் இதுபோன்று நடகிறது அதனால்
காதல்கள் கானலாகி போகிறது. சிலநேரம் கருகியும்போகிறது. உண்மைக் கதையை எழுத்தில் அறியும் சந்தர்ப்பம் அமைந்தால். அந்த ஏட்டின் வலியை என் கவிதையில் மூலம் இங்கு எழுதிக்கிறுக்கினேன்.

[சுஸ்கி//இது ஆண் பெண் இருவருக்குமானதுதான் அவரவர் படிக்கும்போது மாற்றி படித்துக்கொள்ள வேண்டும் ஜமால்காக்காவின் பின்னுட்டத்தால் வந்ததிந்த சுஸ்கி.. ஹா ஹா ஹா]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

38 கருத்துகள்:

  1. LK கூறியது...
    nalla irukkunga malikka. vaalthukkal.//

    வாங்க கார்த்திக்.

    வாழ்த்துக்கள் யாருக்கு கார்த்தி.
    காதலை கருக்கிய காதலிக்கா-இல்லை
    காதலில் கருகிய காதலனுக்கா-இல்லை
    கவிதை கிறுக்கிய எனக்கா?.


    ஹி ஹி ஹி சும்மா.

    நன்றி கார்த்திக்..

    பதிலளிநீக்கு
  2. காதலன் கூட காதகனாகிறான்

    -----------------

    நல்லா சொல்லியிருக்கீங்க

    பதிலளிநீக்கு
  3. //:அபூர்வமாய் தெரிந்த அவள்
    அசிங்கமாய் தெரியக் கண்டேன்://

    உண்மையை உரக்க சொல்லி இருக்கிறீர்கள்.
    அழகிய கவிதை.

    பதிலளிநீக்கு
  4. //அபூர்வமாய் தெரிந்த அவள்
    அசிங்கமாய் தெரியக் கண்டேன்
    அடுக்கடுக்காய் என் மனயேடு
    அவளின் நினைவுகளை
    அடிச்சுவடு தெரியாமல்
    அழிக்கக் கண்டேன்
    //

    arputham . natappathai kan mun niruththi vitteerkal. vaallththukkal

    பதிலளிநீக்கு
  5. நட்புடன் ஜமால் கூறியது...
    காதலன் கூட காதகனாகிறான்

    -----------------

    நல்லா சொல்லியிருக்கீங்க.//

    ஒத்துக்கொண்டால் சரிதான் [சோக்]
    இது இருவருக்குமானதுதான் அவரவர் படிக்கும்போது மாற்றி படித்துக்கொள்ள வேண்டும்
    ஆகா டிஸ்கியில் சொல்லலையே இதோ சொல்லிடுறேன் காக்கா..

    நன்றி காக்கா

    பதிலளிநீக்கு
  6. abul bazar/அபுல் பசர் கூறியது...
    //:அபூர்வமாய் தெரிந்த அவள்
    அசிங்கமாய் தெரியக் கண்டேன்://

    உண்மையை உரக்க சொல்லி இருக்கிறீர்கள்.
    அழகிய கவிதை.

    உண்மையச்சொன்னா கோவிச்சிக்கிறாகளே .

    மிக்க நன்றி சகோதரர் அவர்களே..

    பதிலளிநீக்கு
  7. மோகத்தில் பூப்பது தான் பலரின் காதல்
    முடிந்தவுடன் சென்றுவிடும் .. விளைவு
    மூச்சை கூட நிறுத்த தோன்றும் ..

    அழகில் உருவாகும் அனைவரின் காதல்
    இன்னொரு அழகை காணும் வரை தான் ..

    காதல் உண்மையானது ...உயிர் உள்ள உணர்வு
    ஆனால் உருவமில்லாதது ...

    என்னருமை தோழர்களே , தோழிகளே
    காதல் ஒன்றும் தவறே இல்லை ...
    காதலிக்க படாமல் இங்கு யாரும் இல்லை ..
    காதல் கானல் நீராக போக கூடாது ..


    காதல் என்பது இரு பாகம் முதலாவது இனிக்கும்எப்போதுமே ....
    இரண்டாம் பாகம்
    கசக்கும் (கல்யாணம்) ..

    ஆகையால் காதலியுங்கள்
    காதலில் தவிக்கும் சந்தியாவை பற்றி அல்ல.
    கஷ்ட்டத்தில் தவிக்கும் இந்தியாவைப் பற்றி


    காதலின் சின்னம் என்னவென்று, அவளிடம் நான் கேட்டேன்
    அதற்கு அவள் “கல்லறை” என்றாள்.
    கல்லறைக்கு வழி கேட்டேன்…
    அதற்கு...
    அவள் என்னை “காதலி” என்றாள்.

    அக்காள் நேற்று பூனையை கொண்டவருக்கு சாட்டையடி கொடுத்திர்கள் .
    இன்று உண்மைக் காதலை புருஞ்சிக்க முடியாத போலி காதலர்களுக்கு நெத்தியடி கொடுத்துள்ளிர்கள்.
    இப்படிலாம் எழுதுவியேனு சொல்லவே இல்லை ........

    பதிலளிநீக்கு
  8. //அபூர்வமாய் தெரிந்த அவள்
    அசிங்கமாய் தெரியக் கண்டேன்
    அடுக்கடுக்காய் என் மனயேடு
    அவளின் நினைவுகளை
    அடிச்சுவடு தெரியாமல்
    அழிக்கக் கண்டே///

    இந்த காதல் வந்தாலே இப்படிதான் அக்கா...ஐயோ!!! நமக்கு ஏன் வம்பு...

    பதிலளிநீக்கு
  9. //அபூர்வமாய் தெரிந்த அவள்
    அசிங்கமாய் தெரியக் கண்டேன்
    அடுக்கடுக்காய் என் மனயேடு
    அவளின் நினைவுகளை
    அடிச்சுவடு தெரியாமல்
    அழிக்கக் கண்டேன் //


    இதில் காதலி பொய்யா இல்லை
    காதல் பொய்யா ஏதானாலும்
    பொய்த்தது ரெண்டுமே ஹா..ஹா...

    யக்கோவ் கவிதை ஜுப்பரு

    பதிலளிநீக்கு
  10. இப்ப‌டித்தான் ப‌ல‌ காதல் ஓடுகிற‌து.. :).. க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌..

    பதிலளிநீக்கு
  11. அக்காள் இன்டலி ஓட்டுப் போடுறேன் ஆனால் வொர்க் ஆவுதுலே, சில சமயம் வொர்க் ஆவுது. அப்போ வந்து ஒட்டு போடுறேன்.

    நாடாளுமன்ற தேர்தல்லேயும் சரி, சட்ட மன்ற தேர்தல்லேயும் சரி இது வரைக்கும் ஓட்டுப் போட்டதே இல்லை.
    இப்போ எனக்கு ஓட்டுப் போட்ட பெருமையா இருக்கு.எலேக்சன்லே நின்னா கண்டிப்பா ஒட்டு போட மாட்டேன்.
    ஏன்னா ..என்னை எதிர்த்து நிக்கிற வேட்ப்பாளர நீங்க நிப்பியே

    பதிலளிநீக்கு
  12. நல்லா சொல்லியிருக்கீங்க
    ஒருத்தரை ஒருத்தர் நன்குபுரிந்துகொண்டபின் காதல் வந்தால் நீடிக்கும் , அதைவிட்டு வயசு கோளாரில் வந்தால் இப்படித்தான் ஆகும்

    பதிலளிநீக்கு
  13. இதெல்லாம் இப்போ சகஜமப்பா... (எத்தன பேருக்கு நான் அண்ணன் தெரியுமா) இதையெல்லாம் பெருசா பேசிகிட்டு..


    அக்கா கவிதை ரொம்ப நல்லாயிருக்கு...

    பதிலளிநீக்கு
  14. இது ஆண் பெண் இருவருக்குமானதுதான் அவரவர் படிக்கும்போது மாற்றி படித்துக்கொள்ள வேண்டும்.

    ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது இது தானோ!!!!

    பதிலளிநீக்கு
  15. கவிதை அருமை...!

    /////உண்மைக் கதையை எழுத்தில் அறியும் சந்தர்ப்பம் அமைந்தால். அந்த ஏட்டின் வலியை என் கவிதையில் மூலம் இங்கு எழுதிக் கிறுக்கினேன்.////

    டிஸ்கியில் மேலே சொன்ன வரிகள்.... விளங்கவேயில்ல...!

    என்னைப் பொறுத்தளவில்....
    பருவ வயதில்..... ஈர்ப்பின் பெயர்தான் காதல்..அது "கானல்நீர்"...!

    அக்கானல்நீர் தேங்குமிடத்தை... குளமாய்... கண்மாயாய்... ஏரியாய்.... நினைத்து விழுந்து காயங்களைப் பெற்றவன்... யதார்த்தமான.... நிஜ வாழ்க்கையில் உயர்ந்ததாய் சரித்திரமே இல்லை...!

    any have...

    கவிதை...
    வழக்கம்போல் அருமை... அருமை...!

    சரிங்க....
    "காதகி"ன்னா யன்னங்கோ...!

    நட்புடன்...
    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  16. உறவும் பிரிவும் உணர்த்தும் பொருளை

    இரவும் பகலும் இணையாது காட்டும்

    கரையும் அலையும் காதலும் அப்படி
    ...
    விரைந்து இணைந்து பிரியும்.

    கண்டதும் காதல் கடலில் விழுவோர்

    கண்டதும் இந்த கரையும் அலையும்போல்

    விண்டதும் தீர்ந்து விலகியேச் செல்லும்

    உண்டதும் மறக்கும் மனம்

    காதலியின் உள்ளமதைக் கண்டு பிடிக்கவே

    சாதலே வந்தாலும் சடைவின்றி காதல்

    கடலின் கரைவிட்டு நீந்து அலைபோல்

    மடலேன்னும் தூது பேசு

    வாழும் வரைக்கும் வற்றாது அலைகள்

    சூழும் பகைகண்டு சோரா(து) நிலைகள்

    கரையினைக் காண கடலலைகள் மீண்டு

    கரைக்கு வருவது காண்




    என்மனம் இன்னும் எதனையும் தாங்குமே

    உன்மனம் தானே உணருமே - பெண்மனம்

    என்னும் புயல்தாக்கி இன்னும் கலங்காத
    ...
    என்னு றுதியே சான்று

    உன்மனம் உன்னை உறுத்தவேண்டு மென்றே

    என்மனம் பாடும் இதனை வடித்தேன்

    நன்றாய் இருப்பதாய் நாளும் எண்ணாதே

    என்றேனும் என்மனம் தேடும்

    பதிலளிநீக்கு
  17. v.தங்கப்பாண்டி சிவா..4 செப்டம்பர், 2010 அன்று 11:53 PM

    எனக்கேற கவிதை மலிக்கா.
    எப்படிமா எல்லார்மனசில் உள்ளதையும் அப்படியே எழுதுறீங்க.
    மனம் ரணமாகிபோய் வாழ்க்கையும் ஓடிப்போச்சு இன்னமும் மாறலையே
    பாலாப்போன மனசு..

    உனக்கு நல்ல எதிர்காலம் இருக்குமா கவியுலகில் நல்ல பெயரெடுப்பாய். வாழ்த்துக்கள்..

    அன்புடன் தங்கப்பாண்டி சிவா..

    பதிலளிநீக்கு
  18. // யக்கோவ் கவிதை ஜுப்பரு //

    உஷ்ஷ்ஷ்ஷ்ஷ் தமிழ் கவிதையை படிச்சிட்டு தமிழ்ல தான் பதில் சொல்லோனும்.

    "அக்கா கவிதை அருமை"ன்னு,,,

    நானும் சொல்லிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. தலைப்பே ஒரு கதை சொல்லும் கவிதை....

    பதிலளிநீக்கு
  20. //இதில் காதலி பொய்யா இல்லை
    காதல் பொய்யா ஏதானாலும்
    பொய்த்தது ரெண்டுமே ஹா..ஹா//

    அண்ணாத்தே காதலே பொய்த்துபோனபின். காதலிமட்டும் என்னவாம். இங்கே பொய்தது காதல் அதனால் காதலியும்..

    பதிலளிநீக்கு
  21. வெறும்பய கூறியது...
    இதெல்லாம் இப்போ சகஜமப்பா... (எத்தன பேருக்கு நான் அண்ணன் தெரியுமா) இதையெல்லாம் பெருசா பேசிகிட்டு..//

    ஆகா அவுகளா நீங்க. ஓகே ஒகே..

    பதிலளிநீக்கு
  22. /////உண்மைக் கதையை எழுத்தில் அறியும் சந்தர்ப்பம் அமைந்தால். அந்த ஏட்டின் வலியை என் கவிதையில் மூலம் இங்கு எழுதிக் கிறுக்கினேன்.////

    டிஸ்கியில் மேலே சொன்ன வரிகள்.... விளங்கவேயில்ல...!//

    சில ரகசியங்கள் வெளியில் சொல்லக்கூடாது. இது ஒருவரின் வலி அவரின் அனுமதியோடு இதை எழுதினேன். நிறைய பேருக்கு இதுபோன்று நடந்திருக்கு. அதனால் இதை இங்கு கிறுக்கினேன் முரளி.

    தலைப்பு மட்டும் எங்கோ படிததாக தோன்றுகிறதா? அதேதான் இது.
    ஹா ஹா ஹா..சுட்டுமாற்றினேன்..

    பதிலளிநீக்கு
  23. கருத்துக்கள் தந்த அனைத்து நெஞ்சங்களுக்கு என் அன்பார்ந்த நன்றிகள் பல பல தொடர்ந்து கருத்துக்களை பகிருங்கள்..

    அன்புடன் மலிக்கா..

    பதிலளிநீக்கு
  24. Very nice... மிக அருமை... நன்றாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  25. ஏனுங்க...! 'நோன்பே' முடியப்போகுது... வரும் வாரம்..!

    atleast .... 'நோன்பு கஞ்சி' கொடுப்பீங்கன்னு பார்த்தா....!

    நல்லா... ஏமாத்துறாங்கப்பா...!

    அப்படியே... ஒரு பிரியாணி சட்டிலே
    எனக்கும்... ஜெய்லானிக்கும்... நாடோடிக்கும்... courierல போட்டனுப்புங்க...!

    பதிலளிநீக்கு
  26. எனக்கு மட்டும் தங்கையிடமிருந்து “பெருநாள் ப்ரியாணி”விருந்தழைப்பு மூன்று மாதம் முன்னமே வந்தாச்சு.

    அபுதாபி to ஷார்ஜா டிக்கெட் ரெடி
    இப்பவே “ப்ரியாணி கமகம் நெடி

    பதிலளிநீக்கு
  27. // காதகி.

    //

    இதுக்கு அர்த்தம் என்ன?? இப்படி ஒரு வார்த்தை இருக்கா?? நான் முதல்முறையா இந்த வார்த்தையைப் படிக்கிறேன்!!

    பதிலளிநீக்கு
  28. // kavianban KALAM, Adirampattinam கூறியது...
    எனக்கு மட்டும் தங்கையிடமிருந்து “பெருநாள் ப்ரியாணி”விருந்தழைப்பு மூன்று மாதம் முன்னமே வந்தாச்சு.//

    அபுதாபி to ஷார்ஜா டிக்கெட் ரெடி
    இப்பவே “ப்ரியாணி கமகம் நெடி.



    வாங்க கவிஞரே உங்களுக்கு இல்லாததா, அக்காள் குடும்பத்தோடு ராஷ் அல் கைமாவுக்கு போகிறார்கள் பெருநாள் கொண்டாட.

    நீங்கள் வீட்லேயே இருங்கள் நான் வர்றேன் உங்கள் வீட்டிற்கு பெருநாள் கொண்டாட.

    மூணு மாசத்திற்கு முன்பு கொடுத்த அழைப்பிதழ் செல்லாது கவிஞரே, கீழேப் பாருங்கள் டேட் எக்ஸ்பைர் ஆகிருக்கும் போன மாதத்திலியே.

    ஹீ ..ஹீ ..என்கிட்டே ஒரு கார்டு இருக்கு அது கோல்ட் கார்டு அது ஹஜ்ஜு பெருநாள் வரைக்கும் செல்லும்.

    எக்கோய் ..எல்லோருக்கும் ஒருத் தட்டுலே பிரியாணியை வச்சு மெஸ்சேஜ் அனுப்பி உடுங்கக்கா.

    பதிலளிநீக்கு
  29. //'நோன்பு கஞ்சி' கொடுப்பீங்கன்னு பார்த்தா....!

    நல்லா... ஏமாத்துறாங்கப்பா...!

    அப்படியே... ஒரு பிரியாணி சட்டிலே
    எனக்கும்... ஜெய்லானிக்கும்... நாடோடிக்கும்... courierல போட்டனுப்புங்க...!//


    காஞ்சி கெஞ்சிடும் கஞ்சிக்கு
    அஞ்சி ஓடியதேன் அன்புத் தங்கச்சி
    ப்ரியாணிக்கும் வைத்தாச்சா
    பெரிய ஆணி (ஆப்பு0

    பதிலளிநீக்கு
  30. கவிதை நல்லாயிருக்கு.

    உங்கள் அனைவருக்கும் எனது இனிய பெருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  31. நோன்பென்னும் தேர்வெழுதி நோகாமல் காத்திருக்க
    மாண்புடன் அல்லாஹ்வும் “மன்னிப்பை” பரிசாக
    வாகையுடன் தரும்நாள்; வாஞ்சையுடன் அருளும்நாள்;
    ஈகைத் திருநாள்; “ஈத்” பெருநாள்
    நல்லாடை உடுத்தி நறுமணம் பூசி
    அல்லாஹ்வைத் தொழுதிட அணிதிரள் வோரை
    வானவர்கள் தரையிறங்கி வாழ்த்திட வருகின்றனர்;
    ஆனதினால் தொழுகைக்கு ஆர்வமுடன் வருகவே
    பயிற்சிகள் பெற்றோம்; பாடங்கள் கற்றோம்
    முயற்சிகள் மறுமைக்கு முழுதாய் இருக்கட்டும்
    மீண்டும் “ரமளான்” நம்மிடம் வரவேண்டும்
    மீண்டிடுவோம் பாவங்கள் மீண்டும் வாராமலே
    வணங்கிடுவோம் அல்லாஹ் ஒருவனை மட்டும்
    இணங்கி வாழ்வோம்; இன்பமே கிட்டும்
    இன்பத் திருநாள் இன்றைய தினத்திலே
    அன்புடன் வாழ்த்தும் கவியன்பன் மனத்திலே.!!


    “கவியன்பன்” கலாம். அதிராம்பட்டினம் (பிறப்பிடம்)
    அபுதபி (இருப்பிடம்)

    பதிலளிநீக்கு
  32. நோன்பென்னும் தேர்வெழுதி நோகாமல் காத்திருக்க
    மாண்புடன் அல்லாஹ்வும் “மன்னிப்பை” பரிசாக
    வாகையுடன் தரும்நாள்; வாஞ்சையுடன் அருளும்நாள்;
    ஈகைத் திருநாள்; “ஈத்” பெருநாள்
    நல்லாடை உடுத்தி நறுமணம் பூசி
    அல்லாஹ்வைத் தொழுதிட அணிதிரள் வோரை
    வானவர்கள் தரையிறங்கி வாழ்த்திட வருகின்றனர்;
    ஆனதினால் தொழுகைக்கு ஆர்வமுடன் வருகவே
    பயிற்சிகள் பெற்றோம்; பாடங்கள் கற்றோம்
    முயற்சிகள் மறுமைக்கு முழுதாய் இருக்கட்டும்
    மீண்டும் “ரமளான்” நம்மிடம் வரவேண்டும்
    மீண்டிடுவோம் பாவங்கள் மீண்டும் வாராமலே
    வணங்கிடுவோம் அல்லாஹ் ஒருவனை மட்டும்
    இணங்கி வாழ்வோம்; இன்பமே கிட்டும்
    இன்பத் திருநாள் இன்றைய தினத்திலே
    அன்புடன் வாழ்த்தும் கவியன்பன் மனத்திலே.!!


    “கவியன்பன்” கலாம். அதிராம்பட்டினம் (பிறப்பிடம்)
    அபுதபி (இருப்பிடம்)

    பதிலளிநீக்கு
  33. நோன்பென்னும் தேர்வெழுதி நோகாமல் காத்திருக்க
    மாண்புடன் அல்லாஹ்வும் “மன்னிப்பை” பரிசாக
    வாகையுடன் தரும்நாள்; வாஞ்சையுடன் அருளும்நாள்;
    ஈகைத் திருநாள்; “ஈத்” பெருநாள்
    நல்லாடை உடுத்தி நறுமணம் பூசி
    அல்லாஹ்வைத் தொழுதிட அணிதிரள் வோரை
    வானவர்கள் தரையிறங்கி வாழ்த்திட வருகின்றனர்;
    ஆனதினால் தொழுகைக்கு ஆர்வமுடன் வருகவே
    பயிற்சிகள் பெற்றோம்; பாடங்கள் கற்றோம்
    முயற்சிகள் மறுமைக்கு முழுதாய் இருக்கட்டும்
    மீண்டும் “ரமளான்” நம்மிடம் வரவேண்டும்
    மீண்டிடுவோம் பாவங்கள் மீண்டும் வாராமலே
    வணங்கிடுவோம் அல்லாஹ் ஒருவனை மட்டும்
    இணங்கி வாழ்வோம்; இன்பமே கிட்டும்
    இன்பத் திருநாள் இன்றைய தினத்திலே
    அன்புடன் வாழ்த்தும் கவியன்பன் மனத்திலே.!!


    “கவியன்பன்” கலாம். அதிராம்பட்டினம் (பிறப்பிடம்)
    அபுதபி (இருப்பிடம்)

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது