நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தூதுபோ..




பாலைவனம் சென்றுவிட்ட
பாவையின் காதலனை

பால்நிலாவே பார்த்துவா
பைங்கிளியின் பாசத்தையும் கூறிவா

வானில் கரைபுரண்டு ஓடும் மேகமே
வஞ்சித்துவிடாமல் கறுத்துவிடு

வான்மழையின் தூறல்கண்டு-மண்
வாசம் வெளியேறி

காற்றோடு கலந்து -என்
காதல்கணவன் நாசியில் ஏறட்டும்.

நான் தூதுவிடும் சுவாசக்காற்று
பால்நிலாவின் ஒளியோடு இணைந்து

மண்வாசத்தோடு கலந்து அவன்
மனதுக்குள் கலக்கட்டும்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

29 கருத்துகள்:

  1. //நான் தூதுவிடும் சுவாசக்காற்று
    பால்நிலாவின் ஒளியோடு இணைந்து

    மண்வாசத்தோடு கலந்து அவன்
    மனதுக்குள் கலக்கட்டும்..///

    அருமை மலிக்கா

    பதிலளிநீக்கு
  2. LK கூறியது...
    //நான் தூதுவிடும் சுவாசக்காற்று
    பால்நிலாவின் ஒளியோடு இணைந்து

    மண்வாசத்தோடு கலந்து அவன்
    மனதுக்குள் கலக்கட்டும்..///

    அருமை மலிக்கா.//

    வாங்க கார்த்திக்.
    தங்களின் [1st] முதல் கருதுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. //...வானில் கரைபுரண்டு ஓடும் மேகமே
    வஞ்சித்துவிடாமல் கறுத்துவிடு...//

    arumaiyana Kavithai.

    thodarattum ungal kavi.

    பதிலளிநீக்கு
  4. வானில் கரைபுரண்டு ஓடும் மேகமே
    வஞ்சித்துவிடாமல் கறுத்துவிடு

    பதிலளிநீக்கு
  5. //வானில் கரைபுரண்டு ஓடும் மேகமே
    வஞ்சித்துவிடாமல் கறுத்துவி// அருமையான வரிகள்...சூப்பர் மலிக்கா.....அது சரி காதலன்...பாலைவனத்துக்கு ஓட்டகம் மேய்க்கவா போனார் :)

    பதிலளிநீக்கு
  6. இப்ப‌டியும் தூது சொல்ல‌லாமா!!!... வ‌ரிக‌ள் ந‌ல்லா இருக்குங்க‌..

    பதிலளிநீக்கு
  7. சே.குமார் கூறியது...
    //...வானில் கரைபுரண்டு ஓடும் மேகமே
    வஞ்சித்துவிடாமல் கறுத்துவிடு...//

    arumaiyana Kavithai.

    thodarattum ungal kavi.//

    தொடர்ந்த வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  8. Yasir கூறியது...
    //வானில் கரைபுரண்டு ஓடும் மேகமே
    வஞ்சித்துவிடாமல் கறுத்துவி// அருமையான வரிகள்...சூப்பர் மலிக்கா.....அது சரி காதலன்...பாலைவனத்துக்கு ஓட்டகம் மேய்க்கவா போனார் :)//

    ஏன் காக்கா ஒட்டகம் மட்டும்தான் பாலையில் இருக்கா.

    அதையாவது மேய்துவிடலாம் ஆனாலிந்த --------- மேய்ப்பதுதான் சிரமம்.

    வாயில்லாதவைகளை [சாரி வார்த்தையில்லா]
    கேட்க ஆளில்லையின்னு இப்படியெல்லாம் சொல்லுக்கூடாது பாவம் நம்மைக்கண்டு அது மிரண்டுபோகுது. ஹா ஹா..

    மிக்க நன்றி யாசிர்காக்கா..

    பதிலளிநீக்கு
  9. நாடோடி கூறியது...
    இப்ப‌டியும் தூது சொல்ல‌லாமா!!!... வ‌ரிக‌ள் ந‌ல்லா இருக்குங்க‌..//

    ஆகா இப்படியும் இருக்குமா புள்ளைங்க அப்படிங்கிற மாதிரியில்ல கேள்விகேக்குறேள்.

    எது எதையோ தூதுவிடுறாங்கப்பு.
    அதில் இதுவும் ஒரு வகை..ஹி ஹி

    மிக்க நன்றி ஸ்டீபன்..

    பதிலளிநீக்கு
  10. அருமை....

    அருமை....


    அருமை....


    natpudan
    Kanchi Murali

    பதிலளிநீக்கு
  11. sorry...!
    from Morning Gmail and Googlee Groups are not working here...!

    Kanchi Murali

    பதிலளிநீக்கு
  12. வளைகுடாவில் பிரிந்து வா(டு)ழும் தன் கணவன்மார்களுக்கு ,மனைவி விடும் தூது அருமை.

    பதிலளிநீக்கு
  13. //நான் தூதுவிடும் சுவாசக்காற்று
    பால்நிலாவின் ஒளியோடு இணைந்து

    மண்வாசத்தோடு கலந்து அவன்
    மனதுக்குள் கலக்கட்டும்..//

    ஆஹா...நமக்காகவே எழுதியது போலவே இருக்கு மலிக்கா அக்கா...மிக அழகு....கவிதை...நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  14. //பால்நிலாவே பார்த்துவா
    பைங்கிளியின் பாசத்தையும் கூறிவா //

    நல்ல வரிகள்.

    பதிலளிநீக்கு
  15. காதலின் பிரிவை சொல்லும் கவிதையாக இருந்தாலும், உங்களின் மற்ற கவிதைகளுடன் ஒப்பிரும் போது சதாரணமாக இருக்கிறது.(மன்னிக்கவும் இந்த சகோதரனை.உங்கள் கவிதை மிது எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் அப்படி தோன்றுகிறது போலிருக்கு.அதிலும் கவிதைப் பற்றிய அறிவு நல்ல கம்மி)

    பதிலளிநீக்கு
  16. இன்னிக்கு கண்டிப்பா உங்க சார் உங்களுக்கு கிஃப்ட் பெருசா தரப்போரார்...

    பதிலளிநீக்கு
  17. நல்லாருக்கு (எனக்கு கவிதை டியுசன் எடுங்களேன் )

    பதிலளிநீக்கு
  18. கவிதை நல்லாத்தான் இருக்கு... ஆனா...?

    ///பாலைவனம் சென்றுவிட்ட
    பாவையின் காதலனை///

    இந்த வரிகள பார்த்தா...!
    ஏனுங்க... இந்த கவிதை "one span a time" எழுதியதா?
    இல்ல.. long long ago... நீங்க முத்துபேட்டையிலும்... உங்க மச்சான் துபையிலும் இருந்தப்ப எழுதியதா?

    //வானில் கரைபுரண்டு ஓடும் மேகமே
    வஞ்சித்துவிடாமல் கறுத்துவிடு///

    என்ன மிரட்டலா...!

    //காற்றோடு கலந்து -என்
    காதல்கணவன் நாசியில் ஏறட்டும்.
    நான் தூதுவிடும் சுவாசக்காற்று
    பால்நிலாவின் ஒளியோடு இணைந்து
    மண்வாசத்தோடு கலந்து அவன்
    மனதுக்குள் கலக்கட்டும்..///

    அன்னம் விடு தூது.. புறா விடு தூது... இதெல்லாம் கேள்விபட்டிருக்கோம்....!
    இது என்ன காற்றுவிடு தூதா?
    புதுசா இருக்கு...!

    anyhave...
    கற்பனையின் உச்சத்தில் உருவான அழகான... அருமையான கவிதை...!

    நட்புடன்...
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  19. காஞ்சி முரளி கூறியது...
    அருமை....

    அருமை....


    அருமை....


    natpudan
    Kanchi Murali

    மிக்க நன்றி நன்றி நன்றி..


    காஞ்சி முரளி கூறியது...
    sorry...!
    from Morning Gmail and Googlee Groups are not working here...!

    Kanchi Murali.//

    ஓ அப்படியா இங்கும் சிலநேரம் அப்படித்தானிருக்கு ஓப்பனாகவே ரொம்பஆஆஆ லேட்டாகுது...

    நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  20. இளம் தூயவன் கூறியது...
    வளைகுடாவில் பிரிந்து வா(டு)ழும் தன் கணவன்மார்களுக்கு ,மனைவி விடும் தூது அருமை.//

    அதேதான் சகோ.
    அது எங்கிருந்தாலும் சரி போகும் இதுபோன்ற தூது..

    மிக்க நன்றி தூயவன்!..

    பதிலளிநீக்கு
  21. seemangani கூறியது...
    //நான் தூதுவிடும் சுவாசக்காற்று
    பால்நிலாவின் ஒளியோடு இணைந்து

    மண்வாசத்தோடு கலந்து அவன்
    மனதுக்குள் கலக்கட்டும்..//

    ஆஹா...நமக்காகவே எழுதியது போலவே இருக்கு மலிக்கா அக்கா...மிக அழகு....கவிதை...நல்லா இருக்கு.//

    நீங்க தான் தினமும் கவிதையில் தூதுச்செய்தியை அனுப்புறீங்களே கனி [மச்சிக்கு] அதுவும் தொடர் கவியில் வேறு.. வாழ்க வளமுடன்.

    மிக்க நன்றி கனி..

    பதிலளிநீக்கு
  22. ஜெய்லானி கூறியது...
    //பால்நிலாவே பார்த்துவா
    பைங்கிளியின் பாசத்தையும் கூறிவா //

    நல்ல வரிகள்.//


    பால்நிலாவே பார்த்துவா
    பைங்கிளிக்கு -என்
    பாசத்தையும் கூறிவா .//

    மச்சிக்கு தூது அனுப்புவதுபோல் தெரிகிறதே.

    மிக்க நன்றி அண்ணாதே..

    பதிலளிநீக்கு
  23. mkrpost கூறியது...
    காதலின் பிரிவை சொல்லும் கவிதையாக இருந்தாலும், உங்களின் மற்ற கவிதைகளுடன் ஒப்பிரும் போது சதாரணமாக இருக்கிறது.(மன்னிக்கவும் இந்த சகோதரனை.உங்கள் கவிதை மிது எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் அப்படி தோன்றுகிறது போலிருக்கு.அதிலும் கவிதைப் பற்றிய அறிவு நல்ல கம்மி).

    இனி வரும் கவிதைகளில் நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் எழுத முயற்சிக்கிறேன் சகோதரர் அவர்களே!

    அக்கரையான கருத்துக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  24. pinkyrose கூறியது...
    இன்னிக்கு கண்டிப்பா உங்க சார் உங்களுக்கு கிஃப்ட் பெருசா தரப்போரார்.//

    அவங்க கிடைச்சதே கிஃப்ட்டுதான் பிங்கி.

    மிக்க மகிழ்ச்சி வருகைக்கும் கருத்துக்கும்..

    பதிலளிநீக்கு
  25. மங்குனி அமைச்சர் கூறியது...
    நல்லாருக்கு (எனக்கு கவிதை டியுசன் எடுங்களேன் )//

    ஓ தாரளமாக டியூசன் எடுக்கலாம் அமைச்சரே!
    கற்றுக்கொடுக்ககூலி என்ன தருவீர்கள்.
    [உங்கள் சாம்ராஜ்யதையே தந்துவிட்டாலும் வேண்டாமென்று சொல்லப்போவதில்லை]
    தலையில் அணிந்திருக்கும் தங்ககிரீடத்தை தருவேன்றெல்லாம் சும்மா ரீல் விடக்கூடாது.

    நெடுநாள் கழித்து மக்களை பார்வையிட வந்திருக்கும் மங்குனிஅமைச்சர் [ஒழிக அச்சோ] வாழ்க.

    மிக்க நன்றி அமைச்சரே..

    பதிலளிநீக்கு
  26. காஞ்சி முரளி கூறியது...
    கவிதை நல்லாத்தான் இருக்கு... ஆனா...?.//

    என்ன ஆவண்ணா.

    ///பாலைவனம் சென்றுவிட்ட
    பாவையின் காதலனை///

    இந்த வரிகள பார்த்தா...!
    ஏனுங்க... இந்த கவிதை "one span a time" எழுதியதா?
    இல்ல.. long long ago... நீங்க முத்துபேட்டையிலும்... உங்க மச்சான் துபையிலும் இருந்தப்ப எழுதியதா? //

    ஏன் சகோ. எனக்கு மட்டும்தான் கவிஎழுதனுமா? இது பாவம் அக்கரையிலிருக்கும் பைங்கிளிகளுக்காக எழுதியது..
    [போன்பேசும்போது ஒரு தோழியின் காதல் காதுக்குள் கேட்டது அதுதேன் இங்கே கிறுக்கலாய்]

    //வானில் கரைபுரண்டு ஓடும் மேகமே
    வஞ்சித்துவிடாமல் கறுத்துவிடு///

    என்ன மிரட்டலா...!//

    கெஞ்சினா மிஞ்சும் அதேன்ன்ன்ன்

    //காற்றோடு கலந்து -என்
    காதல்கணவன் நாசியில் ஏறட்டும்.
    நான் தூதுவிடும் சுவாசக்காற்று
    பால்நிலாவின் ஒளியோடு இணைந்து
    மண்வாசத்தோடு கலந்து அவன்
    மனதுக்குள் கலக்கட்டும்..///

    அன்னம் விடு தூது.. புறா விடு தூது... இதெல்லாம் கேள்விபட்டிருக்கோம்....!
    இது என்ன காற்றுவிடு தூதா?
    புதுசா இருக்கு...!//

    கணினி காலத்தில்
    காற்றில் போகுது தூது.

    //anyhave...
    கற்பனையின் உச்சத்தில் உருவான அழகான... அருமையான கவிதை...!

    நட்புடன்...
    காஞ்சி முரளி.../

    ரொம்ப ரொம்ப சந்தோஷம் முரளி.
    தாங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  27. //பால்நிலாவே பார்த்துவா
    பைங்கிளியின் பாசத்தையும் கூறிவா //

    நன்று.

    பதிலளிநீக்கு
  28. எங்க வீட்டுக்காரம்மா ரொம்ப கோவம்மா இருக்காங்க போல.

    இங்கு கடும் வெயிலும் அனல்காற்றும் தான் வீசுகிறது.

    பதிலளிநீக்கு
  29. //பால்நிலாவே பார்த்துவா
    பைங்கிளியின் பாசத்தையும் கூறிவா//

    அம்மாவசை அன்னிக்கு என்ன பண்ணுவாங்க ......ஜிமெயில் அனுப்புவாங்களா ?

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது