அம்மா அம்மா என்னப்பாரு
அதையும் கீழே எறக்கிவிடு
வயித்துல என்ன சுமந்தியே-இப்போ
வழியில சுமக்க முடியலையா!
அம்மா அம்மா இதக்கேளு
அழுது சொல்லுறேன் கொஞ்சங்கேளு
நாயின் வாழ்வைப் பார்த்தயா!
நா அழறதுக்கூட கேக்கலையா!
பிஞ்சுவிரலை பிடித்துக்கொண்டு
பரக்கப் பரக்க போறாயே
ஒன்னோட வேகத்துக்கு-என்னால
ஓடிவரவும் முடியலையே!
பச்சபுள்ள என்னையும்தான்
பரிதவிக்கவிட்டு விட்டு
செல்லப்பிரணி என்பதனால்
சோக்கா தோளில் சுமந்தாயோ!
நாலுகாலு இருந்தபோதும்
நாயை நடக்க விடுவதில்லை-ஆனா
நான் தத்தித் தத்தி நடக்கிறனே
தடுக்கிக் கீழே விழுகிறனே
பெத்தவளே பெத்தவளே
பிள்ளை சொல்றதக் கேளம்மா
பெத்தெடுத்த பிள்ளையைவிட -உனக்கு
பாசம் அந்த பிராணிமேலா?
உன்பொறுப்பைக் கண்டு வருந்துகிறேன்
உனக்கு மகளாய் வெதும்புகிறேன்
நாயிக்குயிருக்கும் நன்றிகூட
நானிருக்க மாட்டேனென்று நினைத்தாயோ!
அடுத்த ஜென்மம் ஒன்னிருந்தால்
அதில் நீ எனக்கு மகளாகு
பாசமென்றால் என்னவென்று-உனக்குத்
பாடம் படித்துத் தருகின்றேன்...
டிஸ்கி//இதை பாட்டாப் பாடுங்கோ பாப்போம் அம்மா இங்கே வா வா அந்த ரைமிங்கில்[யாரு[ம்மா]ப்பா இந்த போட்டோவ எடுத்தது. அல்லாரும் சாக்கிரதையா இருங்கோன்னு யாரோ பின்னால் இருந்து எச்சரிக்கிறாங்கன்னு நெனக்கிறேன். கையில கேமரவோட அலையுறாக பாத்துங்கோ] ஏன் கேக்குறீங்க இந்தபோட்டோவை பார்க்கசொல்லி கிட்ட தட்ட எனக்கு 20. 25 மெயில்கள்..
அதிலிருந்த வாசகங்கள் ஒவ்வொன்றும் மனதை கஸ்டப்படுத்தினாலும். இன்றைய சில அம்மாக்கள் இப்படியிருப்பதால் எல்லாருக்கும் சேத்து எழுதுறாங்க. என்ன செய்ய ஒரு பானைசோத்துக்கு ஒருசோறு பதமாம். இது எந்த ஊரு நியாங்க.. என்ன கொடுமையிது. அப்படின்னு தலைப்பு வேறு..
இதபாத்த நம்ம மூளை சும்மாயிருக்குமா அதான் இருக்கும் கொஞ்சூண்டு மூளையை கசக்கிப்பிழிஞ்சி கவிதையின்னு கிறுக்கியிருக்கேன். இதை எழுதியது யார்மனதையும் நோகடிக்கவல்ல. அப்படியிருப்பின் பொருந்திக்கொள்ளவும்..
இப்படத்திற்க்கு ரியாஸ் எழுதிய கவிதை
ஏ.. நிலவே
பூமிக்கு
வந்துவிடாதே
வந்தால்
என் நிலைதான்
உனக்கும்.
துண்டு போட்டு
பங்கு
போட்டுக்கொள்வார்கள்
மனிதர்கள்..
மழைக்கு
காத்திருப்பது போல
பின்
இவர்கள்
இரவுக்கும்
காத்திருக்கலாம்.
ஆமாம்மா செய்தாலும் செய்வாங்க!
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகளா!
அதையும் கீழே எறக்கிவிடு
வயித்துல என்ன சுமந்தியே-இப்போ
வழியில சுமக்க முடியலையா!
அம்மா அம்மா இதக்கேளு
அழுது சொல்லுறேன் கொஞ்சங்கேளு
நாயின் வாழ்வைப் பார்த்தயா!
நா அழறதுக்கூட கேக்கலையா!
பிஞ்சுவிரலை பிடித்துக்கொண்டு
பரக்கப் பரக்க போறாயே
ஒன்னோட வேகத்துக்கு-என்னால
ஓடிவரவும் முடியலையே!
பச்சபுள்ள என்னையும்தான்
பரிதவிக்கவிட்டு விட்டு
செல்லப்பிரணி என்பதனால்
சோக்கா தோளில் சுமந்தாயோ!
நாலுகாலு இருந்தபோதும்
நாயை நடக்க விடுவதில்லை-ஆனா
நான் தத்தித் தத்தி நடக்கிறனே
தடுக்கிக் கீழே விழுகிறனே
பெத்தவளே பெத்தவளே
பிள்ளை சொல்றதக் கேளம்மா
பெத்தெடுத்த பிள்ளையைவிட -உனக்கு
பாசம் அந்த பிராணிமேலா?
உன்பொறுப்பைக் கண்டு வருந்துகிறேன்
உனக்கு மகளாய் வெதும்புகிறேன்
நாயிக்குயிருக்கும் நன்றிகூட
நானிருக்க மாட்டேனென்று நினைத்தாயோ!
அடுத்த ஜென்மம் ஒன்னிருந்தால்
அதில் நீ எனக்கு மகளாகு
பாசமென்றால் என்னவென்று-உனக்குத்
பாடம் படித்துத் தருகின்றேன்...
டிஸ்கி//இதை பாட்டாப் பாடுங்கோ பாப்போம் அம்மா இங்கே வா வா அந்த ரைமிங்கில்[யாரு[ம்மா]ப்பா இந்த போட்டோவ எடுத்தது. அல்லாரும் சாக்கிரதையா இருங்கோன்னு யாரோ பின்னால் இருந்து எச்சரிக்கிறாங்கன்னு நெனக்கிறேன். கையில கேமரவோட அலையுறாக பாத்துங்கோ] ஏன் கேக்குறீங்க இந்தபோட்டோவை பார்க்கசொல்லி கிட்ட தட்ட எனக்கு 20. 25 மெயில்கள்..
அதிலிருந்த வாசகங்கள் ஒவ்வொன்றும் மனதை கஸ்டப்படுத்தினாலும். இன்றைய சில அம்மாக்கள் இப்படியிருப்பதால் எல்லாருக்கும் சேத்து எழுதுறாங்க. என்ன செய்ய ஒரு பானைசோத்துக்கு ஒருசோறு பதமாம். இது எந்த ஊரு நியாங்க.. என்ன கொடுமையிது. அப்படின்னு தலைப்பு வேறு..
இதபாத்த நம்ம மூளை சும்மாயிருக்குமா அதான் இருக்கும் கொஞ்சூண்டு மூளையை கசக்கிப்பிழிஞ்சி கவிதையின்னு கிறுக்கியிருக்கேன். இதை எழுதியது யார்மனதையும் நோகடிக்கவல்ல. அப்படியிருப்பின் பொருந்திக்கொள்ளவும்..
இப்படத்திற்க்கு ரியாஸ் எழுதிய கவிதை
ஏ.. நிலவே
பூமிக்கு
வந்துவிடாதே
வந்தால்
என் நிலைதான்
உனக்கும்.
துண்டு போட்டு
பங்கு
போட்டுக்கொள்வார்கள்
மனிதர்கள்..
மழைக்கு
காத்திருப்பது போல
பின்
இவர்கள்
இரவுக்கும்
காத்திருக்கலாம்.
ஆமாம்மா செய்தாலும் செய்வாங்க!
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகளா!
கவிதை நல்லா இருக்குங்க மலிக்கா.
பதிலளிநீக்குஆனா படத்தில் குழந்தை சிரிக்கிற மாதிரி இருக்கு :))
சின்ன அம்மிணி கூறியது...
பதிலளிநீக்குகவிதை நல்லா இருக்குங்க மலிக்கா.
ஆனா படத்தில் குழந்தை சிரிக்கிற மாதிரி இருக்கு :))//
ஆகா மொதபோனியே இப்படியா கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்க.
நாய் அழகாஅதாங்கோ சிரிக்குது ஆனா கொயந்ததான் அழமாதரி எனக்கு தெரியுது. உங்களுக்கு சிரிக்கிறமாதரி தெரியுதா? ஓகே ஓகே.
அப்போ
/நா சிரிக்கிறதுகூட தெரியலையான்னு//
மாத்திருவோமா..
உயிர்களிடத்தில்
பதிலளிநீக்குஅன்புவேண்டுமென்றார்
புத்தர் அய்யகோ!!
என்நிலையை
பார்காமலேயே !!
பிரானிகளிடதில்
அன்புடன் இருங்களென்றார்
வள்ளாலார்
இந்த நிலையை
பார்காமலேயே !!
ஈரைந்து மாதம்
கருவிலே
சுமந்தவளாய் நீ
இருந்திருந்தால்
நானிருப்பேன் அந்தஇடத்தில்
சிரிப்பது நானல்ல
இவ்வுலகம்..!!
அந்த படத்தை பார்த்த நாளிலிருந்து வந்த கோபம் . இப்ப உங்க கவிதை படித்து சிரிப்பை வரவரைத்தது... ஹா..ஹா..க்கி..க்கி..
பதிலளிநீக்குஅந்த நாய கூட்டிகிட்டு மருத்துவமனைக்கு போறாங்க...பாவங்க அவங்க... அதுக்குள்ள அறம் பாடிட்டீங்க...
பதிலளிநீக்குஅந்த நாய கூட்டிகிட்டு மருத்துவமனைக்கு போறாங்க...பாவங்க அவங்க... அதுக்குள்ள அறம் பாடிட்டீங்க...
பதிலளிநீக்குஓண்ணும் சொல்லுறதுக்கு இல்லே..... நாம ஊதுற சங்கை ஊதுவோம்... பார்ப்போம்.. கவிதை நல்லா வந்திருக்குங்க.
பதிலளிநீக்குஹய்... நீரோடைக்குள்
பதிலளிநீக்குஓர் அழகான
நீரோடை.."
ரொம்ப அழகாயிருக்கு... மலிக்கா...
வாழ்த்துக்கள்...
நட்புடன்...
காஞ்சி முரளி...
இந்த தங்கள் "நாயா? நானா?" கவிதைக்கு கருத்துரையாய்...
பதிலளிநீக்குஏற்கெனவே "சுகமான சுமைகள்" என்ற கவிதையில் நான் வடித்த வரிகளையே... ரீப்பீட்டு...
"சுகத்தையே
சுமையாய்......?
சுமக்காமல் செல்லும் சோதரி....
நீ...
தவமாய்
தவமிருந்து.....
எத்தனையோ நாட்கள்
எதிர்பார்ப்புக்களுடன் ஈன்ற - நின்
எதிர்காலத்தை....
சுமப்பதையே
சுமையென்றால்.....?
ஈரறிவு முதல்
ஐந்தறிவு வரை - தன்
"பிறப்பினை"
சுகமாய் சுமக்கும்போது....
ஆறறிவான
நீ மட்டும்
சுகத்தை சுமையாய்....?
சுமந்து பார்....
சுகமான சுமையை
சுமைதாங்கியாய்...
சுமந்து பார்......சகோதரி... ///
இதெல்லாம் கொடுமையப்பா...!
தங்கள் கவிதை அருமை..
ஆனால்
அதில் மென்மை அதிகம்...
நட்புடன்....
காஞ்சி முரளி...
என்ன செய்ய மனிதருக்கு மனிதரைவிட மிருகத்தைபிடிச்சிருக்கு.
பதிலளிநீக்குஇங்கு நடக்கும் இத்போன்று நிறையகூத்துகள். பார்துண்டே சிரிக்க வேண்டியதுதான் என்ன செய்ய..
பக்கத்துவீட்டு குழந்தையும் அவங்கவீட்டு நாயுமா இருக்குமோ
பதிலளிநீக்குராசராசசோழன் கூறியது...
பதிலளிநீக்குஅந்த நாய கூட்டிகிட்டு மருத்துவமனைக்கு போறாங்க...பாவங்க அவங்க... அதுக்குள்ள அறம் பாடிட்டீங்க.//
அதுசரி சோழா. நீங்கதான் போட்டோ எடுத்ததா![வாங்க வாங்க அந்த அக்காகிட்ட சொல்லிக்கொடுக்கிறேன்] இத எடுத நீங்க கொஞ்சம் மருத்துவமனைவரைபோய் அதுக்கு ஊசிபோடும்போதும் எடுத்திருந்தா இன்னும் சுவாரசியமாயிருகுமே![சும்மா சும்மா]
ஜெய்லானி கூறியது...
பதிலளிநீக்குஅந்த படத்தை பார்த்த நாளிலிருந்து வந்த கோபம் . இப்ப உங்க கவிதை படித்து சிரிப்பை வரவரைத்தது... ஹா..ஹா..க்கி..க்கி//
கோவத்தை கவிதையில கொட்டிட்டீங்களே அண்ணாத்தே! சூப்பரப்பூ கவிதை அசத்தல்.கவிமன்னன் ஜெய்லானி வாழ்க..
காஞ்சி முரளி கூறியது...
பதிலளிநீக்குஹய்... நீரோடைக்குள்
ஓர் அழகான
நீரோடை.."
ரொம்ப அழகாயிருக்கு... மலிக்கா...
வாழ்த்துக்கள்...
நட்புடன்...
காஞ்சி முரளி.
ரொம்ப சந்தோஷம் சகோதரா. நீரோடையின்னா ஓடமில்லையா நீர் அதான் இப்புடி..
shahulhameed கூறியது...
பதிலளிநீக்குபக்கத்துவீட்டு குழந்தையும் அவங்கவீட்டு நாயுமா இருக்குமோ.//
ஹையோடா இதப்பாருங்க நல்லச்சொன்னீங்களே அப்படியுமிருக்குமோ! ஆத்தாடி தெரியலையே!
நல்லவேளை டிஸ்கி போட்டுவிட்டேன்..
காஞ்சி முரளி கூறியது...
பதிலளிநீக்குஇந்த தங்கள் "நாயா? நானா?" கவிதைக்கு கருத்துரையாய்...
ஏற்கெனவே "சுகமான சுமைகள்" என்ற கவிதையில் நான் வடித்த வரிகளையே... ரீப்பீட்டு...
"சுகத்தையே
சுமையாய்......?
சுமக்காமல் செல்லும் சோதரி....
நீ...
தவமாய்
தவமிருந்து.....
எத்தனையோ நாட்கள்
எதிர்பார்ப்புக்களுடன் ஈன்ற - நின்
எதிர்காலத்தை....
சுமப்பதையே
சுமையென்றால்.....?
ஈரறிவு முதல்
ஐந்தறிவு வரை - தன்
"பிறப்பினை"
சுகமாய் சுமக்கும்போது....
ஆறறிவான
நீ மட்டும்
சுகத்தை சுமையாய்....?
சுமந்து பார்....
சுகமான சுமையை
சுமைதாங்கியாய்...
சுமந்து பார்......சகோதரி... ///
இதெல்லாம் கொடுமையப்பா...!
தங்கள் கவிதை அருமை..
ஆனால்
அதில் மென்மை அதிகம்...
நட்புடன்....
காஞ்சி முரளி...//
கவிப்புலவரே! உங்கள் கவி என்னுடைய பல கவிதைகளுக்கு பொருந்தும். அதுக்குதான் சொல்வது. மலைக்கும் மடுவுக்கும் வித்தியாசமுண்டுன்னு.
மலை முரளி. மடுவு மலிக்கா..
அசத்திட்டீங்க..
பாப்பா சொல்கிறது
பதிலளிநீக்கு“ என்னை பத்து மாதம் வயிற்றில் சுமந்தாய்
நான் நடை பழகும் வரை மடியிலும் இடுப்பிலும் சுமந்தாய்
எனக்கு அரவணைக்க அப்பாவும்,தாத்தாவும்,பாட்டியும் உண்டு
பாவம் இந்த நாய் பிறந்ததில் இருந்து இதை மாதிரி எதையும் அனுபவிக்கவில்லை
நான் சிரிப்பதற்க்காக துள்ளி துள்ளி குதித்தில்,கால் ஒடிந்த இந்த நாயை
இன்றாவது தோளில் சுமந்து,மருத்துவம் பார்த்து நாம் அதற்க்கு பட்ட கடனை அடைப்போம் வா !!! “
என்று பூரிப்போடு சொல்கிறது
ஹய்...
பதிலளிநீக்குநான் நீரோடையின் "33333"வது வாசகன்...
"இதெல்லாம் பிளான் பண்ணி செய்யணும்"....
நட்புடன்...
காஞ்சி முரளி...
அந்த படத்தில இருக்கிற அம்மா மேலஉள்ள கோபத்தை உங்க கவிதை தணியவச்சிருக்கு.. அழகான கவிதை.. நல்லாருக்கு மலிக்கா.
பதிலளிநீக்குஅடடா அருமை..
பதிலளிநீக்கு"பிறர் பிள்ளையை ஊற்றி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும்" என்ற பழமொழியை பின்பற்றாங்களோ என்னவோ..
நான் கவிதைன்னு சொல்லி கிறுக்கியதையும் உங்கள் பதிவில் சேர்த்தது மிக்க மகிழ்ச்சி..
1,இந்தம்மாவுக்கு மகளாப்பிறந்ததைவிட ஒரு நாயா பிறந்திருக்கலாம் என அந்த பிஞ்சி உள்ளம் நினைத்திருக்கும்
பதிலளிநீக்கு2,பெத்த மகளைவிட ஒரு வாயில்லா ஜீவனிடம் அன்பு செலுத்தும் சிறந்தமனுசியாக பார்ப்பவர்களுக்கு தோன்றலாம்
3,ஏன்டி உன்னை கடைதெருவுக்கு கூட்டிப்போறது இல்லாம உன் செல்ல நாயவேற தோள்ல தூக்கிட்டுபோனுமா என்று அம்மா மகள திட்டியிறுக்கலாம்
ஒரு புகைப்படத்தில் எத்தனைக்கற்பனை
காஞ்சி முரளி கூறியது...
பதிலளிநீக்குஹய்... நீரோடைக்குள்
ஓர் அழகான
நீரோடை.."
ரொம்ப அழகாயிருக்கு... மலிக்கா...
இன்னும் அழக இருக்க முத்துபேட்டை கொடுவா மீனும் ஓடை யில் விடனும்
வித்தியாசமான படம்;
பதிலளிநீக்குஅதற்கு பொருத்தமான கவிதை.
நல்லாதேன் இருக்கு!
மல்லிக்கா...என்ன ஒரு கற்பனை உங்களுக்கு !
பதிலளிநீக்குமழழை பாட்டு மாதிரியே கவிதை இருக்கு அக்கா...படம் ஜோரு...ஹையோ..ஹையோ..
பதிலளிநீக்குஆஹா...என்ன கொடுமையப்பா...நாய் தோலிலும்..குழந்தை ஏங்கியும்..பாவம் தான் குழந்தை...உங்கள் கவிதை அருமையோ அருமை...சூப்பர்ப்....
பதிலளிநீக்குவித்தியாசமான படம் - அதற்கு ஒரு அருமையான கவிதை....
பதிலளிநீக்குஅடுத்த கவிதை எழுதிய ரியாஸ்க்கு வாழ்த்துக்கள்!
நல்லாருக்குங்க
பதிலளிநீக்குஎனக்கும் இந்த படம் மெயில் மூலம் வந்தது , படம் பார்த்தவுடன் கோவம் வந்தது , ஆனால் மல்லிக்கு கவிதை வந்தது , நல்லா இருக்கு
பதிலளிநீக்குYasir கூறியது...
பதிலளிநீக்குபாப்பா சொல்கிறது
“ என்னை பத்து மாதம் வயிற்றில் சுமந்தாய்
நான் நடை பழகும் வரை மடியிலும் இடுப்பிலும் சுமந்தாய்
எனக்கு அரவணைக்க அப்பாவும்,தாத்தாவும்,பாட்டியும் உண்டு
பாவம் இந்த நாய் பிறந்ததில் இருந்து இதை மாதிரி எதையும் அனுபவிக்கவில்லை
நான் சிரிப்பதற்க்காக துள்ளி துள்ளி குதித்தில்,கால் ஒடிந்த இந்த நாயை
இன்றாவது தோளில் சுமந்து,மருத்துவம் பார்த்து நாம் அதற்க்கு பட்ட கடனை அடைப்போம் வா !!! “
என்று பூரிப்போடு சொல்கிறது.//
ஆகா பக்கத்திலிருந்து கேட்டமாதரியே சொல்லுறீங்களே அப்ப நீங்கதான் இதை கிளீக் செய்ததா காக்கா.
NIZAMUDEEN கூறியது...
வித்தியாசமான படம்;
அதற்கு பொருத்தமான கவிதை.
நல்லாதேன் இருக்கு!
ரொம்ப நன்றி நிஜாமுதீண்ணா..
காஞ்சி முரளி கூறியது...
பதிலளிநீக்குஹய்...
நான் நீரோடையின் "33333"வது வாசகன்...
"இதெல்லாம் பிளான் பண்ணி செய்யணும்"....
நட்புடன்...
காஞ்சி முரளி.../
அடடே இப்படியெல்லாம் கூட பிளான்பண்ணலாமா! ரொம்ப சந்தோஷம் சகோதரா!
Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
அந்த படத்தில இருக்கிற அம்மா மேலஉள்ள கோபத்தை உங்க கவிதை தணியவச்சிருக்கு.. அழகான கவிதை.. நல்லாருக்கு மலிக்கா.//
எனக்கும் இதைப்பார்த்தும் அப்படிதான் தோணியது அதான் இக்கவிதை.
நன்றி ஷேக்..
Riyas கூறியது...
பதிலளிநீக்குஅடடா அருமை..
"பிறர் பிள்ளையை ஊற்றி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும்" என்ற பழமொழியை பின்பற்றாங்களோ என்னவோ../
பிறர் பிள்ளையை ஊட்டிவளர்தால் இவர்பிள்ளையை குற்றாலம் வளர்க்குமோ. ஹி ஹி
//நான் கவிதைன்னு சொல்லி கிறுக்கியதையும் உங்கள் பதிவில் சேர்த்தது மிக்க மகிழ்ச்சி../
நாங்கமட்டும் என்ன கவிதையா எழுதுறோம் அதுவும் கிறுக்கள்தான்.
நன்றி ரியாஸ்
// ராஜவம்சம் கூறியது...
1,இந்தம்மாவுக்கு மகளாப்பிறந்ததைவிட ஒரு நாயா பிறந்திருக்கலாம் என அந்த பிஞ்சி உள்ளம் நினைத்திருக்கும்
2,பெத்த மகளைவிட ஒரு வாயில்லா ஜீவனிடம் அன்பு செலுத்தும் சிறந்தமனுசியாக பார்ப்பவர்களுக்கு தோன்றலாம்
3,ஏன்டி உன்னை கடைதெருவுக்கு கூட்டிப்போறது இல்லாம உன் செல்ல நாயவேற தோள்ல தூக்கிட்டுபோனுமா என்று அம்மா மகள திட்டியிறுக்கலாம்
ஒரு புகைப்படத்தில் எத்தனைக்கற்பனை.//
கற்பனை கரைபுரண்டு ஓடுதே ராஜவம்சம் அப்படியும் இருக்கலாம்.
ஹேமா கூறியது...
பதிலளிநீக்குமல்லிக்கா...என்ன ஒரு கற்பனை உங்களுக்கு !/
உங்களைவிடவா தோழி. மிக்க நன்றி ஹேமா
// seemangani கூறியது...
மழழை பாட்டு மாதிரியே கவிதை இருக்கு அக்கா...படம் ஜோரு...ஹையோ..ஹையோ..//
இருக்கா மிக்க நன்றி கனி
GEETHA ACHAL கூறியது...
பதிலளிநீக்குஆஹா...என்ன கொடுமையப்பா...நாய் தோலிலும்..குழந்தை ஏங்கியும்..பாவம் தான் குழந்தை...உங்கள் கவிதை அருமையோ அருமை...சூப்பர்ப்..../
பாவமுன்னு நமக்குதோணுது
தோளில் சுமக்கும் அவுகளுக்கு தெரியலையே. ரொம்ப நன்றி கீதா..
Chitra கூறியது...
வித்தியாசமான படம் - அதற்கு ஒரு அருமையான கவிதை....
அடுத்த கவிதை எழுதிய ரியாஸ்க்கு வாழ்த்துக்கள்!/
கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சித்ரா மேடம்..
கலாநேசன் கூறியது...
பதிலளிநீக்குநல்லாருக்குங்க
மிக்க நன்றிங்க கலாநேசன்..
//சாருஸ்ரீராஜ் கூறியது...
எனக்கும் இந்த படம் மெயில் மூலம் வந்தது , படம் பார்த்தவுடன் கோவம் வந்தது , ஆனால் மல்லிக்கு கவிதை வந்தது , நல்லா இருக்கு.//
ஆமாக்கா.கோபம் வந்தது. என்ன செய்ய எனயோசித்தபோது கவிதை வந்தது.
மிக்க நன்றிக்கா..