நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

காதல் கிறுக்கு!



என்னவென்பேன் பெண்ணவளின்
               வண்ணமதை
கொண்டுவிட்டேன் அவளிடம்
               காதல்போதை
நித்தமவளை நினைக்கின்றேன்
            நெஞ்சமுறுகி
சத்தமின்றி தவிக்கின்றேன்
            சிந்தை சிதறி

முத்துநகை வந்துவிட்டால்
                             போதுமென்பேன்
பித்தனாகி நானுமவள்
               காலடியில்
சொத்துசுகம் அத்தனையும்
                         வேண்டாமென்பேன்
முக்தியாகி நானுமவள்
              முந்தானையில்

பாரிஜாத முல்லையவள்
                                மணமணப்பில்
பாசாங்கு சோலையவள்
                                சிரி சிரிப்பில்
பைந்தமிழின் வார்த்தையிலே
                 வாயடைத்தேன்
பைங்கிளின் பேச்சினிலே
                          மூச்சடைத்தேன்.

அதிகாலையென்பது
                   எனக்கில்லை
அவளைக் காணுமுன்னே
                  அனுதினமும்
உறக்கமில்லை
         அவளைக் கண்டபின்னே

என் நெஞ்சமதை
           எடுத்துக்கொண்டால்
மொத்ததிலே
              அதிலவளின்
நினைவைமட்டும் வைத்து
              தைத்துவிட்டாள்
என் இதயத்திலே

 
பேதையவள் கண்களிலே
                போதை கொண்டேன்
பேரழகி அவளேயென்று
                 வியந்து நின்றேன்
பெண்ணவளின் கைப்பிடித்து

                   காலம்தோறும்-இப்
பிரபஞ்சம் முழுதும்

                 நானும் சுற்றவேண்டும்

 
இப்பிறவி முடிந்தபின்னும்
                    மீண்டும் தோன்றும்
அப்பிறப்புமும் வேண்டும்
                       அவள் எனதருகில்
இணைத்துவைத்து இறுக்கிவைத்த
                  இருமனமும்
இணைபிரிந்திடாது
                இருந்திடவேண்டும் சொர்கத்திலும்...


டிஸ்கி//  ராகத்தோடு படித்துப்பாருங்கள். 2. 3. நாட்களாய் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால். ஆங்காங்கே இதுபோல் முணுமுணுப்பதுபோல் கேட்கிறது.

 அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

27 கருத்துகள்:

  1. //
    அதிகாலையென்பது
    எனக்கில்லை
    அவளைக் காணுமுன்னே
    அனுதினமும்
    உறக்கமில்லை
    அவளைக் கண்டபின்னே//

    அருமை

    தமிளிஷ் எதோ பிரச்சனை போல் இருக்கிறது .. அப்புறம் வோட்டு போடுகிறேன்

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதை...

    உங்களுக்கு விருது இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்..

    http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html

    பதிலளிநீக்கு
  3. என்னங்க.... இப்ப மூணு மணிக்கு பார்த்தேன்... ஏதுமில்லை.. ஆனால்... காலையில் போட்ட கவிதை இப்போதுதான்... என்ன promblem...

    பதிலளிநீக்கு
  4. நல்ல அருமையான கவிதை...

    வாழ்த்துக்கள்...
    நட்புடன்...
    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள்!!!!மலிக்கா வாரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....

    http://tamilkudumbam.com/2009-12-31-01-34-41/a-a-a-a-a-a-a-a-a--a-a-a-a-a-a-a-a-a-a-a-a-.html#comments

    பதிலளிநீக்கு
  6. க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌... மியூசிக் இல்லைனா ந‌ம‌க்கு ராக‌மா பாட‌ வ‌ராதுங்க‌..அவ்வ்வ்வ்வ்.

    பதிலளிநீக்கு
  7. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்!! இது ஒரு பெண் எழுதிய கவிதை மாதிரி தெரியல..ஹி..ஹி...

    பதிலளிநீக்கு
  8. //முத்துநகை வந்துவிட்டால்
    போதுமென்பேன்//

    யாரைச் சொல்றீங்க, மின்சாரத்தையா?

    ;-))))

    பதிலளிநீக்கு
  9. அதிகாலையென்பது
    எனக்கில்லை
    அவளைக் காணுமுன்னே
    அனுதினமும்
    உறக்கமில்லை
    அவளைக் கண்டபின்னே

    இருளிலும் ஒளிரும் நல்ல வரிகள்

    மல்லிக்கா.....

    பதிலளிநீக்கு
  10. எவ்வளவு நல்லா எழுதுறீங்க! வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  11. LK கூறியது...
    //
    அதிகாலையென்பது
    எனக்கில்லை
    அவளைக் காணுமுன்னே
    அனுதினமும்
    உறக்கமில்லை
    அவளைக் கண்டபின்னே//

    அருமை

    தமிளிஷ் எதோ பிரச்சனை போல் இருக்கிறது .. அப்புறம் வோட்டு போடுகிறேன்..

    மிக்க நன்றி கார்த்திக். நானே வெகுநேர போராட்டதிற்க்கு பின்புதான் தமிழிஸில் சேர்த்தேன்.

    பதிலளிநீக்கு
  12. //காஞ்சி முரளி கூறியது...
    என்னங்க.... இப்ப மூணு மணிக்கு பார்த்தேன்... ஏதுமில்லை.. ஆனால்... காலையில் போட்ட கவிதை இப்போதுதான்... என்ன promblem//

    என்னான்னு தெரியலையே முரளி. கொஞ்சநாளா டெம்ளேட் மாற்றவில்லையேன்னு வருத்தபடுதோ என்னவோ பிளாக். ஹா ஹா

    பதிலளிநீக்கு
  13. ஹுஸைனம்மா கூறியது...
    //முத்துநகை வந்துவிட்டால்
    போதுமென்பேன்//

    யாரைச் சொல்றீங்க, மின்சாரத்தையா?

    ;-))))//

    ஆகா கண்டுபிடிப்பு கண்ணாத்தா வாங்க வாங்க அதையும் சேத்துதான்.. என்ன கொடுமை நடக்குதுபா.முடியல ஆத்தாடின்னு வருது..

    பதிலளிநீக்கு
  14. //உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) கூறியது...
    அருமை .....

    தொடர்ந்து எழுத எங்கள் வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி உலவு.காம்.

    பதிலளிநீக்கு
  15. அஹமது இர்ஷாத் கூறியது...
    அருமையான கவிதை...//

    மிக்க நன்றி இர்ஷாத்..

    //உங்களுக்கு விருது இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்..

    http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html//

    நாளையின் முக்கியசெய்திகாக்கனுமுல்ல தேங்ஸ் இர்ஷாத்..

    பதிலளிநீக்கு
  16. //ஜெய்லானி கூறியது...
    எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்!! இது ஒரு பெண் எழுதிய கவிதை மாதிரி தெரியல..ஹி..ஹி//

    என்னா ஒரு சந்தேகம். இப்படிதான் வரனும். அப்பதானே எனக்கு ஒரு சவாலாக அமையும். அப்படியே திருப்பி படிங்க. ஒரு பெண் ஆணை வர்ணிப்பதுபோல் எல்லாரும் பெண்களையே வர்ணிக்கிறார்களே பொறாமையா இருக்கா கவலை விடுங்க அடுத்தமுறை அப்படியே செய்துடலாம்..

    பதிலளிநீக்கு
  17. S Maharajan கூறியது...
    அருமையான கவிதை...


    மிக்க நன்றி மகராஜன்..

    பதிலளிநீக்கு
  18. "கவிதை நல்லாயில்ல" அப்பிடின்னு சொன்னா எனக்கு கண்ணில்லன்னு அர்த்தம் சூப்பர்... அப்படியே எங்கட பிளாக்கையும் கொஞ்சம் எட்டிப்பாருங்க - riyasdreams.blogspot.com (அப்பாடா இலவசமா ஒரு விளம்பரம் போட்டாச்சு ஹா ஹா)

    பதிலளிநீக்கு
  19. அக்கா சூப்பர் ரைமிங் கவிதை மல்லி அக்கா ஒரு மெட்டு போட்டு பாடதொணுது வரிகள் எல்லாமே அருமை...

    பதிலளிநீக்கு
  20. //காஞ்சி முரளி கூறியது...
    நல்ல அருமையான கவிதை...

    வாழ்த்துக்கள்...
    நட்புடன்...
    காஞ்சி முரளி....//

    வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முரளி..

    பதிலளிநீக்கு
  21. நாடோடி கூறியது...
    க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌... மியூசிக் இல்லைனா ந‌ம‌க்கு ராக‌மா பாட‌ வ‌ராதுங்க‌..அவ்வ்வ்வ்வ்.//

    ஆகா அவுகளா நீங்க. சரி சரி. ஏ ஆர் ரஹ்மானை கூப்பிட்டுவிடலாமா.ஸ்டீபன் ஆனா ஒன்னு அவர்களுக்குண்டான பீஸை நீங்க கொடுத்துவிடனும் ஓகே..

    பதிலளிநீக்கு
  22. இங்க பாருங்க இனிமே இந்த மாதிரி அருமையா கவிதை எழுதுனிங்க அப்புறம் நானும் கவிதை எழுத ஆரம்பிச்சுடுவேன் , ஜாக்க்க்க்க்க்க்க்கிரத ................

    பதிலளிநீக்கு
  23. //இப்பிறவி முடிந்தபின்னும்
    மீண்டும் தோன்றும்
    அப்பிறப்புமும் வேண்டும்
    அவள் எனதருகில்
    இணைத்துவைத்து இறுக்கிவைத்த
    இருமனமும்
    இணைபிரிந்திடாது
    இருந்திடவேண்டும் சொர்கத்திலும்...
    // தூஊஊஊஊஊள்

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது